*குழந்தையாக விளையாடும் தெய்வம் பாலா திரிபுரசுந்தரி மகிமை சில:* பாலா எனும் வாலைத்தாய்! வாலை மணோன்மணி, வாலை பராசக்தி என அழைக்கப்படுபவள்
அருணகிரண ஜாலை: ரஞ்சிதாசாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா: புல்ஹ கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா தியான சுலோகம்,
பொருள்: செந்நிறக் கிரணங்களால் சூழப்பட்டவள் பாலா திரிபுரசுந்தரி. கைகளில் அபயமுத்திரையுடன் அக்ஷமாலையையும் புத்தகத்தையும் ஏந்தி அருள்பவள். தாமரைப்பூவில் அமர்ந்து கோலோச்சுபவள். அந்த பாலா தேவி என்னைக் காக்கட்டும்.
செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவும்
அங்கைகள் நான்கில் வரதாப மணியக்கவடம்
துங்க நற்புத்தகம் தாங்கி தாமரையில் அமர்ந்து அருளக்கூடியவள் என பராசக்தி மாலை புகழ்கிறது
ஐம் க்லீம் ஸௌ: என்பதே இவள் மந்திரம் இதை குரு மூலமாக பெற்று உபாசனை செய்வது பல மடங்கு பலனை தரும்,
இதில் ஐம் எனும் பீஜம் வாக்பவபீஜம் எனப்படுகிறது. பிரம்மா, சரஸ்வதி போன்றோரின் அம்சமாக இந்த பீஜம் விளங்குகிறது. இந்த பீஜம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல், வாக்குபலிதம், ஞானம், அறிவு போன்றவற்றைத் தரும்.
க்லீம் எனும் பீஜம் காமராஜபீஜம் எனப்படுகிறது. இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் போன்றோர் அடக்கம். இந்த பீஜம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் போன்றவற்றைத் தரும்.
ஸௌ: பீஜத்தில் சிவன், பார்வதி, முருகன் போன்றோர் அடக்கம். ஸௌ: எனும் இந்த பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் எனும் வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது. இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த
வாழ்வினைத் தரும்.
இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே தன் மந்திரத்தினுள் கொண்டவள் பாலா திரிபுரசுந்தரி. இவள் மந்திரத்தை முறையாய் ஜபித்தால் நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம். அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லிலடங்காதவை.
லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான்.
அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர்புரிந்து பண்டனை வதைத்தாள். பிரம்மாண்ட புராணத்தில் உள்ள லலிதோபாக்யானத்தில் பாலாவின் பெருமையை விளக்கும் 125 ஸ்லோகங்கள் உள்ளன.
பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் முப்பது புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். லலிதையின் பிராண சக்தி , இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும், (ஸதா & எப்போதும், நவவர்ஷா & ஒன்பது வயதினள்) வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்களை அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் புகழப்படுபவள்
சிறு குழந்தையைப் போல விளையாட்டில் ஆசை கொண்டதால் அம்பிகைக்கு பாலா எனும் பெயர் ஏற்பட்டதாக திரிபுரா ரகஸ்யம் எனும் நூல் விளக்குகிறது. அம்பிகை வழிபாட்டின் உச்சபட்ச வழிபாடான மஹாக்ஷோடஸி தேவிக்கு உள்ள பெருமைகள் யாவும் பாலா லீலா வினோதியான இந்த திரிபுரசுந்தரிக்கும் உண்டு. பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம்.
பட்டத்து இளவரசியான பாலா, அருணகிரண ஜாலங்கள் எனும் இளஞ்சூரியனின் நிறத்தைப் போன்ற தன் மேனியில் பேரொளியால் திக்குத் திசைகளையெல்லாம் செம்மை நிறப்படுத்துகிறாள். லலிதமான பேரழகுடைய பாலா தன் அதிரூப சௌந்தர்யத்தால் அழகாய்ப் பொலிந்து அருள்கிறாள்.
இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. இவள் மறுகரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும், கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, வறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.
பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள். இதை "தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா" எனும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகிறது. மேலும் அது த்ரயக்ஷரீ, பாலா லீலா விநோதினீ என்று பல்வேறாக பாலாம்பிகையை போற்றுகிறது.இத்தேவிக்கு நவாவரணம், ஸஹஸ்ர நாமம், கட்கமாலா போன்ற பல்வேறு பூஜை முறைகள் உண்டு எனினும் . உண்மை பிரேமையோடு, பேரன்பால் அவளை வழிபடுவதையே அவள் மிகவும் விரும்புவாள்.
திரிபுரம் என்பதற்கு பல்வேறு பொருட்கள் உண்டு. இவள் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். புரை எனில் மூத்தவள் என்று பொருள். மும்மலங்கள், முச்சக்திகள், மூன்று காலங்கள், மூவுலகங்கள் முதலிய மூவகை பிரிவுகளுக்கு எல்லாம் இவள் உரியவள்
குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்கரங்களில் அம்பிகை பாலாவாகவும், அடுத்த இரண்டு ஆதாரங்களில் தருணியாகவும், அடுத்த இரண்டு ஆதாரங்களில் சுமங்கலியாகவும், ஸஹஸ்ராரத்தில் சுவாசினியாகவும் மகா லலிதையாகவும் பூஜிக்கப்படுகிறாள்.
