Wednesday, 11 February 2026

ஒட்டுமொத்தமாக உடம்பில் தங்கியிருக்கும் கண் திருஷ்டியை ஒரே நாளில் ஓட ஓட விரட்ட ஒரு ரூபாய் இருந்தால் போதும்.!


ஒட்டுமொத்தமாக உடம்பில் தங்கியிருக்கும் கண் திருஷ்டியை ஒரே நாளில் ஓட ஓட விரட்ட ஒரு ரூபாய் இருந்தால் போதும்.
நீண்ட நாட்களாக உங்களுக்கு கண் திருஷ்டியின் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா உங்களுக்காக மிகக் குறைந்த செலவில் சக்திவாய்ந்த ஒரு பரிகாரம் தான் இது சில பேருக்கு உடம்பில் வியாதிகளே இருக்காது மருத்துவரிடம் சென்று எல்லா சோதனையும் செய்து பார்த்திருப்பார்கள் உடம்பில் அறிவியல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி விடுவார்கள் ஆனால் உடம்பில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் வலி இருந்துகொண்டே இருக்கும் சில பேருக்கு தலைவலி சில பேருக்கு கால் வலி கை வலி முதுகு வலி மருந்து மாத்திரை எவ்வளவு சாப்பிட்டாலும் சரியாகவில்லை இதற்கு என்ன காரணமாக இருக்கும்?
கண்ணுக்குத் தெரியாத கண் திருஷ்டியும் இந்த பிரச்சனைக்கு ஒரு காரணம் தான் கண் திருஷ்டியை சிலபேர் நம்பமாட்டார்கள் கஷ்டம் வராதவரை கண் திருஷ்டியில் யாருக்குமே நம்பிக்கை இருக்காது திடீர் என்று நன்றாக இருக்கும் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கும் போது, இப்படிப்பட்ட பரிகாரங்களில் மீதும் கண்திருஷ்டி மீதும் நமக்கு நம்பிக்கை வந்துவிடும் இதற்காக குடும்பத்தில் பிரச்சனை வர வேண்டும் என்று சொல்லவில்லை ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்ட கூற்று இது அவ்வளவு தான் வயிற்று வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்லுவார்கள் அல்லவா அப்படித்தான் இதுவும்.
சரி உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதிர்மறை ஆற்றலின் மூலம் கண் திருஷ்டியின் மூலம் எந்த பிரச்சனை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் கருப்பு புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு கத்தியை வைத்து அந்த எலுமிச்சம் பழத்தை லேசாக கீறி கொள்ள வேண்டும் 1 ரூபாய் நாணயத்தை உள்ளே போடும் அளவிற்கு சிறியதாக எலுமிச்சம் பழத்தை கிழித்துக் கொள்ளுங்கள் அந்த சிறிய துவாரத்தில் 1 ரூபாய் நாணயத்தை சொருகி விடுங்கள் நீங்கள் கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ள வேண்டும் உங்களுடைய கையில் இப்போது ஒரு ரூபாய் நாணயம் புதைந்த எலுமிச்சம்பழம் இருக்கிறது.
ஒரு ரூபாயோடு இருக்கும் அந்த எலுமிச்சம் பழத்தை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உங்களுடைய உடம்பை உராசியபடி அப்படியே தடவி மேலிருந்து கீழ் பக்கம் கொண்டு வர வேண்டும். இதே போல மூன்று முறை செய்ய வேண்டும் உங்களைப் பிடித்த துஷ்ட சக்தி எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அந்த எலுமிச்சம் பழத்துடன் நீங்கி விட வேண்டுமென்று குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் ஏதாவது உக்கிர தெய்வத்தையும் மனதார நினைத்து கொண்டே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
அதன்பின்பு ஒரு காகிதத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை வைத்து சுருட்டி ஒரு கவரில் போட்டு கொள்ளுங்கள் உங்கள் வீட்டில் இருந்து தூரமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கால் படாத இடத்தில் கொண்டுபோய் அந்த எலுமிச்சம்பழத்தை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து தலைக்கு குளித்து விட வேண்டும் இந்த பரிகாரத்தை உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமாக இருக்குமோ அந்த நேரத்தில் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய உடம்பில் கண் திருஷ்டி தங்கவே தங்காது கண்திருஷ்டி மூலம் உடல் உபாதைகள் இருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும் இந்த பரிகாரத்தை அமாவாசைத் தினத்தில் செய்வது நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்றும் சொல்லப் பட்டுள்ளது நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி! நன்றி! நன்றி!

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...