Tuesday, 9 June 2026

யானை முகம் :


 யானை முகம் :

யானையின் தும்பிக்கைக்குள் காற்று எப்படி நுழை கின்றதோ அதே போல் சுழுமுனையில் காற்று நுழைகின்றது. என்பது உவமை'
யானையின் தும்பிக்கை காற்று புகுந்து வெளிவரும் இரு வழிப் பாதை. சுழுமுனை நாடியோ காற்று உள்ளே புகுந்து ஆங்ஞையில் வெளிப்படும் ஒருவழிப் பாதை. துதிக்கையைப் போல சுழுமுனை உள்ளது என்பது ஒரு ஒப்பீடு ஆகும்.
பாம்புகள் உவமை:
குண்டலினி விழிப்பை பல யோகிகள் பல பெயர்களில் அழைத்தனர். சிவயோகம், சக்தியோகம், ராஜயோகம், விஷ்ணுயோகம், புஜங்கி, ஜென், சிலுவைப்பாதை, மெக்கா மெதினா வழிக்குகை, இயமநியமம் என்றெல்லாம் அழைத் தனர். பலப்பல உவமைகள் மூலம் குண்டலினி யோகத்தை விளக்கினர். குண்டலினி வாயு ஓட்டம் எப்படி இருக்கு மென்றால் படமெடுத்து நிற்கும் பாம்பு போல் இருக்கும் என்றார் ஒரு யோகி. இது ஒரு உவமையே.
இதனை வைத்து கற்பனைகள் பல தோன்றின. பாம்பு வழிபாடு தோன்றியது. மக்கள் தேவையில்லாமல் குண்டலினி யோகத்தை குறித்து அச்சம் கொண்டனர்.
குண்டிப் பகுதிக்குச் சற்று மேலே தன் வாலை தன் வாயாலேயே கவ்வியபடி குண்டலினிப் பாம்பும் படுத்து உள்ளது. அதனை தட்டி எழுப்ப வேண்டும் என்று புரியாமல் கூறமுற்பட்டனர். இதனைக் கேட்ட மக்கள் குண்டலினி விழிப்படைவது பாம்பு உள்ளே விழிப்படைவது என்று எண்ணிக் குழம்பினர். இந்த அச்சம் தேவையற்றது. குண்டலினி என்பது ஒரு வாயு ஓட்டம். படமெடுத்து நிற்கும் பாம்பு போல் அது உள்ளது என்பது ஒரு உவமை. அவ்வளவு தான்.
சிற்பிகள் சிற்பத்தின் மூலமும், ஓவியர்கள் ஓவியத்தின் மூலமும், கவிஞர்கள் கவிதையின் மூலமும், ஆடற்கலைஞர்கள் நாட்டியத்தின் மூலமும் குண்டலினி யோகத்தை உவமைகள் மூலம் விளக்கினர்.
உவமைகளில் உள்ள செய்தியை மட்டும் அறிந்து தேவையற்ற சடங்குகளைத் தவிர்ப்பது பகுத்தறிவாகும்.
ஐந்துகர உவமைகள் :
குண்டலினி யோக சாதகனுக்கு சாதனைப் படிகள் ஐந்து ஆகும்.
1. சிறு வயது முதல் சிந்தனையை குண்டலினியில் செலுத்து அதனைச் சிறிது சிறிதாக அறிதல் வேண்டும்.
விந்து பருவ வயதில் விளைந்த பின்னரே குண்டலினி கைக்கூடும் என்றாலும், சிறுவயதில் கோயிலுக்குச் செல்லுதல், தோப்புக்கர்ணம் போடுதல், பொட்டில் குட்டிக் கொள்ளுதல் மலையேறுதல், விழுந்து கும்பிடுதல் முதலிய செயல்களைச் செய்து வந்தால் புட்டப் பகுதியில் உள்ள ஞான உறுப்புகள் பருவ வயதில் நன்கு செயல்படும். சிறுவர்களை கணபதியம் மூலம் குண்டலினி சாதனைக்கு தயார்படுத்துவது முதல்படி. இனிப்புகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சிறுவர்களுக்கு பஞ்சாமிர்தம், பால், தேங்காய் இவைகள் சத்துணவுகள். சிறுவயதில் சிறுவர்களுக்கு அவரவர் தாய் மொழியும், அந்தந்த சமூக பழக்க வழக்கங்களே சிறந்தது. சிறுவர்களை குண்டலினி பாதைக்கு அழைத்துச் செல்லு வதைக் காட்ட விநாயகரின் ஒரு கரத்தில் கொழுக்கட்டை உள்ளது.
2. இரண்டாவது சாதனையின் கட்டம் விந்து விளையும் பருவம்.
குண்டலினி சக்தி என்றால் என்ன? என இளைஞன் அறிகின்ற பாடப்படி இது. இங்கு சரியான அணுகு முறையில் குண்டலினியைப் பற்றி சாதகன் அறியவேண்டும். போலி வழியில் குண்டலினியை அடைய எண்ணாமல் சாதகன் தெளிவான வழியில் செல்ல வேண்டும்.
பிராணயாமப் பயிற்சி காமக்கட்டுப்பாடு முதலியன இரண்டாவது படியில் வற்புறுத்தப்படுவது. எனவே விநாயகரின் இரண்டாவது கரத்தில் அங்குசம் உள்ளது. தவறான வழியில் செல்லும் மதம் பிடித்த மூளையை அடக்கி சரியான பாதையில் திருப்புவது அங்குசத்துக்கு உவமை.
3. மூன்றாவது காலக்கட்டம் குண்டலினி விழிப்படை யும் பரபரப்பான காலம்.
காம இட பிங்கல நாடி தரும் ஆக்ஸிஜன் அழுத்தம் வாயுவாக மாற மூலாதாரத்தின் வாய் திறந்து மூலவாயு வேகமாக உட்புகும் சாதனை காலம். சுழுமுனை நாடியில் ஐந்து சக்கரத்தில் சுழன்று மேலேறி ஆக்ஞையின் (புருவமத்தி) வேகமாக வாயு வெளியேறும் காலகட்டம் இது. சாதகனுக்குப் பரபரப்பான காலம். குண்டலினி விழிப்படைந்ததும் ஆரம்பக் கட்டத்தில் கண்ணை மூடினால் ஒளி வட்டம் தோன்றி புதுமைகளை உணர்த்தும் ஆச்சரியமான காலமிது. இந்தப் படியில் சாதகன் குண்டலினி யோகியாக மாறிவிட்டான். குண்டலினி விழிப்படையும் காலமாதலால் விநாயகரின் ஒரு கரத்தில் படமெடுத்தாடும் பாம்பு உள்ளது.
4. நான்காவதுக் கட்டம் குண்டலினி யோகிக்குக் கிடைக்கும் அனுபவங்கள் :
தரிசனங்கள், பாடங்கள், உலக பொருள்கள் உள்ள காரணங்கள், ஆகாஷ வாணி தரும் செய்திகள் உள், ஜோதி, வெளி ஜோதி தரிசனம் என்று பல ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை யோகி உணரும் கட்டம் இது. 12 வருடங்கள் நடத்தப்படும் பாடத்தின் இறுதியில் யோகி ஞானியாகின்றான்.
கூர்மையான முன் மூளையுள்ள யோகி பாடங்களை பெறுவதால் அம்பும், வில்லும் வினாயகரின் நான்காவது கையில் உவமை பொருட்களாக உள்ளது. வில் குண்டலினி எழுந்த நிலையையும், அம்பு கூர்மையான அறிவையும் குறிக்கும்.
5. ஐந்தாவதுக் கட்டம் ஞானி படிப்படியாக பிரம்ம ஞானியாக மாறுதல்:
ஓஜஸ் என்னும் பேரறிவு நிலையை குறிக்கும் கனிந்த மாம்பழமும், உறுதியான இளமையான உடலைக் கொண்டு திகழ்வதை அமிர்த கலசமும் உணர்த்தும். நல்ல உடலிலேயே ஞானம் சேரும்.
வினாயகர் துதிக்கையான ஐந்தாவது கரத்தில் மாம்பழம் அல்லது அமிர்த கலசம் வைக்கப்பட்டு தேஜஸ், ஓஜஸ் நிலைக்கு உவமையாக கூறப்பட்டது. பேரறிவு பெருகும். எப்போதும் இளமையான தேகம் கிடைக்கும்.
