Monday, 5 November 2018

தமிழுள் 96 தத்துவங்கள்

                                                    தமிழுள் 96 தத்துவங்கள் 

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

தமிழுள் 96 தத்துவங்கள்
ஓம் = அ+உ+ம் = 8*2*6 =96

எட்டு(8/அ)*இரண்டு(2/உ)*ஆறு(6/ம்)= ஓம் = 96 தத்தவங்கள். ஓம் என்னும் சொல் அ+உ+ம் என்ற முன்று எழுத்துக்களால் ஆனது. " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்குத் தொகை 8 x 2 x 6 = 96.
ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே

-ஆசான் திருமூலர்
(திருமந்திரம் 2627)
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

-ஆசான் திருமூலர்
(திருமந்திரம் 2628)
என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "

- என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற ஆசான் வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
ஆசான் அகத்தீசப்பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- ஆசான் மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
- ஆசான் அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி ஆசான் யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்
"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி ஆசான் திருமூலர்,
"ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் "
என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம். 
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட வேண்டும்.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே "
- என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை ஆசான் காகபுசண்டர் பாடலில் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே .
...
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
பீரு முகமது அவுலியா ஆக்கிய ஞானக் கருவூலமாகிய “ஞானரெத்தினக் குறவஞ்சி”
ஞானரெத்தினக் குறவஞ்சி :
“அ” தமிழ் எண்ணிக்கை எட்டைக் குறிக்கும்.
இங்கே கெதியான(மூச்சான) “உம்” எழுத்து மவுனமாச்சு.
“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி
சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.
விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.
மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.
அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.
அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.
கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் - பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.
கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.
தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.
வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்
“அ”வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.
ஆக “அ”காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.
“அ”காரம் 12 பிரிவுகளாம்.
1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபரநாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
எட்டு எழுத்தாக எழுந்த எழுத்து என்னடி சிங்கி?
மட்டில் அடங்காத ஓம் எனும் ஓங்கார வட்டமாம்.

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

பிரம்மனின் தலை கொய்த பைரவர்! ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!

   பிரம்மனின் தலை கொய்த பைரவர்! ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பிரம்மனின் தலை கொய்த பைரவர்! ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!
ஆதியில் சிவனும், பிரம்மாவும் ஐந்து தலைகள் கொண்டிருந்தனர். ஆனாலும் ஐம்முகங்களும் தனக்கே அழகாய் உள்ளது என்று எண்ணிய பிரம்மா கர்வம் கொண்டார். விளைவு தேவையில்லாமல் சிவனை நிந்திக்கத் தொடங்கினார்.
இதனை முதலில் கண்டும், காணாமலும் இருந்த சிவன், பொறுக்க முடியாத அளவுக்குச் சென்ற பின்னர், பிரம்மனைத் தண்டிக்க முடிவு செய்தார். எரிகிற கொள்ளியை இழுத்தால், அடுப்பு அணையும் அல்லவா..?

ஐந்து தலைகளாக இருப்பது அழகு என்ற எண்ணம்தானே பிரம்மனை ஆட்டிப் படைக்கிறது. அதில் ஒன்றைக் கொய்தால் என்ன என்ற சிந்தனை வயப்பட்ட சிவன், இந்த வேலையைச் செய்ய தன்னுடைய அஷ்ட பைரவர் கோலங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். ஒரு தலை போய் நான்கு தலையுடன் விளங்கிய பிரம்மனுக்கு, அன்று முதல் சதுர் முகன் என்ற பெயர் தோன்றியது. ருத்ர பைரவராகத் தோன்றிய சிவன், காண்பதற்குச் சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் மேல் நோக்கிய தலைமுடியுடனும் காட்சி அளித்தார். இந்தத் தலைமுடியில் செருகினாற்போலச் சந்திர பிரபை காணப்பட்டது.

தலைமுடியோ சுடும் ஜுவாலை. அதில் இருந்தது குளிர் நிலவு. என்னே ஒரு முரண் ?

நான்கு திருக்கரங்கள் கொண்ட அவரது கைகளில் உடுக்கை, சூலம், பாசக்கயிறு ஆகியன இருக்க, இவரது நான்காம் கரத்தில், இவர் கொய்த பிரம்மாவின் ஐந்தாம் தலை. பூத, பிசாசக் கூட்டங்களை அடக்கி ஆளும், தலைவராக விளங்குகிறார் பைரவர்.

அதனால், பூத, பிசாச பயங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள், இவரை வணங்குவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. ஆணவம் கொண்ட பிரம்மனின் கபாலத்தைக் கொய்ததால் ஆணவத்தை அடக்குவதற்காகவே தோன்றியவர்
, இந்த ருத்ர பைரவர் எனலாம். பிரம்மனின் தலை கொய்த நிகழ்வு நடந்தேறிய இடம் தமிழகத்தில் உள்ள திருக்கண்டியூர் என்பார்கள்.

சிவன் கோயில்களில் ஒற்றை நாயை வாகனமாகக் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தல் விசேஷம்.

சிறிய சிவப்புத் துணியில் சில மிளகுகளை இட்டுக் கட்டி, அதனை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இதற்கு மிளகு தீபம் என்று பெயர். ஒன்று அல்லது எட்டு என்ற எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும்.

ஸ்ரீ “காலபைரவரே போற்றி ” போற்றி!

