Thursday 30 May 2019

வாழ்க்கையை மாற்றுமா உப்பு மந்திரம் ?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

வாழ்க்கையை மாற்றுமா உப்பு மந்திரம் ?
******************************************
‘‘18 வருஷம் முன்னாடி எங்க அம்மா என்னை எங்க சொந்தக்காரங்க வீட்டுலவிட்டுட்டு போயிட்டாங்க. தினமும் அவங்களை நினைச்சு அழுவேன். இங்கே வந்த பிறகு உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க. அம்மா என்னைப் பாக்க வரணும்னு நினைச்சு அஞ்சு நாள் உப்பு மந்திரம் செஞ்சேன். இவ்வளவு நாள் என்னைப் பாக்க வராத அம்மா ஆறாவது நாள் வந்து நின்னாங்க. இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு...
‘‘எனக்கு ரெண்டு குழந்தைங்க... கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தோம். நிறைய மனக்கஷ்டம். நான் எதைச் செஞ்சாலும் மாமியார் குத்தம் சொல்வாங்க. நானும் பதிலுக்குப் பதில் பேசுவேன். என் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வந்ததும் அவர்கிட்ட சொல்லி சண்டை போடுவேன். ஒரு கட்டத்துல அந்தக் குடும்பத்துல வாழவே முடியாதுங்கிற நிலை... கிளம்பி வந்துட்டேன். உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க... பத்து நாள் தொடர்ந்து செஞ்சேன். பதினோராவது நாள் காலையில என் வீட்டுக்காரர் வந்து நின்னார். அடுத்த சில நாட்கள்ல என் மாமியார் போன் பண்ணி பேசினாங்க. என் மேல உள்ள தவறுகளையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம்...
‘‘எங்க அக்காவுக்கு ஒரு விபத்து... ரொம்ப சீரியஸா இருந்தாங்க. தினமும் உப்புமந்திரம் செய்வேன். அவங்க கணவர், பிள்ளைகளுக்கும் உப்பு மந்திரம் சொல்லிக் கொடுத்தேன். இப்போ அக்கா எழுந்து நடமாடத் தொடங்கிட்டாங்க...‘‘எங்க பக்கத்து வீட்டுக்காரர் ஒரு ஆக்சிடெண்டுல சிக்கி கோமாவில இருந்தார். அவங்க வீட்டுல எல்லாருக்கும் உப்பு மந்திரம் சொல்லிக் கொடுத்தேன். நானும் செஞ்சேன்.ஒரு மாசத்துல அவர் குணமாகிட்டார்!
கண்ணீர் ததும்ப கோவை அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிக்கும் பெண்கள் சொல்கிற கதைகளைக் கேட்க மிரட்சியாக இருக்கிறது. இங்கு படிக்கும் 600 பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது இந்த உப்பு மந்திரம். மருத்துவ உலகத்தில் எவ்வளவோ நவீன ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்குச் சவால் விடுவது போல உப்பு மந்திரத்தின் மகத்துவங்களை அடுக்குகிறார்கள் இந்தப் பெண்கள்!
“பெண்கள் சுய நம்பிக்கையோடு வாழவும், பொருளாதார ரீதியா தனித்தன்மை பெறவும், அவங்க வாழ்க்கையில மறுமலர்ச்சியை உருவாக்கவும் 1984ல மத்திய அரசின் மனிதவளத்துறை உதவியோட தொடங்கப்பட்ட கல்வி நிலையம் இது. இதுவரை பல ஆயிரக்கணக்கான பெண் தொழில்முனைவோரை உருவாக்கி இருக்கோம். இன்னைக்கு பெண்களுக்கு இந்த சமூகத்தில ஏகப்பட்ட சவால்கள் இருக்கு. வெளியில் சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு மறுகிக்கிட்டு வாழுறாங்க. ஒரு கட்டத்துல மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கை மேல இருக்கிற நம்பிக்கை குறைஞ்சு முடங்கிப் போறாங்க.
