Monday, 15 January 2018

சகலஐஸ்வரியங்களையும் வாரி வளங்கும் ஸ்ரீசம்பத்கணபதி

சகலஐஸ்வரியங்களையும் வாரி வளங்கும் ஸ்ரீசம்பத்கணபதி 

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;

வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;


எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;


அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;


விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்;


திருமுறைகளில் விநாயகர்
'காணாபத்யம்’ என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது.


 இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம்! முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங் களுக்குமான பரிகாரமாக அமையும்.

அப்பரும் சுந்தரரும் விநாயகரைத் தேவாரத்தில் பாடியுள்ளனர். ரிக் வேதத்தில் கணபதி போற்றப்படுகிறார். திருமந்திரத்திலும் மற்றும் பதினோராம் திருமுறையில் கபிலதேவர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோரின் பாடல்களிலும் விநாயகர் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.


ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என்று, 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார்.


எனினும், திருவாசகத்தில் விநாயகர் பற்றிய குறிப்பே இல்லாதது வியப்பான செய்தி!
விநாயகர் தரும் வரங்கள்


''துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று ஔவையார், விநாயகப் பெருமானை வேண்டி சங்கத் தமிழ்ப் பாடல்கள் பாடும் புலமை பெற்றார். விநாயகர் அகவலில் யோக தத்துவத்தையும், விநாயகர் தரும் இக, பர சௌபாக்கியங்களையும் பாடியுள்ளார். 'முன்னை வினையின் முதலைக் களைந்து, எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறு’ என்று போற்றுகிறார் ஔவையார்

.
செல்வாக்கும் சொல்வாக்கும் தருவான், வெவ்வினையை வேரறுக்க வல்லான், நம் வேட்கை தணிவிப்பான் விநாயகன்.


'வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்ய தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவு’ என்கிறார் சேக்கிழார்.


விருத்தாசல புராணம், பாதாள விநாயகரின் பெருமைகளைப் பாடுகிறது. 'உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைதொழ வேண்டும்’ என்கிறது இந்தப் புராணம்.
விநாயக புராணம்


திருவாவடுதுறை ஆதீன கச்சியப்ப முனிவர் விநாயக புராணத்தை விரிவாகப் பாடியுள்ளார். இதில் விநாயகரின் தோற்றம், பெருமை, விரதங்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.


விநாயகரை வணங்கும் பக்தருக்குத் துன்பமில்லை, வறுமை இல்லை, நோயில்லை, துக்கம், சோகம், மோகங்கள், பாவங்கள், பகைகள் எதுவும் இல்லை என்கிறது இந்தப் புராணம்

.
செவ்வாய் பிள்ளையார் விரதம்
பெண்கள் மட்டுமே விநாயகருக்குச் செய்யும் விரதபூஜை இது. ஆடிச் செவ்வாய் இரவு ஆண்கள் உறங்கிய பின்போ அல்லது ஆண்கள் இல்லாத ஒரு வீட்டிலோ பெண்கள் கூடி, நெல் குத்தி, அரிசியாக்கி, மாவாக்கி, உப்பில்லாது, இளநீரை விட்டுப் பிசைந்து உருண்டை ஆக்கி, நீராவியில் வைத்து எடுத்து, கன்று ஈனாத பசுவின் சாணத்தில் பிள்ளையார் செய்து, பூஜை செய்து, விடிவதற்குள் விரதம் முடித்து, காலையில் பிள்ளையாரை ஆற்றில் விட்டால் தாலி பாக்கியம் பெருகும், தன தான்யங்கள் வளரும் என்பது ஐதீகம்.
இது, விரத மகாத்மியம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள 46 விரதங்களில், விநாயகரின் அருள் கிடைக்கச் செய்யும் ஒரு விரதம் ஆகும்.


தெய்வநாயகன் விநாயகன்
கடவுளர்களே போற்றும் கடவுள், கணபதி! திரிபுரங்கள் எரிக்கச் செல்லுமுன் தந்தை சிவன் தன்னைப் போற்றி வணங்க மறந்ததால், 'அச்சிவன் உறைரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரன்’ விநாயகர்.
தம்பிக்கு வள்ளியை மணம் செய்து வைத்தவர்;
மதுகைடபர்களை வெல்ல மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்;
கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சம்பாசுரனை வெல்லவும், பிரத்யும்னனை மீட்கவும் துணை நின்றவர்;


நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாரையூரில் நிவேதனம் உண்டு, தரிசனம் தந்தவர்;
தில்லையில் திருமுறைகள் உள்ளதைக் காட்டி, 12 திருமுறைகளை மீட்டவர்.
விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையார்; திருச்சியில் உச்சிப் பிள்ளையார்; சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர்; திருந்துதேவன்குடியில் நண்டு பூசித்த கர்க்கடக விநாயகர்; திருவீழிமிழலையில் படிக்காசுப் பிள்ளையார். இவரை மணிமேகலை காப்பியம் 'கரங்கவிழ்ந்த காவிரிப்பானை’ என்று போற்றுகிறது.


