Wednesday 27 November 2019

ஆன்மீக பொன் மொழிகள்

1.ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.
'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி.-
(ஸ்ரீ ஞானனானந்தகி¡¢ சுவாமிகள்)

2. இறைவனின் தா¢சனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.

3.நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். - தலாய் லாமா.
4.உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்
கவலை, நாளைய தினத்தின் துக்கத்தைக் குறைக்கப் போவதில்லை. அது இன்றைய தினத்தின் சந்தோஷத்தை அழித்து விடுகிறது. - யாரோ
உண்மையைத் தவிர வேறு எந்தக் கடவுளுக்கும் நான் சேவை செய்வதில்லை,எனக்குக் கடவுள் என்றாலும்ஒன்றுதான்.உண்மை என்றாலும் ஒன்றுதான்.

-மகாத்மா காந்தி

5. நான் ஒரு பசுவைப் பார்க்கும்போது மனிதன் உன்னக்குடிய ஒரு மிருகமாக நான் கருதுவதில்லை. பசு இரக்கமே உருவான ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது உலகம் முழுவதுமே எதிர.த்தாலும் கூட நான் பசுவை வழிபடுவதை ஆதரித்தே வாதாடுவேண்
-மகாத்மா காந்தி

6. ஓரு நாட்டின் கட்டுபாடு பெருமை இவையெல்லாம் அது எவ்வளவு கோடீஸ்வர்ர்களைக் கொண்டிருக்கிறது என்பதில் இல்லை.அந்த நாட்டு மக்கள் பசியின்றி வாழ்கிறார்களா என்பதில் தான் இருக்கிறது.
-மகாத்மா காந்தி

7. துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்

திருவள்ளுவர்-நற் சிந்தனைகள்
ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே> அவனுக்கு அறிவும்> நடத்தையும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும்> செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும்> நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்

கிருபானந்த வாரியார்-நற் சிந்தனைகள்
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ
அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும்.அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர்.இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலேஅவன் தாள் வணங்கி“ என்கிறார் மாணிக்கவாசகர்.

சாய்பாபா-நற் சிந்தனைகள்
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது,தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே.அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம்.சுத்தமாகவும், தூய்மையாகவும், அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.

ஆகவே இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.

கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.

பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.

புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம்
ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன.

தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது. அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.

செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.

வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.

ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.

தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம்> தற்பெருமை குறையும்.

மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.

சுவாமி வள்ளலார்-நற் சிந்தனைகள்
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம்.
பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம்.
கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம்.
குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.


சுவாமி அரவிந்தர்-நற் சிந்தனைகள்
*நமது வழி பூரணத்தை அடையும் வழியாக இருக்கட்டும், விட்டுவிட்டு ஓடிவிடும் வழியாக இருக்க வேண்டாம்; போரில் வெற்றி பெறுதல் நமது நோக்கமாக இருக்கட்டும், எல்லாப் போராட்டத்திலிருந்தும் தப்பிச் செல்லுதலாக இருக்க வேண்டாம்.

*யோகத்தின் மூலம் நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கும், பலவீனத்திலிருந்து சக்திக்கும், துன்பம் துயரத்திலிருந்து பேரின்பத்திற்கும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கும், மரணத்திலிருந்து அமர நிலைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அபூரணத்திலிருந்து பூரணத்திற்கும், பிரிவிலிருந்து ஐக்கியத்திற்கும் உயராம்.

*நமது அஞ்ஞானத்தினால், புறத் தோற்றத்தைக் கொண்டு தவறான முடிவு செய்துவிடுகிறோம்; இரகசியமாக உள்ளே உறையும் இறைவனைக் காணத் தவறிவிடுகிறோம். ஆனால் ஞானிகள் இந்தத் தவற்றைச் செய்வதில்லை. அவர்கள் பார்வை அகங்காரத்தால் மறைக்கப்படாததால் அவர்கள் உண்மையைக் கண்டு கொள்கின்றனர்; இங்கு குறுகிய மனித இயற்கையில் கட்டுண்டிருப்பவனே இறைவனாக நாம் வணங்கும் எல்லையற்ற பரஞ்சோதிப் பொருள் என்பதை அறிகின்றனர். படைப்புகளுக்கு மேல், உலகங்களுக்கு அப்பால், அவனுடைய பரமேஸ்வர நிலையை அவர்கள் உணர்கிறார்கள். அதே சமயம் உலகிடை அந்தர்யாமியாக இருக்கும்போதும் அவன் சர்வேஸ்வரனே என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். உலகில் நானாவிதமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னிச்சையாகவே இறைவன் தன் சக்திகளைச் சுருக்கிக் கொள்கிறான்.

*உன்னுள் உள்ள வலிமையைத் தெளிவாக உணர முயல். அதை முன்னுக்குக் கொண்டு வர முயல். நீ செய்வதெல்லாம் உனது சொந்த செயலாயில்லாமல், உன்னுள் உள்ள உண்மையின் செயலாயிருக்கட்டும். நீ உயிரோடிருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவ்வுண்மையின் சாந்நித்தியத்தால் ஒளிபெறட்டும், உனது ஒவ்வொரு சிந்தனையும் அந்த ஒரே ஊற்றிலிருந்து தெய்வீக ஊக்கம் பெறட்டும்; உனது திறன், நற்குணம், பண்பு எல்லாம் உன்னுள் கோயில் கொண்டுள்ள அந்த அமரசக்தியின் பணிக்கே ஆகட்டும். இதற்காக முயல்வாயாக.

*உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

*மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.

*நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

*வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

*நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

சுவாமி விவேகானத்தர்-நற் சிந்தனைகள்
தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை.

ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான். ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, `பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

மூட நம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால் மதவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்கவேண்டும். கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி (Law of Association), புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச்செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல் அவனுக்கும் தெரியும். எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்து கொள்ள முடியும்? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா என்ன? எங்கும் நிறைந்தவர் என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.

அருள் வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.

நண்பர்களே, உலகமே ஒரு பைத்தியக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற்காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெயருக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பணத்திற்காக, சிலர் முக்தியடைவதற்காக, இன்னும் சிலர் சொர்க்கம் செல்ல. இந்த பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனுக்காகப் பித்தனாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளுக்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம் தான் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்.

நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.

கல்வி> பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்> அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது> விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம்> எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்

Fளத்தின் அடியிலிருந்து நீர்க்குமிழி கிளம்புகிறது. அது வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அதை நாம் காண்பதில்லை. நீர்மட்டத்திற்கு வந்து வெடிக்கும் போது மட்டுமே பார்க்கிறோம். அது போலவே> எண்ணங்கள் பேரளவிற்கு முதிர்ந்த பிறகே> அதாவது அவை செயல்களான பின்பு மட்டுமே அவற்றை நாம் உணர முடியும்.

நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை> எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நுண் இயக்கங்களை நாம் அடக்க முடிந்தால்> அது எண்ணமாகும் முன்பே> செயலாகும் முன்பே> அதன் மூலத்தை நாம் பற்ற முடியுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நுண்ணிய சக்திகளை> நுண்ணிய காரணங்களைப் பகுக்கவும்> ஆராயவும்> அறியவும்> இறுதியாக> அடக்கியாளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போதுதான் ம்;மை நாம் அடக்க முடியும்.

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள்> நமது குணங்கள்> நமது அறிவு> நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும். வழியை பூரணமாக்குவோம். இலட்ச்சியம் தன்னைதானே பாதுகாத்துக் கொள்ளும். ஏனெனில் நம் வாழ்வு நல்லதாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் நல்லதாகவும் தூயதாகவும் இருக்க முடியும். அது ஒரு குறிக்கோள். நாமே வழி. ஆதலால் நம்மை நாம் தூய்மையாக்கிக் கொள்வோம்> நம்மை நாம் பூரணமாக்கிக் கொள்வோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது> தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம்> கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையைக் குத்துகிறது

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும்> குற்றத்தைப் பிறர் மீதோ> பிற பொருளின் மீதோ> ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது> சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே;> அவனது குணச்சிறப்பே> அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!'ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரிப்த்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான், நாம் ஆண்டவனின் குழந்தைக�ள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம்; மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல; ஜடப் பொருள் உங்கள் பணியாள், நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.

இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்தவிட்டன.

நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போதுதான் துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான் பிழைகள் அகல முடியும்.

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி, புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான்.

இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.

கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும். எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்த கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக் கோணல்கள நேராகின்றன. சந்தேகங்கள் அகல்கின்றன. காரண காரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கணக்காகச் சிந்தியுங்கள். தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை அவை. தோல்விகளை, சறுக்கல்களைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஆயிரம் தடவை இலட்ச்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த இலட்ச்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.

அகோபில அழகிய சிங்கர் சுவாமிகள்-நற் சிந்தனைகள்
உணவை நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவ்வுணவுதூய்மையான மனதுடன் செய்ய வேண்டும் என்பதும் ஆகும். சமையல் செய்பவரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்து விடுவது இயற்கையே.

சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நாம் நமக்காக சமைக்கும்போது அதை சாதம் என்று அழைக்கிறோம். அதே உணவினை ஆண்டவனுக்கு படைத்த பின் மீண்டும் நம்மிடம் கொண்டுவரும்போது பிரசாதமாகி விடுகிறது. "பிர' என்றால் "கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல,கடவுளுக்குப் படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள் மேன்மைபெற்று வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன.
சாய்பாபா-நற் சிந்தனைகள்
* எண்ணியது நிறைவேறாவிட்டால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நம் ஆசை தவறானதாக இருக்கலாம். அது கடவுளுக்கு விருப்பமானதாகஇல்லாமல் போனாலும் அது நிறைவேறுவதில்லை.

* இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.

* ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில்,ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.

* குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.

* வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது.மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள்


ஹரிதாஸ்கிரி சுவாமி-நற் சிந்தனைகள்
* நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால்,பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது. அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான்.

* கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.

* பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம்.இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால்,நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

* குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது,நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...