Wednesday 24 January 2018

சன்னியாசம் என்பது துறத்தல்

சன்னியாசம் என்பது துறத்தல்

சன்னியாசத்தில் ஒருவன் சொத்தையெல்லாம் தானம் செய்து விட்டு மொட்டை அடித்துக் கொண்டு வடக்கு நோக்கி எல்லாவற்றையும் துறந்து செல்ல வேண்டும் என்றும்..
கிராமத்தில் ஓரிரவும் நகரத்தில் ஐந்து இரவுக்கு மேலும் தங்கக் கூடாது என்றும்; மழைக்காலத்தில் கிராமமோ, நகரமோ எங்கிருந்தாலும் நான்கு மாதம் வரை தங்கலாம்..
இதமான ஆடைகளை அணியகூடாது பழைய ஆடைகளைதான் அணிய வேண்டும் அவன் தினமும் ஒருவேளை மட்டும் அதுவும் ஏழு வீடுகளுக்குள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் பிச்சை எடுக்கும் வீடுகளில் உரல், அம்மி சத்தம் நின்றபிறகு, மதியத்திற்கு மேல் சென்று, "பவதி' என்று நிதானமாக உச்சரிக்க வேண்டும். இல்லறத்தான் வீட்டிற்குள் செல்லக்கூடாது. யாராவது புகழ்ந்து பிச்சையிட்டால் அதை உண்ணக்கூடாது.. துறவிகள் மூன்று மூங்கில் குச்சிகளைச் சேர்த்துக் கட்டி தண்டமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்..
ஒரே ஆடையை அணிய வேண்டும். நடந்தே செல்ல வேண்டும். தேன் போன்றவற்றையும் மாமிச உணவுகளையும் உண்ண கூடாது. அதாவது..
எதிர்மறை Negative வாக வாழவேண்டும் தன்னையே மறுப்பது என்பது, முன்பு பல காரணங்களினால் சாத்தியமாக இருந்தது. சமுதாயத்தின் அமைப்பு ஒரு காரணம்..
சன்யாச கொள்கை, பலவற்றை மறுத்தது. அது குடும்பத்தை மறுத்தது, காதலை மறுத்தது. குறிப்பாக லௌகீக வாழ்க்கை முறையை மறுத்தது..
ஆனால் நித்தியின் சீடர்கள்.. லௌகீக வாழ்க்கையோடு.. காதல், ஆசை.., சிற்றின்ப பெருநிலை பேரின்பத்தில் பேராசை.. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்தவர்கள்.
சிறுவர்களை சன்னியாசிகளாக ஆக்க கூடாதென்றும். 18 வயது நிரம்பியிருந்தாலும் கட்டாயபடுத்தி சன்னியாசத்திற்கு கொண்டு செல்லபட்டாரா என ஈசா மையத்தில் இளம்பெண்கள் சேர்க்கபட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுவர்களை துறவிகளாகவோ சன்னியாசிகளாகவோ அடைத்துவைப்பது கிரிமினல் குற்றம். அரசோ அல்லது நீதிமன்றமோ தாமாக முன்வந்து அந்த குழந்தைகளை மீட்கலாம்..
நித்தியின் பெண்சீடர்கள்
பேச்சும் செயலும் மிக கேவலமான செயல்பாடுகளை கண்டு, அவர்கள் படித்ததை உணர்த்துகிறது. இளம்வயதில் எல்லாவற்றையும் பற்றிய தவறான புரிதலும் துறவறம் பற்றிய போதிய அறிவில்லாமையும் தெரிகிறது.
ஆன்மீகம் என்ற பெயரில் இவர்களுக்கு கல்வியை மறுத்து, குடும்பம் மறுத்து, வாழ்கையை வாழ்வியலை மறுத்து, சுய சிந்தனையை மறுத்து வெறும் மட ஜடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். (நவீன தேவதாசிகள்??)
சாமியார் வேசமென்பது தவறுகளை மறைப்பதற்கும் தட்டிகேட்க முடியாமல் செய்வதற்குமென ஆகிவிட்டது..
சிறிய குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் யாரென்று பார்த்தால்.. கடவுள், பக்தி /பயம் என காட்டி மூளைச்சலவை செய்து பெற்றோர்களை கொண்டுவந்துவிட செய்வது. உனது குழந்தைகளில் ஒருவர் இறைப்பணிக்கானவரென நம்பவைப்பது. சில உக்திகளை கையாண்டு ஏதோவொரு சக்தி இருப்பதாக நம்பவைத்து.. குழந்தைகளை இங்கே கொண்டுவந்து சேர்க்க செய்வது. பிறகு அதில் அடிமையாக்கி, ஒருவித ஈர்ப்போடு செயலாற்ற செய்யும் கூட்டம். இதற்கு குறிப்பாக பெண்குழந்தைகள் அதிகமளவில் பயன்படுத்தப் படுகிறார்கள்..
இவர்களையெல்லாம் மீட்டு மன அழுத்ததில், மனபிறழில் இருக்கும் இவர்களுக்கு சரியான பரிசோதனையும் சிகிக்கையும் அளித்து இயல்பு வாழ்க்கைக்கு வரவைக்கவேண்டும் என்பதே மனிதவளத் துறையின் பொறுப்பும் கடமையும் ஆகும்மென்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.!!

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...