இந்த நூலை புரிஞ்சவன் மந்திரம் சொல்லவே தேவையில்லை!
பெயர் மட்டும் பலர் கேட்டிருப்பாங்க… ஆனா உள்ளடக்கம் யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய நூல்…
அந்த நூல் தான்
யோகினி ஹ்ருதய ஞானம் (Yoginī Hṛdaya)
மந்திரம் ஜபிக்காமலேயே சக்தி உண்டாகும்னா?
தேவி கோவிலில் இல்ல… உன் விழிப்பில இருக்கான்னா?
இதெல்லாம் கதையா?
இல்லை.
பாரம்பரிய சாக்த தந்திர நூல் சொல்ற உண்மை.
யோகினி ஹ்ருதய ஞானம் உண்மையிலேயே
இது தமிழ் சித்தர் கற்பனை நூல் இல்லை
இது சைவ–சாக்த தந்திர மரபில் வரும்
அசல் சம்ஸ்கிருத தந்திர நூல்.
முக்கியமாக......
ஸ்ரீ வித்யா (Śrīvidyā)
லலிதா திரிபுரசுந்தரி வழிபாடு
உள் சாதனை (Antaryāga)
பற்றி மட்டுமே பேசும் நூல்.
இது பக்திக்கான நூல் இல்லை — விழிப்புக்கான நூல்.
“ஹ்ருதயம்”ன்னா இதயம் இல்ல… இங்க தான் ரகசியம்.
இந்த நூலில்:
ஹ்ருதயம் = சக்தியின் மைய ரகசியம்
தேவியை வெளியே தேடாதே
மந்திரத்தை வாயால் சொல்லாதே
உள் உணர்வால் அனுபவிக்க சொல்லுது.
அதனால தான்.....
இந்த நூல் பொதுவா வெளியில் பேசப்படல.
இப்போ…
இந்த நூல் சொல்லும் 3 ரகசிய மந்திர PRINCIPLES.
1.
மந்திரம் = ஒலி அல்ல | உணர்வு
பொதுவான நம்பிக்கை:
சரியான உச்சரிப்பு தான் சக்தி
யோகினி ஹ்ருதயம் சொல்வது:
மந்திரத்தின் சக்தி = சத்தத்தில் இல்லை,
உள் உணர்வில் தான் உள்ளது.
மந்திரம் = சத்தம் இல்லை.
மந்திரம் = சக்தி அதிர்வு
அந்த அதிர்வு
மனசுக்குள்ளே நிலைபெறும்போது தான் செயல்படும்.
அதனால தான்....
வாயால் ஜபிக்காமலேயே
மனசுக்குள்ளே உணரப்பட்ட மந்திரமே போதும்னு சொல்றது.
2.
ஸ்ரீசக்கரம் = படம் இல்லை | நீயே அந்த சக்கரம்.
பொதுவாக:
ஸ்ரீசக்கரம் ஒரு யந்திரம் / பூஜை பொருள்னு நினைக்கிறோம்.
யோகினி ஹ்ருதயம்:
ஸ்ரீசக்கரம் = மனிதனின் உள் அமைப்பு
ஒவ்வொரு ஆவரணம்
ஒரு மனநிலை
ஒவ்வொரு பிந்து
ஒரு விழிப்பு நிலை.
பயணம்:
வெளியிலிருந்து → உள்ளே
வடிவத்திலிருந்து → வடிவமில்லா சக்தி வரை.
அதனால...
வெளிப்பூஜை secondary
உள் ஸ்ரீசக்கர பயணம் (Antar-yāga) தான் முக்கியம்.
3.
தேவி வெளியே இல்லை | உன் விழிப்பே தேவி.
சாதாரண வழிபாடு:
தேவி கோவிலில் இருக்கிறாள்.
யோகினி ஹ்ருதயம்:
தேவி = விழிப்பு (Consciousness)
தேவி = சக்தி
சக்தி = விழிப்பு
விழிப்பு = உன் அறிவு
நீ எவ்வளவு விழிப்படைகிறாயோ
அவ்வளவு தான் தேவி வெளிப்படுவாள்.
இதுதான்
பயம் இல்லாத வழிபாடு
பேராசை இல்லாத சாதனை
உண்மையான சக்தி பாதை.
இந்த நூல் “ரகசியமானது ”
இது பொதுமக்களுக்கு எழுதப்படல
குரு–சிஷ்ய மரபு இல்லாம
முழுசா புரிஞ்சுக்க முடியாது
தவறா புரிஞ்சா
மனசுக்கே குழப்பம் வரும்
அதனால தான்
யோகினி ஹ்ருதயம்
அமைதியா…
ஆழமா…
மறைமுகமா…
பயணிக்குது.
மந்திரத்தை சொல்றவன் பலர்…
மந்திரமாகவே “ஆகிறவன்” சிலர்.
அந்த “ஆகிற” பாதையைத்தான்
யோகினி ஹ்ருதய ஞானம்
வெளியில் சொல்லாமல்....
இதயத்துக்குள் சொல்லுது

No comments:
Post a Comment