Tuesday, 3 February 2026

#இறைமொழி_எது ?? (சர்ச்சைகள் கடந்த எதார்த்த பார்வை )


 #இறைமொழி_எது ?? (சர்ச்சைகள் கடந்த எதார்த்த பார்வை )

இந்த பிரபஞ்சமே மொழியும் மொழியே இறை மொழி !!
அப்படி என்ன மொழியில் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது ..
#மௌனம் எல்லாமே மௌனத்தை மையமாக கொண்டே இருக்கிறது இயங்குகிறது ..
மௌனமே இறைவன் மொழி ..
ஒவ்வொரு உயிரினமும் தன் உணர்வு, தேவை, கருத்து போன்றவற்றை தன் சகா உயிரினத்துக்கு புரிவிக்கவே மொழி என்ற ஒன்று வெளிப்பட்டது ..
அதிலும் எந்த சூழல் எந்த இடம் என்ன பழக்கவழக்கம் போன்றவற்றை பொறுத்தும், அவர்களால் முடிந்த ஒலியலைகளை எழுப்பவும் இந்த மொழி வேறுபடுகிறது ..
அதேபோல எழுத்தும் ..
இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து போனால்
மொழியும் மொழி எங்கு தொடங்குகிறது, எதை பிரதானமாக கொண்டு வெளிப்படுகிறது, அந்த மொழியை மொழியும்போது என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று பார்த்தால் அத்தனையும் மௌனத்தையே பிரதானப்படுத்தும் ...
உதாரணமாக
பேசுவதற்க்கு முன்னே நம் #மௌனத்தில் தான் இருப்போம் ..
நம் பேசுவதும் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே #மௌனம் என்று ஒன்று இடம்பெற்று இருப்பதால் தான் பேசுவது கூட புரிகிறது ..
கேட்பவரும் #மௌனத்தை மையமாக கொண்டே பேசுவது வெளிப்படுகிறது .
எல்லாம் பேசி முடித்தபின் #மௌனத்தில் தானே நிலைகொள்கிறது ..
இப்போது இறைவன் மொழி என்பது மொழியற்ற மௌனத்தையே பிரதானமாக கொண்டது
எல்லா ஜீவராசிகளும் மௌனம் என்பது ஓர் பொதுவான மொழிதான் ..
இங்கே நாமே உணர்வுகளை உள்ளிருத்தி சிந்திக்கும் போதுதானே நமக்குள் பற்பல தெளிவுகள் பிறக்கிறது ..
மௌனம் என்ற நிலையில் சிந்தனை என்ற எண்ணமே பிரபஞ்சத்தை நோக்கி பிரதிபலிக்கிறது, அதுவே எண்ணம் போலவும் அருளவும் படுகிறது ..
இறைவனை பற்றி அறிய ? சொல்ல ? பேச ? மொழியென்ற ஒன்று நம் சகா இனத்துக்கு தேவைப்படுகிறது அவ்வளவே ..
அந்த மொழியின் வழியே உணர்வானது கிளம்பி நம்மை மௌனமான ஆனந்த நிலையில் நிலைகொள்ள வைக்கிறது ..
இதுதான் இறைவன் மொழி என்று வாதிடுவது கூட படைப்புகளை முன்னிறுத்தியே வெளிப்படுகிறது ..
நம் புராணங்களில் கூட, எலி, சிலந்தி, யானை, எறும்பு போன்ற எண்ணற்ற உயிரினங்கள் இறைவனிடம் முக்தி பேறு பெற்றது என்று சொல்கிறோம் ..
அவையெல்லாம் எந்த மொழியில் இறைவனை தொடர்பு கொண்டது ..
இறைவன் எங்கும் நிறைந்தவன் எதிலும் அவன் மொழியே வெளிப்படுகிறது, அப்படி பிரபஞ்ச பொதுவான மொழி என்றால் அது மௌனமே ..
இப்போது இந்த பதிவு கூட மௌனத்தை மையமாக கொண்டு வெளிப்பட்ட சிந்தனைக்கு அறிவிக்கப்பட்ட மொழியையே சொல் எடுத்து வெளிப்படுகிறது ..
இதை வாசிக்கும் நீங்களும் மௌனத்தில் இருந்து தானே இதை அனுபவிக்கிறீர்கள் ..
மொழி சிறந்து தான், அவரவர்க்கு அவரவர் மொழி சிறந்து தான், அது அவர்களுக்குள்ளே புரிதலை ஏற்படுத்த ..
இறைவன் பொதுவானவன், அவனின்றி இங்கு ஏதும் மொழியை முடியாது,
அவன் நம்மை வைத்திருக்கும் மொழியே, அவன் மொழி,
அம்மொழியே இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனால் மொழிகிற மொழி ..
ஏதோ தோற்றுவித்தவன் திருவருளால் ..
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...