மரணத்தின் பிடியில் விலக்கும் நோய்களை குணமாக்கும் அற்புத மந்திரம்
மரணத்தின் பிடியில் இருந்து நோய் குணமாக சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்திற்கு சக்தி உள்ளது
மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார்.
சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்தி மையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது.
மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப் படுகிறது.
எந்த ஒரு ஜீவன் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்.
மிருத்யுஞ்ஜய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்
பொருள்:
நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனுமாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.
பலன்கள்
இந்த மந்திரத்தை நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி
ஒவ்வொரு மாதமும் நம் ஜென்ம நட்சத்திரம் வரும் நாள்,ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிறந்த நாள் அன்றுஅதிகமமாக ஜெபித்து வர தீரா நோய்கள் தீரும்.
எல்லா விதமான உயிர் பாதிப்புகளும் நீங்கும். வடக்கு பார்த்து ஜெபிக்கவும்.
தொடர் விபத்துகளைச் சந்தித்து வருபவர்கள் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் மிருத்யுஞ்சய மந்திர ஜபம் அல்லது ஹோமம் செய்து கொள்ள விபத்துக்களாலும்,பிற வழிகளிலும் உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படாது.

No comments:
Post a Comment