16) நாசயோகம் தரும் கிழமைகளுடன் கூடிய திதிகள், நட்சத்திரங்கள்
என்றுநீ டிருளைச்சீறு மிந்துவுக்காறு வெள்ளிக்
கொன்றிய நவமி மேதைக் கிரண்டொளி யவர்க்கு நாலு
பொன்றனக் கெட்டுநீலன் பூமனுக்கேழு பொல்லாக்
கன்றிடு நாசயோக மென்றறி கதிர்வேற் கண்ணாய்
ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய
சதுர்த்தி
திங்கள் கிழமையுடன் கூடிய
சஷ்டி
செவ்வாய்க் கிழமையுடன் கூடிய
சப்தமி
புதன் கிழமையுடன் கூடிய
துவிதியை
வியாழக்கிழமையுடன் கூடிய
அஷ்டமி
வெள்ளிக்கிழமையுடன் கூடிய
நவமி
சனிக்கிழமையுடன் கூடிய
சப்தமி
மேற்கண்டவாறு கிழமைகளும், திதிகளும் கூடி வர பொல்லாத நாசயோகத்தை தரும். இந்த நாட்களை முகூர்த்தத்துக்கு தவிர்க்கவேண்டும்.
கதிரவற் கைந்தோடாரல் கணக்கற்கேழ் பரணி காரி
எதிருறு மெட்டுதோணி யெரிக்குமன் னுவாவு ரோணி
புதிய பொன்றனக்குப் பன்மூன்றனுடமாம் புகற்காரோணம்
மதியவற் இரண்டாம் பக்கஞ் சித்திரை மருவில் நாசம்
ஞாயிற்றுக்கிழமையுடன் + பஞ்சமி + கார்த்திகை
திங்கள் கிழமையுடன் + துவிதியை + சித்திரை
செவ்வாய்க் கிழமையுடன் + பெளர்ணமி + ரோகிணி
புதன் கிழமையுடன் + சப்தமி + பரணி
வியாழக்கிழமையுடன் + திரயோதசி + அனுசம்
வெள்ளிக்கிழமையுடன் + சஷ்டி + திருவோணம்
சனிக்கிழமையுடன் + அஷ்டமி + ரேவதி
மேற்கண்டவாறு கிழமைகளுடன் திதிகளும், நட்சத்திரங்களும் கூடி வர நாசயோகத்தை தரும். இந்த நாட்களை முகூர்த்தத்திற்கு தவிர்க்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமையுடன் + பஞ்சமி + அஸ்தம்
திங்கள் கிழமையுடன் + சஷ்டி + திருவோணம்
செவ்வாய்க் கிழமையுடன் + சப்தமி + அசுவினி
புதன் கிழமையுடன் + அஷ்டமி + அனுசம்
வியாழக்கிழமையுடன் + திருதியை + பூசம்
வெள்ளிக்கிழமையுடன் + நவமி + ரேவதி
சனிக்கிழமையுடன் +ஏகாதசி + ரோகிணி
என கிழமைகளுடன் திதிகளும், நட்சத்திரங்களும் கூடிவர இந்நாட்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. மேற்கண்ட திதி, வார நட்சத்திரம் கூடிய தோஷங்கள் முகூர்த்த லக்னத்தில் பலமான சுக்ரனோ, குருவோ நின்றாலும் பார்த்தாலும் நீங்கும்.
17] இயம கண்ட யோகம்
நூல்கதிர் மகமும் பூரம் நுண்மதி பூசம் பாம்பு
ஆலங்கி யனுஷமாரால் அரிஞன் மான்றலையு மத்தம்
நூலவன் தோணி மூலம் நுண்வெள்ளி சகடு சோதி
கால்சனி வோணமவிட்ட மிமகண்டங் கணித்தார் மேலோர்
ஞாயிற்றுக்கிழமையில் அமையும்
மகம், பூரம் நட்சத்திரங்கள்
திங்கள் கிழமைகளில் அமையும்
பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள்
செவ்வாய்க் கிழமைகளில் அமையும்
அனுசம், கார்த்திகை நட்சத்திரங்கள்
புதன் கிழமைகளில் அமையும்
மிருகசீரிடம், அஸ்தம் நட்சத்திரங்கள்
வியாழக்கிழமைகளில் அமையும்
ரேவதி, மூலம் நட்சத்திரங்கள்
வெள்ளிக்கிழமைகளில் அமையும்
ரோகிணி, சுவாதி நட்சத்திரங்கள்
சனிக்கிழமைகளில் அமையும்
திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்கள்
இயம கண்ட தோஷத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நாட்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
18] உற்பாத தோஷ நாட்கள்
ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய
விசாக நட்சத்திரம்
திங்கள் கிழமையுடன் கூடிய
பூராட நட்சத்திரம்
செவ்வாய்க் கிழமையுடன் கூடிய
கேட்டை நட்சத்திரம்
புதன் கிழமையுடன் கூடிய
ரேவதி நட்சத்திரம்
வியாழக்கிழமையுடன் கூடிய
ரோகிணி நட்சத்திரம்
வெள்ளிக்கிழமையுடன் கூடிய
பூச நட்சத்திரம்
சனிக்கிழமையுடன் கூடிய
உத்திரம் நட்சத்திரம்
ஆகிய நாட்கள் உற்பாத தோஷம் உள்ள நாட்களாகும். இன்று செய்யப்படும் காரியங்களில் இயற்கையாகவே ஏதேனும் தடங்கல்கள் ஏற்படக் கூடும். இந்த நாட்களில் முகூர்த்தத்தை தவிர்க்க வேண்டும்
No comments:
Post a Comment