Thursday 22 March 2018

இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

பிற மதத்தவர்கள் மூளைச் சலவை செய்வது, கஷ்டப்படுபவர்களை தேர்ந்தெடுத்து சேலை, பணம் கொடுத்து கரெக்ட் செய்வது, நோயை குணமாக்குகிறேன் என்று ஏமாற்றி வித்தைகள் காட்டுவது, ஜாதி ஏற்றத்தாழ்வு இருப்பது என்று ஏகப்பட்ட காரணங்கள் நம்மில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், நன்கு யோசித்து பார்த்தால் வேறு ஒரு முக்கிய காரணம் இதன் பின்னணியில் இருப்பது தெரியும்..

சுதந்திரம். இதுதான், இந்து மதத்தின் பலவீனம். பலமும் அதுதான். மதமாற்றத்திற்கு இம்மக்கள் உள்ளாகுவதற்கு, சுதந்திரம் முக்கிய காரணம். மலைக்காடுக்குள் மரங்களை கும்பிட்டு, இலைதழைகளை கட்டிக் கொண்டு ஜிம்பாலே, ஜிம்பாலே என்று ஆடும் மலைவாசிகளாகட்டும், வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்க்கும் பிராமணர்களாகட்டும் இந்துக்களாகவே கருதி அரவணைப்பதுதான் இந்த மதம்.

வழிபடும் முறை முக்கியமில்லை, நோக்கம்தான் முக்கியம் என்ற நல்ல கொள்கை கொண்டது இந்து மதம். இதனால்தான், ஒரு இந்து என்பவன் இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வகுக்கப்படவில்லை. தினமும் இத்தனை முறை சாமி கும்பிட வேண்டும், ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் எல்லோரும் கூடி நின்று வழிபட வேண்டும், முக்கியமாக, பகவத் கீதையை படித்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இந்து மதத்தில் கிடையாது.

ஆனால், பிற மதங்களில் இதுபோன்ற கட்டுப்பாடு மிக கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. குர்ஆன் படிக்காத முஸ்லீமோ, பைபிள் படிக்காத கிறிஸ்தவரோ இருக்க முடியாது. அவ்வாறு செய்யாவிட்டால், அது பெரும் பாவம் என்று போதிக்கப்படுகிறது. ஆனால், பகவத்கீதை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்து மதத்தில் சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி நம் வழியில் நாம் சென்றுகொண்டிருந்தால் பரவாயில்லை.

ஆனால் தனது மதத்தை பற்றியோ, கீதையை பற்றியோ கூட தெரியாத ஒருவன், பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி படித்ததை பிரமாண்டப்படுத்தி சொல்லும்போது, வாயில் கொசு போவது தெரியாமல், ஆ.. என்று வாய் திறந்து கேட்டுக்கொள்கிறான். நமது மதம் எத்தகைய பாரம்பரியம் மிக்கது, ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் கூட சிவபெருமான், நாராயணர் உருவங்கள் உள்ளதே, 2000 வருடங்கள் பழமையான திருக்குறளில் கூட, விஷ்ணுவை பற்றி புகழப்பட்டுள்ளதே என்பதையெல்லாம் இந்து தெரிந்து வைத்திருக்க மாட்டான்.

இந்து மதம் கொடுத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்தாமல், முட்டாள்களாக வாழ பயன்படுத்திவிட்டோம். இந்துக்கள் மதத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் மதம் மாற்றுவோர்கள் நம்மை சுற்றி பெருத்துவிட்ட இக்காலகட்டத்தில், இந்து மதத்தின் பெருமையை அறிய வேண்டியது அவசியம். இந்துக்கள் எப்போதும் தங்கள் வழியை மட்டும் பார்த்துக்கொண்டு செல்பவர்கள். எப்போதும் மதத்தை பற்றியே பேசுவோரை நாம் எரிச்சலோடுதான் பார்ப்போம். ஆனால், அதுவே பிற நாட்டுக்காரர்களுக்கு சாதகமாகிவிட்டதை தன்மானம், நாட்டுபற்று உள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது தந்தை, தாய் பெருமையை உணராதவன்தான் அடுத்த வீட்டுக்காரர்களை பற்றி பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பான். எனவே, இந்து மதத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதில் அக்கறை காட்டுங்கள். அப்போதுதான், நமது கலாச்சாரமும், தேசப்பற்றும் காப்பாற்றப்படும். அல்லது மீண்டும் இந்த நாடும், நாட்டு மக்களும் அடிமையாக மாறுவார்கள். எல்லோரையும் நேசிப்பது இந்துக்கள் குணம். நல்லது. ஆனால், முதலில் உன்னை நேசிக்க கற்றுக்கொள்.


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...