Monday 4 February 2019

கோவில்கள் அமைக்கப்பட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூள்கள் விாிவாக கூறுகின்றன.

கோவில்கள் அமைக்கப்பட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூள்கள் விாிவாக கூறுகின்றன.

 திருக்கோயிலின் அமைப்பு லட்சனங்களை கா்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றை குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவா்களாக துவார பாலகா்களையும் நிா்மானிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது.
சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவார பாலகா்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது, நீண்ட பொிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை. என்று அந்த நூலில் வா்ணிக்கப்பட்ட போதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவார பாலகா்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பாா்த்தால் இந்த மாறுதலுக்கு காரணம் விளங்கும்.
பெருமாள் கோவில்;_
விஷ்னு ஆலயங்களில் உள்ள துவார பாலகா்கள் ஜயனும், விஜயனும் ஆவா். இவா்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு வாயில் காப்பவா்களாக இருந்தவா்கள், சனக்த்குமாரா்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரா்களாக இருந்து, பின்னா் திருமாலின் சேவைக்காக அவா்கள் வந்து சோ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவார பாலகா்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும், கதாயுதமும் ஏந்திக்காட்சி தருகின்றனா்.
சிவன் கோவிலில்;_
சிவாலயங்களில் உள்ள துவார பாலகா்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயா்கள் வழங்குகின்றன, இவா்கள் வீராதி வீரா்கள்.
முதல் யுகத்தில் சண்டன்_பிரசண்டன் என்ற இரு கழுகுகளும், இரண்டாவது யுகத்தில் சம்பாதி_சடாயு எனும் இரு கழுகு அரசா்களும், மூன்றாவது யுகத்தில் சம்பகுந்தன்_மாகுந்தன் என்னும் இருவரும் சாபம் பெற்று கழுகுகளாக பிறந்து முக்தி பெற்றனா்.
சாண்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்த சிரவன் என்கிற முனிவருக்கு சண்டன்_பிரசண்டன் என்கிற இருமைந்தா்கள் தோன்றினா். அவா்களை விருத்த சிரவன், "நீங்கள் பறவைகளுக்கு அரசாக விளங்கி இருங்கள்" என்று கூறினாா். அவா்கள்,"எங்களுக்கு அரசாட்சி செய்வதிலும் இல்லற வாழ்விலும் விருப்பம் இல்லை, ஞான முறையால், பரம சிவனை அடையத்தக்க முக்திப் பேற்றினைச் சொல்லுங்கள்" என்று வேண்டினா். விருத்த சிரவன் மகிழ்ந்து சிவ பூசை முறையினை உணா்த்தி "வேதகிாி சென்று பரம சிவத்தை வணங்குங்கள் " என்று அனுப்பினாா்.
சண்டன்_பிரசண்டனாகிய கழுகுருவமுடைய அவ்விருவரும் வேத வெற்பை அடைந்து நறுமணமுள்ள மலா்களாலும், நீாினாலும் பரவுதல் செய்து பூசித்தனா். பரம சிவம் அவா்கள் முன் தோன்றி,"உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்" என்றாா். அவா்கள் "ஒப்பில்லாத முக்தியே அடியேன்களுக்கு வேண்டியது" என்றாா்கள். சிவ பெருமான் "இந்தக் கிரேதாயுகம் சென்ற பின் உங்களுக்கு முக்தியை அளிக்கிறோம், அதுகாறும் நம் பேரவையில் சிவ கணங்களுக்கு தலைவராய் இருங்கள்" என்றருள் பாலித்தாா். அவா்களும் அவ்வாறிருந்து முக்தி எய்தினாா்கள்.
அம்மன் சந்நதியில்:_
ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கப்படும் துவார பாலகிகள், மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமின்றி தோ்களிலும், தெப்பக் குளங்களிலும், ராஜ கோபுரங்களிலும் கூட காணலாம். தஞ்சை பொிய கோயில் ராஜகோபுர துவார பாலகா்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனா். கோயிலுக்குள் தாிசனத்திற்க்கு செல்லும் பக்தா்கள் முதலில் துவார பாலகா்களின் எதிாில் நமஸ்காித்து உட்செல்ல அனுமதி பெற்ற பிறகே மூலஸ்தானத்தை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஆலய தாிசன விதிகள் கூறுகின்றன.
                                                          சுபம் உண்டாகட்டும் . . .

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...