நம்மைக் காப்பதையே கடமையாகக் கொண்டவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் பாலா என்கிறார் அவர். பாலை எனும் பாலாதிரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டின் முதற்படி என்பர். ஸ்ரீவித்யா உபாசனா மார்க்கத்தில் பெரும்பாலோர் பாலா தேவியை மட்டுமே உபாசிப்பது வழக்கம். அதனால் இம்மந்திரத்திற்கு லகு ஸ்ரீவித்யா என்பர்
இந்த பாலாம்பிகையின் மந்திரம் மூன்றெழுத்து மந்திரம் இகபர சகல சம்பத்துகளையும், நலன்களையும் தந்து நம்மை சிவனிடம் சேர்ப்பவள்.
பாலா எனில் சிறுமி எனவும் பொருள் உண்டு. பொதுவாகவே சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர். தீய எண்ணங்கள் இருக்காது. அதேபோல் சிறுமியாக இருக்கும் இவளும் பக்தர்களுக்கு பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளைத் தியானிக்க உடனே மனதில் பிரசன்னமாவாள்;
இந்த பாலா வழிபாடு ஸ்ரீவித்யையில் மிக முக்கியமானது. அந்த ஸ்ரீவித்யையில் விடாமுயற்சி என்ற வைராக்கிய குணமும், பற்றின்மையும் மிக மிக முக்கியம். அவை இரண்டையும் அஸ்திவாரமாக அமைக்காமல் ஸ்ரீவித்யை எனும் மாளிகையை எழுப்ப முடியாது. குழந்தைகள் ஒரு பொருள் வேண்டும் என்று அழுது ஆகாத்தியம் செய்யும். இது விடாமுயற்சி. அப்பொருள் கிடைத்ததும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விடும். அது பற்றற்ற நிலை. பாலா வழிபாடு பலமடைந்தால்தான் ஸ்ரீவித்யை பரிபூரணமாக சித்திக்கும, பாலா உபாசனை லகு ஸ்ரீவித்யை என்று போற்றப்படுகிறது.
இந்த பாலாம்பிகை உபாசனை புரிபவர்களுக்கு தேவி சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் அருள்வாள். குழந்தைகளை இந்த பாலாம்பிகையை வணங்கி வரச் செய்ய அவர்கள் கல்வியறிவு செழிப்புறும்.
பால முருகன், பால கிருஷ்ணன், பால ஐயப்பன், பால கணபதி எனத் தெய்வங்களை பால ரூபத்தில் வழிபடுவதால் நமக்கு அவர்கள் அருள் எளிதில் கிட்டும். தேவி பாலா, ஸர்வேஸ்வரி. குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பர். இங்கே தெய்வமே குழந்தையாக வரும்போது கொண்டாட்டத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ? இத்தகைய பெரும் சிறப்பு கொண்ட ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கான தனி திருத்தலம் திருப்போரூர் செங்கல் பட்டு சாலையில் , திருப்போரூரிலிருந்து 8 கி மீ தொலைவில் செம்பாக்கம் கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான பாலா பீடம் உள்ளது, இவள் முதலில் ஆலய ஸ்தாபகர் வீட்டில் 27 ஆண்டுகள் உற்சவராக இருந்து பூஜிக்கப்பட்ட பாலாவிற்கு தங்கள் சொந்த இடத்திலேயே 2009ல் கோயில் கட்டி சிறிதாக சிறிதாக வளர்ந்து பாலா கோயிலாக உள்ளது இங்கு திரிபுர சுந்தரி மூன்று வடிவில் தரிசனம், வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் , தாயான லலிதா மகா திரிபுர சுந்தரி மூலிகை அம்மனாக திதி படி மேல் மாடி சந்நிதியில் அருளாட்சி புரிகிறாள் மூலிகை அம்மனை தரிசிக்க ஆண்கள் மேல் சட்டை கழற்றி விட்டு மட்டுமே அனுமதிக்கப்படுவர், இந்த ஆலயத்தினுள் செல்போன் அனுமதி இல்லை , ஸ்ரீ பாலா புரட்டாசி, லலிதாவிற்கு பங்குனியில் பிரம்மோற்சவ பெரு விழா நடைபெறும் ஒரே திருத்தலம், மேலும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களை இவ்வாலய ஸ்தாபகரான சுவாமிஜி தன் கரங்களால் செய்து அவரே பூஜைகளையும் செய்கின்றார்கள், மற்ற ஆலயங்களுக்கு செல்ல நினைப்பும் அழைப்பும் போதும், பாலாவை தரிசிக்க அவள் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்! பாலை அழைத்தால் மட்டுமே சித்தர் குல தெய்வமான இவளை வாலை என கொண்டாடி சித்தர்கள் ஞானிகள், மகான்கள் அருளை எளிதில் பெற இவளை தரிசித்தால் எளிதில் கிட்டும் எனவே இத்தலம் வாலைக் கோட்டம் என போற்றப்படுகிறது *வருகின்ற மார்கழி மாதம் ஆங்கில புத்தாண்டு அன்று காலை முலவர்ஸ்ரீபாலா, தருணீ, ஒளஷத லலிதா சிறப்பு அலங்கார
தரிசனமும், ஏக காலத்தில் விநாயகர். முருகன் ! சிவன்! அம்பாள்! விஷ்ணு! அனுமான் ! ஐயப்பன் தெய்வங்களை அருணகிரி நாதரின் மந்திர நூலான திருப்புகழ் மகா மந்திர பூஜையும், சிறப்பு அன்ன தானமும் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து மார்கழி சதுர்த்தி திதி 3.1.2025 காலை அரிதான அற்புதமான நீல சரஸ்வதி மகா உச்சிஷ்ட கணபதிக்கு மண்டல விரத பூஜை மகா அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற குருவருளூம் திருவருளும் கூட்டியுள்ளது, வருக சேய் பாலா, தாய் ஒளஷத லலிதா அருள் பெறுக!!*
No comments:
Post a Comment