வாழையிலை குளியலை

                                                         வாழையிலை
                                                            குளியலை

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

💎 வாழையிலை
குளியலை

காய், கனி, பூ, தண்டு, வேர்க் கிழங்கு என்று அனைத்தையும் மனிதருக்கு அளித்து, அவர்களின் வாழ்வைக் காக்கும் அதிசய மரம் வாழை.
தற்காலத்தில் நடைமுறையில் உள்ள சூரிய குளியல் போன்று தான் முற்காலத்தில் சித்தர்கள் வாழையிலை குளியலை மேற் கொண்டுத்தான் 100 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகின்றது.

வாழை இலை குளியல் என்பது காலை வெயிலில், உடலில் துண்டுடன் கோரைப்பாயில் கிடந்து, தலையில் ஒரு ஈரத்துண்டை முண்டாசு போல கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வாழை இலை கொண்டு நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

மூச்சு விடுவதற்கு மட்டும் இலைகளை முகத்தின் அருகே சற்று விலக்கி விட்டு, குறைந்தபட்சம் அரை மணி நேரம் அந்த சூழலில் இருப்பதே, வாழை இலை குளியல்.

அவ்வப்போது இலைகளின் மேல் தண்ணீர் தெளித்து வர வேண்டும், நல்ல வியர்வை சுரக்கும், ஆயினும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், இடையிலேயே வெளியில் வந்து விடலாம்.

வாழை இலை குளியல் எதற்கு?
உடலில் உள்ள சுவாச கோளாறுகள், ஒவ்வாமை சரும பாதிப்புகள், கை கால் வீக்கம், உடலில் சேர்ந்த கெட்ட நீரால் ஏற்படும் வியாதிகள்
,
சிறுநீரக கோளாறுகள், உடல் சுரப்பிகளின் பாதிப்புகள், தசை நரம்பு பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் அனைத்தையும் சரிசெய்து,

உடல் எடையைக் குறைத்து, மனதுக்கு புத்துணர்வு கொடுத்து, உடலை பொலிவோடு, வலிமையாகவும் ஆக்கவல்லது.

குளியலுக்கு முன் நிறைய தண்ணீர் பருக வேண்டும், குளியல் முடிந்த பின் சிறிது இந்துப்பு கலந்த எலுமிச்சை தேன் சாற்றை, நிறைய தண்ணீர் விட்டு, நிதானமாக பருகிய பின், சற்று நேரம் கழித்து, வழக்கமான குளியலை மேற்கொள்வது நலம்.

குளியலுக்கு பின்னர், அன்றைய தினம் முழுவதும், பச்சையான பழ காய்கறி உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது இல்லையெனில் சிறிது அரிசி உணவு சேர்த்துக் கொள்ளலாம்.

இயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி

                                      இயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற மூங்கிலின் பூபகுதியில் இருந்து சேகரிக்கப்படும் விதையாகும். மூங்கில் அரிசி என்பது அதிகபடியான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இது நாம் உண்ணும் அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ண ஏற்றதாக உள்ளது. அதிக நெருக்கமான காடுகளில் வளரும் மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி என்பது மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றது. இதனை காடுகளில் வாழும் பழங்குடியினர் சேகரித்து நகரப்பகுதிகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் நன்கு நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும்.
பச்சை நிற அரிசியாக உள்ள மூங்கில் அரிசி மூங்கிலில் உள்ள சத்துகளை உட்கிரகித்து கொண்ட சிறிய அளவிலான அரிசியாக திகழ்கிறது. இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதாவது சிறுநீர் வழியே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது.
மூங்கில் அரிசியில் உள்ள கலோரி
மூங்கில் அரிசி அதிகபட்ச கலோரி அளவு கொண்டது. ஒரு கப் அளவு அரிசியில் மட்டும் 160 கலோரி அளவு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான தினசரி கலோரி அளவான 2000 எனும்போது இது அதில் 8 சதவீத கலோரி அளவை பூர்த்தி செய்கிறது. அதுபோல் மூங்கில் அரிசி உணவை சாப்பிட்டவுடன் உடனடியாக செரிமானம் அடைந்து அதில் உள்ள கலோரி சத்து உடனடியாக உடலுக்கு சென்றுவிடும். அதனால் உடனடியாக உடல் சக்தி அதிகரித்துவிடும்.
கார்போஹைட்ரேட்ஸ்
மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவு என்பது மிக முக்கியமான சத்தாக உள்ளது. அதாவது ஒரு கப் மூங்கில் அரிசியில் மட்டுமே 34 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றது. விளையாட்டு செயல்பாடுகள் கொண்ட நபருக்கு தேவையான அதிகபட்ச கார்போஹைட்ரேட்ஸ் வழங்குகிறது.
புரத சத்து அளவு
ஒரு கப் மூங்கில் அரிசியில் சுமார் 3 கிராம் அளவு புரதசத்து உள்ளது. இந்த புரோட்டீன் சத்து மூலம் உடல் செல்கள் மற்றும் தசை கட்டமைப்புகளை சரிசெய்ய முடியும்.
கொழுப்பு சத்து எனும்போது மூங்கில் அரிசியில் கொழுப்பு சத்தே இல்லை. அதனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இந்த அரிசி உணவை உட்கொண்டால் சிறப்புற இருக்கும்.
மூங்கில் அரிசியின் முக்கியமான பணிகள்
மூங்கில் அரிசியை உட்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சினை தீர்வாகிறது. உடலில் உள்ள மூட்டுவலி, வாதநோய்கள், முதுகுவலி போன்ற பிரச்சினைகளை தீர்க்கின்றது. குறைந்த கொழுப்பு சத்து என்பதுடன் அபரிமிதமான பீ6 விட்டமின் நிறைந்த வாறும் உள்ளது. எனவே, மூங்கில் அரிசியை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
மூங்கில் அரிசியில் உணவுகள்
மூங்கில் அரிசியை நாம் சாதம் வடித்து வைக்க முடியாது. பெரும்பாலும் கஞ்சி போன்றுதான் செய்து சாப்பிடுவர். அதுபோல் மூங்கில் அரிசியை கொண்டு இட்லி மாவு தயாரித்து இட்லி, தோசை போன்ற உணவுகளை செய்யலாம். குழைய வேகவைத்தே மூங்கில் அரிசியை உணவில் சேர்க்க முடிகிறது என்பதால் விதவிதமான பாயசங்கள் செய்யும்போது மூங்கில் அரிசியை பயன்படுத்திடலாம். மேலும் மூங்கில் அரிசி மாவை கொண்டு அதிரசம், மாவிளக்கு மற்றும் விதவிதமான காரங்கள் செய்து சாப்பிடலாம். மூங்கில் அரிசி உணவை சாப்பிடும்போது உடலுக்கு உறுதி கிடைப்பதுடன் அதிக சுறுசுறுப்புடன் உடல் உறுப்புகள் செயல்படவும் முடிகிறது.
மூங்கில் அரிசி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் மூங்கில் அரிசி செவ்வனே செய்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் குறைபாட்டை போக்கும் தன்மையுள்ளதால் அக்கால கட்டத்தில் பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம். மூங்கில் அரிசி உயரமான மூங்கிலில் இருந்து தானாகவே பூமியில் விழுந்திடும். அதனை சேகரம் செய்வதே விற்பனைக்கு தரப்படுகிறது. இயற்கையின் அருட்கொடையால் பூமிக்கு வரும் மூங்கில் அரிசி உன்னதமானது.

