Friday, 12 January 2018

பொங்கல்

பொங்கல்

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா?

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா? பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். பச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக்க வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான்
முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையான போகிக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
12-1421057457-1-govardhanmountain
முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.
பாடம் கற்பித்த கிருஷ்ணன்
கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.
12-1421057472-3-krishna-goverdhana
அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.
மன்னிப்பு கோரிய இந்திரன்
பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.
art_indra_worships_kartikeya

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

Tuesday, 9 January 2018

சூட்சும விஞ்ஞானம்

சூட்சும விஞ்ஞானம்

 1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜீவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

ஓம் மந்திரத்தில்



🍁 *_ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது_* 🍁
1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .

நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.



2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம் ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்' என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது












Wednesday, 3 January 2018

குளிக்கும் முன்

குளிக்கும் முன்


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

* *அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
* *சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
* *குளியல் = குளிர்வித்தல்
* *குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது
* *மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
* *இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
* *காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
* *வெந்நீரில் குளிக்க கூடாது.
* *எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்
* *குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
* *நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
* *எதற்கு இப்படி?
* *காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
* *நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
*😱*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
* *குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
* *இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
* *உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
*😧 *இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
* *எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
* *வியக்கவைக்கிறதா... !
* *நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
* *குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
* *பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
*😳 *புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
* *குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
* *குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
* *குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
* *குளித்தல் = குளிர்வித்தல்
* *குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.
* *இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள்



ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில்அடிக்கவும் என்றான்.
இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35ஆணிகளை அடித்தான்மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான்.அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாதுமறையாது. நீ வார்த்தைகளால்உன்டாக்கும் வடுவிற்கும்செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனேஉண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன்வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்என்றான்.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு...!

Tuesday, 2 January 2018

வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?

வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?


வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?

பார்தனில் குற்றம் தீரப் பகை இல்லா நாளைப் பார்த்து 
சீர்பெறக் கணபதிக்குச் சிறப்பினால் பூஜை செய்து
நேர் பெற காளைகட்டி நிலமதை உழுது பின்னும்
பேர் நவதானியத்தைப் பெலமதாய் விதைத்துக் கொள்ளே
என்கிறது சிற்ப ரத்னாகரம். அதன் அறிவுரைப்படி, சுபயோக சுபதினங்களைத் தேர்வு செய்து, முறைப்படி பூஜித்து, வீடு கட்டுவதற்கான வேலைகளைத் துவங்கவேண்டும்.
வீடு கட்டுவதற்கான இடத்தைப் பார்க்கச் செல்வது முதல், வீடு கட்டி முடிக்கும்வரை ஒவ்வொரு கட்டத்திலும்... ஜோதிட ரீதியாக லக்னத்தில் இருந்து எந்தெந்த இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் அறிந்து செயலாற்றி னால், காரிய ஜெயம் உண்டாகும். இதுகுறித்தும் ஒரு பாடலில் விளக்குகிறது, சிற்ப ரத்னாகரம்.


மனை பார்க்க இலக்கினமே சுத்தியாகும்

மனை போட இரண்டு ஏழாம் இடமே சுத்தம்
மனை தனக்கு மரம் வெட்ட மூன்றே சுத்தம்
மரம் தச்சு வேலை செய்ய நாலே சுத்தம்
மனை மாண வாசற்கால் நிறுத்த ஐந்து
வகை உத்திரம் போட ஆறாம் தானம்
மனை கூடம் குலம் தழைக்க ஏழே சுத்தம்
வடிவேலர் இந்நூலைக் குறித்திட்டாரே
குறித்து அலகு கை சாத்தி வைக்க எட்டாம்
குறுக்கும் பட்டைக்கு ஒன்பதாம், ஓடுபத்தாம்
தெருக்கதவு நிலை நிறுத்தப் பதினொன்றாகும்
திங்கள் புதன் குடிபுக ஈராறாம் சுத்தம்
பெருக்க முடன் இவ்வகையாய் அமர்ந்ததானால்
பேருலகில் மன்னருக்கு மன்னர் ஆவர்
பொருள் தனங்கள் மனை தனிலே சேரும் என்று
போக முனி இந்நூலை உரை செய்தாரே

இப்பாடல் தரும் தகவல்கள் என்ன தெரியுமா?
* வீட்டுக்கான மனையைப் பார்க்கச் செல்லும் நேரத்தில் லக்னம் சுத்தமாக அமையவேண்டும்.
* முதன்முதலாக வேலையைத் துவங்குவதற்கு, 2 மற்றும் 7ம் இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.
* வீட்டுக்குத் தேவையான மரங்களை வெட்டி எடுத்துவரவோ அல்லது கடை யில் வாங்கச் செல்லும்போதோ 3ம் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
* தச்சு வேலை ஆரம்பிக்க 4ம் இடமும், தலைவாசல் நிலை நிறுத்துவதற்கு 5ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.


