Sunday 3 November 2019

காமதேனுவை வீட்டிற்கு அழையுங்கள்...





காமதேனுவை வீட்டிற்கு அழையுங்கள்...
நந்தி தேவரை வணங்கும் நாம் காமதேனு உண்மையில் யாரின் வடிவம் என தெரியாமல்
இருக்கின்றோம்.பிரம்மாவின் உடலில் ஜோதியாக பிரவேசிக்கும் நிகழ்வுதான் பிரதோஷம் என அறிந்திருக்கின்றோம்.அந்த நேரத்தில் ஞான நடனத்தை தந்தை ஈசன் நந்தி தேவர் எனப்பபடும் பிரம்மாவின் இருபுருவ மத்தியில் ஆடியதால் அது பிரதோஷமாயிற்று. பாற்கடலை கடையும்நேரமாகவும் கருதப்பட்ட நேரம் அது.அந்த பாற்கடலில் வெளிப்பட்டதாக காமதேனுவை கூறுவர்.பிரம்மாதான் நந்தி தேவரென்றால் காமதேனு அன்னை ஜெகன் மாதா சரஸ்வதியின் வடிவமே ஆவார்.ஆனால் கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவை கொண்டு செல்ல விசுவாமித்திரர் முதல் பலர் பகீரத முயற்சி எடுத்துள்ளதாக நாம் புராண
வாயிலாக அறிந்திருந்தாலும் காமதேனு என்பவள் நமது அனைத்து சிரேஷ்டமான மனோவிருப்பங்களை பூர்த்தி செய்யும்
ஜெகன் மாதாவின் வடிவம்.தலை பெண்ணை போலவும், உடல் பசுவைப்போலவும், பறக்கும் சிறகுகளையும், வால் பகுதியில் மயிலிறகை கொண்ட காமதேனு மாதா அன்னை ஜெகதாம்பாவின் வடிவமானவள்.காமதேனு கேட்டதை எல்லாம் கொடுக்ககூடிய தந்தை சிவபெருமானின் மகளாவார்.காமதேனுவின் கொம்பு உயர்ந்த பிறவியையும்,பெண்ணின் முகம் என்பது அவள் உலகின் தாய் என்பதை உணர்த்துவதாயும்,நீண்ட ஜடை பிறவிப்
பயணத்தையும்,பறக்கும் சிறகு ஆன்ம நிலையையும், பசுவின் உடலினுடைய தோற்றம் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதன்மையானவள் என்பதையும் குறிப்பதாக உள்ளது.காரணம் கோமாதாவின் உடல் தோற்றத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களின் ரூபங்களை தனக்குள் அடக்கியிருப்பதை காணலாம்.மேலான தந்தை ஈசன் ஒருவரே எப்பொழுதும் பிறப்பு இறப்பில் வராத பூஜைக்குரிய நிலையில் உள்ளவர் என்பதை உணர்த்தும் விதமாக காமதேனு தனது பால்சொறிந்து சிவலிங்கத்தை பூஜிப்பதாக உள்ளது.மயிலிறகு வால் என்பது சிருஷ்டியின் இறுதியில் பரமாத்மாவான இறைவன் சிவன் ஆன்மாக்களுக்கு ஞானத்தை கொடுக்கும் பொழுது அதை தூய்மையை கடைபிடித்து ஞானத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாக உள்ளது.இவ்வளவு மகிமைகள் நிரம்பிய காமதேனுவை அரிதாகவே சிலர் வீட்டில் படமாக வைத்துள்ளனர். ஆனால்,
காமதேனு நமது அனைத்து ஆசைகளையும் பூர்த்தி எப்பொழுது செய்வாள் எப்பொழுது நமது மனம் உள்ளும், புறமும் பரிசுத்தமாக இருக்கின்றதோஅப்பொழுது.நமது மனம் தமக்கு தீங்குசெய்வோரைகூட ஆசீர்வதிக்கும் பொழுது.நமது மனம் பிறரது குறைகளை காணாதிருக்கும் பொழுது அங்கே காமதேனு மாதா அழைத்தவுடன் வந்துவிடுவாள்.
காமதேனு என்றால் சிரேஷ்ட விருப்பங்களை பூர்த்திசெய்பவள் என பொருள்படும். பொதுவாக காமதேனு இருக்குமிடத்தில் தந்தை சிவபெருமானின் கடாட்ஷம் நிரம்பி வழியும். காமதேனுவுக்கு பட்டி,நந்தினி என இரு மகள்கள் உண்டு என்று சொல்லப்பட்டு இருந்தாலும் பட்டியின் கால் குளம்பு தன்மேல் பட்டதை தந்தை சிவபெருமான் ஏற்றுக் கொண்டதால் பட்டீஸ்வரம் என அந்த இடம்
பெயர் பெற்றுள்ளதையும் அறியலாம். காமதேனுவை உலகின் பஞ்சகாலத்தை போக்க ஜபாலி முனிவர் அழைக்க காமதேனு இல்லாத காரணத்தால் காமதேனுவின் மகள் நந்தினியை செல்ல இந்திரன் பணிக்க, ஆனால் அதை அலட்சியம் செய்த நந்தினிக்கு ஜபாலி முனிவர் சாபமளித்தார் என புராணங்கள் கூறுகின்றன. உண்மையில்
இந்த இரன்டு விஷயங்கள் உணர்த்துவது தன்னை அறியாமல் தவறு செய்பவர்களின் தவறுகளை தந்தை ஈசன் ஏற்றுக் கொள்கின்றார் என்பது பட்டிக்கும்,உலக நன்மை என்று தெரிந்தும் அதை செய்யாமல் அலட்சியம் செய்வோருக்கு சாபமும் பரிசாக கிடைக்கின்றன என்பதை இது உணர்த்தும்
செயலாகும்.எனவே தந்தை ஈசனின் மகளான
காமதேனுவை வீட்டிற்கு அழையுங்கள். எந்த
குடும்பத்தில் சண்டை,சச்சரவு இல்லையோ
தெய்வீகம் நிரம்பி மன அமைதியும் அன்பும்
செழித்தோங்குமோ, அங்கே காமதேனுவை
மனதார அழைத்தால் அங்கே அவள் வருகை தந்து அவர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவாள் என்பது திண்ணம்.கோபம், கடும் வார்த்தை,வெறுப்பு, பொறாமை,பிறர் குறை காணுதல் மற்றும் பேசுதல்,மாமிசம் புசித்தல்,தீய நோக்குகுடன் செயல்படுதல் இந்த இடங்களில் காமதேனு கனவிலும் வருவதில்லை.அன்பு நிறைந்து எங்கு
செழித்தோங்குமோ அங்கே சுரபி எனும் அன்னை காமதேனு வாசம் செய்வாள். அனைத்து சிரேஷ்ட மனோவிருப்பங்களை பூர்த்தி செய்வாள்.நல்லது.தந்தை ஈசனால் உலகிற்கு வழங்கப்பட்ட ராஜயோகத்தை அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் இலவசமாக கற்று மகிழ்வீர்.நல்லது.ஓம்சாந்தி.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...