Monday, 2 February 2026

 தூக்கத்தைக் கொடுக்கும் தூக்க முத்திரை.....

வலது கை: ஆள்காட்டி விரல் மற்றும்
கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை: சுண்டு விரல் மற்றும் கட்டை
விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்: சரியாகத் தூங்கவில்லை






மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்க உதவும் ஆக்கினை முத்திரை.....
நாற்காலியிலோ விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும்.
*இதை, ஒருநாளைக்கு மூன்று முறை என ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பலன்கள்: ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். இரண்டு பக்க மூளைக்கும் உள்ள
சக்தி ஓட்டம், பரிமாற்றம் சீராகிறது. குழந்தைகள் படிப்பில் மட்டும் அல்லாது விளையாட்டு போன்ற பல திறன்களிலும் ஜொலிப்பார்கள். அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை. கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன...

எனில், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம். உணவு உண்டு, அரை மணி நேரம் கழித்து, படுத்த பிறகு இந்த முத்திரையைச் செய்யலாம். இந்த முத்திரையைச் செய்துகொண்டு இருக்கும்போதே தூக்கம் வந்துவிடும். நடு இரவில் எழுந்தாலோ, தூக்கமின்மையால் அவதிப்பட்டாளோ, இந்த முத்திரையைச் செய்யலாம்....







உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் கருட முத்திரை......
நிமிர்ந்து அமர்ந்த நிலையில், கைகளை அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, உள்ளங்கை உடல் நோக்கியபடி, இடது கை மீது வலது கையை வைத்து, கட்டைவிரல்களைக் கோக்க வேண்டும். பார்க்க சிறகுகள் விரித்ததுபோல இருக்கும். இப்போது, விரல்களைச் சிறகு போல விரித்து அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். பிறகு, 20 விநாடிகள் அமைதியாக இருக்கவும். பிறகு, தொப்புள் பகுதி, மேல் வயிறு, மார்புக்கூட்டுக்கு நடுவில் என ஒவ்வொரு பகுதிக்கும், நேராக கைகளை வைத்து இதேபோல் செய்ய வேண்டும்.
*முத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை என 5 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: *சிறுநீரகம், வயிறு, நுரையீரல், இதயம், கழிவுநீக்க மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம் பலப்படும். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்று வலி, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆகிய பிரச்னைகளின் வீரியம் குறையும். குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
கவனிக்க:
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கவும்...









ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும் உஜாஸ் முத்திரை.....
கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும்.
*தினமும் காலை, மாலை இரு வேளையும் 5-15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: *கர்ப்பப்பை,
சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும். அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும். ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. மனஅமைதி, மகிழ்ச்சி, புதிய உத்திகள், புதியன உருவாக்கும் திறமை, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படச் செய்கிறது. காலையில் தூங்கி எழுந்ததும் சோம்பலாய் உணர்பவர்கள் இந்த முத்திரையைச் செய்திட, உற்சாகமும் தெளிவும் கிடைக்கும். தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பயஉணர்வு (Hydrophobia) நீங்கும்

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...