கதவை தட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் தட்டிவிடுங்கள். கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகள் உங்களை அறியாமலே நீங்கள் இழந்திருக்கலாம்.
தோல்வி நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் எதுவும் சாத்தியம் இல்லை, நம்மால் முடியாது என்று எண்ணி ஆரம்பத்திலேயே ஒதுக்கி விடாதீர்கள். ஏனென்றால், இந்த உலகில் சாத்தியம் இல்லாதது எதுவுமே இல்லை என்று நம்பி, தொடர்ந்து முயற்சி செய்கின்றவர்கள் தான், பல்வேறு கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் செய்து, இறுதியில் தங்கள் வாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளனர்.
நம்பிக்கையும், முயற்சியும் திருவினை ஆக்கும் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள். செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம், என்று செய்வதை தெளிவுடன் செய்வதே சிறந்தது.
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பக்குவமும் தான் வெற்றிக்கான வழி.
மனதை அமைதியாக்கி கண்ணை மூடி உங்கள் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். இங்கு யாருக்கும் யாரும் யாதும் நிரந்தரம் இல்லை.
ஒரு நாள் எல்லாமே வெற்றிடம் தான். அப்படி இருக்கையில் ஏன் நீங்கள் இதற்கு போய் உங்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள்.
ஏன் எந்நேரமும் அது கிடைக்க வில்லையே, இது நடக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எது வேண்டுமோ எந்த லட்சியத்தை அடைய நினைக்கிறீர்களோ அதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
ஒரு நாள் கண்டிப்பாக அது உங்களை வந்து சேரும். அதுவரை எதற்கும் மனதில் கஷ்டபட்டுக்குக் கொண்டு இருக்கிறீர்கள்.
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். உங்களது எண்ணங்களை ஒரு நிலை படுத்தி நம்பிக்கையோடு உங்கள் கடமைகளை செய்யுங்கள்.
நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை.
நீங்கள் உங்களுடைய ஆற்றலையும், திறமையும் வளர்த்துக் கொண்டால், இந்த உலகம் நிச்சயம் உங்களைத் தேடி வரும்

No comments:
Post a Comment