* உத்தரம் பதித்தல் போன்ற விஷயங்களைச் செய்ய 6ம் இடமும், வீட்டின் உள் கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்க 7ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

* மேற்புறம் கூரை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு 8ம் இடமும், மேலே குறுக்குப் பட்டைகள் வேலை ஆரம்பிக்க 9ம் இடமும், ஓடு பதிக்க (அ) ஆகாயம் மூடுவதற்கு 10ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* தலைவாசற்கதவு தவிர மற்ற வாயில்களுக்கு கதவு நிலைகால் நிறுத்த 11ம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.
* திங்கள் மற்றும் புதன் கிழமை களில் வீடு குடிபுகும்போது, 12ம் இடம் சுத்தமாக இருக்கும் லக்ன அமைப்புடன் செய்தால், மன்னனுக்கு இணையான சீரும் சிறப்பும் மிக்க வாழ்க்கை அமையும் என்பது போகர் வாக்கு.
மேலும், ஒவ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு. மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கியும், ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள் தெற்கு நோக்கியும், மிதுனம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கியும், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கியும் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக வாழலாம்.
அதேபோல், 12 ராசிக்காரர்களும் தங்களது வீடுகளை ஊரின் எந்த பாகத்தில் அமைக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டலும் உண்டு.
மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது
ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது
கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.
கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.
துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.
விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.
தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.
கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.
மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.
தற்காலத்தில் இந்த நியதிகள் யாவும் பொருந்தும்படி வீடுகள் கிடைப்பது வெகு அபூர்வம்தான். எனினும், இயன்றவரையிலும் மேற்சொன்ன நியதிகளைக் கவனத்தில் கொண்டு வீடு கட்டி, குடிபுகுந்து சிறப்பான வாழ்க்கையைப் பெறுவோம்.
இனி, வாஸ்து பூஜை குறித்து அறிவோம்.
பூமி மற்றும் ஆகாயவெளியில் வெளிப்படும் பல்வேறு சக்திகள் ஒரே சீராகக் கிடைப்பது இல்லை. விண்வெளியில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களில் இருந்து வெளிப்படும் சக்திகளின் மாற்றங்கள் பல நல்ல விளைவு களையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றில் நல்ல விளைவுகளுக்கான சக்திகளைக் கிரகித்து, சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்கு நம் முன்னோர்களும், குருமார்களும், மகான்களும் பல வழிகளைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது வாஸ்து வழிபாடு.


வாஸ்து புருஷன் நித்திரையை விடும் நாட்கள்...

