"இக்கரைக்கு அக்கரைப் பச்சை
"இக்கரைக்கு அக்கரைப் பச்சை" னு ஒரு சொலவடை இருக்கு இல்லே. அது எவ்வளவு அர்த்தம் வாய்ந்த ஒரு விஷயம் தெரியுமா?
நம்ம ஊருல, நம்ம குடும்பத்திலே இருக்கிற வரைக்கும், நமக்கு ஒன்னும் தெரியிறது இல்லே. ஆனால், குடும்பத்தை விட்டு பிரிஞ்சு , வேற ஊரு, வேற மாநிலம், நாடுனு , உத்தியோக நிமித்தம் போய் இருக்கிறப்போ.. அவ்வளவு "பீலிங்" இருக்கும்.
இன்னைக்கு வெளி நாட்டிலே , ஓரளவுக்கு நல்ல வேலையில் இருக்கிறவங்களுக்கு குடும்பத்தை கூட கூட்டிட்டு போய் " செட்டில் " ஆக முடியுது. ஆனால், லட்சக் கணக்கிலே , கோடி கணக்கிலே - எத்தனையோ பேர், குடும்பத்தைப் பிரிஞ்சு, தனியே வேலை பார்க்கிறப்போ , பாசத்துக்கு அவங்க தவிக்கிற தவிப்பு , ரொம்பவே அதிகம்.
ராணுவத்திலே வேலை பார்க்கிறவங்க, வளைகுடா நாடுகள்லே வேலை பார்க்கிறவங்க , ஐரோப்பா , அமெரிக்கா னு வேலை லே இருக்கிறவங்க.. லீவுலே வீட்டுக்கு வந்துட்டு , திரும்ப வேலைக்கு போறப்போ ... கண்ணுலே குளமாகாமே யார் போக முடியுது..?
அப்படி லீவுக்கு வந்தவங்க கிட்டே, மன சாட்சியே இல்லாமே , , நமக்கு என்ன வாங்கி வந்து இருக்கீங்க னு பார்க்கிறாங்க.. சரி, அது பரவா இல்லை.. வந்த நாலாவது நாள்லேயே எப்போ திரும்ப போறீங்க னு மாமன், மச்சான் கேட்கிறப்போ.. எவ்வளவு மனசு கஷ்டப்படும் ?
சரி, இப்போ நான் சொல்ல வந்த விஷயத்தை
சொல்லிடுறேன் . இந்த மாதிரி வெளி நாட்டிலே இருக்கிறப்போ , ஒவ்வொருவருக்கும்
, நெறைய விஷயங்களை மிஸ் பண்ணுற பீலிங் இருக்கும். உதாரணத்துக்கு , நம்ம
தமிழ் மொழி, சாப்பாடு, நம்ம ஊரு கோவில்கள், சாமி ஊர்வலம், தமிழ் டி.வி.
சேனல்கள்.. இப்படி நிறைய.. ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் இங்கே எல்லாம்
ஓரளவுக்கு , நம்ம ஊர் அமைப்பு வந்துடுது. ஆனா, ஐரோப்பா , அமெரிக்கா எல்லாம்
அவ்வளவா இல்லை.. ரொம்ப ஆச்சரியமா சில வெளிநாடுகள்ள , எவ்வளவு சிரத்தையா
சிவ ராத்திரி கொண்டாடுறாங்க பாருங்க..
கீழே சில அழைப்பிதழ்கள் , சில நல்ல தகவல்கள் .... உங்கள் பார்வைக்கு.
க்ளிக் பண்ணினா படங்கள் பெரியதாக தெரியும்.
நம்ம ஊர்லே இருக்கிறவங்கள்ள எத்தனை
பேர் சிவ ராத்திரிக்கு சிரத்தையா இறை வழிபாடு செய்யறோம்.. எல்லாமே ஈசியா
கிடைக்கிற வரைக்கும், அதோட அருமை தெரியிறது இல்லே. நம்ம ஊர்லே இருக்கிறப்போ
, நாமே முழுசா உபயோகப் படுத்திக்கலாமே..
அப்புறம் , இன்னொரு விஷயம்,... இன்னைக்கு பின்னூட்டம் பகுதியிலே, பெயர்
சொல்லாத ஒருத்தர் எழுதி இருந்தார்.. ஆரம்பமே அமர்க்களமா அசிங்க அசிங்கமா..
வார்த்தைகள்ல சொல்ல முடியாத அளவுக்கு ... நீ முதல்லே மாறு. ப்ரேயர்
பண்ணுறது ஈசி.. ஆனா மைண்டு சுத்தமா இருக்கணும். அது தான் முக்கியம்,.
நீங்க எல்லாமே பிராட் தான். இந்த மாதிரி நெறைய...
கொஞ்சம்
மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. இந்த மாதிரி நம்பிக்கை இல்லாதவங்க ஏன் ,
நம்ம சைட் க்கு வர்ராங்க னு தெரியலை. வந்தும் மெனக்கெட்டு இப்படி ஏன்
எழுதிட்டு போறாங்கணும் தெரியலை. என் மேல ஏன் இந்த துவேசம் னு புரியலை.
யாரையும், அறிவுறுத்தனும், மாத்தணும் கிறது என்னோட வேலை இல்லே. எனக்கு
தெரிஞ்சதை உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன்.. அவ்வளவுதான்.. உங்களுக்கு
தேவையானதை, எடுத்திக்கிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.. எனிவே,
ஆண்டவன் அருள் அவருக்கும் சேர்த்து கிடைக்கணும் னு வேண்டிக்குவோம்..
சிவ ராத்திரி , உங்களுக்கு கஷ்டங்களை
போக்கி, கஷ்டங்களை தாங்குற மனப் பக்குவத்தைக் கொடுக்கணும்.. இறை வழிபாடு
தொடருங்கள்.. நம் மனம் விரிவடையட்டும், அடுத்தவரின் துக்கங்களை துடைக்கும்
அளவுக்கு, உங்கள் வல்லமை பெருக ஆண்டவன் அருள் புரியட்டும்.. !!
No comments:
Post a Comment