Monday 11 December 2017

தண்டம்


தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள்.
"தண்டம்" என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து "T " அல்லது "Y " வடிவத்தில் இருக்கும்.
...
அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்து விட்டால், சுவாசம் திசை மாறும்.
...
வலது நாசி சுவாசத்தை நிறுத்த, வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே, இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த, இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும்.
...
இது தான் தண்டத்தின் பயன்.
நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள்.
ஆனால், சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வென்றும்?
எப்போது தடம் மாற்ற வேண்டும்?
....
அதாவது, நாம் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால், அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடனே, தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே, சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில், மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது, அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
...
நம் சித்தர்கள் சொல்லிவைத்த விஷயங்களை எப்போது நாமெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி வைத்து விட்டு, கைகளில் மொபைல் போனையும் லாப்டாப்பையும் நம்ப ஆரம்பித்தோமோ, அப்போதே நம் சித்தர்கள் நம்மை ஒதுக்கி வைத்துவிட்டு காட்டுக்குள் சென்று விட்டார்கள்.
...
துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. விதியை மாற்றுவது போன்றது இது. இருந்தாலும், இது சாதாரண காரியம் அல்ல. அதற்கான பொறுமையும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் நம்மிடம் மிகவும் தேவை.
...
ஆனால், இதை அவ்வளவு சுலபமாக அடைந்து விட முடியாது. நமக்கு அப்பாற்பட்டு தர்ம நீதி நியாயங்கள் என்று அண்ட சராசரத்தில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் அனுக்கிரகம் வேண்டும். அதற்கு நம்மிடம் பொதுநலச் சிந்தனை, கருணை, இரக்கம், பக்தி, சேவை, சுயநலமின்மை போன்ற பரோபகாரச் சிந்தனைகளும் தகுதியாக இருக்க வேண்டும்.
... ஓம் நமசிவாய நமஹ...

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...