Wednesday, 15 January 2025

ரதி மன்த பூஜைகள் ஆண்களுக்கு ரதி பூஜை


 ரதி மன்த பூஜைகள்

ஆண்களுக்கு ரதி பூஜை
இன்றைய சமூகதில் பல பெண் மற்றும் ஆண்களுக்கு திருமணம் அமைவது கேள்விக்குறியாக? உள்ளது .இதற்க்கு பல் வேறு காரணங்கள் இருந்தாலும். அவரவர்கள் பிறக்கும்போது அமையும் கிகஙங்களின் நிலையே முக்கிய காரணங்கும். ஒருவரின் திருமணம் தடைப்பட அல்லது தாமதமாக ஏழாமிடம், பூர்வ புண்யாதிபதி நீச்சம், அஸ்தங்கம், வக்கிரகதி, பகைகிரகங்களுடன் இணைவு, பகைவீட்டில் இருந்தாலும்.பாவிகளின் பார்வையிருந்தாழும், 6-8-12-ல் மறைந்திருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
செவ்வாய் சனி, மற்றும் ராகு கேது இவர்களும் அதிக அளவு சிரமங்ககளும், அவமானங்களைருகிறது.
திருமணம் தாமதமாக மேல்கண்ட காரணங்கள்தான் முக்கியமானவையாகும். இதற்கு பல்வேறு நிவர்திகள் உள்ளாது.
ஆண்களுக்கு ரதி பூஜை
தாடிக்கொம்பு ரதி அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு 5-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொருமாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை மூன்று முறை வலம் வந்து பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் .பூஜைக்கு 200 கிராம் மஞ்சள் தூள், மாலை 2, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெற்றிலை, பக்கு,சூடம், பத்தி, குங்குமம், தேவைப்படும்.
வழித்தடம் : திண்டுக்கல் கரூர் சாலையில் திண்டுக்கல்லுக்கு 10 கீ.மீ. தொலைவில் உள்ளது. அனைத்து பேருந்து வசதிகள் உள்ளது.
பெண்களுக்கு மன்மதன் பூஜை
பெண்களின் திருமண வாழ்விற்க்கு மிகவும் பொருத்தமானது.ஜெனன ஜாதகம்தான்.
பெண்களின் ஜாதகத்தில் 2-3-7-8-9-ல் பாவிகள் தொடர்பும், பார்வையும் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண்கிரகங்கள் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் நலம் கிட்டும்.
ஒவ்வெரு ஜாதகத்தில் சந்திர பலன் அவசியம் மனம் சந்திரன் சுப பலம் அவசியம்.
ஒருவரின் திருமணம் தாமதமாக பூர்வ புண்ணியாதிபதியும், ஏழாம்மாதிபதியும் நீச்சம், வக்கிரகதி, பகை கிரகங்கள் இணைவு, பார்வை, 6-8-12-ல் மறைவு செவ்வாய், சனி, சூரியன் தொடர்பில்லாமல் இருப்பது அவசியம்.
திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு மன்மதன் பூஜை விபரம்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பொருமாள் கோவில் மண்டபத்தில் மன்மதன் -ரதி சிலை உள்ளாது.திருமணமாகத கன்னி பெண்களுக்கு மன்மதனுக்கும் 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில்போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை 3 முறை வலம் வந்து, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும். பூஜைக்கு 200 கிராம் மஞ்சள்தூள் இரண்டு மாலைகள்,ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்கும் தேவைப்படும்.
திருமணம் அனவுடன் சௌந்தரராஜப் பொருமளை தாம்பதியுடன் வந்து பூஜைகள் செய்ய வேண்டும்.
வழிந்தடம் : திண்டுக்கல் - கரூர் சாலையில் திண்டுக்கல்லுக்கு 10 -கி.மீ தொலைவில் மிக அண்மையில் உள்ளது.நகர பேருந்து வசதி உண்டு

கோயில்களில் ரதி – மன்மதன்!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோயில் உள்ளது.
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு
காம நாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
குமார சம்பவம் அதாவது முருகனின் திருஅவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும்.
மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாள நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான்
பாளையங்கோட்டை. கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் ரதி மன்மதன் சிலை உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வலப்புற தூணிலும் ரதி மன்மதன் அருள்பாலிக்கிறார்கள்.
கும்பகோணம் அருகே திருலோக்கியில் ரதிமன்மதன் கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று புனுகு ஜவ்வாது அரகஜா இனிப்பு மல்லிகை பூ வாங்கி சென்று அர்ச்சனை செய்யலாம்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்திலும் ரதி மன்மதன் சிற்பம் உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரதி மன்மதன் சிலை உள்ளது


No comments:

Post a Comment

*1008 லிங்கம் ! ஆயிரத்து எட்டா என்று வியக்காதீர்கள்

 *1008 லிங்கம் ! ஆயிரத்து எட்டா என்று வியக்காதீர்கள். ஆமாம். உண்மை. இதுவரை நாம் கேட்டிராத, அறியாத 1008 லிங்கம் தங்களின் பார்வைக்கு.* நமசிவா...