#அன்னாபிஷேகம்_நடத்துவது_ஏன்?

                                           #அன்னாபிஷேகம்_நடத்துவது_ஏன்?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் *ஐப்பசி மாத பௌர்ணமி* நாளில் எல்லா சிவாலயங்களிலம் *அன்னாபிஷேகம்* நடத்தப்படுகிறது.
சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?
ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
#அன்னத்தின்_பெருமை
***************************
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
“அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை *“ப்ர+சாதம்"* என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் .
“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே…
அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான். “பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…" என்றார் முனிவர்.
“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…" என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.
#அது_என்ன_சாபம்?
********************
தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.
சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.
கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.
திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.
#அன்னாபிஷேகத்தின்_சிறப்புகள்:
*************************************
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.
அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
#அன்னாபிஷேகம்_செய்யும்_முறை:
*************************************
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.
சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.
இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.
நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!
நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.
#சோற்றுக்குள்_சொக்கன்
****************************
'சோறுதான் சொக்கநாதர்' 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிக்ஷாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும். சற்றுமுன் கோயிலில் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
*"ஊனுடம்பில் குடிகொண்டவனே*
*ஊழ்வினை பாராது படியளந்திடு"*
மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது.
#சமையல்_ஒரு_தவம்!
**********************
#24_அக்டோபர்_புதன்கிழமை - #மகா #அன்னாபிஷேகம்
சிவாலயங்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக?
மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. 'ப்ர' என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.
ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.
அப்போது ஒருவன் ஓடி வந்து, 'ஐயா... உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்...' என்றான்.
உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார்.
'துறவியான உமக்கு இது அழகா... அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?' என்று கேட்டார்.
அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்.
'ஏன் அழுகிறீர்...' என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, 'ஐயையோ... இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே... இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது...' என்றார்.
உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள்.
உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.
இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள். 'டிவி'யில் கண்ட கண்ட தொடர்களை பார்த்துக் கொண்டே சமைக்காதீர்கள். இதனால், உடலும், மனமும் கெட்டுப் போகும். இன்று மனிதர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு காரணமே, சமையல் செய்யும் போது, எரிச்சலுடனும், பொறுமையில்லாமலும் சமைப்பதுதான்.
*சமையல் ஒரு தபஸ்(தவம்).* இதனால் தான் சமையல் செய்பவரை, *'தவசுப்பிள்ளை'* என்று சொல்வர். மனதை ஒருநிலைப்படுத்தி சமையல் செய்வதால் தான் சமையல் தவம் ஆகிறது. இதன் காரணமாகவே, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை முன்னோர் ஏற்படுத்தினர்.
அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்...
ஓம் நமசிவாய 🙏கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் *ஐப்பசி மாத பௌர்ணமி* நாளில் எல்லா சிவாலயங்களிலம் *அன்னாபிஷேகம்* நடத்தப்படுகிறது.

ஆத்துப்பொள்ளாச்சி  ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் 

    திருக்கோயில் வருடம் முழுவதும் உள்ள பவுர்ணமிகளில் 

அன்னதானம் வழங்கும் பெயரை வெளியிட வேண்டாம்

என்று சொல்லி   அன்னதானம் வழங்கும் குடும்பத்தினருக்கு 

அனைத்து செல்வங்களும் பெயரும் புகழும் கிடைக்க 

இதைப்படித்து அனைவர்களும் வாழ்த்துங்கள் அவர்கள்

 குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க  வாழ்க

ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்பு.

                                          ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்பு.

