Saturday, 31 January 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர பகுதியில் உள்ள இந்த பாதாள குபேர பைரவரை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...


 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர பகுதியில் உள்ள இந்த பாதாள குபேர பைரவரை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க......

தினமும் ஒருமணி நேரம் மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்!
மதுரை நகரில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் ஒரு கோவில் இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. அது தான் மதுரை பாதாள குபேர பைரவர் கோவில். அதன் சிறப்பு குறித்து பார்க்கலாம்.
கோவில் நகரம் என்று மதுரையை சொல்வதற்கு காரணம் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பழமையான கோவில்கள் அதிகமாக இருப்பது தான். அதிலும் மதுரைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பலவிதமான சுவாரசியமான பல சுவாமிகள் இருக்கின்றன.
அப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில். வடக்கு சித்திரை வீதி மற்றும் மேல சித்திரை வீதி சந்திப்பில் இருக்கக்கூடிய இந்த கோவிலுக்கு பாதாள குபேர பைரவர் என்று பெயருக்கு காரணம் என்னவென்றால் இங்கு இருக்கக்கூடிய பைரவர் பாதாளத்தில் இருப்பது போல் காட்சி அளிப்பார்.
அதாவது வெளியே இருந்து பார்க்கும் பொழுது உள்ளே பைரவர் இருப்பது தெரியாது அந்த அளவிற்கு பாதாளத்தில் இருப்பார்.
குறிப்பாக இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது சிறப்பாகும். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த கோவில் ராகு காலத்தில் மட்டுமே திறக்கப்பட்டு வந்ததால் தற்போதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த பாதாள குபேர பைரவரை வழிபடுவதன் மூலமாக செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர வழி வகுக்கக் கூடியவையாகவும், திருமண தடை, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லாது, தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார்.
ராகு காலத்தில் மட்டும் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் இந்த குபேர பைரவர் சக்தி வாய்ந்த பைரவராக இருப்பதினால் மதுரை மக்கள் அனைவருமே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தால் இக்கோவிலுக்கு வந்து குபேர பைரவரை தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இப்படிபட்ட குபேர பாதாள பைரவரை வேறு எந்த கோவிலிலும் காணமுடியாது. இந்த கோவிலில் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு இராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் வரும் இராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும். அதன் படி
திங்கள் 7.30 முதல் 9 மணி வரை,
செவ்வாய் 3 முதல் 4.30 மணி வரை,
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை,
வியாழன் 1.30 மணி முதல் 3.00 மணி வரை,
வெள்ளிக்கிழமை 10.30 முதல் 12 மணி வரை,
சனிக்கிழமை 9 முதல் 10.30 மணி வரை,
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை.
பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார். பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால் மறக்காமல் இவரையும் தரிசித்து பலனடையுங்கள்!

அற்புதம் அருளிய ஆண்டவன் !சென்னிமலை முருகனுக்கு மலைமேல் மண்டபம்

 அற்புதம் அருளிய ஆண்டவன் !


