Wednesday, 11 February 2026

பிரம்மஹத்தி_தோஷம்

 #பிரம்மஹத்தி_தோஷம்

ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம் என்பது கொடுமையான பாவங்களை செய்வதால் ஏற்படுகிறது. தாய் தந்தைக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது. பசுவைக் கொல்வது குருவை உதாசீனப் படுத்துவது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது. அடுத்தவர் மனைவி அல்லது கணவரை மீது ஆசைப்பட்டு அடுத்தவர் குடும்பத்தை சீரழிப்பது. தெய்வ சொத்தை திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது..
இந்த தோஷம் இருந்தால் ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல் வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து வாழ்வார்கள். வேலை கிடைக்காது அப்படி வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஒர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சில வேலைகளில் அவர்களின் குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது.
நல்ல படிப்பு இருக்காது. நல்ல படிப்பு இருந்தும் நல்ல வேலை கிடைக்காது. நல்ல வேலை கிடைத்தாலும் திருமண சரியான காலத்தில் நடக்காது. திருமணம் சரியான காலத்தில் நடந்தாலும் சரியான வாழ்க்கை துணை அமையாது திருமண வாழ்கை நரகமாக இருக்கும். நல்ல வாழ்க்கை துணை அமைந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாக ஏற்படும். இதுபோன்ற ஏதாவது ஒரு வழியில் உங்களை கஷ்ட படுத்தும்.
லக்னத்துக்கு 4ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து 6, 8, 12. ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும் 5, 9 ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
ராகு இருக்கும் ராசியில் இருந்து5, 9 ம் வீட்டில் சனி குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருந்தால் தோஷமாகும்..
1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும்.
2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்
3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.
4. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.
5. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு,
6. கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும்.
7. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள். ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...