எப்பவும் பெண்கள் அவங்களுக்காக மட்டும் வாழுறதில்லை. அவங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. அந்த குடும்பத்துக்கு பெண்கள்தான் வழிகாட்டியாவும் பொறுப்பாவும் இருக்காங்க. பெண்களுக்குக் கிடைக்கிற ஒரு நல்ல விஷயம் அந்த பெண்ணை மட்டுமில்லாம ஒரு குடும்பத்தையும் சமூகத்தையுமே மாத்தும். எங்கக் கல்வி நிறுவனம் வெறும் தொழில்பயிற்சியை மட்டும் வழங்காம அவங்களோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாத்துறதை இலக்கா வச்சு இயங்குது. மாசம் ஒருமுறை வாழ்வியல் கல்வி வகுப்பு நடத்தறோம். உளவியல் நிபுணர்கள், மனநல நிபுணர்கள், இயற்கை மருத்துவர்கள்னு பலர் அதுல கலந்துக்கிட்டு பயிற்சி கொடுப்பாங்க. அப்படித் தரப்பட்ட பல பயிற்சிகள் நம்பவே முடியாத விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தியிருக்கு.
அதுல ஒண்ணுதான் உப்பு மந்திரம். உப்பு மந்திரம்னா உடனே ஏதோ மூடநம்பிக்கை சமாசாரம்னு முடிவுக்கு வந்திடாதீங்க... முழுக்க முழுக்க அறிவியல்... என்கிறார் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணியன்.“அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு நியூஸ்பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்.
அதேபோல பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற நியூஸ் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்தருகிறார் ஷீலா.
இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க.
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora science சொல்வாங்க. நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்.
எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.
“உப்பு மந்திரம் மட்டுமில்ல சார்... எங்க கைவசம் வாழ்க்கைக்கான ஃபார்மூலாக்கள் ஏகப்பட்டது இருக்கு. எல்லாமே நாங்க பரிசீலனை பண்ணி பலனை அனுபவிச்சுப் பாத்ததுதான் வாங்க சொல்றோம்... - உற்சாகம் பொங்க சொல்கிறார்கள் மக்கள் கல்வி நிறுவன மாணவிகள்.
நான் அவள் இல்லை!
குடும்பத்தில குற்றம் சொல்றத்துக்குன்னே சில பேர் இருப்பாங்க. அவங்க தான் பிரச்னைக்கான தொடக்கம். அவங்களை ஜெயிச்சுட்டா நாமளும் நிம்மதியா இருக்கலாம். குடும்பமும் நிம்மதியா இருக்கும். அதுக்குத் தான் இந்த நான் அவன் இல்லை ஃபார்மூலா. உங்களைப் பத்தி நெகட்டிவா பேசினாலோ, குற்றம் சொன்னாலோ அதை காது வழியா மனசுக்குள்ள வாங்கி வச்சுக்கிட்டு, இப்படிச் சொல்லிட்டாங்களேன்னு உழட்டிக்கிட்டே இருக்கக்கூடாது. அப்படிச் சொல்லும்போது நான் அவள் இல்லைன்னு உதறிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது... என்கிறார் ஹேமா.
குடு+இன்பம்
“எல்லாருக்குமே வாழ்க்கையில எதிர்பார்ப்பு இருக்கு. மாமியார் அதைச் செய்யணும், நாத்தனார் இதைச் செய்யணும், கணவன் நாம கேட்காமலே ஒரு பொருளை வாங்கித் தரணும்னு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புதான் பிரச்னைகளுக்குத் தொடக்கமா இருக்கு. ஒருத்தர்கிட்ட நாம என்ன எதிர்பார்க்கிறோமோ அதையே நாம மத்தவங்களுக்குக் கொடுக்கணும். மாமியார் தினமும் என்னை என்னம்மா நல்லாயிருக்கியான்னு கேட்கணும்னு நான் எதிர்பார்த்தா, முதல்ல அவங்களை நான் நல்லாயிருக்கீங்களா அத்தைன்னு கேட்கணும். கொடுக்கிறதுலதான் இன்பம் இருக்கு. நல்லதைக் கொடுத்தா நல்லது கிடைக்கும். கெட்டதைக் கொடுத்தா கெட்டது கிடைக்கும். இந்த ஃபார்மூலா இங்கே பலபேர் குடும்பத்தை மாத்தியிருக்கு... - சிரிக்கிறார் ஸ்மித்தா.