சென்னிமலை முருகனுக்கு மலைமேல் மண்டபம் கட்ட தீர்மானித்தார் நிலத்தம்பிரான். கட்டும்போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்குச் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த அவரும், அவருடைய சீடர்களும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர். அப்போது அங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களைத் தடுத்தார். “யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான். காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்ததுதான்.
அதைக்கேட்டு திடுக்கிட்ட அதிகாரியால், தனக்குச் சமமாக அவர் ஆங்கிலம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே தன் கோபத்தைக் காட்டினார். “மரத்தை வெட்டறதுமில்லாம, திமிரா பேசற இவனை மரத்திலே கட்டி வைங்கடா?’ என்று உத்தரவிட்டார். ஆனால் உடன் இருந்தவர்கள் தயங்கினார்கள். ‘‘ஐயா, இவர் பெரிய மகான். இவரை தண்டிக்கறது நமக்குதான் அழிவு’’ என்றார்கள். அவர்கள் பயப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன. முந்நூறு ஆண்டுகளுக்கு முன், பத்து வயதுப் பையன் ஒருவன், அவன் பிறந்த ஊர் காரணமாக செங்கத்துறையான் என்று அழைக்கப்பட்டான். பஞ்சம் பிழைக்க சென்னிமலைக்கு வந்து, ஒரு பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்தான். தன்னுடைய 25வது வயதிலும் அப்பாவியாக இருந்த அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, கையில் வேலுடன் சென்னியாண்டவர் காட்சி தந்தார். கூடவே அவனை, “நிலத்தம்பிரானே!” என்று அழைக்கவும் செய்த அவர், ‘இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’ என்றருளி மறைந்தார்.
ஒருநாள், பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். “இவனை நாகப்பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் வீட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’ என்றனர். அப்போது பக்கத்தில் இருந்த செங்கத்துறையான், பாம்புக் கடிபட்டவனை நெருங்கினான். பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான். சற்று நேரத்தில் பாம்பு கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இந்தக் காட்சியை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த வித்தையை எங்கே கற்றான் அவன்? ஆனால், செங்கத்துறையானோ, ‘எல்லாம் சென்னியாண்டவன் செயல்’ என்று மட்டுமே சொன்னான். அப்போதே அவன் தன் பெயர் நிலத்தம்பிரான் என்று அனைவருக்கும் அறிவித்தான்.
சென்னிமலை மீது முருகனுக்குக் கோயில் கட்ட ஆரம்பித்தார் நிலத்தம்பிரான். கோயில் திருப்பணிகள் நடந்தபோது தம்பிரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன்மூலம் கிடைத்த தொகையுடன் கட்டிடப் பணியாட்களுக்குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார். அவர் கூலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலலையை கலக்குவதுபோல, பணத்தை பொரியுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தால் அவரவர் செய்த வேலைக்கான கூலி துல்லியமாக இருக்கும்! இதுபோனற பல அற்புதங்க்ளைச் செய்த தம்பிரானையா மரத்தோடு கட்டிப் போடுவது? அப்போது தம்பிரான், “ஐயா, என்னைக் கட்டிப் போடுவது இருக்கட்டும். உங்கள் மனைவிக்கு சித்தம் கலங்கி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு, ‘ஊரைக் கொளுத்தப் போகிறேன்’ வருகிறார்கள். முதலில் அவரைக் கட்டுப்படுத்துங்கள்,’’ என்று சாதாரணமாகச் சொன்னார்.
அதேநேரம் அதிகாரியின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை உறுதி செய்தார். பதட்டத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அதிகாரி, வேலைக்காரப் பெண்கள் தன் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது அவள்முன் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமிருந்த விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, “சென்னியாண்டவா, இந்தக் குழந்தையைக் காப்பாற்று!” என்று வேண்டிக் கொண்டார். அடுத்த கணமே அவள் பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்த அதிகாரியும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினர். அதோடு, அதிகாரியே தன் ஆட்களைக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அந்த முன் கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது.
கோயில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார். மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள். மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை உள்ளது. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம். அதனால் இப்போதும் அந்த சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்! ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாகச் சென்றால் 33 கி.மீ. பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை அமைந்துள்ளது. மலைக்கு மேலே செல்ல வாகன வசதிகள் உண்டு.

Friday, 30 January 2026

 கனகதாரா பாடிய மகான் ஆதி சங்கரரின் பாதம் பதித்த தலம்,காஞ்சிபுரம்.ஸ்ரீமடம் இருக்கும் புண்ணிய பூமி!

