Monday, 15 May 2017

ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


ஆதிரை பரணி கார்த்திகை
   ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
   சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
   வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
   பாம்பின் வாய்த் தேரைதானே!


பாடலுக்கான விளக்கம்:
1 திருவாதிரை, 2பரணி, 3கார்த்திகை, 4ஆயில்யம்,5{ பூரம்,6 பூராடம், 7பூரட்டாதி,} 8கேட்டை, 9விசாகம்,10 சுவாதி11 சித்திரை, ,12 மகம் 


ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!



No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...