Act Fact
‘‘உங்களை மாதிரி நல்ல மாமியாரை நான் பாத்ததேயில்லை. இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுக்கு நிறைய புண்ணியம் பண்ணியிருக்கணும்... எங்க அம்மாவைப் போலவே நீங்களும் என்னைப் பாத்துக்கிறீங்க... - இப்படி சொல்லிப் பாருங்க... மாமியார் சரண்டர்! இது எல்லாருக்குமே பொருந்தும். கணவர்கிட்ட, ‘உங்களை மாதிரி நல்ல கணவர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்’னு சொல்லுங்க. ‘என் நாத்தனார் என்னை அவங்க சகோதரி மாதிரி பாத்துக்குறாங்க’ன்னு அவங்க காதுபட மத்தவங்கக்கிட்ட சொல்லுங்க. அதாங்க... ஆக்ட் பண்ணுங்க. அதுவே ஃபேக்டா மாறிடும். Act will be Fact. எல்லாமே உண்மையாகிட்டா வாழ்க்கை ஆனந்தம்தான்... என்கிறார் மேரி.
தெனாலி ஃபார்முலா
‘‘இந்த ஃபார்முலாவுக்கு முன்னோட்டமா ஒரு கதை இருக்கு. ஒரு பையன் நிறைய இனிப்பு சாப்பிடுவானாம். அவங்க அம்மாவும் சொல்லி சொல்லிப் பாத்திருக்காங்க. பையன் கேக்கவேயில்லை. ‘இப்படியே போனா 16 வயசிலயே நீரிழிவு வந்திருமே’ன்னு அம்மா பயந்துட்டாங்க. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாங்க. பையன் திருந்தவேயில்லை. பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு... இங்கே தெனாலிராமன்னு ஒரு அமைச்சர் இருக்கார். அவர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா உங்க பையன் திருந்திடுவான்... உடனே அந்த அம்மா தெனாலிராமன்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாங்க. பிரச்னை எல்லாத்தையும் கேட்ட தெனாலிராமன், ஒரு வாரம் கழிச்சு அழைச்சுட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார்.
திரும்பவும் ஒருவாரம் கழிச்சுப் போனாங்க. கொஞ்ச நேரம் அந்தப் பையனை பாத்துக்கிட்டிருந்த தெனாலிராமன் திரும்பவும் ஒருவாரம் கழிச்சு அழைச்சுட்டு வாங்கன்னு அனுப்பிட்டார். அதே மாதிரி நாலைஞ்சு முறை அனுப்பி வச்சுட்டார். இதுதான் கடைசிமுறை, இனிமே இந்த ஆள்கிட்ட போகக்கூடாதுன்னு முடிவோட அந்த அம்மா பையனைக் கூட்டிக்கிட்டு போனாங்க. பையனைக் கூப்பிட்டு உட்கார வச்ச தெனாலிராமன், தம்பி அளவுக்கு அதிகமா இனிப்பு சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காது. நிறைய நோய்கள் வரும். இனிமே சாப்பிடாதேன்னு சொல்லிட்டு பையனைக் கூட்டிக்கிட்டுப் போங்கம்மான்னு சொல்லிட்டார். ‘பையனுக்கு எதாவது வைத்தியம், கியித்தியம் செஞ்சு குணப்படுத்துவார்னு நினைச்சா, சும்மா நாலு வார்த்தை சொல்லிட்டு அனுப்புறாரே’ன்னு அந்த அம்மாவுக்குக் கோபம்.
ஏய்யா... இதையே நான் முதல் தடவை கூட்டிக்கிட்டு வந்தப்பவே சொல்லியிருக்கலாம்ல. தேவையில்லாம அலையவிட்டு நாலு வார்த்தையோட அனுப்பி வைக்கிறியேன்னு கேட்டிருக்கு. அதுக்குத் தெனாலிராமன், முதல் தடவை நீ கூட்டிக்கிட்டு வந்தப்போ, எனக்கே அதிகமா இனிப்பு சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு. அப்ப நான் இவனுக்கு அறிவுரை சொல்லியிருந்தா அந்த வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அன்னையில இருந்து இனிப்பு சாப்பிடுறதை கொஞ்சம் கொஞ்சமா குறைக்க ஆரம்பிச்சேன். அடுத்தடுத்த முறை நீ அழைச்சுக்கிட்டு வந்தப்பவும் என்னால அந்தப் பழக்கத்தை விட முடியலே. இன்னைக்குதான் அந்தப் பழக்கத்துல இருந்து வெளியே வந்தேன், அதனால எனக்கு அறிவுரை சொல்ற தகுதி வந்திடுச்சு.