நம் வீட்டைக் காக்கும் கடவுளான வாஸ்து பகவான் பூமாதேவியின் மகனாவார். வீடுகட்டுமுன் இவருக்கு முறைப்படி பூஜை செய்ய வேண்டும். எப்போதும் நித்திரையில் இருக்கும் இவர், கீழ்க்காணும் நாட்களில்நேரங்களில் மட்டும் நித்திரையை விட்டு விழித்திருப்பார்.
சித்திரை 10ம் தேதி காலை 8 9:30
வைகாசி 21ம் தேதி காலை 9:12 10:42
ஆடி 11ம் தேதி காலை 6:48 8:18
ஆவணி 6ம் தேதி மாலை 2:24 3:54
ஐப்பசி 11ம் தேதி காலை 6:48 8:18
கார்த்திகை 8ம் தேதி காலை 10 11:30
தை 12ம் தேதி காலை 9:12 10:42
மாசி 22ம் தேதி காலை 9:12 10:42
இந்த மாத, நாள் மற்றும் நேர விவரங்கள் எல்லா வருடத்திலும் நிலையானதாகவே இருக்கும். இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் கிடையாது. இந்த நாட்களில் வாஸ்து புருஷன் 90 நிமிடங்கள் விழித்திருக்கிறார். குறிப்பிட்ட நாட்களில் வாஸ்து புருஷன் விழிப்பதில் இருந்து ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் செயல்பட்டுவிட்டு, மீண்டும் நித்திரைக்குச் செல்வார். இதில் வாஸ்து புருஷன் உணவு உண்ணும் நேரத்திலும், வெற்றிலை போடும் நேரத்திலும் அவருக்கு பூஜை செய்து வீடு கட்ட ஆரம்பித்தால், எவ்வித தடையுமின்றி வீடு கட்டி முடிக்கலாம்.
அதன்படி கீழ்க்காணும் நேரங்களில் மனைகோல நல்ல நேரங்களாகக் கருதலாம்.
சித்திரை 10ம் தேதி காலை 8:54 9:30
வைகாசி 21ம் தேதி காலை 10:06 10:42
ஆடி 11ம் தேதி காலை 7:42 8:18
ஆவணி 6ம் தேதி மாலை 3:18 3:54
ஐப்பசி 11ம் தேதி காலை 7:42 8:18
கார்த்திகை 8ம் தேதி காலை 10:54 11:30
தை 12ம் தேதி காலை 10:06 10:42
மாசி 22ம் தேதி காலை 10:06 10:42
வாஸ்து நேரங்கள் காலை 6 மணிக்கு சூரிய உதயம் என பொதுவாகக் கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊர் சூரிய உதய நேரத்துக்கு ஏற்ப மணியை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக கார்த்திகை 8ம் தேதி சென்னையில் சூரிய உதயம் காலை 6:15மணிக்கு ஆகும். எனவே, அன்று வாஸ்துக்கு (மனை கோல) உகந்த நேரம் காலை 11:09 முதல் 11:45 வரை என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.

Friday, 29 December 2017

இந்து-ஆலயங்களில்-கோபுரத்தில்-புதைந்துள்ள-அறிவியல்-உண்மை!

இந்து-ஆலயங்களில்-கோபுரத்தில்-புதைந்துள்ள-அறிவியல்-உண்மை!


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

  • இந்து ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை!

     
    முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
    அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
    கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
    நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
    இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
    காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
    ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
    ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
    உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
    சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
    இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
    “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்?
    Markkandu Devarajah(L,L,B)Mayuraagoldsmith.Switzerland,
    கோயிலுக்குச் செல்கிறபோது  இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.
    கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
    என்பது திருமூலர் அருட்பாடல்.
    அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.
    உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
    கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
    தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
    உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.
    கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, −டச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.
    ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
    மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்த்

    தேங்காய் உடைப்பதன் தத்துவம்

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுபரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