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல்- மஹா சித்தர்கள் ட்ரஸ்ட் அன்பர்களின் ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும் , உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும் , ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும் , ஸ்வர்ண பூமியாகவும் , குபேர பூமியாகவும் திகழவும் வருகின்ற கார்த்திகை மாதம் 2018 நவம்பர் 19/20/21/22 ஆகிய திகதிகளில் இலங்கையில் மட்டக்களப்பில் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தின் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் சிறப்புக்களும் , அதன் பின்னால் உள்ள உண்மைகளும் .
( இந்த நான்கு நாட்களும் ஆறு காலம் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியின் அதி சிறப்பாக வேத மந்த்ர தந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற சதுர்வேத பண்டிதர்களான சிவாச்சார்யார்கள் , வேத உபனிக்ஷதங்களை உலகிற்கு அளிப்பதக்காக தில்லை வாழ் அந்தணர் வழியில் வந்த பல தீக்ஷிதர்களும்
சித்த மரபில் வந்த பல சித்த குருமார்களும் பல ருத்ர உபாசகர்களும் சிவனடியார்களும் இணைந்து ருத்ரஷக்திகளுக்குரிய மூல மந்திரங்கள் , காயத்ரி மந்திரங்கள் , மாலா மந்திரங்கள் , விசேட மந்திரங்கள் , ரகசிய மந்திரங்கள் மூலமாக அக்கினியிலே ருத்ர உபனிஷததிலே சொல்லப்பட்டதட்கு நடைபெறுவதால் வாழ்க்கையில் எப்பேற்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து அருளையும் பொருளையும் வரங்களையும் கேட்பதற்கு முன்னமே அள்ளி கொடுக்க கூடிய வல்லமை இந்த ருத்ர வேள்விக்கு உண்டு. )
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே
தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை
மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட ரகசியம்.
நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர்,
தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும்
மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப்
போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு
கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த
பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு
பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ
தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக
உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர்.
பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள
செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு
செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட
வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக
ஹோமங்களாக வடிவமைத்துக்
கொடுத்துள்ளனர்.
இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை.
அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும்
கருணை. இது, மனிதர்கள் தாங்கள்
தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும்
பல்வேறு சக்திகள் இயக்கியும்,
இயங்கியபடியும் உள்ளன என்பதன்
சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன
ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே
தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான்
இந்த ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி.
வேள்வியின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதி முறைகள்.
************************************************************************
யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படுவது சிறப்புடையது ஆகும். அல்லது இதற்குரிய நல்வாய்ப்பு கிட்டாவிடில், கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, "ஸ்ரீபூமாதேவ்யை நம: ஓம் பூமா தேவியே போற்றி" என்று 108 முறையேனும் துதித்து மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
யாக குண்டத்தில் பிள்ளையார் சுழியோ அல்லது யந்திரங்களோ, சக்கரங்களோ வரைகையில் சூரிய விரலான வலது மோதிர விரலைக் கொண்டே அவற்றை வரைதல் வேண்டும்.
மணலில் நிருதி திக்கில் (தென்மேற்கு) ஒரு சூலமோ அல்லது சங்கு, சக்கரமோ வரைந்து இருப்பது சிறப்புடையது ஆகும். ஹோம குண்டத்திற்குப் பயன்படும் செங்கற்கள் உடைபடாது பின்னமில்லாது சுத்தமாக, புதிதாக ஒரு முறை ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களை மீண்டும் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஹோம செங்கற்கலுக்கும் சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பூசிடுக!
யாக வழிபாடு என்பது அக்னி வழிபாடு ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் (ஹோமகர்த்தா) அக்னி திக்கான தென்கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது.
ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும் தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும்.
இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.
ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது வசதியிருப்பின் வெள்ளி, தங்க கிண்னங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே யாகத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்சில்வர் ஸ்பூன் அல்லது வேறு உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.
யாக மரக்கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. புளி, சவுக்கு போன்ற விறகு மர ஹோமக் கரண்டிகளைக் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வில்வம் போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத்தூள்களையோ ஒரு போதும் பயன்படுத்துதல் கூடாது. இதுவே தற்போதைய ஆலய ஹோமங்களிலும் பெரும்பாலான இல்லற ஹோமங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற தவறான வழக்கம் ஆகும். தயவு செய்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும். ஹோம குண்டம் அடுப்பு அல்ல, எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவதற்கு!
ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித்திடலாம்.
ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல் விசேஷமானதாகும்.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின் தர்ப்பையே இதனை நமக்குப் பெற்றுத் தருகிறது.
ஆஹுதி அளிக்கப்படும் பொழுது "சுவாஹா" என்று சொல்லப்படும் பொழுது அளிக்கப்படும் ஆஹுதிகளை மட்டும் தான் "சுவாஹா" எனப்படும் தேவ மூர்த்தி பெற்று அந்தந்த தேவதா மூர்த்திகளுக்கு அளிக்கின்றாள்.
யாகங்கள் நடக்கும் பொழுது தேவையில்லாமல் அக்னியைக் கிண்டுவதோ, அனாவசியமாக விசிறி, காற்றை எழுப்புவதோ கூடாது. ஏனென்றால் அக்னியை ஆசனமாகக் கொண்டு பல கோடி தேவதைகள் தேவதா மூர்த்திகள் ஹோம குண்டத்தினுள் உறைகின்றனர்.
பசு நெய் தவிர வேறு எண்ணெயை, ஒரு போதும் அக்னி எழுப்புதவதற்காகப் பயன்படுத்துதல் கூடாது.
யாகப்புகை, மிகுந்த தெய்வீக சக்தி உடையதாகையால் இயன்ற வரையில் ஹோமப் புகையை சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு முறை வேள்வியில் எழுப்பப் படுகின்ற ஹோமப் புகையினால் 120 வருடங்களுக்கு அந்த நாட்டில் சேருகின்ற தீவினைச் சுழல்களை எளிதில் கழித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை ஒன்று தான் நீர் வடிவில் அவற்றை வெளியேற்றுகின்றது.
ஒரு வேள்வி வழிபாடானது பல்லாயிரக்கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரவல்லது ஆகும். எனவே இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பரிமளிக்கின்றது.
வியாபார/ வருமான நோக்கு இல்லாமல் பொது மக்களின் நன்மைக்காக இலவசமாக யாகத்தை நடத்தித் தருவதே தெய்வீகமானது!
தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்வதை விடப் பலரும் சேர்ந்து சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக யாக வழிபாட்டை மேற்கொள்தலே உத்தமமானது.
யாக என்றால் அக்னி ரூபத்தில் தெய்வ மூர்த்தியை வழிபடுதல் என்று பொருள் ஆகும்.
யாகத்தில் இடப்படுகின்ற ஆஹுதிகளின் சக்தியை "சுவாஹா" தேவதைப் பெற்றுத் தந்து அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளிடம் சமர்ப்பிக்கின்றன. ஸ்ரீஅக்னி மூர்த்தியின் பத்னி தேவியே ஸ்ரீசுவாஹா தேவி ஆவாள்.
யாகத்தில் வழிபாட்டில் ஸ்ரீஅக்னி மூர்த்தியானவர் தானே ஒரு அக்னி ஆலயத்தை ஏற்படுத்தி அதில் நம்மை வழிபடுவதற்கு வழிவகை செய்கின்றார். எனவே யாக வழிபாடு என்பது அக்னியால் ஆன ஆலயத்தில் நாம் வழிபாட்டைச் செய்வது ஆகும்.
நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகிப்பது அக்னியாகும். சமையல், நிலவொளி, வீட்டிற்கு, அலுவலகத்திற்கு வெளிச்சம், தொழிற்சாலை போன்ற பல இடங்களிலும் அக்னி நமக்குப் பெருமளவில் உதவி செய்கின்றது.
ஆனால் இதற்காக என்றைக்கேனும் அக்னி பகவானுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்துள்ளோமா?
வீட்டில் தீபம் ஏற்றுவது கூட ஒரு வகை அக்னி வழிபாடே ஆகும். எனவே நம்முடைய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவி வருகின்ற ஸ்ரீஅக்னி பகவானை வழிபடுவதற்காக நாம் மாதந்தோறும் ஒரு சிறிய அளவிலான எளிய ஹோமத்தையேனும் செய்து வருதல் வேண்டும்.
தஞ்சைப் பகுதிகளில் அக்னி பூஜைக்கு செப்பாலான மிகவும் சிறிய அளவிலான ஹோம குண்டங்கள் கிடைக்கின்றன.
இதனை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்களேயானால் மிகச் சிறிய அளவிளான தினந்தோறும் உங்கள் குழந்தைகள் மூலம் ஹோமத்தை செய்து அவர்களுக்கு நல்ல இறைப் பக்தியை அடித்தளமாக ஏற்படுத்தித் தரலாம் அல்லவா! இதனைத்தான் அக்காலத்தில் சமிதா தானம், அக்னி சந்தானம், ஔபாசனம் போன்ற அக்னி வழிபாடாக நம் பெரியோர்கள் போற்றி வந்தனர்.
ஹோம வழிபாட்டை நாம் சரிவரக் கடைபிடிப்பது இல்லை. சோம்பேறித்தனம், பக்தியின்மை, நேரமின்மை என்ற சாக்கு காரணமாக யாக வழிபாட்டை அறவே ஒதுக்கி விட்டோம்.