இங்கே தனிப்பெருமையோடு ஆட்சி செய்பவள்
,அன்னை காமாட்சி. அவள் சன்னதியில் ஒரு விசேஷம் உண்டு. அம்பாள் வீற்றிருக்கும் கருவறைக்கு மேலே உள்ள விமானம் பொன் மயமானது. அந்தக் காலத்திலேயே தங்க ரேக் சாத்தப்பட்ட விமானம் உடைய பெருமை காமாட்சிக்கு உண்டு. ஆனால்,காலப்போக்கில் அந்த தேவியின் பொன் மய விமானம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து, அதன் மேல் பதிந்திருந்த தங்கமெல்லாம் அழிந்து, வெறும் செம்பாக,அதுவும் களிம்பு ஏறிக் காட்சி தந்தது.
ஸ்ரீமடத்தில் அப்போதெல்லாம் பெரிதாகப் பண வசதி கிடையாது. அன்பர்களும .,பக்தர்களும் கொடுப்பதை வைத்துதான் மடம் நடந்து கொண்டிருந்தது. பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு, யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.
இந்த மாதிரியான சூழலில் ஒரு நாள் மகா பெரியவா, காமாட்சி அம்மன் கோயிலில் அம்பாள் விமானம் செம்பாகக் காட்சி அளிப்பது குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்.
"அம்பாள் சன்னதி விமானம் இப்படி இருக்கே....இதை மாத்த வேண்டாமோ?!" அவர் சொன்னபோது மடத்தின் மேனேஜர், வசதி இன்மையை சுட்டிக் காட்டினார்.
பெரியவா யோசனை பண்ணினார்."சரி நாம முயற்சிப்போம்.அவளே செஞ்சுப்பா..!" என்று அம்பாள் மீது பாரத்தைப் .போட்டுவிட்டு, ஒரு ஆசாரியை வரவழைத்து,
"மொத்த விமானத்துக்கும் தங்க ரேக் பதிக்க மொத்தமாக எவ்வளவு ஸ்வர்ணம் தேவைப்படும்" என்று கேட்டார்
வந்தவர் பரிசோதித்து,. அளந்தெல்லாம் பார்த்துவிட்டு,குறிப்பிட்ட அளவைச் சொன்னார்.
"இவ்வளவு பவுனுக்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில். 'ஆசை மட்டும் இருக்கு ,அம்பாளுக்கு பண்ணணும்னு ...ஆனா, என்ன பண்ணறதுன்னு தெரியலையே!' என்று மகாபெரியவா யோசித்துக் கொண்டிருந்த சமயத்துல, அந்தக் காலத்தில் பிரபல சங்கீத வித்வானான மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தார்.
அவரைப் பார்த்ததும் மகாபெரியவா மனதுக்குள் ஏதோ நினைத்தவராக, "உனக்கு கனகதாரா ஸ்தோத்ரம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர்.
"அப்படின்னா, நீ அதைப்பாடு. யாருக்கெல்லாம் தெரியுமோ,அவாளும் சேர்ந்து பாடுங்கோ!" என்று சொன்னார், மகாபெரியவா.
அதைத் தொடர்ந்து, மகாராஜபுரம் அவர்கள் கனகதாரா ஸ்துதியைப்பாட, அங்கே இருந்த பெண்கள் பலரும் அந்த ஸ்துதியை சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.
சுமார் அரை மணிநேரம் முழுமையாகச் சொல்லி முடித்ததும்,அங்கே ஓர் ஆச்சரியம் நடந்தது.
அங்கேயிருந்த அத்தனை பெண்களும் தாங்கள் அணிந்து வந்திருந்த நகைநட்டுகளைக் கழற்றி மகாபெரியவா முன்னால் இருந்த ஒரு பெரிய மூங்கில் தட்டிலில் வைத்தனர்.
"மகாபெரியவா இந்த நகைகளை எல்லாம் உருக்கி ஸ்வர்ணத்தை எடுத்துக்கணும். காமாட்சி விமானத்துக்கு தங்கரேக் பதிக்கறதுல எங்க பங்கும் இருக்கணும்!" கோரஸாக எல்லோரும் வேண்டினார்கள்.
"ஆசார்யாளோட ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் ஸ்வர்ண மழை பொழிகிறதே!" என்று மகா பெரியவா புளகாங்கிதம் அடைந்தார்.
"கனகதாராவைக் கேட்டுட்டு அன்னிக்கு மகாலக்ஷ்மி தங்கமழை பெய்ய வைச்சா. இன்னிக்கு இத்தனை பெண்கள் சாட்சாத் அம்பாள் ரூபத்துல கனகமழை பெய்ய வைச்சிருக்கா!" என்று மகாபெரியவா சொல்ல, அத்தனை பெண்கள் முகத்திலும் ஆனந்தப் பரவசம்.
மூங்கில் தட்டுல இருந்த நகைகளை அப்படியே ஆசாரி கிட்டே அள்ளிக் கொடுத்து எடை போடச் சொன்னார்.
அதை எடை போட்டுப் பார்த்தபோது, தான் கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை.குறையவுமில்லை
என்று அதிசயப்பட்டார் அந்த ஆசாரி.
அடுத்த வாரமே விமானத்துக்கு தங்கரேக் பதித்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தது.
ஸ்ரீமடத்தில் பொருளாதாரக் கஷ்டம் நிலவியபோதும், காமாட்சி அம்மனுக்கு பொன்விமானம் அமைக்க வேண்டும் என்று மகாபெரியவா தீர்மானித்து அதை அம்பாளிடமே சொல்லி வேண்ட, தன் அம்சமான பெண்கள் மூலமாகவே அதைச் செய்வதற்கான அனுகிரஹத்தை அம்பாள் அப்போதே தந்துவிட்டாள்.
இந்த அதிசயத்துக்குக் காரணம், சாட்சாத் மகேஸ்வரனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவாளின் மகிமை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

தைபூசம் என்பது முருகபெருமானுக்கு உரியது என்றாலும் அந்நாளின் சிறப்புக்களில் முக்கியமானது நடராஜர் திருக்கோலத்தை வியக்யபாதரதரும், பதஞ்சலி முனிவரும் தில்லையில் கண்ட நாள்


 தைபூசம் என்பது முருகபெருமானுக்கு உரியது என்றாலும் அந்நாளின் சிறப்புக்களில் முக்கியமானது நடராஜர் திருக்கோலத்தை வியக்யபாதரதரும், பதஞ்சலி முனிவரும் தில்லையில் கண்ட நாள்

