Monday 14 October 2019

காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்".


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்".
காஞ்சி பெரியவாள் இறைவனாக இருந்து பிரஸாதம் வழங்குவது ஓர் அழகு எனில்,இறைவனுக்குஅவர் காணிக்கை செலுத்துவதோ அதனினும்அழகு.
ஒரு கோவிலுள்ள மூர்த்தி எனில் அந்த
ஸ்தல ஐதீஹயத்துக்குச் சிறப்புறப் பொருந்தும்படி காணிக்கை செலுத்துவார்.

ஸ்ரீகாளஹஸ்தி கும்பாபிஷேகத்துக்கு இப்படித்தான் காணிக்கை அனுப்பினார்.
ஸ்வாமியின் அபிஷேகத்துக்குப் பால்,தேன்
கங்கையும்,அணிவிப்பதற்குப் பட்டுவஸ்திரம்.
அனுப்பியதை சாதரண வழக்காகவே நாம்
எண்ணக்கூடும்.ஆனால் அவரோ பொருத்தம் பார்த்தே அனுப்பினார்.
( ஒருமுறை வடதேச யாத்திரை சென்றிருந்தார். அவர் தினமும் வழிபடும் சந்திர மவுளீஸ்வரர் பூஜைக்கு ஒரு வட இந்தியர் நிறைய பால் வாங்கிக் கொடுத்தார். பால் அபிஷேகம் செய்யத் துவங்கும் நேரம் பெரியவர் சுற்றும்முற்றும் பார்த்தார்.
ஒரு ஓரமாக முதியர் ஒருவர் சிறிய கூஜாவை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். பெரியவர், அம் முதியவரை அழைத்து கூஜாவை வாங்கித் திறந்து பார்த்தார். அதில் பால் இருந்தது. அது மட்டும் சந்திர மவுளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகள் முடிந்து பிரசாதம் பெறும் போது, தான் கொண்டு வந்த பாலை அபிஷேகத்திற்கு சேர்த்துக் கொள்ளாததைப்பற்றி அந்த வட இந்தியர் வருத்தத்துடன் கேட்டார்.
"இவ்வளவு பால் எப்படிக் கறக்கப்பட்டது? " என்று பெரியவர் வினவினார்.
மிஷின் மூலமாக " என்றார் வட இந்தியர்.
கன்றுக்குட்டிக்கு ஊட்டி, அதன் பிறகு கறக்கப்படும் பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது. நீர் கொண்டு வந்த பாலின் தரத்தை அறிந்துதான் அதை உபயோகிக்கவில்லை. சிறிதளவு செய்தாலும், கன்று ஊட்டி கறந்த பசும் பால்தான் உயர்ந்தது" என்று கூறினார். )
"கண்ணப்பரின் எச்சிலைப் ப்ரீதியோடு ஏற்றவர் காளத்திநாதர். அதனால் அவருக்கு எல்லாம் எச்சில் காணிக்கையாகத்தான் இருக்க வேண்டும்"
பால் எச்சிலானது.; கன்று தாய் மடியில் வாய் வைத்து எச்சிலாக்கினாலொழியப் பால் கிடைக்காது.
தேனிக்கள் வாயாலேயே எடுத்துச் சேர்க்கும் தேனும் எச்சில்.
கங்காதி தீர்த்தங்களில் மீன்கள் வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டு ஜலத்தைக் கொப்பளித்துக் கொண்டே போகும்.அதனால் கங்கையும் எச்சில்.
பட்டுப்பூச்சி வாயால் நூற்பதுதானே பட்டிழை?
அதனால் பட்டு வஸ்திரமும் எச்சில்.
"அதனால் காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம்
.எச்சிலா அனுப்பியிருக்கேன்" என்றார்.
வில்லாலடிக்க செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லாலெறியப் பிரம்பாலடிக்கக்
களிவண்டுகூர்ந்து
அல்லாற் பொழிற்றில்லை
அம்பலவாணர்க்கோர் அன்னை பிதா
இல்லாத தாலல்லவோ இறைவாகச்சி
ஏகம்பனே.
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன்
அல்லன்; மாது சொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன்
அல்லன்; தொண்டு செய்து
நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேன்
அல்லேன் நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ
திருக்காளத்தி அப்பருக்கே!?
...............பட்டிணத்தார்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை
கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்
ஆட்கொண்டருளி
வண்ணப்பணித்தென்னை வாவென்ற
வான்கருனைச்
சுண்ணப்பொன் நீற்றருக்கே சென்றூதாய்
கோத்தும்பீ.
...........திருவாசகம்.
"ஸகலம் கிருஷ்ணார்ப்பணம்"
ஹர ஹர ஸங்கர.!
ஜய ஜய ஸங்கர.!
.............. ஸ்வாமிதாஸன்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...