மேலும் யாகத்தை நடத்தித் தருகின்றவர்களும் மிகவும் அதிகமான தொகையைக் கேட்பதால் பெரும்பாலானோர் யாக வழிபாட்டையே மறந்து / ஒதுக்கி விட்டார்கள். யாக வழிபாட்டிற்கு எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. யாக நடத்த கட்டணம் பெறுதல் என்றால் வேதத்தையே விற்பது போல் ஆகும். அக்னி தெய்வ மூர்த்தியை வழிபடுவதற்குப் பேரம் பேசலாமா? ஆனால் யாக வழிபாட்டை இலவசமாக நடத்தித் தருகின்ற உத்தமர்களுக்குத் தாமே மனம் உவந்து சன்மானம் அளிப்பதில் தவறு கிடையாது.
இந்தத் தொகையைத் தந்தால் தான் யாகத்தை நடத்தித் தர முடியும் என்று விதிப்பது அக்னியையே விலை பேசுவது போலாகி பெரும் சாபங்களைப் பெற்றுத் தரும்.
பிறருக்கு இலவசமாக யாகத்தை நடத்தித் தருவது என்பது மிகப் பெரிய தர்மம் ஆகும். இத்தகைய பாக்கியத்தைப் பெற்றோர் ஒரு சிலரே. இவர்களுக்கு தேவர்களே தலை வணங்குவார்கள் என்பது இறை வாக்கு. இவ்வாறு இதனை இலவசமாக நடத்தித் தருவோருக்கும் பலவிதமான அற்புதமான பலன்கள் காத்துக் கிடக்கின்றன. எனவே பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில் யாக வழிபாட்டை நன்கு அறிந்தவர்கள் இயன்ற வரையில் ஏழை எளியோருக்கும் இந்த யாக வழிபாட்டின் பலன்கள் சென்றடையும் வண்ணம் அவர்களுக்கென இலவசமாகவே யாகத்தை நடத்த வேண்டுகின்றோம்.
இலவசமாக யாக பூஜையை நடத்தித் தருவது கலியுகத்தின் மிகப் பெரிய தர்மமாக அமைந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.
நம்முடைய கலியுக உணவு முறையில் மூலிகைப் பொருட்கள் இடம் பெறுவதே கிடையாது.
பலவிதமான நாட்டு மருந்து பொருட்களும், மூலிகைப் பொருட்களும் உடலில் சேர்ந்தால்தான் நமது உடல் திடகாத்திரமாகவும், ஆயுள் விருத்தியுடனும் விளங்கும்.
யாக குண்டத்தில் பலவிதமான மூலிகைப் பொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப்படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப் புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.
யாக குண்டதின் சிறப்பு !
**************************
நமது இந்துமதத்தினர் நல்ல விஷேசங்கள்
ஆனாலும் கெட்ட காரியங்கள் ஆனாலும்
ஹோமம் வளர்ப்பது வாடிக்கையான
சம்பிராதயம் மரகுச்சிகளை போட்டு நெருப்பு
வளர்ப்பதில் என்ன இருக்கிறது என்று கேலி பேசியவர்கள் போபால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம்
செய்தவர்கள் மட்டும் தப்பியதை அறிந்தபிறகு
அதில் ஏதோ இனம் புரியாத விஷயம் அடங்கி
உள்ளது என்று சற்று வாய்மூட
ஆரம்பித்துவிட்டார்கள்.
புதிய வேலைகளை துவங்குவதற்கு கணபதி
ஹோமம் ஜாதக தோஷங்களை விலக்குவதற்கு
நவக்கிரக ஹோமம், எதிரிகளின் தொல்லை
அதிகமாகாமல் தடுக்க சுதர்சன ஹோமம்
என்று செய்வதை கேள்விபட்டிருக்கிறோம் அந்த ஹோமங்கள் செய்யும் போது சதுரவடிவிலேயே குண்டங்கள் அமைக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
இவை தவிர வேறு சில ஹோமங்கள் செய்யும்
போது சதுரம் மட்டும் அல்லாமல் பல்வேறு
வடிவிலும் ஹோம குண்டங்கள்
அமைக்கப்படுவதை காண்கிறோம்.
ஹோமம் என்பதே நெருப்பை வளர்த்து
கடவுளை வழிபாடும் ஒரு சடங்குதானே,
இதற்கு ஒரே வடிவத்தில் குண்டங்கள்
அமைத்தால் போதாதா வட்டம் முக்கோணம்
என்று அமைக்க வேண்டுமா என்று பலருக்கும்
தோன்றும்.
ஒரு ஹோமம் நடத்த ஆகுதி பொருட்களும்
மந்திரமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஹோம குண்டத்தின் வடிவமுறை
காரணம். ஹோம குண்ட வடிவங்கள் நாம் நினைப்பது போல சாதாரண தோற்றங்கள்
அல்ல அந்த தோற்றங்களுக்குள் பல இயற்க்கை
தத்துவங்கள் ரகசியங்கள் மறைந்துள்ளன
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் தான் இயற்கையின் மூலங்கள்
என்று நமக்கு தெரியும்.
அத்தகைய இயற்க்கை மூலங்களான
ஐம்பூதங்களுக்கு பண்டைய கால இந்திய
விஞ்ஞானப்படி குறியீட்டு உருவமும் சக்தமும்
கண்டறியப்பட்டுள்ளது! அதன் அடிப்படையில்
தான் ஹோமகுண்ட உருவங்கள் வடிவமைக்க
படுகின்றன. இதன்படி செய்யும் யாகங்களுக்கு கைமேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று நமது வேதங்கள் சொல்கின்றன.
பூமியை குறிக்கும் குறியீட்டு வடிவம்
சதுரமாகும் இதன் ஒலி அதிர்வு அதாவது.பீஜமந்திரம் லம் என்பதாகும் நீரை குறிக்கும் வடிவம் பிறைச்சந்திர வடிவாகும் இதன் பீஜ மந்திரம் வம் என்பதாகும் நெருப்பை குறிப்பது முக்கோண வடிவம் இதன் மந்திரம்
ரம் என்பதாகும் காற்றை குறிப்பது அறுகோண
வடிவாகும் இதன் பீஜம் யம் என்பதாகும்
ஆகாயத்தை குறிப்பது வட்டவடிவாகும் இதன்
பீஜம் ஹம் என்பதாகும்.
உதாரணமாக எதிரிகளின் தொல்லைகளை
முறியடிக்க வெற்றி வாகை சூட யாகங்கள்
செய்யும் போது அதன் குண்ட வடிவம்
முக்கோணத்தில் அமைப்பார்கள், குழந்தைகள்
பெற பொருள் ஈட்ட யாகங்கள் செய்தால்
வட்டவடிவ யாககுண்டம் அமைப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியான
யாககுண்ட வடிவமுறைகள் இருக்கின்றன
அவைகளை துல்லியமாக கணக்கிட்டு
அமைத்து செய்யப்படும் யாகங்கள் எதுவும்
தோர்ப்பது இல்லை.
பசு நெய்.. பசுஞ்சாண வரட்டி கோயில்களில் ஹோமம் செய்யும் போது, பசு நெய்யை ஊற்றுகிறார்கள். நெய் கலந்த. அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம், நெய்யை ஊற்றலாமா! நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா
