Thursday 15 February 2018

பாகம்--1 ========.திருமணம்..

 பாகம்--1 ========.திருமணம்..

திருமண நடை முறைகளை நாம் அனைவரும் அறிய இந்த பதிவு
மிகவும் அவசியமானது ஆகையால் அனைவரும் படித்து பயனடையவேண்டுகிறேன்

 திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது.
பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன் பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத் தோடு பொன்னு ருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
பொன்னுருக்கல்பொன் உருக்கும் பொழுது அதற்கு உரிய விஸ்வப்பிரம்மகுலத்தின் குறையற்ற,ஒருவரே தேர்வு செய்யப்படவேண்டும்.
1,திருமணமாகிக் குழந்தயுள்ளவர்,
2,பூரண சுகதேகி
3,சுகதேகியான மனைவி குழந்தை உள்ளவர்,
4,பூரண முள்ள அங்கக் குறையற்றவர்.
5,வலது கைப் பழக்கமுள்ளவர்,
6,பூரண விஸ்வப்பிரம்ம சாஸ்திரம் தெரிந்தவர்,
7,பூணூல் அணியும் தகுதி உள்ளவர்.
8,தாலிக்குக் கூலி பெறுவது கூடாது .ஆனால் அதற்கான தற்பணம், பொன் உருக்கும் இடத்தில் கொடுக்காவிட்டால் அதுதான் தாலி தோஷம் எனும் துர்ப்பாக்கியம்,(பிரம்மஹத்தி தோஷம்)
9.தாலிக்குப் பொன்தான் உருக்கவேண்டும்.அது இப்பொழுது தங்கமாக உருமாறி உள்ளது.
குறிப்பு
திருமணமாகாதவர்கள் எக்காரணம் கொண்டும் தாலிக்குப் பொன் உருக்கக் கூடாது.அப்படித் தாலிக்குப் பொன் உருக்கினால் பொன் உருக்குபவருக்கு இலகுவில் திருமணம் நடைபெறாது இதை நீங்கள் கண் முன்னாலே காணலாம்.
தாலி தோஷம் எனும் துர்ப்பாக்கியம்,(பிரம்மஹத்தி தோஷம்)
தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
“சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை”
மேலும்
“தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி”
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.
பொன்னுருக்கலில் நடுவில் தங்க நாணயமும் உமியின் மே ல் சிரட்டைக் கரி இருக்கின்றது
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத் தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவி ர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு,குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பா க்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண் டு), தேசி க்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்ச ளில் பிள்ளை யார், சாம்பிராணியும் தட்டு ம், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற் றிலை, பாக்கு, மஞ்சள், குங்கு மம், பூ, பழத்துடன் நாணயத் தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண் டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மண மகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக் கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்கு மம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக் கிய தங்க த்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப் பார். அதை மணமகன் வந்துள்ள சபையோ ருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறி யுடன் தட்சணை அளி த்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும்.


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...