    சிவலிங்கத்தின் தத்துவம்
    ,
     
    லிங்கவடிவ வழிபாடு, சிவலிங்கத்தின் தத்துவம்
    ஆலயங்களில் சிவ வழிபாட்டிற்குரிய சின்னமாக
     அமைந்திருப்பது சிவலிங்கம்.  பரந்த கருத்துக்கள் பல இச்சின்னத்தில் புதைந்து கிடக்கின்றன.  ஆவுடையார் என்னும்
     கீழ்ப்பகுதி, சக்தியின் சின்னம்.  அதில் நாட்டப்
    பெற்றிருக்கும் லிங்கம் சிவத்தின் சின்னம்.  சிவசக்தியின்
     ஐக்கியத்தால் சராசரங்கள் அனைத்தும் தோன்றியுள்ளன
    என்பதை அது குறிக்கிறது.  உருவமற்ற பொருள்
    உருவம் எடுக்கவும் வல்லது என்பதை அது உணர்த்துகிறது.
    உலகில் உள்ள உயிர்கள் காமத்துக்கு வசப்பட்டு, குடும்ப
    வாழ்க்கையில் இறங்குகின்றன.  சிவமும் - சக்தியும்
    அவர்களுக்குப் புகட்டும் பாடம் அதற்கு மாறானது.  
    ஆசையை வெல்லுபவரே வாழ்க்கையில் வெற்றி
    காண்கிறார்கள்.  அண்ணலின் அருளுக்குப் பாத்திரமாகும்
    பொருட்டு, உமா தேவி நெடுங்காலம் தவம் புரிந்தாள்.  
    சிவபெருமானோ தனது நிறைநிலை கலையாது
    பூரணப் பொருளாகவே நிலைத்திருந்தார்.  இந்த
    நிலைக்குக் "கோரதபசு" என்றும், "உக்கிரதபசு" என்றும்
    பெயர்.  உமாதேவியார் அவரை ஆராதித்துக்
    கொண்டிருந்தபோது, அந்த உக்கிரத் தபசைக்
    கலைக்கக் காமத்துக்கு உரிய தேவனான மன்மதன்
    வந்தான்.  காமபாணத்தைத் தொடுத்துத் தவத்தைக்
    கலைத்து இச்சையை உண்டாக்க முயன்றான்.  
    ஆனால், சிவபெருமான் நெற்றிக்  கண்ணைத் திறந்து
     அவனை எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்.
    இந்த நிகழ்ச்சி,"காமதகனம்" என்று இன்றும்
    தமிழ்நாட்டில் பல கிராமத்துக் கோயில்களிலும்
    கொண்டாடப்படுகிறது.  இப்படி கொண்டாடப்படுவதன்
    தத்துவம் என்ன?  ஆசையை வேர் அறுத்த பின்பே
    சிவமும்-சக்தியும் ஒன்றுபட்டன.  ஆசைகளை ஒழித்த பின்பே ஒருவனுக்கு வாழ்க்கையில் சக்தியினால் அருளும்
    வெற்றியும் கிடைக்கும்.  அதையே இந்தப் பண்டிகை
    விளக்குகிறது.  சக்தியும்-சிவனும் சேர்ந்த நிலையே
    உலகில் அனைத்து உயிர்களின் தோற்றம்.  இதையே
    சிவலிங்கம் விளக்குகிறது. காமத்துக்கு அடிமைப்படாத
    மனைவாழ்வில், மாட்சிமைகள் அனைத்தும்
    நிறைந்துள்ளன என்பதே சிவபெருமானின் வடிவம்
    தரும் உண்மை

    திருநீறு ஏன் அணிய வேண்டும்?
    திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படி
    திருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக காரணங்களுக்கு என்றாலும் கூட அதில் பல ஆச்சரிய தக்க உண்மைகளும் இருக்கிறது.
    திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்வாடைகள் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.
    திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்
    மாணவர்கள் மட்டும் அன்றி திருநீறு அணியும் அனைவரும் இந்த பலனை பெறலாம். இது ஆன்மீக உண்மை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான உண்மையும் ஆகும்.
    கோயிலில் விபுதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபுதி இடக்கூடாது.
    நம்மை விட வயதில் இளையவர்களிடம் விபூதியை அவர்கள் கையிலிருந்து
    நாம் இடக்கூடாது. நம் கையில் வாங்கி வலது கை விரலால் நம் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்.   

Wednesday, 27 December 2017

(ராகு- கேது)

 (ராகு- கேது)

ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையான விளக்கம் .
நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.
ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? இதை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் கேது
ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!
நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.
ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். , .
ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.
புராணத்தில் ராகு- கேது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.
பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.
யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.
இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.
ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.
ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை
கிரகத்தன்மை ராகு கேது
1. நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்
3. மலர் மந்தாரை செவ்வல்லி
4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்
5. சமித்து அறுகு தர்ப்பை
6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி
7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
சித்திரகுப்தன், விநாயகர்
8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்
9. திசை தென்மேற்கு வடமேற்கு
10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்
11. வாகனம் ஆடு சிங்கம்
12. தானியம் உளுந்து கொள்ளு
13. உலோகம் கருங்கல் துருக்கல்
14. காலம் ராகுகாலம் எமகண்டம்
15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை
16. பிணி பித்தம் பித்தம்
17. சுவை புளிப்பு புளிப்பு
18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய் செவ்வாய்
20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு
21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)
22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்
23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்
24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா
26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது
27. உருவம்
அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,
ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)…

