Tuesday, 23 May 2017

மாரக தசை தரும் துன்பம் -

                                  மாரக தசை தரும் துன்பம் - 


எந்த ஒரு ஜாதகருக்கும் கீழ்க்கண்ட தசை நடப்பின் மரணம் அல்லது அதற்க்கு சமமான துன்பம் தரும்:
விதி 1 அனைவருக்கும் பொது:
--------------------
3வது தசை நீச தசை
4வது தசை சனி தசை
5வது தசை செவ்வாய் தசை
6வது தசை குரு தசை
7வது தசை ராகு தசை
விதி 2 அனைவருக்கும் சிறப்பு :
--------------------
சர லக்னம் - 2, 7 ம் அதிபதியின் தசை
ஸ்திர லக்னம் - 3, 8 ம் அதிபதியின் தசை
உபய லக்னம் - 7, 9 ம் அதிபதியின் தசை
மேற்குறிப்பிட்ட விதி 1(பொது), விதி 2(சிறப்பு) இவற்றில் ஏதாவது ஒன்றில் நிச்சயமாக ஜாதகர் சரிவையும், வேதனையும், அவமானம், தோல்வி, இழப்பு, விபத்து ஆகிய ஒன்றையாவது சந்தித்தே தீருவார்.
உதாரணம்: முன்னாள் முதல்வர் ஜெ. அம்மா(உபய லக்னம், மகம் நட்சத்திரம்) அவர்களின் வாழ்கையில் நடந்த 2 பெரும் துன்பமே சாட்சி.
1). 25 March 1989 அன்று தமிழக சட்டசபையில் நடந்த மானபங்கம் அன்று அவருக்கு 5வது தசை செவ்வாய்(பொது)
2). 27 September 2014 அன்று சிறைவைப்பு அன்று அவருக்கு 7வது தசை குரு(சிறப்பு).
தீர்வு:
குரு லிங்க சங்கம வழிபாடு, குல தெய்வ வழிபாடு, சத் குரு துணை, பெற்ற தாய் தந்தை க்கு அனுதினம் பாத பூஜை, சாஸ்திர வழி நடத்தல், ஏழை எளியோர் க்கு அதரவு அளித்தல் - இவற்றில் ஏதாவது ஒன்றையாவது வைராக்கியத்துடன் செயல்படுத்தினால் துன்பத்தின் வலிமை குறையும்.


No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...