அந்நாளில் நடராஜ கோல வழிபாடும் அவசியம், நடராஜரை ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் மட்டும் வழிபடுவதை விட இந்நாளிலும் வழிபடுதல் நன்று
நடராஜ கோலத்தை பதஞ்சலி முனிவர் எப்படி பெற்றார் என்றால் அது பாற்கடலில் இருந்து தொடங்குகின்றது
ஆதிஷேஷனின் பாம்பு படுக்கையில் படுத்திருக்கும் போது அவரின் எடை அதிகரித்தது , திடீரென ஏற்பட்ட இந்தமாற்றம் பற்றி ஆதிஷேஷன் பெருமாளிடம் கேட்க அவர் சொன்னார் , "ஆதிஷேஷா, சிவனின் நடன கோலத்தை கண்டு நாம் மகிழ்ந்த பூரிப்பு அது"
அதுமுதல் ஆதிஷேஷனுக்கு சிவனின் நடராஜ கோலத்தை காணும் ஆவல் வந்தது, பொதுவாக ராமாயணத்தில் லட்சுமணனாக, மகாபாரத காலத்தில் பலராமனுமாக வந்தவர் ஆதிஷேஷன்
அவர் விஷ்ணு வாமணனாக வந்த காலத்தில் தனித்து பாற்கடலில் இருக்கும் நேரம் சிவநடனத்தை காணும் பொருட்டு விஷ்ணுவின் அனுமதிபேரில் பதஞ்சலி முனிவராய் வந்தார்
அவருடன் துணைக்கு வந்த பிறப்பு வியாக்ரபாதரர் எனும் புலிக்கால் முனிவர்
இருவரும் சேர்ந்து நடராஜ கோலம் காண தவமிருந்தார்கள், சிவன் அவர்களை நவபுலியூர் தலங்களை உருவாக்க செய்து கடைசியில் சிதம்பரத்தில் நடன கோலத்தை காட்டினார்
அது ஒரு தை மாதம் பூச நட்சத்திரம் அன்று நிகழ்ந்தது
சிவநடனம் என்பது ஆழ்ந்த விஞ்ஞான பிரபஞ்ச தத்துவத்தை கொண்டது
சிவநடனம் என்பது இந்த பிரபஞ்சம் ஓய்வில்லாமல் இயங்கிகொண்டிருப்பதை குறிப்பது
இந்த உலகில் எல்லாமே இயங்குகின்றன கண்ணுக்கு தெரியாத உயிர்கள் இயங்குகின்றன, கண்ணுக்கு தெரியாத அணுக்களுக்குள் புரோட்டானும் நியூட்ரானும் இன்னும் பலவும் இயங்குகின்றன‌
கண்ணுக்கு தெரிபவை எல்லாம் இயக்கமே, செத்துவிட்டது என எரிக்கபடும் உடலில் கூட நெருப்பின் இயக்கம் உண்டு, சாம்பல் நீரில் கரைந்து இன்னொன்றாக மாறிவருவதிலும் இயக்கம் உண்டு
இங்கு எல்லாமே இயக்கம், பிரபஞ்சத்தில் பூமி சூரியனை சுற்றுகின்றது சூரியன் தன் பாதையில் சுற்றுகின்றது இப்படி எல்லாமே இயக்கம்
இப்படி காண்பவை காணாதவை என எல்லாவற்றையும் இயக்குபவன் சிவனே எனும் தத்துவத்தில் எல்லாவற்றுக்கும் அடிப்படை இந்த சக்தியே அணுமுதல் வானியல் கோள் வரை இயக்குவது அந்த சக்தியே
அந்த நடனம் நின்றால் உலக இயக்கம் நின்றுவிடும் , வானத்து கோள்கள் நின்றாலோ சூரியன் சந்திரன் நின்றாலோ என்னாகும் உலகம்?
உலகம் இயங்க அந்த இயக்கும் சக்தி இயங்கிகொண்டே இருக்க வேண்டும், அதைத்தான் சிவநடனம்
( சிவனுக்கு போட்டியாக காளி ஆடவந்து அதுதோற்றதாகவும் ஒரு புராணாகதை உண்டு , அவர்கள் மானிடருக்கு சொன்ன காரணம் காளி காலை தூக்கி ஆடமுடியவில்லை என்றாலும் அதன் உள் அர்த்தம் நுணுக்கமானது
இயக்கம் என்பது எல்லா வகையிலும் இருத்தல் வேண்டும், வானமும் கிரகங்களும் அவற்றின் உயிர்களும் சரியான வகையில் எல்லா கோணத்திலும் இயங்குதல் வேண்டும்
ஏதாவது ஒரு இயக்கம் சரியில்லாவிடில் மொத்த இயக்கமும் பாதிக்கும்
காளி நடனத்தில் ஒரு அசைவினை செய்யமுடியாமல் தோற்றாள் என்பது ஏதோ ஒரு இயக்கம் அவளால் முடியவில்லை அல்லது அதுசிவனால் மட்டும் முடியும் என்பதை சொல்லவே அன்றி அதில் அவமானமோ, பெண் அடிமைதனமோ எதுவுமில்லை)
அன்றைய மக்களுக்கு சிவன் ஒருவரே எல்லா வகையிலும் இந்த பிரபஞ்சத்தை இயக்கி காக்கமுடியும் என்பதை காட்டிய நடனம் அது
(இந்த இயக்க தத்துவத்தைத்தான் சுவிட்சர்லாந்தின் அணுஆராய்ச்சி மையம் கவனித்து நடராஜருக்கு தங்கள் ஆய்வகம் முன்னாலே சிலை வைத்திருக்கின்றது
அணுவினை பிளந்தால் வரும் நெருப்பு என்பதையே சிவன் ஒரு கையில் வைத்திருப்பதாகவும் இன்னும் இதர சக்திகளும் நடராஜர் சிலையில் தத்துவமாக வைத்திருப்பதாகவும் அதை தாங்கள் ஆய்வதாகவும் அந்த அமைப்பு சொல்கின்றது)
சிவ நடனம் என்பது எல்லாமே இயங்கி கொண்டிருக்கின்றது, அணு இயங்குகின்றது அண்டவெளி நில்லாமல் இயங்குகின்றது