Saturday, 16 December 2017

கர்ணன்

கர்ணன்


...
கர்ணன்
தேர்சக்கரத்தில்
சிக்கிய தனது உயிரை
தூக்க முற்ப்பட்டு
தன் உயிரை இழந்த கர்ணன்.
எது அந்த தேர் சக்கரம்....?
அது
ஏன் கர்ணனின்
இறுதி பயணத்தில்
அந்த தேர் சக்கரம்
குறிப்பிடதக்க அங்கம் வகுத்தது....?
கர்ணன்
பெயரிலே அவன் விதி எழுதப்பட்டது
அத்தகைய
ஞான புதையல்
இந்திய மகா காவியங்கள்.
கர்ணன் வாழ்வு அனைத்தும்
கர்ணன் பெயரிலே
தலை எழுத்தாக பொறிக்கப்பட்டது.
ஒருவருக்கு பெயர் அமைவதும்
தலை எழுத்து வழியிலே தான்.
ராமன்
ஏறு முகம்.
ராவணன்
இறங்கு முகம்
தர்மன்
ஏறு முகம்
கர்ணன்
இறங்கு முகம்.
மனித உடலில் அமைந்த
சூட்சம சக்கரங்கள்
அவன் பெயருக்கு ஏற்றவாறு இயங்கும்
அது தன் இலக்கை
பெயரின் உச்சரிப்பிலே
உருண்டு
ஏறுவது
இறங்குவதும் ஆக இருக்கும்
என்பது
அறிவியல் பூர்வமான
ஞானமார்க்கமே ...
...
ஒருவனின் பெயர்
மூலாதாரத்தில் இருந்து
சகஸ்ரம் நோக்கி அமையபெற்றால்
அது ஏறு முகம்
உதாரணம்
சிவன்
விஷ்ணு
பிரம்மா
ராமன்
தர்மன்
ஒருவன் பெயர்
சகஸ்ரத்தில் இருந்து
மூலாதாரம் நோக்கி வந்தால்
இறங்கு முகம்
உதாரணம்
ராவணன்
கர்ணன்
சகுனி
தூரியோதனன்
இதில்
கர்ணணுக்கு மட்டும்
மிக சிறந்த
ஒரு சிறப்பு உண்டு.
பாரத இதிகாச த்தில்
யாருக்குமே கிடைக்காத சிறப்பு
கர்ணனின் சிறப்பே.
...
கீழ் முகமாக வாழ்வு அமைந்தாலும்
அதையே
தர்மனை மிஞ்சும்
மேல் நோக்கு முகத்தில் சென்று
வாழ்வை
சிறப்புடையதாக்கி
வாழ்வில் எடுத்த தவறான முடிவால்
அழியும் நிலையில் உள்ள ஒருவன்
அதே வாழ்வில்
வாழ்வை வென்ற நிலைக்கு
கர்ம பயணத்தால்
தர்மமாக வாழ்ந்தவன் கர்ணன்.
பிறக்கும் போது
ஒருவன் உயிர் இருக்கும் இடம்
உச்சந்தலை
அது நின்ற இடம்
நெற்றிப்பொட்டான ஆஞ்னா சக்கரம்.
சாதாரண மனிதர்கள்
இறக்கும் போது
அவர்கள் உயிர் இருக்கும் இடம்
மூலாதார சக்கரத்தில்.
யோக கலாசாரம் என்பது
மூலாதார சக்கரத்தில்
மாட்டிய உயிரை
மீண்டும் தூக்கி சென்று
ஆஞ்னா வில் அமர வைத்து
உச்சந்தலையில்
உயிரை
சிம்மாசனம் இட்டு அமர வைப்பதே யோகம்.
அவர்களே
சிவ
சித்தர்கள்
மகா ரிஷிகள்
அதற்க்கும் மேல் நோக்கிய
பயணத்தில் இறங்கு பவர்கள்
சிவனாக உருவமாறிய
சிவன்
மாக குரு சித்தர்கள்
இவர்களை
இறை தூதுவர்கள் என்றும்
சம காலத்தில் அழைக்கப்படுகிறார்கள்.
....
கர்ணன்
....
தனது
அத்தனை திவ்யத்தையும்
அன்பாக
வாரி கொடுத்தே
மூலாதார சக்கரத்தில் வீழந்தவன்.
இறுதியில்
மூலாதார சக்கரத்தில்
மாட்டிய இந்த உயிரை
மீட்ட போராடியவன் ..
அந்த நேரத்தில் கர்ணனுக்கு
உதவாமல்
அறிவை தூக்கி கொண்டு
தேரை விட்டு ஓடியவர்
கர்மன்
ஆகையால்
கர்ணணுக்கு
நினைவாற்றல் இல்லாமால் ஆனது.
மூலாதார சிக்கல்
உலகிலே
ஒருவனை யாராலும்
காப்பாற்ற முடியாது ...
காரணம்
அது
கர்ம சிக்கல்.
மூலாதாரத்தில் சிக்கி
கர்ணன் மாண்ட வந்த போது
தர்மம் தாங்கியது
தர்மம் ஒருவன் பக்கத்தில்
இருக்கும் போது
எவனாலும்
எமனாலும்
ஒருவரை வதைக்க முடியாது...
அந்த
தர்மத்தை
இறைக்கே தானம் செய்த கர்ணன்
அதன் பின்னே
கர்ணணை
அர்ஜுனன் அம்பால்
கர்ணன் உயிரை
நெருங்க முடிந்தது...
இறக்கும் முன்
தர்மத்தை
இறைவனுக்கே தானம் செய்ததால்
கர்ணண்
தர்மனையும் மிஞ்சிய
ஏறுமுகமாக பயணத்தில் ஏறி
மூலாதாரத்தில் இருந்து
இறை ஆதாரத்திற்க்கு சென்றவன்
கர்ணன் ஒருவரே
என்பதே
கர்ணணை அனைவரும் ரசிக்க
காரணமான
கர்ண மகா சிறப்பே.
மூலாதாரம் நோக்கிய
லௌகிய வாழ்வு அமைந்தாலும்
எண்ணத்தால்
ஈகையால்
அன்பால்
தர்மத்தால்
உச்ச நிலையை அடைய முடியும்
என்பதற்கு
உலகின்
மகா சான்று
சூர்ய புத்திரன்
மாவீரன்
அன்பு கர்ணணே