இனி வரும் விளக்கம் உவமைகள் அனைத்தும் சாதகன் கடக்கும் ஐந்து படிகளில் கிடைக்கும் அனுபவம் அல்லது உறுப்புகளைப் பற்றிய விளக்கமாக . இருக்கும். உருவங்கள் அனைத்தும் ஐந்து படிகளின் உவமைகள்.
யோகிகள் கண்ட அனுபவத்தை, பலபல சிலைகளிலும், ஓவியத்திலும், கவிதையிலும், நாட்டியத்திலும், கதைகளிலும் கூறினர். சிலைக்கு சிலை உருவங்களின் கைகளில் உள்ளப் பொருட்கள் வேறுவேறாக உள்ளது.
உவமைப் பொருட்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகின்றது. இங்கு ஐம்பதுக்கு மேற்பட்ட உவமைகளுக்கு விளக்கம் தந்துள்ளோம்.
லிங்கம் : மூடிய நிலையில் உள்ள மூலாதாரப் புனலை உணர்த்திடும் உவமை. மூலாதாரப் புனல் வடிவிற்கு மேலுள்ள சதை கறி லிங்கம் போல உள்ளது.
மாதுளை : வினாயகர் கையிலுள்ள பிளந்த மாதுளை திறந்த நிலையிலுள்ள மூலாதாரத்தைக் காட்டும் உவமை.
மூஞ்சூர்: மோஷிகம், எலி, பெருச்சாலி, மூஞ்சூர் அனைத்தும் ஒரே செயலையே செய்யும். எலி வலை வாயில் களை அடைத்து விட்டால் எலி புதிதாக வலை தோண்டி வழி செய்து தப்பிக்கும்.
கடுவெளியில் சூடான ஆக்சிஜன் அழுத்தத்தில் தவித்து மூலாதாரத்தை திறந்து கொண்டு பாய்கிறது. இது ஒப்பீட்டு உவமை.
வினாயகருடன் சரஸவதி லட்சுமி : குண்டலினி விழிப்
படைந்தப்பின் தெளிவான ஞானம் கிடைப்பதை சரஸ்வதி மூலமும், சக்கர தரிசனம், கை தரிசனம் சக்கரவர்த்தியாகும் நிலையும் ஐஸ்வரியம் பெரும் நிலையும் சாதனுக்கு பெற்று தருவதால் லட்சுமியும் உவமையாகக் கூறப்பட்டனர். இங்கு வினாயகர் வடிவம் குண்டலினிக்கு உவமை. குண்டலினி மூலம் கிடைக்கும் ஞானத்திற்கு சரஸ்வதி உவமை. தரிசனம் கிடைக்கப் பெறும் சாதகன் உலகத்தில் ஐசுவரியமும் பதவியும் பெறுவதற்கு லட்சுமி உவமை.
படத்தை மட்டும் வீட்டில் மாட்டினால் போதாது குண்டலி சாதனையும் செய்ய வேண்டும்.
தாமரை: எல்லா தெய்வங்களின் கைகளிலும் தாமரை இருக்கும். தாமரையின் தண்டு, சுழுமுனை நாடிக்கு உவமை யாகவும், தாமரை மலர் ஆக்ஞையின் வெளிப்படும் வாயுவுக்கு உவமையாகவும் கூறப்பட்டது.
மாதுளை போது மலர் கமலை :
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணுர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளை போது
மலர் கமலை
- அபிராமி அந்தாதி
மாதுளை போது மலர்கமலை என்பது மாதுளையிலிருந்து வளர்கின்ற தாமரை என்பது. இது கவிதை உவமை. திறந்த மூலதாரத்தில் சுழுமுனை நாடியில் வாயு பாய்ந்து மலர்போல ஆக்ஞையில் வெளிபடுகின்றது என்பதை குறித்தது.
1
i
திரிசூலம், வேல் : வினாயகர் கரத்தில் திரிசூலம், வேல்
முதலியன இருக்கும். புருவ மத்தியிலிருந்து மேலே நெற்றி யில் ஊர்ந்து செல்லும் வாயு மூன்றாக பிரிந்து செல்லுதற்கு திரிசூலமும், சில நேரம் ஒன்றாக செல்வதற்கு வேலும் உவ்மையாக கூறப்பட்டது. யோகிக்கு ஏற்படும் ஒரு அனுபவம் உவமையாகவுள்ளது.
i
பாசம்: மூலாதாரம் முதல் சுழுமுனை நாடி பின்னந்தலை யில் இரண்டாக பிரிந்து ஓடுவதன் வடிவம், சுருக்கிட்ட கயிற்றைப் போலுள்ளது என்பது உவமை. இதனை நாக பாசம் என்று கூறுவர்.