மானுட உடலில் கூட கோடிகணக்கான செல்கள் தினமும் உருவாகின்றன, அதே எண்ணிக்கை செல்கள் மறைகின்றன, மானிட உடலும் நில்லாமல் இயங்குகின்றது
அண்டம் முதல் பிண்டம் வரை ஓயாது இயங்குகின்றது அந்த இயக்கத்தை செய்பவர் சிவன் என்பதே நடராஜர் நடனத்தின் தாத்பரியம்
சிவன் ஐந்து தொழிலை செய்பவர், அந்த ஐந்து தொழிலுக்கும் அடிப்படையானது காலம்
காலத்த்தாலே கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என வகையாய் காரியம் ஆற்றமுடியும், காலமே எல்லாவற்றையும் முடிவு செய்யும்
அந்த காலத்தையே சிவன் இயக்குகின்றார் என்பதும் இந்த நடனத்தின் பொருள்
தை பூசம் என்பது நடராஜ கோலத்தை வழிபட்டு அருள் பெறவேண்டிய நாளும் கூட, பதஞ்சலி முனிவர் புலிக்கால் முனிவருடன் வழிபட்ட நவபுலியூர் முதல் சிதம்பரம் வரை இந்நாளில் வழிபடுதல் நன்று
அப்படியே எல்லா சிவாலயங்களிலும் வழிபாடுகள் அவசியம்
குறிப்பாக பஞ்ச சபைகளில் வழிபடுதலும் நன்று, குற்றாலம், நெல்லை செப்பறை, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு எனும் ஐந்து சபைகளில் வழிபடுதல் இன்னும் நன்று
மதுரை சொக்கநாதர் ஆலய வழிபாடு சால சிறந்தது, காரணம் மீண்டும் விக்யாபாதரர்க்கு அதே நடனத்தை சிவன் காட்டிய தலம் அது, அங்கு வழிபடுதலும் நன்று
இந்நாள் நடராஜ பெருமானுக்கானது, பூசம் என்றால் பசுவின் மடி என பொருள் அதாவது தாய்மையில் கேட்டதை எல்லாம் தருவது என பொருள்
அந்நாளில் உலகை இயக்கும், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சிவனிடம் வேண்டுங்கள், அவர் உங்களையும் மிக சரியாக இயக்கும் வரமருள்வார், சிவனருளில் எல்லாமே வெற்றியாகும், மறக்காமல் வழிபடட்டு பலனடைய வாழ்த்துக்கள்
இந்நாளில் நடராஜ பெருமானுக்குரிய துதிகளை சொல்லி பாடுதல் நன்று, அவ்வகையில் நடராஜர் பத்து எனும் பாடல் விஷேஷமானது மறக்காமல் பாடுதல் நன்று
நடராஜ பெருமானின் அடியாராக சிறுமணவூர் முனுசாமி முதலியார் என்பவர் இருந்தார், அவர் தில்லையில் பாடிய நடராஜர் பத்து எனும் பாடல் மிக சிறப்பானது, முருகபெருமானின் அருளில் முதலியார் இந்த அற்புத பாடலை மிக உருக்கமாக பாடினார் என்பது வரலாறு
அப்பாடலை இன்று பாடி நடராஜ பெருமானை தொழுவது சால சிறந்தது
"மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டல மிரண்டேழும் நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்கவந்த குரு நீ
புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ யிந்தப்
புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே
என் குறைக ளார்க் குரைப்பேன்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே !
மானாட மழுவாட மதியாடப் புனலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாடத் திரையாட
மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட
குஞ்சர முகத்தனாடக்
குண்டல மிரண்டாடத் தண்டைபுலி யுடையாடக்
குழந்தை முருகேசனாட
ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதி னெட்டு
முனியாட பாலகருமாட
நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட
நாட்டிப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே
கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கண்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரைதேடி
ஓயாம லிரவு பகலும்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபய னடைந்தி லேனே
தடமென்ற மிடிகரையில் பந்தபா சங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்
தாயென்று சேயென்று நீயென்னு நானென்று
தமியேனை யிவ் வண்ணமாய்
இடையென்று கடைநின்று யேனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே"

*தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்...*

 இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் *தமிழ்நாட்டில்தான் உள்ளன.*

*அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.*
இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்...👇
*1 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்*
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து
2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.
*2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி*
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
*3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்*
சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.
*4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை*
மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
*5 ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்*
திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.
*6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்*
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்
பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
*7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்*
மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.
அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது.
அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.
*8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை*
சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.
*9 ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில்,
ராமேஸ்வரம்...*
12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது
*10 அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை*
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.
11 கபாலீசுவரர் கோயில், சென்னை
சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
12 ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்
600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
13 வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்
சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.
14 தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்
சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.
15 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோ
ழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.
16 ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு
தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், "ஸ்வேதாரண்யேஸ்வரர்" என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, "பிரம்மவித்யாநாயகி" என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.
17 ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
18 பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு
19 சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.
20 திருவாலீஸ்வரர் கோயில்
சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.
21 ஐராவதீஸ்வரர் கோயில்
கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
22 காசி விஸ்வநாதர் கோயில்
கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
23 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்
சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.
24 கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
25 பாட
லீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்
கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
26 காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி
காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
27 திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை
மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.
28 மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்
சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.
நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடற்கரைகள் பக்கத்திலும் பல சிறப்புக்கு வாய்ந்த கோவில்கள் உள்ளது அப்படி கடற்கரை அருகில் உள்ள 10 தமிழக கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்
29. அஷ்டலட்சுமி கோவில், சென்னை
இந்த கோவிலானது சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன.
முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள் புரிகின்றனர்.
இரண்டாவது தளத்தில் திருமால் திருமகளுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின்பே ஏனைய தெய்வங்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள்புரிகின்றனர்.
நான்காவது தளத்தில் தனலட்சுமி அருள்பாலிக்கிறார். இக்கோவில் 1976-ல் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கோபுரத்தின் நிழலானது தரையில் விழுவதில்லை.
30. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்
இந்த கோவிலானது சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும்.
31. காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்
பழங்காலத்தில் இந்த கோவில் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
32. அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை
இந்த கோவிலானது நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அமிர்தக்கடேஸ்வரர், திருக்கோடி குழகர் என்ற திருப்பெயர்களிலும், அம்மை அஞ்சனாட்சி, மைதடங்கண்ணி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.
33. திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்
வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என ஆனது.
இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
34. இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்
இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.
35. சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்
இந்த கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும்.
36. சுயம்புலிங்க சுவாமி, உவரி
இந்த கோவிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
37. குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி
இக்கோவில் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னிய
ாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.
38. மாமல்லபுரம் , காஞ்சிபுரம்
மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.
இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது.
இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர்.
*கோபுர அமைப்பு...*
ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் எ‌‌‌‎ன்று கூட கூறுவார்கள். ஆலயத்தி‎ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் ‏ இருப்பவர்களுக்கும் இறைவனி‎ன் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.
கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.
*இராஜகோபுரத்தி‌‎ன் கோட்பாடுகள்:-)*
எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தி‌‎ன் அருகில் செ‌‌‌‌‌‎ன்‎று அத‎ன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா‎னிட வடிவங்களையும் காணலாம். ‏இறைவனி‎ன் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் ‏ இடம் பெற்று‏ இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் ‏இவைகளுக்கும் இடமுண்டு எ‎ன்பது கோட்பாடுகள்.
சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் ‏இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள், அண்டத்தினுள் ‏ இ‌‎ன்‎னது இருக்கிறது எ‌‌‌‎ன்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு ‏ இடம் பெற்றிருக்கும். இக்கோட்பாட்டை ‏ இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையி‌‎ன் நடைமுறையி‎ன் புறச்சி‌‎ன்‎னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது எ‌‎ன்றால் ‏ இயற்கையில் ‏உள்ளவைகளை எல்லாம் அத‌‎ன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.
*யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு...*
ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.
*கொடிக்கம்பம்...*
கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும்.
குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.
*கருவறை...*
கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.
எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் தி
சை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.
*கோபுர தரிசனம் கோடி புண்ணியம்...*
ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.
*பிராண சக்தி...*
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை
*(14 ஆயிரம் உயிர் சக்தி)* நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.
கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.
*விஞ்ஞானத்தின் அடிப்படை...*
இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக் கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.
*தமிழ்நாட்டு கோயில்களில் சித்தர்கள் சமாதி...*
சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்...✍🏼