... ஏன் பிறந்தோம்...?

...
ஏன் பிறந்தோம்...?


 இந்த பிறவியில்
எதை செய்ய வேண்டும் என
ஆத்மம்
பிறந்த ஆத்மம் எதிர்பார்க்கிறது..?
...
மனதின் ஆசை
சாமான்ய மக்களுக்கும் புரிகிறது...,
இந்த
ஆத்மத்தின்
பிறந்த
ஆத்மத்தின் ஆசைதான் என்ன...?
..
பிறந்தவன்
செல்வம் தேடுவது குற்றமா...?
..
உறவுகளை
தேடி ஓடுகிறானே
அது ஏன்
வலிகளை தருகிறதே.. .?
...
உறவுக்கும்
பிறந்த
மனிதனுக்கும்
இருக்கும்
ரகசியம் தான் என்ன...?
...
கடவுள் இருக்கிறாரா...?
ஏன் இருககிறார்....?
கடவுளை மற்ற உயிரினங்கள்
உணர்ந்து வாழ்வது போல தெரிந்தாலும்
அவைகள் ஏன்
கடவுளை தேடவில்லை...?
...
மனிதனுக்கு
கடவுள் தேவையா....?
ஏன்
எதற்கு
மனிதனுக்கு கடவுள் தேவை...?
...
...
இப்படி
அடக்கடுக்காக உள் இருந்து வரும் கேள்விகள்..,
அதற்கான பதிலையும்
சிவம்
பிறந்த உயிருக்குள்ளேயே
வைத்து இருப்பது
இறை உணரந்த இதயம் எல்லாம் உணர்ந்ததே..!
...
பிறந்தவன்
செல்வம் தேடுகிறான் தவறு அல்ல,
அந்த
செல்வத்தை
ஏன் தேடுகிறான் என்பதை
உணராமால் போவதே தவறு.
பிறந்தவன்
உறவுகளை தேடுகிறான் தவறு அல்ல..,
அந்த உறவுகளை
யார் ,,?
அந்த உறவுகள் எதற்க்கா
என்பதை உணராததாலே
தேடிய உறவுகளால் வரும் வலி.
...
எதறக்காக பிறவி...?
...
முக்தி அடைவததற்க்காகவா..?
...
முக்தியை
ஒருவன் தேடி பிடிக்க முடியாது
அது
தானாக
நிலை புரிந்து
இறை தரும் வரம்..
..
எது அந்த நிலை...?
...
ஆத்தமத்தின் முழு நிறைவு...?
...
ஆத்மத்தின்
முழு நிறைவு எது..?
அது
எங்கே
எப்படி துவங்குகிறது...?
...
ஒரு மனதின்
ஆசை முடியும்போது
ஆத்மத்தின் ஆசை தொடங்குகிறது..
ஒரு
ஆத்மத்தின் ஆசை முடியும் போது
முக்தி உலகத்தின்
இறை கதவுகள் திறக்கிறது.
..
ஆத்மத்தின் ஆசை என்ன..?
...
ஆத்மம் சரீரத்தின் மூலம்
பிறந்த மனம்
அதன் ஆசைகளை உணர்ந்து
அடங்க வேண்டும் என்பதில்
ஆரம்பிக்கும்
ஆத்மத்தின் ஆசை
ஒரு ஸ்தூல குருவை தேடுகிறது.
...
ஸ்தூல குரு
அனைத்ணையும் போதிக்க முடியுமா...?
...
நிச்சயமாக முடியாது...
..
ஒரு அளவுக்குத்தான்
ஸ்தூல குருமார்களின் பாடம்
சீடருக்கு கிடைக்கும்
..
முழுமையான
பாடத்தை
உலகில்
எந்த
ஸ்தூல குருமார்களாலும்
கொடுக்க இயலாது...
அப்படி கொடுத்தாலும்
அது
சீடருக்கு புரியாது.
...
பாடத்தின்
முதல் கட்டத்தை மட்டுமே
ஸ்தூல குருமார்கள் தர முடியும்.
அடுத்த கட்ட பாடத்தை
உயிர் உள் இருக்கும்
சத் இறை குருவே நடத்த முடியும்.
அதற்காக
பிறந்த பிறவியை
நோக்கி நகர்த்துவதே
ஆத்மதின்
ஆரம்ப கால ஆசை..
...
பிறவி நோக்கம்
அது
கற்றலே...
...
பிறந்த பிறவியின் அழியா செல்வம்
கல்வியே...
...
இறந்த பின்
எடுத்து செல்ல கூடிய செல்வமும்
கல்வி செல்வமே.
...
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
என்பது
ஆத்மத்தின் அதீத ஆசையே...
...
ஏன்
அந்த கல்வி ஆத்மத்திற்கு தேவை...?
...
அந்த
கல்வியை முழுமையாக கற்க்காததாலே
பிறந்ததே இப்பிறவி..
...
அப்படி ஆனால்
