சிவபெருமானின் மூன்றாவது கண்.. ஞானத்தை உணரும் கண்.. நெற்றிக்கண்ணின் சிறப்பு..!
#சைவ_சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்றாகும். இதன் காரணமாக இவர் முக்கண்ணன் என்றும், நெற்றிக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
#இதில்_இரண்டு கண்கள் உலகை காணவும், மூன்றாவது கண் ஞானத்தை உணரவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது. இந்த மூன்றாவது கண் தான் சிவபெருமானின் நெற்றிக்கண் எனப்படுகிறது.

#நெற்றிக்கண் என்பது வெறும் ஒரு உறுப்பு அல்ல, மாறாக அது ஞானத்தின் உறைவிடமாக கருதப்படுகிறது.
#சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறக்கும் போது அண்ட சராசரம் முழுவதும் ஒளிரும் என்றும், அவரது ஞான ஒளி அனைத்தையும் நிரப்பும் என்றும் சைவ சாஸ்திரங்கள் கூறுகின்றன.
#சிவபெருமான் மிகவும் கோபமடைந்தால் தனது நெற்றிக்கண்ணைத் திறப்பார் என்றும், அப்போது அங்கிருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டு அனைத்தையும் சாம்பலாக்கும் என்றும் நம்பப்படுகிறது.


#நெற்றிக்கண் மூலம் சிவபெருமான் கடந்த காலம், இன்றைய காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
#சிவபெருமானின் நெற்றிக்கண் அழிவுக்கும் ஆக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. அவர் தனது கோபத்தால் அழிவை ஏற்படுத்தினாலும், தனது ஞானத்தால் உலகைப் படைக்கவும் செய்கிறார்.
#சிவபெருமானின் நெற்றிக்கண் என்பது ஞானம், கோபம், அழிவு, ஆக்கம் போன்ற பல அம்சங்களை குறிக்கிறது.
#அழிக்க_உதவும் இந்த மூன்றாவது கண்ணை மனதில் வைத்து தான் பலரும் இவரை அழிக்கும் கடவுள் என்று கூறுகின்றனர். இவரின் நெற்றிக்கண் ஞானக் கண் என்றும் சில நேரம் குறிப்பிடப்படுகிறது.
#இவருடைய நெற்றிக்கண் மூலமாக தோற்ற நிலைக்கு அப்பாற்பட்டவைகளையும் பார்த்து, தீய சக்தியை அழிப்பார் என்று நம்பப்படுகிறது.


#நெற்றிக்கண் வரலாறு:

#சதி_தேவியின் இறப்புக்கு பின், அவரின் மறைவை எண்ணி இவர் மீளா துயரத்தில் மூழ்கினார். அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட, இவரின் தவத்தில் இருந்து இவரை எழுப்ப முடியவில்லை. அப்போது, இவரின் தவத்தை களைக்க, காதல் கடவுளான காமாதேவி அனுப்பி வைக்கப்பட்டார்.
#காமாதேவி இவரை அம்பு மூலமாக தாக்கிய போது, இவர் தன் நெற்றிக்கண்ணை திறந்து, காமாவை எரித்து சாம்பலாக்கினார்.


#சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் பற்றி இரண்டு கதைகள் நிலவுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருத்தை வலியுறுத்துகின்றன.
ஒருமுறை, பார்வதி தேவி

விளையாட்டாக சிவபெருமானின்


கண்களை மூடினார். இதனால் உலகம் முழுவதும்

இருளில் மூழ்கியது. சிவபெருமான், உலகை இருளில் இருந்து காப்பாற்றுவதற்காக

தனது உடலில் இருந்து அக்னியை வெளிப்படுத்தி நெற்றிக்கண்ணை உருவாக்கினார். இந்த நெற்றிக்கண்

உலகிற்கு ஒளியை வழங்கியது.

#சிவபெருமானின் நெற்றிக்கண்

அவசர காலத்தையும், தீமைகளின் அழிவு காலத்தையும் குறிக்கிறது. அவரது ஒரு கண்

சூரியனாகவும், மற்றொரு கண்

சந்திரனாகவும் கருதப்படுகிறது.

இந்த கதை, பார்வதியின் லீலையின் ஒரு பகுதியாக சிவபெருமானின் நெற்றிக்கண் திறக்கப்பட்டதை விளக்குகிறது.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணின்

வெப்பத்தால் பார்வதி தேவியின் கைகள்

வியர்த்தன. அந்த வியர்வை துளி மண்ணில் விழுந்தபோது, அது ஒரு குழந்தையாக

உருமாறியது. அந்தகா என்று அழைக்கப்பட்ட அந்த குழந்தையை, சிவபெருமானை வழிபட்டு வந்த குழந்தையில்லா அசுரனுக்கு

தத்து கொடுத்தனர்.
#தனது_பிறப்பைப் பற்றிய உண்மை தெரியாமல் வளர்ந்த அந்தகா, தனது தாயின் மீது

காமவெறி கொண்டான். சிவபெருமானிடம் இருந்து ஒரு வரம்

பெற்றிருந்ததால், அவன் சிவபெருமானாலேயே

கொல்லப்பட்டான்.
#இந்த_கதை, உலகத்தில் நிலவும் அனைத்து விதமான ஆசைகளையும் நிராகரிக்கும் நெற்றிக்கண்ணின் இருட்டுப் பக்கத்தை வெளிக்காட்டுகிறது.
#மனித இனம் வாழ்வதற்கு ஆசைகள் எவ்வளவு முக்கியம் என்பதையும், ஆசைகள் இல்லாமல் போனால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதையும் உணர்த்துகிறது.
#முதலாவது கதை

பார்வதியின் விளையாட்டின் மூலம் நெற்றிக்கண் திறக்கப்பட்டது, சிவசக்தியின் தத்துவத்தை விளக்குகிறது.
#இரண்டாவது கதை

ஆசைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
ஓம் நமசிவாய நம ஓம்

No comments:
Post a Comment