தைப்பூசம்

தைப்பூசம்: 💫

தொட்டதெல்லாம் துலங்க🌈💖 முருகப்பெருமானை🛕 வழிபடலாம் வாங்க.!🌸🕉️
முருகனின் தைப்பூசத் திருநாளும்.. அதன் சிறப்பும்..!
🦚 முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசத் திருநாள். தைப்பூசம் என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.
தைப்பூசத்தின் சிறப்புகள்:
🦚 தைப்பூச நாளில் வள்ளலார் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
🦚 சிவபெருமான் உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூசத் தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
🦚 இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. தேவர்களின் குருவாகக் கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார்.
🦚 இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டவமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.
🦚 அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள்தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.
🦚 ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
🦚 "தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால் ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்கின்றனர்.
தைப்பூச விரத முறை:
🦚 தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட்டு. பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும்.
🦚 தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி, இன்பம் பெருகும்.
🦚 சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிக்கலாம்.

சூரியன்_உச்சம்_பலன்

 சூரியன்_உச்சம்_பலன்

சூரியனின் உச்ச ராசி மேஷம் ஒரு நபருக்கு அவரது ஜாதகத்தில் இந்த மேஷ ராசியில் சூரியன் இருக்க அந்த நபர் திடகாத்திரமான உடலை பெற்றிருப்பார். அவரது உடல், நடை, தோற்றத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். எதற்கும் அஞ்சாத மனதை கொண்டிருப்பார். சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். மேஷம் என்பது போர்க்கிரகமான “செவ்வாயின்” வீடாகும். அதில் வெப்பமான சூரியன் உச்சம் பெறுவதால் சண்டை பிரியர்களாக இருப்பார்கள். அது வாய்ச்சண்டையாகவும், அடிதடி சண்டையாகவும் இருக்கலாம். பெரும்பாலும் நியாயமான காரணங்களுக்காகவே சண்டையிடுவார்கள். அதில் ஈடுபட்ட பின்பு அவ்வளவு சுலபத்தில் பின்வாங்க மாட்டார்கள். ராணுவம், காவல் துறை போன்ற பணிகளில் சேர்ந்து வீர சாகசங்கள் அதிகம் புரியும் நபர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அரசு பணியில் உயர் பொறுப்புகளில் இருப்பார்கள். அரசு சார்ந்த துறையில் பணியில் இருப்பார்கள். அரசு சார்ந்த துறையில் காண்ட்ராக்ட் எடுத்து செய்வார்கள். அல்லது அரசியலில் கொடிகட்டி பறப்பார்கள். இவர்கள் அரசு பணியில் இருந்தாலும் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். நீதி நேர்மை உண்மை பக்கம் இருப்பார்கள் அதனாலே பலருக்கு இவர்களை பிடிக்காது. தனியார் துறையில் வேலை பார்த்தால் ஒரு இடத்தில் உறுப்படியாக வேலை பார்க்க மாட்டார்கள் அங்கேயும் பஞ்சாயத்து தான். பொதுவாக இவர்களுக்கு அடுத்தவர் முன் கைகட்டி வேலை பார்க்க பிடிக்காது.
ஜாதகத்தில் சூரியனின் சொந்த ராசியான சிம்மத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர் சிங்கத்தை போன்ற அஞ்சாத குணமும், அதை போன்ற ஒரு கம்பீரத்தையும் கொண்டிருப்பார். இவர்களில் பெரும்பாலானவர்களின் குரல்வளம் மிகவும் கடுமையாகவும், பிறரை அச்சமூட்டி அவர்கள் மீது ஒரு ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் இருக்கும். கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அதில் உச்சத்தை தொடும் யோகமுண்டு. அரசியலில் ஈடுபடும்போது மிகவுயர்ந்த பதவிகளை பெறும் வாய்ப்பு உண்டாகும். சமுதாயத்தில் உள்ள அனைவரின் மதிப்பு மரியாதைக்கும் உரியவர்களாவார்கள். தந்தைக்கு பெருமை சேர்க்கக்கூடிய மகனாக இருப்பார்கள்.
லக்னத்திற்கு யோகாதிபதியாக இருந்தால் அந்த திசையும் வந்தால் வீடு வண்டி வாகனங்கள் அசையா சொத்துக்கள் யோகம் அதிகமாக அமையும். அந்த சூரியன் திசை சரியான வயதில் வந்தால் இவர்களை யாரும் அசைக்க கூட முடியாது. இவர்களிடம் பேசுவதற்கு கூட பலர்கள் பயப்படுவார்கள்.
துலாம் ராசி சூரியனின் நீச்ச ராசியாகும். இந்த ராசியின் அதிபதி அசுரர்களின் குருவான “சுக்கிர” பகவானாவார். ஜாதகத்தில் இந்த ராசியில் சூரியன் இருப்பவர்களுக்கு மத்திய வயதுகளில் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலாரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். தீய சகவாசங்களால் பல துன்பங்களை சந்திக்க நேரும். பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளையும் சந்திக்க கூடும்.
பலருக்கு சிறு வயதில் தந்தையை இழக்கவும் நேரிடும். அரசு பணிக்கு பல போராட்டம் ஏற்படும். பூர்வீக சொத்து பூர்வீக இடம் எப்போதும் பஞ்சாயத்து உண்டாகும். பங்காளி பஞ்சாயத்து பல வரும்.
ஜாதகம் மற்றும் திருமண பொருத்தம் பார்க்கப்படும். ஜாதகம் இல்லாதவர்களுக்கு புதியதாக ஜாதகம் நோட்டில் எழுதி அனுப்பப்படும். உங்கள் பிரச்சனை ஏற்ற கோவில் தளங்கள் கூறப்படும்