என்று வாதம் செய்வோர் உண்டு.
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, யாக
குண்டங்களில் இடப்படும் பொருட்கள், அக்னி
மூலமாக, எந்த தெய்வங்களுக்குரிய
மந்திரத்தைச் சொல்கிறோமோ, அந்த
தெய்வங்களையோ, தேவர்களையோ
அடையும் என்று சொல்கிறது.
அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
பசுநெய்யை யாகத்தில் விடும் போது, சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் இடும்போது, அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட சில வாயுக்கள் கிளம்புகின்றன.
இவை <ரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா, குடல்களில் ஏற்படும் நோய்களை குணமாக்கும்
சக்தியுடையவை. நரம்பு மண்டலம்
வலுவடையும். டென்ஷன் குறையும்.
வீடுகளில் இடமிருந்தால் பசுஞ்சாண
வரட்டியையும் எரிக்கப் பயன்படுத்துங்கள்.
அந்தக்காலத்தில், வீட்டுக்கு வெளியே
இருக்கும் பரந்த இடத்தில், பசுஞ்சாணம்
சேகரித்து, வரட்டி தட்டி காயவைத்து வெந்நீர்
போட, சமைக்க என பயன்படுத்தினார்கள்.
இந்தச் சாம்பலை செடி, கொடிகளில்
தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும். பல்
தேய்க்க இந்த சாம்பலை பயன்படுத்துவார்கள்.
தேமல் இருந்து, அதில் பூசினால்
குணமானது. என்னதான் நவீனம் வளர்ந்தாலும்,
பசுவளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.
சுத்தமான நெய், வரட்டி முதலானவை
கிடைக்க வீட்டுக்கு வீடு ஏற்பாடு செய்ய
வேண்டும். பசுக்களை தெருக்களில் அலைய
விடக்கூடாது. பசு வளர்ப்புக்கென இடம்
ஒதுக்க வேண்டும். அருகிலேயே
மேய்ச்சலுக்கு பயன்படும் வகையில் புல் வளர்க்க வேண்டும். பசுக்களைப் பாதுகாத்தால், ஆன்மிக ரீதியாக புண்ணியம். அறிவியல் ரீதியாக ஆரோக்கியம்.
ருத்ர ஹோமம்: குறிப்பாக ருத்ர ஹோமத்தில் சேர்க்கப்படும் மூலிகைகளில் , சீந்தில் , தர்பை , வன்னி, எருக்கன் , அரசு , ஆலம் போன்ற கல்ப மூலிகைகளும் , திப்பிலி, சுக்கு, சிவனார் வேம்பு , சிவகரத்தை போன்ற கடைச் சரக்குகளை யாகத்தீயில் நெய் சேர்த்து எரிக்கும் போது வெளி வரும் மூலிகைக் புகையை நாம், சுவாசிக்கும் போது , சுவாசத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து , நம் இரத்தத்தை சேதப் படுத்தும் கிருமிகளை அழிக்கின்றது . இதனால் நோய்கள் விரைந்து குணமாகிறது.
சமித்து:
*********
சமித்து அப்டினா ஹோமத்துக்கு பயன்படுத்துற சின்ன சின்ன குச்சிகள். அந்த காலத்துல ஞானிகள், குருக்கள் எல்லோரும் மரத்துல இருந்து காய்ந்து தானாக உதிர்ந்த/ உடைந்த குச்சிய மட்டும் தான் ஹோமத்துக்கு பயன்படுத்துனாங்க..
ஏன்னா விருட்சம் (மரம்) நம்ம இயற்கை சகோதரன், நம்ம லாபத்துக்காக வெட்டக்கூடாது, அப்டி வெட்டி பயன்படுத்துனா ஹோமதுக்கே பயனில்லை.
சூரிய ஒளி, நாம கொடுக்குற தண்ணி அல்லது மழை காத்து இதெயெல்லாம் எடுத்துகிட்டு நமக்கு பழத்தை கொடுக்கும், இன்னும் நிறையா பலனையும் கொடுக்கும் விருட்சம் தெய்வம் போல ன்னு எண்ணி வாழ்ந்தாங்க..
நாம மரத்த காக்கவும் மாட்டோம் நடவும் மாட்டோம், வெட்டி சாச்சு காசு பாப்போம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
சரி அந்த சமித்து என்ன என்னன்னு பாப்போம்...
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,
ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .,
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
(யாக புகை அண்டத்திற்க்கும் பிண்டத்திற்க்கும் நன்றே. தமிழில் தாவரம் என பெயர் சூட்டி மகிழ்ந்ந்தனர். ஆம் தா + வரம் தாவரம்)
( யாகத்திற்கு பலன் உண்டு இன்னும் சித்தர்கள் சொன்ன முறையில் செய்தால் சுவாஹா சொல்லுகீறார்கள் ஆனால் சித்தர்கள்
சிவ அக என்று சொல்லுகிறார்கள்)
ருத்ர ஹோமத்தின் பெருமை:
*********************************
சிவபெருமானின் பூரண அருளைப் பெறக் ருத்ர
ஹோமம் மிகவும் முக்கியமானது. "ருத்ர சம்கிதை " என்ற அதர்வ வேத நூலில் என்னென்ன திரவியங்கள் கொண்டு என்னென்ன பிரயோகங்கள் செய்தால் முழு பலன்களையும் பெற முடியும் என ஆதி கால ரிஷிகள் சொல்லி இருக்கிறார்கள்.
எவன் ஒருவன் சிவபெருமானை வேண்டி பக்தி சிரத்தையுடன் மூல மந்திரங்களை ஜெபம் செய்து 1,000 மோதகம் , 1,000 கொழுக்கட்டை , 1,000 அப்பம் , 1,000 அதிரசம் , 1,000 எள்ளுருண்டை இவற்றை தேனில் நனைத்து ருத்ர ஜெபத்துடன் ஹோமம் செய்கிறானோ அவன் மனதில் நினைத்த அனைத்து காரியங்களையும் 11 கோடி ருத்ர சக்திகளே நிறைவேற்றி கொடுப்பார்கள்.
எவன் ஒருவன் 11 வேதியர்களை கொண்டு ஏகாதச ருத்ர ஹோமம் ஹோமம் செய்கிறானோ , அவன் சூரியன் மாதிரியான ஒளிமயமான வாழ்க்கை வாழ்வான்.
எவன் ஒருவன் 18 வகையான மூலிகை சமித்து குச்சிகளை (ஆல், அரசு, பலா,அத்தி , இத்தி, பலாசு, வில்வம், வன்னி, வெள்ளெருக்கு, மகிழ், கருங்காலி , நாயுருவி , சந்தனம் , அகில் , தேவதாரம் , மூங்கில் , காஞ்சுரம் , சீந்தில் ) நெய்யில் நனைத்து பஞ்ச சூக்தங்களை ருத்ர ஜெபத்துடன் ஹோமம் செய்கிறானோ அவன் 21 தலைமுறைக்கும் நோய்களே தாக்காது.
எவன் ஒருவன் அருகம்புல்லை 1,000 கட்டுகளாக கட்டி நெய்யில் நனைத்து ஹோமம் செய்கின்றானோ அவன் அறிவாற்றல் , நினைவாற்றல், கலையாற்றல் பெருகி ஞானியாக திகழ்வான்.
எவன் ஒருவன் சிவ பரம்பொருளை வேண்டி வேண்டி 11 விதமான பழங்களை (வாழைப்பழம் , மாம்பழம் , பலாப்பழம் , மாதுளம்பழம், விளாம்பழம் , திராட்சை பழம் , எலுமிச்சம்பழம் , தோடம்பழம் , நாரதம்பலம் அத்திப்பழம் , வில்வம்பலம் ) கொண்டு ஹோமம் செய்கிறானோ அவன் அந்த ஊரிலேயே மாபெரும் செல்வந்தனாக மாறுவான்.
எவன் ஒருவன் சிவ பரம்பொருளை வேண்டி வேண்டி 1,000செந்தாமரை மலர்களை தேனில் நனைத்து ருத்ர ஜெபத்துடன் ஹோமம் செய்கின்றானோ அவன் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனைகளும் அடுத்த வருடத்துக்குள் தீரும்.
அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள்.
1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும்.
ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை
ஸர்வ வச்யம் நல்கும்.
திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும்.
நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும்.
நெற்பொறியினால் ஹோமம் செய்தால் பேரும் புகழும் கிட்டும்.
கரவீர புஸ்பத்தினால் ஹோமம் செய்தல் ஆசைப்பட்ட வாழ்க்கை துணையை அடையலாம்.
சீந்தில் கொடியால் ஹோமம் செய்தால் புற்றுநோய் போன்ற தீராத நோய்கள் கூட உடனே தீரும்.
சக்கரையால் ஹோமம் செய்தால் மக்களை வசியம் செய்கிற ஆளுமை கிடைக்கும்.
நெல் முதலிய நவ தானியங்களினால் ஹோமம் செய்தால் செல்வம் கொழிக்கும்.
பருத்தி விதையால் ஹோமம் செய்தால் எதிரிகள் செயலற்று போவார்கள்.
தேன் தங்கம் தரும்.
நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும்.
மோதகம் போரில் வெற்றி தரும்.
மட்டை உரிக்காத தேங்காய் 48 இனால் ஹோமம் மந்திர சித்தி நல்கும்.
தாமரை செல்வ வளர்ச்சி தரும்.
வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும்.
அருகம்புல் குபேர சம்பத்து தரும்.
மோதகம் நினைத்ததைத் தரும்.
வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே.
தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ
வசியம் தரும்.
இவ்வாறு ஹோமத்திற்குரிய பெரிய பட்டியலே சொல்லப்பட்டிருக்கிறது.
பார்த்திப லிங்க பூஜை
************************
சிவாகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன அதி உன்னத வழிபாடு இந்த பார்த்திப லிங்க பூஜை. கலியுகத்திலே மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்றவரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார். இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி முத்தி பேரு அடைகிறார். அன்று முதல் ராமபிரான் ராவனேஸ்வரனை கொன்ற ப்ரமகத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் இதே வழிபாட்டை செய்து தான் தன் தோஷங்களை போக்கினார். இதே போல் சூரபத்மனை அழித்த போது முருக பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இதே வழிபாடை தான் திருகோணமலையில் மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து இலங்கை வேந்தன் ரராவனேஸ்வரன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் செய்து இலங்கை வளநாட்டையே மாபெரும் சிவ பூமியாக ஸ்வர்ண பூமியாக மாற்றினான் என பல மிக பழமையான கிரந்த நூல்களில் சொல்பட்டுள்ளது. இதே பூஜையை தான் இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியில் வருகிற 2018 நவம்பர் 21ம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் இலங்கை மாபெரும் சிவபூமியாக , குபேர பூமியாக மாற களுதாவளை மண்ணில் உரிய வேத சிவாகம முறைப்படி மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. இந்த பூஜையை செய்பவர்கள் மாபெரும் குபேர சம்பத்துகளையும் அனைத்து வல்லமைகளையும் பெருவார்கள் என்பது மட்டும் உறுதி. அனைவரும் இந்த மாபெரும் பார்த்திப லிங்க பூஜையில் கலந்து கொள்க.. அனைத்து வரங்களையும் பெருக....

Sunday, 4 November 2018

காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?

                                     காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பொதுவாக காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிகிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம். அதை பற்றி இங்கே பார்ப்போம்.
-
❈ சனி பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
-
❈ நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்
-.
❈ காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
-
❈ காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை.
-
❈ சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.
-
❈ இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை 'ஆகாயத்தோட்டி" என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள்.
**********************************************************************

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...