தைரியமா கூட்டிக்கிட்டுப் போ. தகுதியான அறிவுரைக்கு என்னைக்குமே மரியாதை இருக்கும். உன் பையன் இனிமே இனிப்பு சாப்பிட மாட்டான்னு சொன்னாராம்! மத்தவங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்கு முன்னாடி நமக்கு அதுக்கான தகுதி இருக்கான்னு பாக்கணும். தகுதியில்லாத ஆயிரக்கணக்கான அறிவுரைகள் யாரு காதுக்குள்ளயும் நுழையாம காற்றுலயே மிதந்துக்கிட்டு இருக்கு என்கிறார் ரேவதி.
“இன்னைக்கு ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையில பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்றாங்க. நிறைய தடைகள்... நிறைய காயங்கள்... அதுவே மன அழுத்தத்தையும் உளைச்சலையும் உருவாக்குது. இதுக்கெல்லாம் தீர்வு சைக்காலஜிதான். ஆனா, மூடநம்பிக்கையும் அவநம்பிக்கையும் நம் சமூகத்தில மண்டிக்கிடக்கு. ‘ஜாதகம் சரியில்லை... சூனியம் வச்சுட்டாங்க, வாஸ்து சரியில்லை’ன்னு ஏராளமான மூடநம்பிக்கைகள். இது மனம் சார்ந்த ஒரு பிரச்னைன்னு யாரும் புரிஞ்சுக்கிறதில்லை. சைக்காலஜின்னாலே அது பைத்தியங்களுக்கான சயின்ஸ்ங்கிற அவநம்பிக்கை!
எல்லாத்துக்கும் காரணம் மைண்ட்தான். பாசிட்டிவ் திங்கிங், நெகடிவ் திங்கிங் - ரெண்டும்தான் மனிதனை செயல்படுத்துது. மனம் ஒரு விஷயத்தை எப்படி புரிஞ்சுக்குதுங்கிறதுலதான் விளைவே இருக்கு. ‘பாழுங்குழியில தள்ளி விட்டுட்டாங்க... வாழ்க்கையே கெட்டுப்போச்சு’ன்னு சதாசர்வ காலமும் நினைச்சுக்கிட்டு இருந்தா வாழ்க்கை போயிடும். அதுல இருந்து வெளியில வரணும். வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரிதான். அதை எப்படி கையாள்றோங்கிறதுல தான் மகிழ்ச்சியும் துன்பமும் அடங்கியிருக்கு. அந்த உண்மையை ஹ்யூமரா சிரிக்க சிரிக்க சொன்னா மக்கள் நம்புறாங்க.
அதுக்காகத்தான் இந்த மாதிரி சின்னச் சின்ன ஃபார்முலாக்களை உருவாக்கி அதன் மூலமா ஒரு டிஃபன்ஸ் மெக்கானிசத்தை மனசுக்குள்ள கொண்டு வர முயற்சி செய்யிறோம். திங்கிங், பர்சனாலிட்டி, ஆட்டிடியூட், எமோஷன், மோட்டிவேஷன்... இந்த அஞ்சுலயும் டிஃபன்ஸ் மெக்கானிசத்தை ‘டே டு டே’ அப்ளை பண்ணினா பிரச்னைகள் தீர்ந்திடும். இந்த உலகமே சொர்க்கமாகிடும். இதோட விளைவுகளை மக்கள் கல்வி நிறுவனத்தில படிக்கிற பெண்கள்கிட்ட பார்க்கலாம். பலநூறு பெண்கள் வாழ்க்கை மாறியிருக்கு... என்கிறார் மனநல உளவியலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
மக்கள் கல்வி நிறுவன பெண்களுக்கு மட்டுமல்ல... எல்லாப் பெண்களுக்குமே இதில் செய்தியிருக்கிறது!
நன்றி. 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...