நோய் தீர்க்கும் விநாயகர்
பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான்.


திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது 'ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற்றினால், வாராத புத்தி வரும், பக்தி வரும், புத்திர சம்பத்து வரும், சக்தி வரும், சித்தி வரும்தான்’ என்று புத்தி, சத்தி, சித்தி பெற விநாயகனைத் தொழச் சொல்கிறார்.


சுயக் கட்டுப்பாடு கொண்டவர் விநாயகர். ஐம்புலன்தன்னை அடக்கும் யானை கட்டும் கயிறு, அங்குசம் இரண்டையும் தானே கொண்டு, மோன நிலையில் தியானம் செய்யும் விநாயகர் யோகம், நாதம், தாளம், ஞானம் எல்லாவற்றையும் தரும் நர்த்தன யோக கணபதி ஆவார்.


லட்சுமி கணபதி காயத்ரி
28 எழுத்து மந்திரம்
'ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத
சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா’
குடும்ப க்ஷேம காயத்ரி
'ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மீ கணபதயே
மம மம குடும்பஸ்ய யாவத்ராநாம் துரிதம்
ஹர ஹர க்ஷேமம் குருகுரு ஸர்வசௌபாக்யம்
தேஹி தேஹி ஐம்கம் கணபதயே ஸ்வாஹா’
காரிய ஸித்தி காயத்ரி


'ஓம் க்லெளம் ஸ்ரீ ம் ஸர்வவிக்ன ஹந்த்ரே பக்தானுக்ரஹகர்த்ரே
விஜய கணபதயே ஸ்வாஹா’
ஆல், அரசு, இலந்தை, வன்னி மர விநாயகரையும், அத்தி மரத்தின் விநாயகரையும் தொழுது பூசித்தால் முழுப்பலன் பெறலாம். வேழ முகத்தானைப் போற்றுவோம்; வெற்றி பெறுவோம்!

சிவனின் சிறப்பு செய்திகள்

சிவனின் சிறப்பு செய்திகள்

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.
* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
* மகாராஷ்டிரா மாநில் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.
* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.
* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா..?

தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா..?


❖ தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார்.

தீபத்தால் சாபம் நீங்குமா :

★ கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது பித்ரு தோஷங்களையும், பித்ருக்களால் ஏற்பட்ட சாபத்தையும் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

★ வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதைவு அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல், அனாதை பிரேதத்தை, ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் போன்ற மகத்தான புண்ணிய காரியங்களின் பலன்கள் மேற்கூறிய தோஷங்களுக்குச் சக்தியுள்ள பரிகாரங்களாகும்.

பரிகாரங்களும், இனிய பலன்களும் :

✰ பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

✰ பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

✰ துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

✰ மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

✰ ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

✰ தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

✰ தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

✰ காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

✰ உழவாரப் பணிகளை (கோவிலுக்கு சேவை செய்வது) மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் :

➚ சூரியன் - சூரியனார் கோவில்

➚ சந்திரன் - திருப்பதி

➚ குரு - ஆலங்குடி, திருச்செந்தூர்

➚ சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம்

➚ புதன் - திருவெண்காடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

➚ செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில்

➚ சனி - திருநள்ளாறு

➚ ராகு - திருநாகேஷ்வரம்

➚ கேது - காளாஸ்திரி (ஆந்திரப் பிரதேசம்). 

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?



மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?


➦ அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா?

➥ விநாயகருக்கு துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கையில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன் பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்தகலசமாகிய மோகதம் ஆகியவை காணப்படும்.

➦ அங்குசம் யானையை அடக்க உதவும் கருவியாகும். விநாயகரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால் தான் அவரது முகம் யானை வடிவில் இருக்கிறது. அவர் பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப் போடுகிறார்.

➥ ஒடிந்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகமும் உருண்டை, இந்த மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதையே இது காட்டுகிறது.