செந்தூரத் திலகம்: புருவ மத்தியிலுள்ள ஆக்ஞை சக்கரத்தை உணர்த்திடும் உவமை பொருள் செந்தூரம்.
ஒற்றைக் கொம்பு : இடப்பக்கம் பெண்மைக்கு, வலப்
பக்கம் ஆண்மைக்கு என்பது அர்த்த நாரீஸ்வரன் உருவம். வினாயகரின் யானை முகத்தில் ஒற்றைக் கொம்பு ஆண் தன்மையும், கொம்பில்லா இடப்பகுதி பெண் தன்மையையும் குறித்த உவமை.
பிங்கலை மூலம் வாசிக்குள் புகும் காற்று மூர்கமாகச் செயல்படும். இடகலை மூலம் வாசிக்குள் புகும் காற்று நிதானமாக செயல்படும். இதனையே ஆண் பெண் உவமை யாக சித்தரித்தனர்.
வல்லபை : குண்டலினி எழுச்சி வளைந்து நெளிந்து ஓடுவதை வாலைக்குமரிக்கு உவமையாகக் கூறினார்கள். சிலைவடிவில் குமரிப்பெண் நிற்கும் தோற்றம், ஒரு கால் தரை யில் வேளாக ஊன்றி அந்தக் கால் முட்டி கொஞ்சம் மடங்கி
உள்வாங்கி, பின் புறத்தில் ஒரு நெளிவு, இடையில் ஒரு வளைவு, பின் அங்கத்தில் ஒரு சுளிவு, அதற்கு பின் கைகளில் ஒரு வளைவு, கழுத்தில் ஒரு வளைவு என்று விளங்குவாள் பருவப்பெண். குண்டலினி வாயு ஓடும் சுழுமுனைக்கு பருவ பெண்ணை உவமையாகக் கூறினார்.
i
மூலாதாரம் அடிமடியில் இருப்பது. அதில் குண்டலினி மடியில் நின்றபடி வினாயகரின் எழுகிறது. வல்லபை இருப்பது குண்டலினிக்கு உவமை.
சித்தி, புத்தி : புத்தி என்பது குண்டலினியால் கிடைக்
கும் பேரறிவு என்னும் ஆன்மீக ஞானம் இறைவனுக்கு இணையான அறிவை தருவது குண்டலினி சித்தி என்பது குண்டலி மூலம் கிடைக்கும் யோக உடல் மற்றும் உறுதியான உடல். இதனையே காயசித்தி என்பர்.
புத்தி, சித்தி இரண்டு பாடங்களையும் இணைந்தே வழங்குவது குண்டலினி தேகம் நன்றாக இருந்தால்தான் பாடம் படிக்க முடியும்.
குண்டலினி விழிப்படைந்த பின் 12 வருடம் கழித்து 'நீ ஞானி' என்று ஆகஷவானி அறிவிக்கும்.
ஞானத்தின் இரண்டு வகையே புத்தி சித்தி. இரண்டும் வளர வேண்டும். இரண்டும் வளர்ந்து ஒரு எல்லையைக் கடப்பது ஞானம்.
முப்புரிநூல் : முப்புரி நூல் என்பது சுழுமுனை நாடிக்கு
உவமை. 'நமக்குள் உள்ள சுழுமுனையில் மூலவாயு இயங்க செய்ய வேண்டும். வெளியில் பூனூலாக போட்டுக் கொள்வதால் பயனேதும் இல்லை.
தன்னுள் பார்பவனே பார்பனன்.
ஐயம் அறுத்தவரே ஐயர்.
பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன்.
இது காயம். மேலே இருப்பது ஆகாயம். இந்த உடலி லுள்ள பஞ்பூதத்தும்தான் எங்கும் உள்ளது என்பதை உணர்ந்து அனைத்துயிரையும் ஒன்றாக பார்ப்பவனே பிரம்மத்தை உணர்ந்தவன்.
