Thursday 27 May 2021

வேத நூல்களில் சொல்லப்பட்ட ஆதார சக்கரங்கள்

                             வேத நூல்களில் சொல்லப்பட்ட ஆதார சக்கரங்கள்

மூலாதாரம்– ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையில் – முதுகுத்தண்டின் அடிப் பகுதியில் மந்திர எழுத்து – லங் சுவாதிஷ்டானம் - அடி வயிற்றுப் பகுதி மந்திர எழுத்து – வங் மணிபூரகம் – தொப்புள் பகுதி மந்திர எழுத்து – ரங் அனாஹதம் – இதயம் மந்திர எழுத்து – யாங் விசுத்தி - தொண்டைப் பகுதி மந்திர எழுத்து – ஹாங் ஆக்ஞா - புருவ மத்தி மந்திர எழுத்து – ஓம் சகஸ்ராரம் - தலையின் உச்சிப் பகுதி மந்திர எழுத்து – ஓம் ஓம் என்ற ப்ரணவ மந்திரத்தை சேர்த்து ஒலிக்காத போது எந்த ஒரு மந்திரமும் முழு பலத்தை பெறுவதில்லை என்பது வேத வாக்கு. ஓம் என்று எழுதினால் அது விந்து சக்தி, அதாவது சிவம். ஓம் என்று சப்தித்தாலோ அது இயக்க சக்தி. அதாவது சக்தி. ஓம் என்றால் அ காரம், உ காரம், ம காரம் என்று சொல்வார்கள். அகாரம் படைப்பைக் குறிப்பது. உகாரம் காத்தலைக் குறிப்பது. மகாரம் அழித்தலைக் குறிப்பது. அதாவது மும்மூர்த்திகளையும் உள்ளடக்கிய நாதமயமாகிய ப்ரணவத்தின் சிறப்புகளைச் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாது. இதில் படைத்தல் என்பதை ஆங்கிலத்தில் Generator என்பார்கள். இயக்கிக் காப்பதை Operator என்பார்கள். அழித்தல் Destroy எனப்படும். இப்போது இந்த மூன்று சொற்களின் முதல் எழுத்தை மட்டும் எடுத்து எழுதினால் என்னவாகிறது என்று பாருங்கள், "G-O-D" என்று வருகிறதல்லவா? பாருங்கள் ப்ரணவம் மொழி, இனம், மதம், தேசம், காலம் எல்லாம் கடந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இன்னும் நிறைய இருக்கிறது. இப்போது நாம் வேறு விஷயத்தைக் குறித்து பார்க்க வேண்டியதிருப்பதால் இதை விட்டு விடுவோம். இப்போது நாம் காயத்ரீ மந்திரத்தைக் குறித்து பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னால் மந்திரம் குறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். மனதை திடப்படுத்துவது மந்திரம் என்பார்கள். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்ல ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்றுவதும் மந்திரங்களாகும். ஆற்றல் குறித்த விஞ்ஞானத்தின் விதி என்னவென்றால் ஒரு ஆற்றலை அழிக்க முடியாது. ஆனால், அதற்குச் சமமான வேறொரு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே. அந்த அடிப்படையில் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ஒலி ஆற்றலை, மின்னாறலாகவும், அது பிறகு காந்த ஆற்றலாகவும் மாறுகிறது என்பதை இப்போது நவீன கருவிகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். ரிஷிகளாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் கோடிக்கணக்கான மந்திரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளின் சப்தமே மந்திரமாகத் தரப்பட்டுள்ளது. எல்லா மந்திரங்களும் பிரபஞ்சத்தில் இருந்து கிரகிக்கப்பட்டவைகளே. எல்லோராலும் அந்த பிரபஞ்ச அலைகளின் ஒலியைக் கேட்க முடியாது. வேதம் அந்த அலை ஒலிகளை நான்கு வகையாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறது. நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலிகள் வைகரி எனப்படும். பற்றற்ற நிலையில் வாழும் துறவிகளுக்கு இன்னும் சில நுட்பமான ஒலிகள் கேட்கும். அதை மத்யமா என்திளைத்தபார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்கள் கேட்கும் ஒலிகளும் உண்டு. அதை பச்யந்தி என்பார்கள். சமாதியில் திளைத்து மீண்டு வந்தவர்களுக்கே பரா என்று சொல்லக் கூடிய ஒலிகள் கேட்கும். இப்படிப்பட்ட ஓலிகளைக் கேட்டு உணர்ந்த ரிஷகளின் ஒலித் தொகுப்பே மந்திரங்களாக விரிந்தன. அண்டத்தில் கேட்கும் ஒலிகளைப் போல நம் பிண்டத்தில் நாடிகளிலும், சக்கரங்களிலும் ஒலிக்கும் ஒலிகளையே மந்திரமாக்கித் தந்தவர்கள் நம் சித்தர்கள். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் மந்திரம் குறித்த நம்பிக்கை நம் மக்களுக்கு குறைந்து விட்டது. காரணம் என்னவென்றால், அந்தக் கலை வியாபாரமானதால் மந்திரம் சொல்பவர்கள் மனமானது திடமாகி அதில் லயமாவதில்லை. எனவே பலன்களே கிடைக்காமல் போய்விடுகிறது. கலியுகத்தில் மந்திரங்களே மனதை வலிமையாக்கி ஒருமைப்படுத்த வல்லவை என்று சித்தர்கள் சொல்லியிருப்பதை நம்புங்கள். இதில் காயத்ரீ என்ற மந்திரம் ப்ராணாயாமம் என்கிற சந்தியா வந்தனம் செய்பவர்களுக்காகத் தரப்பட்டது. இதை மூன்று பாகமாக உடலாலால், உயிரைக் காக்க செய்யப்படுவதால் காய த்ரீ என்று சொல்வதாகச் சொல்லப்படுவதுண்டு. மூன்று நாடிகளை முன்னிருத்தி செய்வதால் காயத்ரீ என்று சொலவதாகவும் சொல்பவர்களும் உண்டு. வேதம் சொல்வது என்னவென்றால் ப்ராணாயாமம் செய்பவர்கள் காயத்ரியை வியாகிருதி, காயத்ரீ, சிரஸ் என்று மூன்று பகுதியாகச் சொல்ல வேண்டும் என்பதே. அதாவது ''ஓம் பூ; ஓம் புவ; ஓம் ஸுவ; ஓம் மஹ; ஓம் ஜனன; ஓம் தப; ஓம் ஸத்யம்'' இது முதற்பகுதியான வியாகிருதி. ''ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ - தேவ ஸ்யதீமஹி ! தி யோ யோ ந ; பிரசோதயாத் ;'' இது இரண்டாம் பகுதி. காயத்ரீ. ''ஓமாப ; ஜ்யோ தீரஸ ; அம்ருதம்ப்ரம்ம பூர்ப்புவஸ்ஸுவரோம்;'' இதநு மூன்றாம் பகுதி . சிரஸ். இதுவே வேதம் சொல்லும் ப்ராணாயாம மந்திரம். இதைக் கும்பகத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ப்ராணாயாமத்தை ஆசனத்தோடு செய்தால் இன்னும் சிறப்பு. அது ஏன் என்றால் ''ஆசனேன் ரஜோ ஹந்தி'' அதாவது ஆசனத்தோடு செய்வதால் ரஜோ குணம் ஒழியும். மேலும் ப்ராணாயாமம் செய்வதால் ''த்த ஹா க்ஷீயதே பிரகாச ஆவரனம்'' தமோ குணமும் அழியும். எனவே சத்துவ குணம் மேலோங்கும். அப்படி சத்துவ குணம் மேலோங்கியவர்களுக்கே தியான யோகம் நன்கு சித்திக்கும். அப்படி தியானம் சித்தித்தவர்கள் அதில் நிலைத்திருந்து குணம் கடந்த நிலையை அடைய முடியும் என்கிறார் பதஞ்சலி சித்தர். இவற்றோடு மந்திரமும் சேரும் போது பலன்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ ? இதைப் படித்து விட்டு ஆசனங்களோடு செய்ய முடியாதவர்கள் வருந்தத் தேவையில்லை. ஆசனங்கள் இல்லாமல் செய்தும் பல அபூர்வமான பலன்களைப் பெறலாம்.

              



No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...