➦ இதே போல், அரச மரத்தடியில் விநாயகர் தவறாது இடம்பெற்றிருப்பார்.

➥ இது ஏன் தெரியுமா? அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கும் சக்தி கொண்டது.

➦ எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் உள்ள அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கின்றார்கள்.

➥ அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை. அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம்.

➦ பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல! வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள்.

➥ அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால்தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற கருணையுடன், தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர். 

Sunday, 14 January 2018

அமாவாசை தின அபூர்வ ரகசியங்கள்...

அமாவாசை தின அபூர்வ ரகசியங்கள்...

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.

சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா். அனேகா் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம். அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.

பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். வள்ளலார் வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்!
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

அமாவாசை                                                                                                                 சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.

மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.

‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம். இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான           உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.

வழிபடுவது எப்படி?

அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

செய்யக்கூடாதவை

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்    களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

அமாவாசையின் மகிமை

பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூத£தையர்களின் ஆசியும் கிடைக்கும்.

காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

துயர் போக்கும் துளசி

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.      அமாவாசை அல்லது அமைவாதல் அல்லது மறைமதி என்பது சந்திரன்தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாதை யாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

சந்திரமானம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

அமைவாதை வரும் நாள் கணிப்புதொகு

இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது.

d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2

இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் அமைவாதையன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திர மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமைவாதை வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.

திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று. 

திருச்செந்தூர் தீர்த்தங்களின் மகிமை:-

திருச்செந்தூர் தீர்த்தங்களின் மகிமை:-



காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டனவாம்.

முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப்பெறுவர்.

சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.

காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.

சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.

ஞானதீர்த்தம்: இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி, சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.

முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.

தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.

கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.

கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.

சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.

கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார். 

Friday, 12 January 2018

🌼"பிரம்ம முகூர்த்தம்

🌼"பிரம்ம முகூர்த்தம்

🌼"பிரம்ம முகூர்த்தம் "
சிறப்பு தெரியுமா .............
🌼சூரியன் உதித்தெழுவதற்குநாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.
🌼பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது.
🌼 படைத்தல் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
🌼பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம்.
🌼அதனால், பிரம்ம முகூர்த்தத்தின்மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
🌼காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்றுசொல்லலாம்.
🌼இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.
🌼 பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.
🌼பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.
🌼உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும்எழச் செய்கின்றது.
🌼மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது.
🌼 இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
🌼அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
🌼இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.
🌼அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.
🌼இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது 

பொங்கல்

பொங்கல்

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா?

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா? பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். பச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக்க வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான்
முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையான போகிக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
12-1421057457-1-govardhanmountain
முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.
பாடம் கற்பித்த கிருஷ்ணன்
கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.
12-1421057472-3-krishna-goverdhana
அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.
மன்னிப்பு கோரிய இந்திரன்
பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.
art_indra_worships_kartikeya

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

Tuesday, 9 January 2018

சூட்சும விஞ்ஞானம்

சூட்சும விஞ்ஞானம்

 1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜீவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

ஓம் மந்திரத்தில்



🍁 *_ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது_* 🍁
1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .

நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.



2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம் ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்' என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது












Wednesday, 3 January 2018

குளிக்கும் முன்

குளிக்கும் முன்


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

* *அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
* *சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
* *குளியல் = குளிர்வித்தல்
* *குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது
* *மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
* *இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
* *காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
* *வெந்நீரில் குளிக்க கூடாது.
* *எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்
* *குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
* *நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
* *எதற்கு இப்படி?
* *காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
* *நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
*😱*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
* *குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
* *இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
* *உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
*😧 *இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
* *எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
* *வியக்கவைக்கிறதா... !
* *நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
* *குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
* *பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
*😳 *புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
* *குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
* *குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
* *குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
* *குளித்தல் = குளிர்வித்தல்
* *குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.
* *இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள்



ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில்அடிக்கவும் என்றான்.
இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35ஆணிகளை அடித்தான்மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான்.அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாதுமறையாது. நீ வார்த்தைகளால்உன்டாக்கும் வடுவிற்கும்செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனேஉண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன்வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்என்றான்.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு...!

Tuesday, 2 January 2018

வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?

வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?


வாஸ்து பூஜை எப்போது செய்யலாம் ?

பார்தனில் குற்றம் தீரப் பகை இல்லா நாளைப் பார்த்து 
சீர்பெறக் கணபதிக்குச் சிறப்பினால் பூஜை செய்து
நேர் பெற காளைகட்டி நிலமதை உழுது பின்னும்
பேர் நவதானியத்தைப் பெலமதாய் விதைத்துக் கொள்ளே
என்கிறது சிற்ப ரத்னாகரம். அதன் அறிவுரைப்படி, சுபயோக சுபதினங்களைத் தேர்வு செய்து, முறைப்படி பூஜித்து, வீடு கட்டுவதற்கான வேலைகளைத் துவங்கவேண்டும்.
வீடு கட்டுவதற்கான இடத்தைப் பார்க்கச் செல்வது முதல், வீடு கட்டி முடிக்கும்வரை ஒவ்வொரு கட்டத்திலும்... ஜோதிட ரீதியாக லக்னத்தில் இருந்து எந்தெந்த இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் அறிந்து செயலாற்றி னால், காரிய ஜெயம் உண்டாகும். இதுகுறித்தும் ஒரு பாடலில் விளக்குகிறது, சிற்ப ரத்னாகரம்.


மனை பார்க்க இலக்கினமே சுத்தியாகும்

மனை போட இரண்டு ஏழாம் இடமே சுத்தம்
மனை தனக்கு மரம் வெட்ட மூன்றே சுத்தம்
மரம் தச்சு வேலை செய்ய நாலே சுத்தம்
மனை மாண வாசற்கால் நிறுத்த ஐந்து
வகை உத்திரம் போட ஆறாம் தானம்
மனை கூடம் குலம் தழைக்க ஏழே சுத்தம்
வடிவேலர் இந்நூலைக் குறித்திட்டாரே
குறித்து அலகு கை சாத்தி வைக்க எட்டாம்
குறுக்கும் பட்டைக்கு ஒன்பதாம், ஓடுபத்தாம்
தெருக்கதவு நிலை நிறுத்தப் பதினொன்றாகும்
திங்கள் புதன் குடிபுக ஈராறாம் சுத்தம்
பெருக்க முடன் இவ்வகையாய் அமர்ந்ததானால்
பேருலகில் மன்னருக்கு மன்னர் ஆவர்
பொருள் தனங்கள் மனை தனிலே சேரும் என்று
போக முனி இந்நூலை உரை செய்தாரே

இப்பாடல் தரும் தகவல்கள் என்ன தெரியுமா?
* வீட்டுக்கான மனையைப் பார்க்கச் செல்லும் நேரத்தில் லக்னம் சுத்தமாக அமையவேண்டும்.
* முதன்முதலாக வேலையைத் துவங்குவதற்கு, 2 மற்றும் 7ம் இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.
* வீட்டுக்குத் தேவையான மரங்களை வெட்டி எடுத்துவரவோ அல்லது கடை யில் வாங்கச் செல்லும்போதோ 3ம் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
* தச்சு வேலை ஆரம்பிக்க 4ம் இடமும், தலைவாசல் நிலை நிறுத்துவதற்கு 5ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.


* உத்தரம் பதித்தல் போன்ற விஷயங்களைச் செய்ய 6ம் இடமும், வீட்டின் உள் கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்க 7ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