கல்வியே கற்காதவர்களால்
இறை உலகை நெருங்க முடியாதா..?
..
நிச்சயமாக முடியாது.
...
கல்வியே கற்காமால்
இறையோடு இறையாக கலந்தவரும்
உண்டு தானே...?
...
நிச்சயமாக உண்டு..
..
பின்
ஏன்
அவர்கள் பிறந்தார்கள்..?
..
கற்ற கல்வியை
கற்றதோடு விட்டு விட்டு
அதன் படி வாழாததாலே..
அவர்களுக்கு
கல்வி
சென்ற பிறவியிலே கிடைத்து விட்டது
ஆதலால்
அவர்கள்
கற்றபடி
ஒரு வாழ்க்கையே
வாழ பிறந்தவர்கள்..
...
நல்ல
குரு மார்களும் பிறக்கிறார்களே..?
பாவம்
அவர்கள் என்ன தவறு செய்தார்கள்..?
..
அவர்கள்
கற்றதை யாருக்கும் சொல்லி கொடுக்காமால்
மடிந்ததாலே...
...
சிறந்த குருமார்களை
இறைவன்
திருப்ப பிறக்க வைப்பது உண்டு தானே..?ஏன்..?
...
நிச்சயமாக உண்டு...
...
அவர்கள்
கல்வியும் கற்றார்கள்
கல்விமையும்
விற்றார்கள்
தீட்சை தர மறந்தார்கள்...
முழுமைமான தீட்சை தர மறுத்தார்கள்.
இறுதி வரை
மௌன நிலைக்கு செல்லாமால்
இறுதி வரை பேசிக்கொண்டே இருந்ததாலே
இப்பிறவிமில்
மௌவுனமாக மட்டுமே
பாரினில் திரிந்து
அதன் மூலம்
சில நிலைகளை எட்டிய
சீடருக்கு
சரீர ஆத்ம தரிசனம்
தருவதற்க்கா பிறந்தவர்கள்...
...
முக்தி அடைந்த குருமார்கள்
பிறப்பது உண்டு தானே..?
நிச்சயமாக உண்டு..
..
இவர்கள்
மானிடருக்கு அருகே இருந்தாலும்
யாருக்கும்
சுலபமாக
இவர்களை அடையாளம் காட்டதவாறு
இருப்பார்கள்..
..
ஸாதூ குருமார்களின்
ஸ்தூல பாடம் முடிந்த பின்னே
மீண்டும்
சில ஸ்தூல ரகசியத்தை
தூண்டுவதற்ககா
பிறந்த சத் சிவ குரு இவர்கள்...
...
பிறந்த பிறவியில்
ஆத்மம் விரும்புவது
ஒவ்வொரு நாளும் கல்வி
கற்றுகொண்டே இருப்பதும்
அதன் படி வாழ்வதுமே..
...
ஒரு கட்டத்தில்
உள் இருக்கும் குருவை கண்டு
அவரோடு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடத்தை படித்து
அதன் படி வாழ்வதே
ஆத்மத்தின் ஆசை...
...
கடவுள் இருக்கிறாரா..?
ஏன்
மனிதனுக்கு கடவுள் தேவை...?
...
உயிரோடு இருந்து கொண்டு
இந்த கேள்வியை கேட்கிறாரே...
அந்த கேட்பவரே கடவுள்...
..
இதற்கு ஒரு பதிலும் கிடைக்க செய்கிறாரே
அதை நடத்துவதும் இறைவன்
...
கடவுள் எங்கும் இருக்கிறார்..
அனைத்துமாக இருக்கிறார்..
...
கடவுள்
பணம் கொடுக்கவா ...?
உழைத்தால் பணம் வருமே
அதற்கு ஏன் கடவுள்..
..
நோயை குணமாக்கவா..?
அதற்கு மருத்துவர்களும் இருககிறாரே..
..
ஆனந்தத்தை தரவா கடவுள் தேவை...?
..
ஆனந்தத்தை
தர மனமும் உண்டே...?
..
இதை எல்லாம்
கடவுளால் கொடுக்க கொடுத்து கொண்டு
இருந்தாலும்
அதையும் தாண்டி
இத்தனையும் தாண்டி
கடவுள்
மனித பிறவிக்கு
தேவைப்படுவது
எமனிடம் இருந்து
பிறப்பு இறப்பு கடந்து
ஆத்மத்தை காப்பதே..
அதுவே
ஆத்தமத்தின் ஆசை..
..
அதற்கு
ஆத்மம் விரும்புவது
கற்றலும்
கற்றபடி நடப்பதும்
கற்றதை போதிப்பதும்
போதிப்பது போல வாழ்ந்து காட்டுவதும்
மௌனத்தை ருசிப்பதும்
சுவாசத்தை ரசிப்பதும்
முழுமை அடைந்து
இறையோடு கலப்பதும்
பிறந்தது ஆத்மம்
இதற்காகவே
நம
ஓம்
நமசிவாய