செருப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்! இயற்கை தரும் இலவச அக்குபஞ்சர் சிகிச்சையின் முழு பலனை பெற்று மகிழுங்கள் !!!

 


செருப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்! இயற்கை தரும் இலவச அக்குபஞ்சர் சிகிச்சையின் முழு பலனை பெற்று மகிழுங்கள் !!!

செருப்பு இன்றைய கால கட்டத்தில் மனித வாழ்வோடு பின்னி பிணைந்துள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை அந்தஸ்தாக கருதும் தலை முறை இந்த தலைமுறை.
ஒருவர் அணிந்து இருக்கும் செருப்பின் மதிப்பில் இருந்து அவரின் சமூக நிலையை மதிப்பது இன்றைய சமூகம். உடற்பயிச்சிக்காக நடக்கும் போதும் இறுக்கி பிடிக்கும் 'ஷுஸ் ' அணிவது சமூகத்தில் கட்டாயம் ஆகின்றது. "பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பர்கள்" என்ற தாழ்வு மனப்பான்மையே இக்கட்டயத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது.
வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.
கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும். பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதி கால் வரை அமைந்து இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம், முதலிய எல்லா உருப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரித படுத்தும்.
பாதத்துக்கடியில் கற்கள் போன்றவைற்றை மிதிக்கும்போது அக்குப்பங்சர் என்னும் சீன சிகிச்சையினால் கிடைக்கும் பலன் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராவதுடன், நரம்பு மண்டலங்களில் உள்ள சோர்வுச் செல்கள் அழிக்கப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஒருநாளைக்கு சிறிது நேரமாவது செருப்பு அணியாமல் வெறும் காலில் சிறிது தூரம் கல், மண், புல் போன்வற்றை மிதித்த படி நடந்து சென்றால் இலவசமாக இயற்கையே நமக்கு அக்குபஞ்சர் சிகிச்சையை இலவசமாக கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிக அவசியம்.

தசரதர் 60,000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா ?


 தசரதர் 60,000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா ?

நமது நாட்டின் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் நமது நாட்டின் மக்கள் அவர்களின் வாழ்வில் மேம்பட சிறந்த புராணங்களையும், இதிகாசங்களையும் இயற்றினர். அதில் வாழ்விற்கு மேன்மையளிக்கும் கருத்துக்கள் பல இருந்தாலும், அந்த இதிகாச புராணங்களில் இருக்கும் சில கதைகளின் உண்மையான பின்னணி தெரியாமல் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர். அப்படியான ஒரு கதை தான் தசரத மகாராஜா 60,000 பெண்களை மணந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம். தசரதர் ஏன் இத்தனை திருமணங்கள் புரிந்தார் என்பதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான “காமதேனுவை” தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட மன்னன் கார்த்தவீர்யாஜுனன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும், அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க, அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன்.
இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் தவ புதல்வரும், மஹாவிஷ்ணுவின் அவதாரமுமான பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு, அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டுவந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார்.
கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை, 21 முறை வாளால் வெட்டிக்கொன்றனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர், அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற சத்திரியர்களான அரசர்கள் மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் 21 தலைமுறையினரையும் தான் வெட்டி வீழ்த்தப் போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.
அப்போது அயோத்திய நகரை ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த தசரத சக்ரவத்தி தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும், பரசுராமரின் போர்திறன், தவசக்தி, மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி போன்றவை அவரிடம் இருக்கும் வரை, இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்றறிந்தார். அதே நேரத்தில் புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர். இது தான் பரசுராமரின் பலவீனம் என தெரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார் தசரதர். அப்போது பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும், அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள, பரசுராமர் பார்வையில் படும்போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார்.
தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவைசெய்யும் பொருட்டு, தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரத சக்கரவாதி இத்தனை திருமணம் புரிந்தாரே அன்றி சுகங்கள் அனுபவிக்கும் எண்ணத்தினாலல்ல. எனவே நமது புராணங்களையும், இதிகாசங்களையும் ஆழ்ந்து படிக்காமல், மேலோட்டமாக சில விடயங்களை தெரிந்து கொண்டு அத்தகைய காப்பியங்களை கேலி செய்வது தவறு.

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...