* மேற்புறம் கூரை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு 8ம் இடமும், மேலே குறுக்குப் பட்டைகள் வேலை ஆரம்பிக்க 9ம் இடமும், ஓடு பதிக்க (அ) ஆகாயம் மூடுவதற்கு 10ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* தலைவாசற்கதவு தவிர மற்ற வாயில்களுக்கு கதவு நிலைகால் நிறுத்த 11ம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.
* திங்கள் மற்றும் புதன் கிழமை களில் வீடு குடிபுகும்போது, 12ம் இடம் சுத்தமாக இருக்கும் லக்ன அமைப்புடன் செய்தால், மன்னனுக்கு இணையான சீரும் சிறப்பும் மிக்க வாழ்க்கை அமையும் என்பது போகர் வாக்கு.
மேலும், ஒவ்வொரு ராசிக்கு உரியவர்களும் அந்தந்த ராசிக்கு உகந்த திசையை நோக்கி தலைவாயில் அமைந்த வீடுகளில் வசிப்பது சிறப்பு. மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கியும், ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள் தெற்கு நோக்கியும், மிதுனம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கியும், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கியும் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக வாழலாம்.
அதேபோல், 12 ராசிக்காரர்களும் தங்களது வீடுகளை ஊரின் எந்த பாகத்தில் அமைக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டலும் உண்டு.
மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது
ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது
கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.
கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.
துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.
விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.
தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.
கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.
மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.
தற்காலத்தில் இந்த நியதிகள் யாவும் பொருந்தும்படி வீடுகள் கிடைப்பது வெகு அபூர்வம்தான். எனினும், இயன்றவரையிலும் மேற்சொன்ன நியதிகளைக் கவனத்தில் கொண்டு வீடு கட்டி, குடிபுகுந்து சிறப்பான வாழ்க்கையைப் பெறுவோம்.
இனி, வாஸ்து பூஜை குறித்து அறிவோம்.
பூமி மற்றும் ஆகாயவெளியில் வெளிப்படும் பல்வேறு சக்திகள் ஒரே சீராகக் கிடைப்பது இல்லை. விண்வெளியில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களில் இருந்து வெளிப்படும் சக்திகளின் மாற்றங்கள் பல நல்ல விளைவு களையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றில் நல்ல விளைவுகளுக்கான சக்திகளைக் கிரகித்து, சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதற்கு நம் முன்னோர்களும், குருமார்களும், மகான்களும் பல வழிகளைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது வாஸ்து வழிபாடு.


வாஸ்து புருஷன் நித்திரையை விடும் நாட்கள்...

நம் வீட்டைக் காக்கும் கடவுளான வாஸ்து பகவான் பூமாதேவியின் மகனாவார். வீடுகட்டுமுன் இவருக்கு முறைப்படி பூஜை செய்ய வேண்டும். எப்போதும் நித்திரையில் இருக்கும் இவர், கீழ்க்காணும் நாட்களில்நேரங்களில் மட்டும் நித்திரையை விட்டு விழித்திருப்பார்.
சித்திரை 10ம் தேதி காலை 8 9:30
வைகாசி 21ம் தேதி காலை 9:12 10:42
ஆடி 11ம் தேதி காலை 6:48 8:18
ஆவணி 6ம் தேதி மாலை 2:24 3:54
ஐப்பசி 11ம் தேதி காலை 6:48 8:18
கார்த்திகை 8ம் தேதி காலை 10 11:30
தை 12ம் தேதி காலை 9:12 10:42
மாசி 22ம் தேதி காலை 9:12 10:42
இந்த மாத, நாள் மற்றும் நேர விவரங்கள் எல்லா வருடத்திலும் நிலையானதாகவே இருக்கும். இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் கிடையாது. இந்த நாட்களில் வாஸ்து புருஷன் 90 நிமிடங்கள் விழித்திருக்கிறார். குறிப்பிட்ட நாட்களில் வாஸ்து புருஷன் விழிப்பதில் இருந்து ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் செயல்பட்டுவிட்டு, மீண்டும் நித்திரைக்குச் செல்வார். இதில் வாஸ்து புருஷன் உணவு உண்ணும் நேரத்திலும், வெற்றிலை போடும் நேரத்திலும் அவருக்கு பூஜை செய்து வீடு கட்ட ஆரம்பித்தால், எவ்வித தடையுமின்றி வீடு கட்டி முடிக்கலாம்.
அதன்படி கீழ்க்காணும் நேரங்களில் மனைகோல நல்ல நேரங்களாகக் கருதலாம்.
சித்திரை 10ம் தேதி காலை 8:54 9:30
வைகாசி 21ம் தேதி காலை 10:06 10:42
ஆடி 11ம் தேதி காலை 7:42 8:18
ஆவணி 6ம் தேதி மாலை 3:18 3:54
ஐப்பசி 11ம் தேதி காலை 7:42 8:18
கார்த்திகை 8ம் தேதி காலை 10:54 11:30
தை 12ம் தேதி காலை 10:06 10:42
மாசி 22ம் தேதி காலை 10:06 10:42
வாஸ்து நேரங்கள் காலை 6 மணிக்கு சூரிய உதயம் என பொதுவாகக் கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊர் சூரிய உதய நேரத்துக்கு ஏற்ப மணியை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக கார்த்திகை 8ம் தேதி சென்னையில் சூரிய உதயம் காலை 6:15மணிக்கு ஆகும். எனவே, அன்று வாஸ்துக்கு (மனை கோல) உகந்த நேரம் காலை 11:09 முதல் 11:45 வரை என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...