Monday, 11 December 2017

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

தண்டம்


தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள்.
"தண்டம்" என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து "T " அல்லது "Y " வடிவத்தில் இருக்கும்.
...
அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்து விட்டால், சுவாசம் திசை மாறும்.
...
வலது நாசி சுவாசத்தை நிறுத்த, வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே, இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த, இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும்.
...
இது தான் தண்டத்தின் பயன்.
நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள்.
ஆனால், சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வென்றும்?
எப்போது தடம் மாற்ற வேண்டும்?
....
அதாவது, நாம் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால், அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடனே, தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே, சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில், மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது, அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
...
நம் சித்தர்கள் சொல்லிவைத்த விஷயங்களை எப்போது நாமெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி வைத்து விட்டு, கைகளில் மொபைல் போனையும் லாப்டாப்பையும் நம்ப ஆரம்பித்தோமோ, அப்போதே நம் சித்தர்கள் நம்மை ஒதுக்கி வைத்துவிட்டு காட்டுக்குள் சென்று விட்டார்கள்.
...
துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. விதியை மாற்றுவது போன்றது இது. இருந்தாலும், இது சாதாரண காரியம் அல்ல. அதற்கான பொறுமையும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் நம்மிடம் மிகவும் தேவை.
...
ஆனால், இதை அவ்வளவு சுலபமாக அடைந்து விட முடியாது. நமக்கு அப்பாற்பட்டு தர்ம நீதி நியாயங்கள் என்று அண்ட சராசரத்தில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் அனுக்கிரகம் வேண்டும். அதற்கு நம்மிடம் பொதுநலச் சிந்தனை, கருணை, இரக்கம், பக்தி, சேவை, சுயநலமின்மை போன்ற பரோபகாரச் சிந்தனைகளும் தகுதியாக இருக்க வேண்டும்.
... ஓம் நமசிவாய நமஹ...

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...