*ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள் ! உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள் ! அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான் ! இருவரும் நண்பர்கள் ! அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான் !!*
*ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான் ! அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான் ! பாட்டு அரசனை கவர்ந்தது !!*
*நீ அருமையாக பாடுகிறாய் ! உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன் ! என்ன வேண்டும் கேள் ? என்றான் அரசன் !!*
*மகிழ்ந்து போனான் பார்வையற்றவன் ! அரசே ! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ! அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும் ! இந்த ஆசையை நிறை வேற்றுவீர்களா ? என்று கேட்டான் !!*
*இதென்ன பிரமாதம் ! நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன் ! மதியம் உணவுடன் சந்திக்கிறேன் ! என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான் !!*
*மதிய உணவை அரசன் கொண்டு வருவான் ! அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும் ! அதற்கு வசதியாக காலையிலிருந்தே எந்த உணவையும் சாப்பிடக்கூடாது ! அதிக பசியோடு இருந்தால் ? அதிகமாக சாப்பிடலாம் ! என்று அவன் மனம் கணக்குப் போட்டது !!*
*அடுத்த நாள் விடிந்தது !அரசனின் வருகைக்காக காத்திருந்தான் ! வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள் ! அரசன் கொண்டு வரும் உணவு பற்றிய சிந்தனையால் ? மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்து விட்டான் ! மதியம் மணி இரண்டானது ! மூன்றானது ! அரசன் வரவேயில்லை ! நேரம் ஓடிக் கொண்டிருந்தது ! இரவு எட்டு மணியானது ! ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே ஓய்ந்து போனது ! கோபத்தோடும் பசியோடும் உட்கார்ந்திருந்தான் பார்வை அற்றவன் ! அந்த நேரத்தில் அரசன் அங்கு வந்தான் !!*
*தம்பி! எப்படி இருக்கிறாய் ? அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா ? எங்கே பொற்காசு மூட்டை எங்கே ? குதிரை எங்கே ? என்று கேட்டான் அரசன் !!*
*சாப்பாடா ? காலையிலிருந்து பசியோடு காத்திருக்கிறேன் ! இப்போது தானே நீங்களே வருகிறீர்கள் ! என்றான் சோகமாக !!*
*யோசித்தான் அரசன் ! பிறகு பேசினான் ! சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன் ! திடீரென்று தலை சுற்றியது ! வைத்தியர்கள் என்னை சோதித்து விட்டு ஓய்வு எடுக்குமாறு சொன்னார்கள் ! அதனால் என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன் ! அதை நீ சாப்பிடவில்லையா ? என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான் !!*
*அரசே ! இவரிடம் உணவை கொடுத்தேன் ! ஆனால் ? இவர் வாங்க மறுத்து விட்டார் ! அதனால் ? அதை திரும்ப எடுத்துச் செல்வதை விட ? யாரிடமாவது கொடுத்தால் ? உபயோகமாக இருக்குமே என்று நினைத்து ! பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்து விட்டு அரண்மனை திரும்பினேன் ! உங்களிடம் விஷயத்தை தெரிவிப்பதற்காக வந்தேன் ! நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள் ! அரசியாரிடம் சொல்லி விட்டு வந்து விட்டேன் ! என்றான் பாதுகாவலன் !!*
*தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன் ! அப்போது அங்கிருந்த சாது பேசினார் !!*
*தம்பி! நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது ! அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய் ! தானே நேரில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை ! ஆனால் ? அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய் ? அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம் ! இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும் ! இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது ! என்று சொல்லி விட்டு அமைதி ஆனார் சாது !!*
*அந்த இடமே அமைதியானது ! சாது மீண்டும் பேசத் தொடங்கினார் !!*
*உணவை கொடுத்து அனுப்பிய அரசன் ! இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான் ! ஆயிரம் பொற் காசுகளை ஒரு மூட்டையாக கட்டி ! மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் இந்த மூட்டையை ஒப்படைத்து விட்டு வா ! என்று அனுப்பினார் ! இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட்டு நகர்ந்தான் ! அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது ! குழப்பம் இதோடு தீரவில்லை ! அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான் ! அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து ! மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் ? குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான் ! பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் ! குதிரையை பெற்றுக் கொண்டு ? நாட்டைவிட்டே போய் விட்டான் ! இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன் ! உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால் ? நீ இன்று பசியோடு இருக்கிறாய் ! இதை விதி என்பதா ? அல்லது வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டாய் என்று சொல்வதா ? ஒன்று மட்டும் நிச்சயம் ! உன்னுடைய வரம் ! உனக்கு சாபமாகவும் ? உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது ! என்று சொல்லி முடித்தார் சாது !!*
*அமைதியாக இருந்த அரசன் பேசினான் ! கவலைப்படாதே ! நாளை உனக்கு உணவு ! பொற்காசு ! குதிரை ! ஆகிய எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பி வைக்கிறேன் ! என்று சொல்லி விட்டு நகர்ந்தான் அரசன் !!*
*அடுத்த நாள் அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன் ! அரசன் வரவேயில்லை ! முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் இறந்து போன செய்தி ! இன்னமும் அவனுக்கு எட்டவில்லை !!*
*வாய்ப்பு என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை ! அப்படியே சொல்லி விட்டு வந்தாலும் ? அதை மிகச் சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் ? அதிர்ஷ்டமும் ? நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? என்பது தெரியவில்லை ! வாய்ப்பு கதவைத் தட்டும் போது ? காதை பொத்திக் கொண்டால் ? பலன்கள் எப்படி கிடைக்கும் ? அந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ளும் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும் !!*
*"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"*
*திரு அம்பலத்தரசன் திருவடி நிழலில் என்றும் உன் அடியேன்*!







