வஜ்ராயுதம் ஏன் வெல்லமுடியாத ஆயுதமாக கருதப்படுகிறது?
ஒரு ஆச்சர்ய தகவவலை இன்று சித்தர்களின் குரல். வாயிலாக பகிர்கிறேன்.....
புராண கால ஆயுதங்களான வஜ்ராயுதம் என்கிற ஆயுதமும், சார்ங்கம், காண்டீபம் மற்றும் பினாக, போன்ற விற்கள் வெல்ல முடியாத ஆயுதங்களாக கருதப்படுகின்றன, இவை ஒரு மஹரிஷியின் எலும்பில் இருந்து உருவாக்கப்பட்டவை.
ததீசி முனிவர் வேத காலத்தைச் சார்ந்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவருடைய பெற்றோர் அதர்வண முனிவர் சிட்டி தேவி ஆவர். இவருடைய தந்தையே அதர்வண வேதத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். ததீசி முனிவரின் மனைவி சுவர்ச்சா ஆவார். இவர் ஒரு சமயம் அரசன் ஒருவனுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இதனால் முனிவருக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. சண்டையின் முடிவில் ஏராளமான காயங்கள் முனிவருக்கு உண்டானது. ததீசி முனிவரும் சுக்ராச்சாரியாரின் உதவியால் காயங்கள் நீங்கப் பெற்றார். பின் சுக்ராசாரியார் ததீசி முனிவருக்கு ம்ருத்யுஞ்ச சஞ்சீனி மந்திரத்தை போதித்தார். மந்திர உபதேசத்தின் பலனாக முனிவரின் உடல் மின்னல் போன்று வலிமை மிக்கதாக மாறியது. பின் முனிவர் அரசனுடன் ஏற்பட்ட சண்டைக்காக மனம் வருந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார். இறுதியில் சிவபெருமான் முனிவருக்கு காட்சி தந்தார். பின் முனிவரை எவரும் துன்புறுத்த முடியாது. எவரும் முனிவரைக் கொல்ல முடியாது. முனிவரின் உடல் மற்றும் எலும்புகள் வஜ்ரம் (மின்னல்) போன்று உறுதியானவையாக இருக்கும் என வரங்களை வழங்கினார். பின் ததீசி முனிவரும் காட்டில் தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.
அப்பொழுது பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும் அசுரர்களும் முடிவு மேற்கொண்டனர். தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது என்று கூறினார். தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள் என்று கூறினர். முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார். பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர். ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார் நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை. ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.
சிலகாலம் சென்ற பின்பு விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார். அவரிடம் இருந்து அசுரன் எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ பஞ்சபூதத்தாலும் எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது என்ற வரம் வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார். வரத்தின் காரணமாக ஆவணம் தலைக்கேற உலக உயிர்களை விருத்தாசுரன் துன்புறுத்தினான். எந்த ஆயுதத்தாலும் அசுரனை கொல்ல இயலாது என்பதை அறிந்த இந்திராதி தேவர்கள் மிகவும் கவலையுற்றனர். அவர்கள் சிவபெருமானிடம் விருத்தாசுரனின் அழிவிற்கு வழிகூறுமாறு வேண்டினர். சிவபெருமானும் உங்களின் பிரச்சினைக்கு ததீசி முனிவர் தீர்வு சொல்வார். நீங்கள் அவரைச் சந்தியுங்கள் என்றார்.
தனது செயலால் தேவர்களின் ஒட்டு மொத்த படைக்கலங்களின் சக்தி தன் உடலில் இருப்பதை உணர்ந்த தசீசி முனிவர், தான் உண்ணாநோன்பு இருந்து மரணம் அடைந்த பின்பு, தன் உடலின் நீண்ட முதுகெலும்பை வஜ்ராயுதம் எனும் மிகச்சக்தி மிக்க படைக்கலன் செய்து, அது தேவராசன் இந்திரன் கைவசம் இருக்கட்டும் என்றும், கை, கால், மற்றும் தொடை எலும்புகள் மூலம் உண்டு செய்த ஆயுதங்கள் மற்ற தேவர்கள் வசம் இருக்கட்டும் என்றும், வஜ்ராயுதம் முதலிய படைக்கலங்கள் தேவர்களை என்றும் அசுரர்களிடமிருந்து காக்கும் என்று கூறி மரணமடைந்தார். தசீசி முனிவரி கூறியபடி, அவரின் மறைவுக்குப் பின்பு, தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மா, முனிவரின் நீண்ட முதுகெலும்பைக் கொண்டு கொண்டு பல ஆயுதங்களை தயாரித்தார். அதில் முக்கியமானது அவரின் முதுகெலும்பை வைத்து தயாரித்த வஜ்ராயுதமாகும். இந்த வஜ்ராயுதத்தை வைத்து தான் இந்திரன் விருத்தாசுரனை கொன்றான். இந்த போர் 360 நாட்கள் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன, ததீசி மஹரிஷியின் எலும்புகளை கொண்டு மூன்று அற்புதமான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன, ஒன்று சாரங்கம் எனும் வில் இதை கொண்ட ராமன் கும்பகர்ணனை கொன்றான், இரண்டாவது "பினாக" என்கிற வில் இதுக்கு பரமசிவனிடமிருந்து பரசுராமருக்கு தரப்பட்டது, பிறகு இது ஜனகரின் அரண்மனையில் வைக்கப்பட்டு ராமனால் நாண் ஏற்றும்போது உடைக்கப்பட்டது. மூன்றாவதாக "காண்டீவம்" எனும் வில் மஹாபாரதத்தில் அர்ஜுனனால் பயன்படுத்தப்பட்டது.
எனவே ததீசி முனிவரிடம் யாசகமாக அவருடைய முதுகுத் தண்டினைப் பெற்று அதனைக் கொண்டு வலிமையான ஆயுதத்தினை இந்திரன் அகத்திய முனிவரின் துணையுடன் பெற்றுக் கொண்டார். இந்த ஆயுதம் வஜ்ஜிராயுதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வஜ்ராயுத்தைக் கொண்டே அசுரர்கள் பலரை இந்திரன் போரில் வீழ்த்தினார்.
பலசாலிகளான கருட பகவானும் அனுமனும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் ஒரு முறை தாக்கப்பட்டனர். இந்த ஆயுதத்தை பெருமைப்படுத்த எண்ணி ஆயுதத்தை எதிர்க்காமல் பணிந்து நின்றார்கள். இதன் விளைவாக கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும் அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment