Sunday, 28 May 2017

பல்சுவை

. பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் ?

நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டேஆரம்பிக்கிறோம். அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம்.

பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள " ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

 . இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் எவை ?

1 . சைவம் - சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
2 . வைணவம் - மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.
3 . சாக்தேயம் - ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.
4 . காணபத்தியம் - கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
5 . கௌமாரம் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

6 . சௌரம் - சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.


 மும் மூர்த்திகள் யார்?

பிரம்மா
 
விஷ்ணு
 

சிவன்

மும் மூர்த்திகள் செய்யும் தொழில்கள் என்ன?


பிரம்மா: படைத்தல்
 
விஷ்ணு: காத்தல்
 
சிவன்: அழித்தல்

: ஸ்ரீ ராமனின் திருப்பெயர்கள் எவை ?

ஸ்ரீ கோசல ராமன்
ஸ்ரீ தசரத ராமன்
ஸ்ரீ சந்தான ராமன்
ஸ்ரீ யக்ந ராமன்
ஸ்ரீ பவித்ர ராமன்
ஸ்ரீ கோதண்ட ராமன்
ஸ்ரீ கல்யாண ராமன்
ஸ்ரீ ஜானகி ராமன்
ஸ்ரீ உதாரகுண ராமன்
ஸ்ரீ கௌசல்ய ராமன்
ஸ்ரீ பிராதரு வத்சல ராமன்
ஸ்ரீ பராக்கிரம ராமன்
ஸ்ரீ சீதா ராமன்
ஸ்ரீ ஆனந்த ராமன்
ஸ்ரீ மோட்ச பல பிரத ராமன்
ஸ்ரீ தாரக நாம ராமன்
ஸ்ரீ ராமன்
ஸ்ரீ துக்க நாசக ராமன்
ஸ்ரீ ரகு ராமன்
ஸ்ரீ சரணாகத ராமன்

சிவன் தமது தாண்டவ நடனத்தை நடத்தும் ஐந்து சபைகள் எவை ?

இரத்தின சபை ( திருவாலங்காடு )
கனக சபை ( சிதம்பரம் )
வெள்ளி சபை ( மதுரை )
தாமிர சபை ( திருநெல்வேலி )
சித்திர சபை ( திருக் குற்றாலம் )

 பஞ்சபூதத் சிவத்தலங்கள் எவை ?

திருவண்ணாமலை ( நெருப்பு )
சிதம்பரம் ( ஆகாயம் )

காளஹஸ்தி ( காற்று )
திருவானைக்கா ( நீர் )

காஞ்சிபுரம் ( நிலம் )

 சமயகுரவர் நால்வர் யார் ?

அப்பர்,
சுந்தரர்,
திருஞான சம்பந்தர்,

மாணிக்கவாசகர்


: நவக்கிரகங்கள் எவை ?

சூரியன்,
செவ்வாய்
குரு
சனி
சந்திரன்
புதன்
சுக்கிரன்
ராகு

கேது

: அஷ்ட லக்ஷ்மிகளின் பெயர்கள் என்ன ?

தனலக்ஷ்மி
தைரிய லக்ஷ்மி
விஜய லக்ஷ்மி
வீர லக்ஷ்மி
தானிய லக்ஷ்மி
கஜலக்ஷ்மி
வித்யா லக்ஷ்மி

சந்தான லக்ஷ்மி

. எட்டுத்திசைகளுக்குரிய அதிபதிகள் ( அஷ்ட திக்குப் பாலகர்கள் ) யாவர் ?

இந்திரன்,
அக்கினி,
யமன்,
நிருத்தி,
வாரணன் ,
வாயு,
குபேரன்,

ஈசானன்

 நவரத்தினங்கள் எவை ?

வைரம்,
மரகதம்,
மாணிக்கம்,
முத்து,
நீலம்,
புஷ்பராகம்,
வைடூரியம் ,
பவளம் ,

கோமேதகம்

நான்கு வேதங்கள் எவை ?

ரிக் வேதம்,
யஜுர் வேதம்,
சாம வேதம்,

அதர்வண வேதம்

 முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் எவை ?

பழனி,
பழமுதிர்சோலை,
திருப்பரங்குன்றம்,
திருச்செந்தூர்,
சுவாமிமலை ,

திருத்தணி

பிரதோஷ காலத்தின் சிறப்பு என்ன ?




வளர்பிறையில் திரயோதசி அன்றும், தேய்பிறையில் திரயோதசி அன்றும் மாலை 4. 30 .மணி முதல், 6 . 00.மணி வரையுள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும். சிவபெருமான் தமது வாகனமான நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் நின்று திரு நடனம் செய்து, தேவர்களுக்குத் தரிசனம் தந்தருளிய சிறப்பான காலம் இது. ஆகவே, இது புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகின்றது. இப் புண்ணிய காலத்தில், சிவன் கோயில் சென்று சிவபெருமானை வணங்குவது மிகவும் சிறப்பான புண்ணியமாகும் .

அடுத்தவருக்கும் சொல்லுங்கள்

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...