Saturday 27 August 2022

இறைவனுக்கு செய்யும் அபிஷேகம் செய்யும் முறை வரிசை படி :

                                             இறைவனுக்கு செய்யும்

                                           அபிஷேகம் செய்யும் முறை வரிசை படி :

சந்தனாதி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், வாசனை திரவியம், அரிசி மாவு, மஞ்சள் பொடி, குங்குமம், சர்க்கரை, தேன் தேனை அதிகமாக பயன்படுத்த கூடாது, பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, எலுமிச்சை சாறு, சாத்துக்குடி, இளநீர், சொர்ணம் சாத்தி சந்தனம், பன்னீர், பிறகு கலச ஜலம். இது தான் சரியான முறை. இப்படி தான் செய்ய வேண்டும். நம் இஷ்டத்திற்கு செய்ய கூடாது.

அதே போல் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த பாலை நாம் அருந்த கூடாது. சந்தனம், பஞ்சாமிர்தம் இவைகள் மட்டுமே நாம் அருந்தலாம். அதே போல் எல்லா அபிஷேக சாமான்களையும் நாம் கைகளால் கரைக்கின்றோம் அப்படி கைகலே படாமல் ஒன்று இருக்குமாயின் அது இளநீர் மட்டுமே. அதை நம் கை வழியாக அபிஷேகம் செய்ய கூடாது. நேராக கைகளில் படாமல் ஊற்ற வேண்டும். எந்த அபிஷேகமும் நம் கை வழியாக நகத்தின் மீது பட்டு ஸ்வாமி மீது விழ கூடாது. இளநீர் மட்டுமே மிகவும் விசேஷமான ஒன்று. அதை பற்றி தற்போது பார்க்கலாம். தெண்ணை மரத்தில் விடும் பூவில் ஒரு சொட்டு நீர் கூட எடுக்க முடியாது. அதே போல் குரும்பையிலும் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. பிறகு குரும்பை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகும். அதனுள்ளே எப்படி ஓடு உருவாகிறது ஓட்டுக்குள்ளே எப்படி தண்ணீர் வருகிறது, அதற்குள்ளே எப்படி வழுக்கை வருகிறது, வழுக்கை பெரிதாகி தேங்காய் ஆகிறது. அந்த தேங்காய் குள்ளும் சில காலம் வற்றாமல் இருக்கும் நீர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கடைசியில் கொப்பரை வரை நாம் யாகத்தில் சேர்ப்பது வரை புனிதமாக கருதப்படுகிறது. அப்பேர் பட்ட இளநீரை நம் கைகளில் ஊற்றி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய கூடாது. அதனால் தான் இளநீர் மிகவும் விசேஷமான ஒன்று. இதை எல்லாம் இன்று சொல்வதற்கு ஆட்கள் மிகவும் குறைவு. அப்படி நாம் சொன்னாலும் அவர் கேட்பது இல்லை என்பதே வருத்தமான விஷயம்.

தேன் எவ்வளவு அபிஷேகம் செய்கிறோமோ அதே போல் நூறு மடங்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். தேன் உஷ்ணம். அதனால் தேனை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதே இறைவனின் சூட்டை தனிப்பதற்கே.

மேலே சொன்னதில் அரிசி மாவு, மஞ்சள் பொடி, குங்குமம், சர்க்கரை, விபூதி போன்றவைகள் பயன்படுத்த வில்லை என்றால் இவைகளை தவிர்த்து வரிசை படி செய்யலாம்.

இது நிறைய நியாயமான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று தான் அடியேனுக்கு ஆசை. ஆனால் சிலரின் பேச்சு, செயல் படும் முறை அவர்கள் தவராக நினைக்கின்றார்கள். பதிவு செய்தாலே அவர்களை பற்றி தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறார்கள். அதனாலே நிறைய எழுதாமல் நிலைக்கு சில சமயம் தள்ளப்படுவதும் உண்டு.

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.

அபிஷேகம் செய்யும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்.
***************************************************************

தண்ணீர் அபிஷேகம் மனசாந்தி
பஞ்ச கவ்யம் ஆத்மசுத்தி, பாவநிவர்த்தி
நல்லெண்ணெய் பக்தி
சந்தனாதித் தைலம் சுகம்
அரிசிமாப் பொடி மலநாசம், கடன் விலகும்
வாழைப்பழம் சகல வசியம்
பலாப்பழம் உலக வசியம்
திராட்சைப்பழம் பயம் நீக்குதல்
மாதுளம்பழம் பகை நீக்கம்
தம்பரத்தம்பழம் பூமிலாபம்
நார்த்தம்பழம் நல்ல புத்தி
தேங்காய் துருவல் அரசுரிமை
சர்க்கரை பகையை அழித்தல்
பஞ்சாமிர்தம் தீர்க்காயுள்
தேன் சங்கீத (இசை) வன்மை
நெய் மோட்சம்
பால் ஆயுள் விருத்தி
எலுமிச்சம்பழம் யமபயம் நீக்கும்
இளநீர் நல்ல புத்திரப்பேறு
கருப்பஞ்சாறு சாஸ்திர தேர்த்தி
வாசனைத் திரவியம் ஆயுள் விருத்தி
மஞ்சள் பொடி ராஜ வசியம்
நெல்லி முள்ளிப்பொடி நோய் நீக்கும்
அன்னம் ஆயுள் ஆரோக்கியம், தேசம் அபிவிருத்தி
கஸ்தூரி வெற்றி உண்டாக்குதல்
கோரோசனை ஜபம் சித்திக்கும்
விபூதி ஞானம்
பச்சைகற்பூரம் நல்வாழ்வு
சந்தனம் செல்வம், சுவர்க்கபோகம்
வலம்புரி சங்கு தீவினை நீக்கும்
சொர்ணம் (தங்கம்) வைராக்யம்
சஹஸ்ரதாரை லாபம்
கும்பம் (ஸ்நபனம்) அஸ்வமேத யாகப்பலன்
வஸ்திரம் ராஜயோகம்
புஷ்பம் மகிழ்ச்சி

பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் இரு வகை :

(1)
ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.

(2)
பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...