நகைகள் : சங்கிலி ஆரங்கள். அதனுடன் பதக்கங்கள் இவைகள் எல்லா தெய்வத்திற்கும் அணிவிக்கப்படுகின்றது பதக்கங்கள் ஐந்து சக்கரத்தின் வடிவைக் குறிக்கும்.
வினாயகரின் அரைஞாணில் உள்ள பதக்கம் மூலா தாரத்தை குறிக்கும். வட்டத்திற்குள் ஒரு சதுரம் கொண்ட பதக்கத்தின் நடுவில் சிவப்புக் கல் இருக்கும். பதக்கங்களின் ஓரங்கள் வேலைப்பாட்டுடன் இருப்பதை கவனிக்கக் கூடாது. பதக்கத்தின் மையத்தை மட்டுமே கவனிக்க வேண்டும்.
கழுத்திலிருந்து தொப்பிலுக்கு கீழ்வரை ஒரு ஆரம் தொங்கும். இது சுவாரதிஷ்டானத்தைக் குறிக்கும். இதன் பதக்கம் வட்டத்திற்குள் வட்டம். அந்த இரு வட்டத்தினுள் மற்றொரு வட்டம் இப்படி அமைந்திருக்கும். மஞ்சள், பச்சை, சிகப்பு கற்கள் பதக்கத்தில் பதிக்கப்பட்டிருக்கும்.
ஆரம் வயிற்றின் தொப்பிலுக்கு மேல்வரை ஒரு தொங்கும். இதன் பதக்கம் வட்டத்திற்குள் முக்கோண அமைப்புடன் இருக்கும். இது மணிப்பூரக சக்கரத்தை குறிக்கும். நீலம், பச்சை இங்கு பதிக்கப்படும் கற்கள்.
இதயத்தை தழுவியபடி ஒரு ஆரம் விளங்கும்..இதன் பதக்கம், வட்டத்தினுள் நட்சத்திர அமைப்புடன் இருக்கும். இது அனாகதச் சக்கரத்தைக் குறிக்கும். முத்து இதில் பதிக்கப்பட்டிருக்கும்.சூரியப் பிரபை சந்திரப் பிரபைக்கு நடுவே ஜடை அந்த பில்லை வரும். இதில் வட்டத்தில் முக்கோணமும்,முக்கோணத்தின் நடுவில் ஒரு வட்டமும் வரும்படி அமையும். விசுத்தி சக்கரத்தை குறிக்கும்.
சூரியக்கலை சந்திரக்கலையை சூரியப் பிரபை, சத்திரப் பிரபையை குறிக்கும்.
நெற்றி சுட்டிகை ஆக்ஞை சக்கரத்தைக் குறிக்கும். ஆக்ஞையிலிருந்து வாயு தலைக்கு ஏறுவதைக் காட்டும் நெற்றிச் சுட்டிகையில் சந்திரனுள் சூரியன் வடிவை அமைப்பர்.
கீரிடம் சிலநாள் அலங்காரப் பொருளாக இருக்கும். கிரிடம் ஆக்ஞையிலிருந்து வெளிபடும் வாயு தலைக்கு மேல் ஏறி நின்று இறங்குவதை காட்டும் உவமை. கீரிடத்தில் வெள்ளைக் கற்களும், வைரமும் பதிந்து இருக்கும்.
சலங்கைகள் : தெய்வங்களுக்கு ஆறுவகையான சலங்கைகளை அணிவிப்பார்கள்.
குண்டலி விழித்து மேலறி ஓடி நெற்றியில் வருவதையும், அதனை ஆக்ஞை வெளியே சுழன்று சுழன்று தள்ளுவதையும் அழகான உவமையாக கூறுகின்றார் அருணகிரி நாதர். நமோ நமோ என்ற ஒலியுடன் வாயு வெளியில் வருகின்றது என்று உவமித்தார்.
ஓம் சிவ சிவ ஓம் 🪷 🙏🏻.


No comments:

Post a Comment

தோஷம்,பித்ரு சாபம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்

பித்ரு தோஷம்,பித்ரு சாபம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள்   யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்கினத்தில் குருபகவான் இருந்தாலும் சரி அல்லது லக்கனாத...