Monday, 8 May 2017

வாஸ்து 2

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


                                                                            வாஸ்து 2



மனிதன் உயிர் வாழ அடிப்படை காரணங்களில் மிகவும் முக்கியமான ஒன்று நீர். பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தடையின்றி கிடைத்தால் தான் மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். காலையில் எழந்து காலை கடன் முடிப்பது முதல் இரவு மாத்திரை சாப்பிட்டு படுக்கும் வரை நீரின் முக்கியத்துவம் மனித வாழ்வில் இன்றியமையாததாகிறது. தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தால் நீர் நிலைகள் எல்லாம் இருப்பிடங்களால் மாறிக் கொண்டு இருப்பதால் நிலத்தடி நீரின் அளவானதும் குறைந்து கொண்டே வருகிறது. நல்ல மழை பெய்தாலும் மழை நீரனது  கழிவு நீரால் வெளியேற்றப்படுகிறதே தவிர நிலத்தடி நீராக மாற நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
நம் வீட்டு தரைகளுக்கு சிமெண்ட், அல்லது மொசைக் போட்டு அழகுப் படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை சற்று அரசின் மழை நீர் சேமிப்பு திட்டத்திலும் காட்டினால் தண்ணீர் பஞ்சம் என்பதே நாட்டில் வராது. கடல் நீரை குடிநீராக்கினால் மக்களின் தண்ணீர் தட்டுபாடு விலகும் என்று அரசு கஷ்டப்பட்டு எடுக்கும் முயற்சிகளிலும் மக்கள் தண்ணீர் சுவையாக இல்லை, குடித்தால் தாகம் தீரவில்லை என்று குறை கண்டு பிடிக்கிறார்களே தவிர மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில்லை. ஏரிக்குள் வீட்டை கட்டிக் கொண்டு தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட்டது என்று கூறினால் என்ன நியாயம்? வாழும் வீட்டில் தண்ணீரின் தேவையறிந்து எங்கு கிணறு தோன்டினால் நன்றாக தண்ணீர் கிடைக்கும். எங்கு போர்வெல் அமைத்தால் தண்ணீர் தெளிவாக கிடைக்கும் என்று வாஸ்து ரீதியாக ஆராய்ந்து அந்த இடத்தில் கிணறு போர்வெல் போன்றவற்றை அமைத்தால் வீட்டின் தண்ணீர் தேவையானது பூர்த்தியாவதுடன் கங்கா தேவியும் வற்றாமல் நமக்கு உறுதுணையாக இருப்பாள்.
    
ஒரு வீட்டின் நீர் ஆதாரம் என்பதை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தான் அடைய முடியும். ஒரு இடத்தில் எந்த மனை என்றாலும் அந்த மனையில் வடகிழக்கு மூலையில் தான் மற்ற இடங்களை விட நீர் ஆதாரங்கள் சிறப்பாக இருக்கும். அதனால் கிணறு மற்றும் போர்வெல்லை ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். இப்படி வடகிழக்கில் அமைக்கப்படும் இடங்களில் நீர்வற்றாமல் இருக்கும் என்பது ஆதார பூர்வமான உண்மை.
     வடகிழக்கு பகுதியில் கிணறோ, அல்லது போர்வெல்லோ அமைக்கும் போது வடக்குதிசையின் மத்திம பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்தல் நல்லது. இல்லையெனில் கிழக்குதிசையின் மத்திய பகுதியிலிருந்து வடகிழக்கு திசைக்குள் அமைத்து கொள்வதும் சிறப்பு.
      இதில் நாம் கணக்கிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையை இணைக்க கூடிய ஒரே நேர்கோட்டில் இருக்ககூடாது. அதுபோல வீட்டை சுற்றி அதிக இடமிருந்தால் மனையின் வடகிழக்கு மூலையையும், கட்டிடத்தின் வடகிழக்கு மூலையையும் இணைக்கும் கோட்டிலும் கிணறு அல்லது போர்வெல் அமைக்க கூடாது.
     தற்போதுள்ள இடபற்றாகுறையினால் கிணறு வைத்திருப்பவர்கள் கூட அதன் மேல் தளத்தை மூடி விட்டு அதனை கடந்து தான் செல்கிறார்கள். கிணற்றை மூடாமல் சூரிய ஒளி படும்படி அமைப்பது தான் நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் கிணற்றின் மேற்பகுதியை மூட நேர்ந்தாலும் அதனை வழி பாதையாக பயன்படுத்தா திருப்பது நல்லது. குறிப்பாக ஒரு வீட்டின் பிரதான வாசலுக்கு செல்லும் வழியிலாவது கிணற்றை அமைக்காமல் இருப்பது நல்லது.
      ஆக கிணறு, போர்வெல்லை வடகிழக்கு பகுதி, அதனை ஒட்டிய பகுதியில் அமைப்பது நல்லது. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் அமைக்கக் கூடாது.

 கதவு ஜன்னல் வைக்கும் முறைகள்

காடுகளிலும் மலைகுகைகளிலும் வாழ்ந்த மனிதன் காலப் போக்கில் வீடு என்ற ஒன்றை கட்டி வாழ கற்றும் கொண்டான். வீடு கட்டிய மனிதனுக்கு அதை பாதுகாக்க கதவு என்ற ஒன்றை அமைக்கத் தெரியாமல் அதற்கு தட்டி செய்து மறைப்பதும், துணியை திரையாக தொங்க விடுவதுமாக இருந்தான். காலங்கள் முன்னேற முன்னேற மரத்தை அறுத்து அதில் கதவு செய்வதையும் கற்றுக் கொண்டான். சிறிய வீடோ பெரிய வீடோ வீட்டின் உள்ளே உள்ள பொருட்களை பாதுகாக்க அமைக்கப் படுவது தான் கதவு. தற்போதுள்ள சூழ்நிலையில் கால்சவரனுக்காக கூட கொலை கொள்ளை நடக்கிறது என்பதால் நல்ல திடமான கதவுகளை அமைப்பதுடன் அதற்கு பாதுகாப்பாக கிரில் கேட்டையும் அமைத்து கொள்கிறார்கள். சிலர் வீட்டின் வெளியே கேமராவை அமைத்து உள்ளிருந்த படியே வெளியே வரும் மனிதர்கள் யார் யார் என கண்காணிக்கிறார்கள்.
     வாஸ்து ரீதியாக வீட்டிற்கு பாதுகாப்பாக விளங்கும் கதவுகளை எந்த திசையில் அமைத்தால்  சிறப்பாக இருக்கும் என பார்கின்ற போது ஒவ்வொரு திசையின் உச்ச ஸ்தானங்களில் கதவு வைப்பது நல்லது. ஹால், பெட்ரும், கிட்சன், பூஜையறை, பாத்ரூம் போன்ற எல்லாவற்றிற்கும் கதவு வைக்கும் பழக்கம் பெருகி வரும் நிலையில் அந்தந்த அறைகளுக்கும், அந்தந்த உச்ச ஸ்தானங்களில் கதவு அமைப்பது நல்லது.
வடக்கு திசை:
     வடக்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதிலும் குறிப்பான வடக்கு மத்திய பகுதி முதல் வடகிழக்கு இறுதி வரை உள்ள பகுதியில் கதவை அமைப்பது மிகவும் சிறப்பு. மேற் கூறிய பகுதிகளில் கதவிற் அருகில் ஜன்னலையும் அமைப்பது நல்லது. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும்.கதவு ஜன்னல் போன்றவை வடமேற்கு பகுதியில் அமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
கிழக்கு திசை
     கிழக்கு  பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதாவது கிழக்கு மத்திம பகுதி முதல் வடகிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை தெற்கு புறத்தில் அமைத்து வடக்குலிருந்து தெற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்கிழக்கு  பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.
தெற்கு திசை
     தெற்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான தென்கிழக்கு பகுதியில் அதாவது தெற்கு மத்திம பகுதி முதல் தென்கிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.
மேற்கு திசை
     மேற்கு பார்த்த அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடமேற்கு பகுதியில் அதாவது மேற்கு மத்திம பகுதி முதல் வடமேற்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை கதவிற்கு தெற்கு புறமாக அமைத்து, வடக்கிலிருந்து தெற்காக கதவை திறப்பது போல அமைப்பது நல்லது. தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

 படிகட்டுகள்

சிறிய இடமாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு சொந்த வீட்டை கட்டி வாழ்வதில் தான் மனிதனுக்கு தனி பெருமைதான். வீடு கட்டினால் மட்டும் போதாது அது தளம் போட்ட வீடாக இருந்தால் அதில் ஒரு மகிழ்ச்சிதான். தளம் போட்ட வீட்டிற்கு அதனுடையே படிகட்டுகளையும் கட்டி விட்டால் அது மாடி வீடாகி விடும். படிகட்டுகளுடன் மாடி வீட்டை கட்டி கொண்டால் காற்றுக்காக மாடியில் போய் அமர்ந்து கொள்ளலாம், படுத்துக் கொள்ளலாம். வானில் உள்ள நட்சத்திரங்களின் அழகையும் பௌர்ணமி நிலவையும் ரசிக்கலாம். மாடி வீடு என்பதே நிறைய சௌகர்யங்கள் நிறைந்தாக தான் இருக்கும். மன்னர்கள் காலத்திலேயே மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்திருக்கிறார்கள். இவற்றில் ஏறி செல்ல படிக்கட்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த படிக்கட்டுகளுக்கென்று ஒரு புராண கதையும் உண்டு. அக்காலங்களில் கருங்கல்லில் தான் படிக்கட்டை அமைப்பார்கள். நாம் வழிபடும் இறைவனையும் கருங்கல்லில் தான் வடிப்பார்கள். தினமும் படிக்கட்டுகளில் பல்லாயிரம் பேர் ஏறி ஏறி இறைவனை வழிபட்டு அருள் பெற்று சென்றார்களாம். பலர் ஏறி சென்றதால் வலி தாங்க முடியாத படிகட்டுகள் ஒர் இரவில் இறைவனிடத்தில் புலம்பியதால், நீயும் கல் தான் நானும் கல் தான். என்னை மிதிக்கிறார்கள். உன்னை வணங்குகிறார்கள். இது என்ன வேற்றுமை என்று--?  அதற்கு கடவுள் நீ அவர்களின் பாவங்களை தாங்கி மன்னித்து மேலே ஏற உதவி செய்தால் மட்டுமே அவர்களுக்கு என் ஆசி கிடைக்கும். அதனால் நீதான் என்னை விட பெரியவன். பாவங்களை மன்னிப்பவன். நான் வெறும் ஆசி கூறுபவன் மட்டும் தான் என்றாராம்.
    
இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த படி கட்டுகளை வீடுகளில் அமைக்கும் போது வாஸ்து படி எந்தந்த தசைகளில் அ¬ப்பது நல்லது என்று ஆராய்ந்தே கட்ட வேண்டும். பொதுவாக ஒரு கட்டிடத்தில் அதிக எடை வைக்க கூடாத திசையான வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற எந்த திசைகளில் வேண்டுமானாலும் படிகட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இதிலும் ஒரு சில விதிகள் உள்ளன. படிக்கட்டுகள் அமைக்கும் போது அதன் எண்ணிக்கையானது ஒற்றை படையில் இருப்பது நல்லது. ஏனென்றால் நம் வீட்டில் பூஜையறையில் வைக்கும் மகாலஷ்மி விளக்கை (காமாட்சி விளக்கு) வாங்கும் போது பெரியவர்கள் அந்த விளக்கின் ஒரத்தில் உள்ள அறம் போன்ற அமைப்பை லாபம், நஷ்டம் லாபம், நஷ்டம் என எண்ணிக் கொண்டே வருவார்கள் அப்படி எண்ணும் போது அதன் முடிவானது லாபத்தில் இருக்க வேண்டும். அதைப் போலத் தான் நாம் ஏறி செல்லும் படிக்கட்டுகளும் லாபம், நஷ்டம் என்ற கணக்கில் வரும் போது லாபத்தில் நிற்க வேண்டும்.
    
படிக்கட்டானது எந்த திசையில் அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது வடக்குலிருந்து தெற்கு  நோக்கி ஏறும்படியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியோ அமைப்பது சிறப்பு, படிக்கட்டில் ஏறி மாடிக்கு செல்லும் போது மாடியிலுள்ள வீட்டின் தலைவாசலானது எந்த திசையை நோக்கி உள்ளதோ அந்த திசையின் உச்ச ஸ்தானத்தில் அமைவது நல்லது.
ஒரு வீட்டில் ஒரே நேர் குத்தால படிக்கட்டுகள் அமைக்கும்படி நேர்ந்தால் மேலே காட்டப்பட்டுள்ள வரை படத்தை போல அதாவது தெற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியும், மேற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி ஏறும்படியும் படிக்கட்டுகளை அமைப்பது நல்லது. அதிலும் தெற்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் வாசற்படியும் மேற்கு பார்த்த வீட்டிற்கு மாடியின் வாசற்படியானது வடமேற்கு மூலையிலும் அமைத்தல் நல்லது.
பொதுவாக வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளை அமைக்க கூடாது என்ற காரணத்தால் வடக்கு பார்த்து அமைந்த வீட்டிற்கு நேர்குத்தாக படிக்கட்டுகளை அமைக்கும் பொழுது வடக்கு மத்தியில் படிகட்டு தொடங்கி வடமேற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு (வராண்டா) நடைபாதை போல அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை வைப்பது நல்லது.
    
கிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் குத்தாக படிகட்டுகளை அமைக்கும் போது கிழக்கின் மத்திய பகுதியில் படிகட்டை தொடங்கி தெற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு நடைபாதை போல (வராண்டா) அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை அமைப்பது நல்லது.
  
படிகட்டுகளை இரு பாகங்களால் அமைக்கின்ற போது முதலில் ஏறுவது தெற்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவதும் படிக்கட்டை ஒற்றை படையில் அமைத்து கொள்வதும் நல்லது. நான்கு திசைகளுக்கும் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பதனை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம். முதல் மாடிக்கு சென்று வீட்டின் உள்ளே செல்லும் போது கதவானது உச்ச ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. வடக்கு மற்றும் கிழக்கு  மதில் சுவரை தொடாமல் படிகட்டுகளை அமைப்பு சிறப்பு.

 செப்டிக் டேங்க்

சென்னை போன்ற பெருநகரங்களில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு டிரைனேஜ் வசதி இருக்கிறது. கிராமப் பகுதிகளில் டிரைனேஜ் வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீர் தேங்குவதற்காக செப்டிங் டேங்க் அமைக்கிறார்கள் அந்த செப்டிக் டேங்கானது எந்த இடத்தில் அமைத்தால் சிறப்பு என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே வடமேற்கு, மேற்கு ஒட்டிய வடக்கு, வடக்கு ஒட்டிய மேற்கு தென்கிழக்கு, தெற்கு ஒட்டிய கிழக்கு, கிழக்கு ஒட்டிய தெற்கு ஆகிய திசைகளில் உள்ள பகுதிகளில் செப்டக் டேங்க் அமைக்கலாம் வடகிழக்குப் பகுதியில் நீரோட்டம் இருப்பது நல்லது என்றாலும், ஈசான்ய மூலை என்பதால் கழிவுநீர் தேங்குவது நல்லதல்ல. அதனால் வடகிழக்குப் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது. ஒரு மனையில் தென்மேற்குப் பகுதியில் பள்ளம் இருக்க கூடாது என்ற காரணத்தாலும் செல்வத்தை குவிக்கும் உன்னத ஸ்தானம் தென்மேற்கு ஸ்தானம் என்பதாலும், தென்மேற்கில் செப்டிக் டேங்க் அமைக் கூடாது.
     ஒரு மனையில் உள்ள நுழையும் தலைவாசல் பகுதியல் நடைபாதைக்கு கீழே செப்டிக்டேங்க் கழிவுநீர் தேங்கும் சேம்பர், கழிவுநீர் குழாய் அமைவது கண்டிப்பாக கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் கழிவுநீர் குழாய் மட்டும் அமைவது தவறல்ல.

 கழிவு நீர் செல்லும் வழி

கழிப்பறை குளியல் அமைந்த பிறகு இதிலிருந்து செல்லும் கழிவு நீரானது எந்த திசையில் கொண்டு சென்றால் நல்லது என பார்த்தால் குறிப்பாக ஒரு வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு மூலை வழியாக செல்வது நல்லது. குறிப்பாக ஒரு மனையில் தென் மேற்கு மூலையிலிருந்து முடிந்த வரை தெற்கு சுவருக்கு வெளிபுறம் குழாய் அமைத்து தென்கிழக்கு மூலைக்கு வந்து அதன் பிறகு அங்கிருந்து கிழக்கு சுவர்புறமாக வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீர் வெளியேற வேண்டும். மற்றொரு பாதையாக மேற்கு சுவரை ஒட்டி வெளிபுறமாக வடமேற்கு மூலைக்கு வந்து அங்கிருந்து வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீரானது வெளியேற வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு சாத்தியமான ஒன்றாகும்.
வடக்கு பா£த்த வீட்டிற்கு கண்டிப்பாக வடமேற்கு கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு மூலையிலோ, கிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலோ அமைப்பது தான் மிகவும் சிறப்பு. அது போல கிழக்குப் பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு பகதியிலோ வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியிலோ கழிவு நீரானது வெளியேறுவது போல் அமைக்க வேண்டும்.
    
வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற வேண்டிய அமைப்பு வாஸ்து ரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற்ற முடியாது என்பதால் முடிந்தவரை வடமேற்கு மூலையில் வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது போல் அமைப்பது சிறப்பு. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.
    
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கழிவு நீரானது தென் மேற்கு மூலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் கழிவு நீர் குழாய் அமைக்க கூடாது.
    
மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குழாய் சென்று அதன் மூலம் கழிவு நீர் வெளியேறுவது போலவும் மற்றொரு பாதையாக தென்கிழக்கிலிருந்து கிழக்கு சுவர் வழியாக வடகிழக்குக்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடமேற்கு மூலம் கழிவு நீர் வெளியே செல்ல வேண்டும்.
    
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து குழாய் மூலம் தெற்கு சுவர் வழியாக தென்கிழக்கு மூலைக்கு வந்து வெளியே செல்ல வேண்டும். மற்றொரு பாதையாக தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கு சுவர் வழியாக வடமேற்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடகிழக்கு சென்று அதன் பிறகு கிழக்கு சுவரை ஒட்டி தென்கிழக்கு வந்து அங்கிருந்து கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுவாக கழிவு நீர் குழாய் செல்லும் வழியில் அமைக்கப்படும். சேம்பரானது தெற்கு மேற்கு புறங்களில் முழுமையாக முடியிருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமையக் கூடிய சேம்பரானது திறந்தும் இருக்கலாம். குறிப்பாக கழிவு நீர் செல்ல கூடியக் குழாய் ஆனது கட்டித்திற்கு நடுவே அமைக்ககூடாது.

 குளியல் மற்றும் கழிவறை

ஒரு வீட்டில் கழிவறை குளியலறை எங்கு அமைக்க வேண்டுமென வாஸ்து ரீதியாக பார்த்தால் ஒரு வீட்டில் தென் கிழக்கு, தெற்கு பகுதி கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி வடமேற்குப் பகுதி, மேற்கு பகுதியில் வடக்கை ஒட்டிய பகுதியில் கழப்பறை, குளியலறை அமைக்கலாம். பொதுவாக தென் மேற்கு  பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் கழிவறை குளியலறை அமைக்க கூடாது. குறிப்பாக தென் கிழக்கு அல்லது வடமேற்கில் தான் கழிவறை குளியலறை அமைக்க வேண்டும். கழிப்பறையில் கழிவு பொருட்கள் செல்ல கூடிய தொட்டியானது எப்படி அமைக்க வேண்டுமென்றால் ஒருவர் கழிவறையை உபயோகிக்கும் போது தெற்கு அல்லது வடக்கு பார்த்து அமர்வதுப் போல அமைக்க வேண்டும். கண்டிப்பாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்குப் பார்த்தும் சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்புறமான மேற்கு திசையிலும் கழிவறையில் அமர்வதும் போல் இருக்க கூடாது.
குறிப்பாக படுக்கையறைக்கு ஒட்டியவாறு கழப்பறை அமைக்கும் போது கூட அந்த படுக்கை அறைக்கு தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் உள்ள பகுதியில் தான் அட்டாச்டு பாத்ரூம் அமைக்க வேண்டும். கண்டிப்பாக வடகிழக்கு தென்மேற்கில் அமைக்கக் கூடாது. பொதுவாக வடகிழக்கு திசையானது ஈசனே குடியிருக்க கூடிய தெய்வீக ஸ்தானம் என்பதினால் அங்கு கழிப்பறை அமைப்பதும் செல்வத்தை குவிக்கும் ஸ்தானமான தென்மேற்கு திசையிலும் கழிவறை அமைக்க கூடாது. கழிவறைக்கு ஒட்டியது போல பூஜையறை இருக்க கூடாது. அது போல தலைவாசலுக்கு நேராகவும், படிக்கட்டுக்கு கீழும் கழிவறை இருக்க கூடாது.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...