Sunday, 1 February 2026

*இனிய_தைப்பூச_திருநாள்__நல்_வாழ்த்துக்கள்*


*இனிய_தைப்பூச_திருநாள்__நல்_வாழ்த்துக்கள்*
*தைப்பூசம் என்றால் என்ன..?*
*பழனிப் பாதயாத்திரை*
*மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு*
*வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்*
*திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள் இப்படி பல விழாக்கள்*
*என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு..?*
*1.முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்*
*2.அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகையில் கார்த்திகை*
*3.அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்*
*4.அசுரரை அழித்தாட்கொண்ட நாள் - ஐப்பசியில் சஷ்டி*
*5.வள்ளியைத்* *திருமணம் புரிந்த நாள்* *பங்குனி உத்திரம்6*
*இப்படி அன்னையிடம் வேல் வாங்கி முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே இந்த "தைப்பூசம்*
*தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது* *தைப்பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய* *அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது* *என்றாலும்*
*அதாவது*
*எல்லா சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது*
*பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா*
*இது என்பது பலர் அறியாத செய்தி*
*தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிகவிரைவாக வீட்டைச் சுத்தம் செய்து இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன் தைப்பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம்*
*பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும்* *பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன*
*இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு* *பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும்*
*பெருங் கோயில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் இவைகள் என்பது குறிப்பிடத் தகுந்தது*
*மேற்குறித்த இரண்டு செய்திகளாலும் தைப் பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும் அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என் பதனையும் உணர்ந்துகொள்ளலாம்*
*தைப்பொங்கலைத் தொடுத்து வரும் மற்றொரு இயற்கைத் திருவிழா சிறுவீட்டுப் பொங்கலாகும்*
*மார்கழி மாதம் முப்பது நாளும் வைகறைப்பொழுது வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு, சாண உருண்டைகளில் பூச்செருகி வைக்கும் பழக்கம் தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது*
*எல்லா வீடுகளிலும் இது செய்யப்படுவதில்லை*
*பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளிலேயே வாசலில் பூ வைக்கும் வழக்கம்* *காணப்படுகிறது*
*பீர்க்கு, பூசணி, செம்பருத்தி, எக்காளம் ஆகியவையே பெரும்பாலும் வைக்கப்படும் பூக்களாகும்*
*காலையில் வைக்கும் இந்தப் பூக்களை வெய்யில் விரிந்தவுடன் சாண உருண்டைகளிலேயே சேர்த்து எருவாக்கி, காயவைத்து விடுவார்கள்*
*பூ வைக்கும் வீடுகளில் (பொங்கல் கழிந்து 8 இலிருந்து 15 நாள்களுக்குள் வரும்) தைப்பூசத்திற்குள் இதற்கொரு தனிப் பொங்கல் வைக்கவேண்டும்*
*பெண்பிள்ளைகளுக்காகவே பூ வைப்பதால் அவர்களுக்கென வீட்டுக்குள் அல்லது வீட்டு முற்றத்திற்குள் களிமண்ணால் சிறுவீடு கட்டுவர்*
*சிறுவீடு அதிக அளவு ஐந்தடிக்கு ஐந்தடி* *அளவில் இருக்கும்*
*சிறு வீட்டுப் பொங்கல் நிகழ்ச்சி தலை வாசலில் நடைபெறாமல்* *சிறுவீட்டின் வாசலிலேயே நடைபெறும்* *பொங்கலிட்டுத் திருவிளக்குப் படையலும் முடிந்தவுடன் பொங்கலையும்,பூக்களாலான* *எருத்தட்டுக்களையும் நீர்நிலைகளுக்குப் பெண் பிள்ளைகள் எடுத்துச்சென்று நீரில் விடுவார்கள*
*எருத்தட்டின் மீது வெற்றிலையில் சூடமேற்றி நீரில் விடுவதும் உண்டு*
*ஆண்டாளின் திருப்பாவை காட்டும் மார்கழி நீராடலை நாம் அறிவோம்*
*ஆனால் சங்க இலக்கியங்களில் தைந்நீராடல் குறிக்கப்படுகிறது*
*தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி* *வையை நதி*
*என்பது பரிபாடல்*
*தைந்நீராடல் பற்றி*
*அறிஞர் மு.* *இராகவையங்கார் ஒரு நெடுங்கட்டுரை எழுதியுள்ளார்*
*ஆனால் அவர் மார்கழி மாதம் வாசலில் பூ வைக்கும் சடங்கையும் பொங்கலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை*
*ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை நோன்பு மார்கழித் திங்கள் முதலாம் நாள் தொடங்கவில்லை, மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளிலேயே தொடங்குகிறது*
*எனவே அது தைத்திங்கள் மதி நிறைந்த நன்னாளில் (தைப்பூசத்தில்) நிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்நாளில்*
*பாற்சோறு மூட நெய்பெய்து*
*(பாற் பொங்கலிட்டு) உண்டு சுவைத்திருக்க வேண்டும்*
*மார்கழி நீராட்டுப் போலவே தைந்நீராட்டும் பெண் பிள்ளைகளுக்கு உரியதாகவே சொல்லப் பெறுகிறது*
*எனவே மார்கழி நிறைமதி நாள் தொடங்கித் தை மாத நிறைமதி நாள் வரை பெண் பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தையே தமிழ் வைணவம் தனதாக்கிக் கொண்டு மார்கழி நீராட்டாக மாற்றியிருக்கிறது*
*தை மாதம் காமனை (காதற்கடவுள்) நோக்கிச் செய்யப் பெற்ற மற்றொரு* *நோன்பினையும் ஆண்டாள் திருமொழி குறிக்கிறது*
*அது 'மாசி முன்னாளில்' கொண்டாடப்பெற்ற வேறொரு* *திருவிழாவாகும்*
*சங்க நூல்களில் அதற்குச் சான்றுகள் இல்லை*
*திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி போன்றவை பக்தி இயக்கத்துக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த திருவிழாக்கள் ஆகும் அவற்றைச் சைவ வைணவப் பெருஞ்சமயங்கள் தம்வயமாக்கிக் கொண்டிருக்கின்றன அத்தகைய திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று*
*தமிழ் வைணவத்தைப் போலவே தமிழ்ச் சைவமும் தைப் பூசம் கொண்டாடியிருக்கிறது*
*நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்" என்று மயிலைப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் தைப்பூசத்தினைப் பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டாடும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்*
*தென் மாவட்டங்களில் தைப்பூசத் திருவிழா இன்றும் நீர்த் துறைகளிலே சிறப்பாகக் கொண்டாடப் பெறுவதும், ஆற்றங்கரைகளில் தைப்பூச மண்டபங்கள் கட்டப்பட்டிருப்பதும் தைப்பூசத் திருவிழாவின் செல்வாக்கினைக் குறிக்கும் சங்க கால தமிழர்களின் சான்றுகளாகும்*

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...