Saturday, 27 September 2025

ராகுவின் மாயாஜாலம்



 

ராகுவின் மாயாஜாலம்

ராகு கிரகம்:

ராகு ஒரு இருள் கிரகம். கண்ணுக்கு புலப்படாத அமானுஷிய செயல்கள் நடைபெற ராகு கிரகம் காரணமாக உள்ளது.
மனிதனை பாதிக்கும் அமானுஷிய செயல்களை மாந்திரீகம் ஏவல் செய்வினை சூனியம் என்கிறோம்.
மாந்திரீகம் என்பது ஒருவரின் மனதை அழித்தல் எண்ண ஓட்டத்தை மாற்றுதல் என்று பொருள்.
துர்ஆவி அல்லது துர் தேவதையை பிறர் மீது ஏவி அவரை பாதிக்க செய்வதை ஏவல் என்கிறோம்.
சூனியம் என்றால் பூஜியம் என்று பொருள்.
பிறரை நிர்மூலமாக்க சில கொடுர மனம் படைத்த சிலர் இதை பிரயோகம் செய்கிறார்கள்.
ஆதிகாலத்தில் அசுரர்களை அழிக்க சித்தர்களால் ஏற்படுத்தப்பட்ட மந்திரங்களும், எந்திரங்களும் தற்காலத்தில் சுயநலத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
யாரும் மாந்திரீகத்தால் பிறரை வீழ்த்தி விடலாம் என்று எண்ணி மாந்திரீகம் செய்ய கூடாது.
அவரை பாதித்த பின்பு செய்தவரை பாதிக்கும்.
செய்தவரை பாதிக்காவிட்டால் செய்தவரின் கண்முன்னே அவரின் வாரிசுகள் பெரும் பாதிப்பு அடைவது உறுதி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
♋மாந்திரீக பாதிப்பு உள்ளதா என்பதை எப்படி அறிவது?
🔱தொடர் தோல்வி/நஷ்டம்
🔱வருமானம் இன்மை
🔱மருத்துவரால் கண்டறிய முடியாத நோயால் அதிக செலவீனம்
🔱உடம்பில் வலி/பாத எரிச்சல் (குறிப்பிட்ட நேரத்தில் வந்து போவது)
🔱துர்வாசனை வீட்டில் வருதல்
🔱மனதில் இனம் புரியாத குழப்பம்,பயம்
🔱மின்சாதனங்கள் பழுதாவது(அனைத்தும் ஒரே நேரத்தில்)
🔱காகம் வீட்டிற்கு வராமை
🔱கால்நடைகள்,வளர்ப்பு பறவை,மீன்கள் மரணம்
🔱திடீர் தொழில் முடக்கம் (அ) வேலை இழத்தல்
🔱தற்கொலை எண்ணம்
🔱குடும்பத்தில் அற்ப காரணத்திற்காக தொடர் சண்டை, சச்சரவு
🔱குடும்ப உறுப்பினர்களை கண்டாலே வெறுக்கும் மனநிலை
🔱வீட்டிற்கு தொழில் செய்யும் இடத்திற்கு செல்ல விருப்பமில்லா மனநிலை.
🔱தொழிற்சாலை கருவிகள் (அ)வாகனங்களில் யாரும் கண்டறிய முடியாத பழுதுகள்.
🔱சாப்பாட்டில் ருசி வராமை,சாப்பிட விருப்பமின்மை
🔱அடிக்கடி ரத்த காயம், கீழே விழுதல்
🔱குடும்பத்தையே மறந்துவிடுதல்
🔱சாமி கும்பிட நினைத்தாலும் கும்பிட முடியாமல் தடங்கல்
🔱தூக்கம் வராமை
🔱வீட்டில் மரம் செடிகள் கருகும் (காய்க்காது)
🔱உங்கள் சொத்து இருக்கும் இடத்திற்கு செல்ல விரும்பாமை அல்லது அங்கு போக தடங்கல்
🔱புத்தி பேதலித்து பிறர் மீது அன்பு செலுத்துதல் அவர் எந்த தவறு செய்தாலும் பொறுத்துக் கொண்டு அடிமையாக இருத்தல்
🔱அமாவாசை,பெளர்ணமி, வெள்ளி,செவ்வாய்,ஞாயிறு அன்று வீட்டில் தகராறு,அடிபடுதல், நெஞ்சு வலி போன்றவைகளால் பாதித்தல்
🔱கண்ணாடி பொருள்/பீங்கான்/வாகன கண்ணாடி உடைதல்
மேற்கண்டவற்றில் இரண்டாவது நடைபெற்று இருந்தால் அவர் மாந்திரீகத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று அறியலாம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑யாரும் விதிவிலக்கு கிடையாது:
சாதாரண மனிதன் மட்டும் இந்த அபிசார பிரயோகத்தில் சிக்குவார்கள் என்று எண்ண வேண்டாம்.
ஜாதக அமைப்பில் இத்தகைய கர்மா வரும் என்ற‌ அமைப்பு ஒருவருக்கு இருக்கும் என்றால் அவருக்கு யார் மூலமாவது இத்தகைய பாதிப்பு வந்தே தீரும்.
சுவாமி விவேகானந்தர்,
பாம்பன் சுவாமிகள்,ஆதிசங்கரர் போன்ற மகான்களின் வாழ்விலும் இந்த மோசமான நிகழ்வுகள் அவர்களின் புகழை விரும்பாத எதிரிகளால் செய்யப்பட்டன என்பது வரலாறு.
ஸ்ரீ ஆதிசங்கரரின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவர் மந்திர ஏவல் செய்து ஆதிசங்கரை காச நோயால் துன்புறச் செய்தார்.
சிவபெருமான் ஆதிசங்கரின் கனவில் தோன்றி திருச்செந்தூர் செந்திற்குமரனை வழிபட்டால் இக்கொடிய வியாதி நீங்கும் என்று கூற ஆதிசங்கரர் திருச்சந்தூர் வந்து
" சுப்பிரமணிய புஜங்கம் "என்ற பாடலை இயற்றி முருகன் அருளால்
பாதிப்பில் இருந்து விடுபட்டார்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம்
🌹செய்வினை பாதிப்பு உள்ளதா?
🌹யாரால் செய்யப்பட்டது?
🌹எதற்காக செய்யப்பட்டது?
🌹எதில் செய்தார்கள்?
🌹விடுபடுவது எப்படி ?
என்பதை கண்டறிந்து தீர்வு காணலாம்.

தொடர்புக்கு99941 50658

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...