Thursday 27 May 2021

பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது.

 


பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது.
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் (இந்த சம்பவம் உண்மை சம்பவமோ அல்லது ஒருவரின் கற்பனையோ. ஆனால் தெளிவு படுத்தியது பொருள் பொதிந்த உண்மை. ஆம் பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! நல்லதே நடக்கும்! உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர். வழியில் பெரும் பனிப்புயல். ..! அவரால் காரை ஓட்ட முடியவில்லை… கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை ,பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..! வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே.டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்! பின் ஒருவாறு தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில் காரை செலுத்த துவங்கினார் அவர் ! ஆனால் , அந்த வழியோ , ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! சோதனையாக, இப்போது முன்பை விட மிக அதிகமாக புயல் வீசவே டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …! இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும் இல்லை.! கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ தென்படாத நிலையில், சிந்தனையுடன் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் , சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட உற்சாகத்துடன் அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு வழியாய் அந்த வீட்டை அடைந்து .. பின்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கதவை தட்டினார்…..! மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!! அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து , அவரை அந்த சிறிய கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள் அந்த இளம் பெண்…. மிக, மிக சிறிய அளவிலான வீடு! அங்கு யாரும் இல்லாததால், … வீடு வெகு நிசப்தமாக இருந்தது! டாக்டர் அமர்ந்து கொண்டிருந்த அந்த நாற்காலியை தவிர , வேறு எந்த ஒரு பொருளும் அங்கு காணப்படவில்லை ! அந்த அளவுக்கு ஏழ்மை , அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தது! அந்த சிறிய கூடத்தின் ஒரு ஓரத்தில், குழந்தை ஒன்று தூளியில் தூங்கி கொண்டிருந்தது….! சற்றைக்கெல்லாம் அந்த பெண் , சூடான தேநீர் கோப்பையோடு வெளியே வந்தவள், அன்போடு அவருக்கு அதை கொடுத்து அருந்த சொன்னாள்…. . பின், பேச்சினூடே , அந்த பெண், அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும்….அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், அவர் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினாள் …. பின் , அவரை பார்த்து கனிவுடன் ,” பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். ! நான் prayer செய்து விட்டு வருகிறேன் ” என்று கூறிவிட்டு …. அந்த சிறிய கூடத்தின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி , கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு , வெகு நேரம் பிரார்த்தித்து விட்டு,பின்,அவருக்கெதிரே தரையில் அமர்ந்து கொண்டாள்… ” என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? ” டாக்டர் அவளிடம் இயல்பாய் கேட்க பதிலுக்கு அப்பெண் கண்ணீர் மல்க ,தூளியில் தூங்கி கொண்டிருந்த தன் குழந்தையை காட்டி, ” அதோ தூளியில் தூங்கி கொண்டிருக்கிறானே, அவன் என் மகன்! அவனுக்கு வயது இரண்டு! அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை..! …Brain nerves சரியாக வேலை செய்யவில்லை….. ! இதை சரி செய்வதென்றால் , ஒரே ஒருவரால்தான் முடியுமாம்…… ! ஆனாலும் , அந்த சிகிச்சைக்கு ஏகப்பட்ட பணம் செலவாகும் என்கிறார்கள்……! என்னிடம் இப்போது அத்தனை பணம் கிடையாது…! ஹூம்….இப்போது நானிருக்கும் இந்த ஏழ்மை நிலையில் , கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை ‘” கண்ணீரை துடைத்தவாறு தலையை குனிந்து கொண்டாள் அவள்……. . அவளை பார்க்க பரிதாபமாகயிருந்தது டாக்டருக்கு..பின் மெல்லிய குரலில் அவளை பார்த்து , ” அம்மணி …யார் அந்த டாக்டர்? ” இயல்பாக கேட்டார் அவர்…” புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் ! “ அவள் பதிலை கேட்ட டாக்டர் அதிர்ந்து போய் , அவரையுமறியாமல், நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார். ….!காரணம் , ….அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்…..!! அந்த ஏழை பெண்ணின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையே , இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு காரணம் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் அவர்! .. பின் அங்கே நடந்தது தான் அதிசயமோ அதிசயம்! . …! ஆம் …! உடனடியாக , அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே க்ளினிக்குக்கு அழைத்து சென்று , தகுந்த மருத்துவம் செய்து , அந்த குழந்தையை காப்பாற்றினார் அந்த டாக்டர் ..! ஆக,பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. …! நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்….! நாம் அனைவரும் ஒன்றிணைந்து , அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியே, ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை செய்து , உலகை உய்ய வைப்போம். கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! நல்லதே நடக்கும்!

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...