காலபுருஷ தத்துவத்தில்
தைப்பூசம் நாளில் இந்த இரண்டும் நேருக்கு நேர் நிற்கும் காலம்.
இதுவே தைப்பூசத்தின் அடிப்படை ரகசியம்.
சந்திரன் கடகத்தில் சுயபலத்துடன் இருக்கிறான்.
இது மனசு, உணர்ச்சி, தாய், குடும்பம், நினைவுகள்
எல்லாவற்றையும் கிளறி விடும்.
மனதில் பழைய வலி
கடந்த கால சுமை
பயம், குழப்பம்
“என் வாழ்க்கை இப்படிதான் போய்கிட்டிருக்கே” என்ற எண்ணம்
இது பலவீனம் இல்லை.
மகரம் என்பது
கருமக்காரகன் சனி வீடு
10ம் இடம் = தொழில், கடமை, பொறுப்பு, உலக வாழ்க்கை
சூரியன் இங்கே இருக்கிறான்.
“உனக்கு கடமை இருக்கு”
“உனக்கு பொறுப்பு இருக்கு”
“உன் வாழ்க்கை ஓடணும்”
“நீ ஓடாம நின்னா வாழ்க்கை நின்னுடும்”
மனசு ஒரு பக்கம் சோர்வாக இருக்கும்
ஆனால் வாழ்க்கை மறுபக்கம்
“எழு… வேலைக்கு போ… கடமையை பார்”
என்று அழுத்தும்.
இதுதான் சந்திரன் vs சூரியன்.
இந்த இரண்டுக்கும் நடுவில் இருப்பவன்
நீ நினைப்பதெல்லாம் நடக்காது
நீ உழைத்ததுதான் கிடைக்கும்
நீ தவிர்த்த கர்மம் திரும்ப வரும்
சனி மகரத்தில் சூரியனை கட்டுப்படுத்துகிறான்.
கடகத்தில் சந்திரனை அழுத்துகிறான்.
முருகன் =
ஞானம் + தைரியம் + செயல்
“உனக்கு பிரச்சினை இல்ல”
முருகன் சொல்கிறார்:
“பிரச்சினையை எதிர்த்து நில்”
சந்திரன் கொடுத்த மன வேதனைக்கும்
சூரியன் கொடுத்த கர்ம அழுத்தத்துக்கும்
நடுவில்
முருகன் தான் பாலம்.
மனசு உடையுது
வாழ்க்கை விடல
கடமை துரத்துது
உடம்பு சோருது
ஆனா நிறுத்த முடியல
அதனால்தான்
காவடி
விரதம்
கால்நடை
வலி
கண்ணீர்
முருகன் பார்த்து
“ முருகா முருகா முருகா”
என்று சொல்லும்போது
சந்திரன் கடகத்தில் → மனம் உருகும்
சூரியன் மகரத்தில் → வாழ்க்கை கட்டாயப்படுத்தும்
சனி நடுவில் → கர்மம் கணக்கு பார்க்கும்
முருகன் → “நீ விழுந்தாலும் எழுந்து நட” என்பார்
முருகன் வலியை நீக்க மாட்டார்
முருகன் கர்மத்தை மாற்ற மாட்டார்
அதனால்தான்
தைப்பூசம் =
மனசு உடையும் நாள் அல்ல
மனசு உறுதியாகும் நாள்.

No comments:
Post a Comment