திரிபலா சூரணம்
திரிபலா சூரணம்
இல்லத்தில் இருக்க வேண்டிய மருந்துகளுள் இன்றியமையாதது திரிபலா சூரணம் எனில் அது மிகையன்று! உள்மருந்தாகவும்,வெளிமருந்தாகவும் பயன்படும் திரிபலா சூரணத்தின் தயாரிப்பு முறையும் மிக எளிதானதுதான்.
செய்முறை:
கடுக்காய்த்தோல் 100கிராம்
நெல்லிவற்றல் 100கிராம்
தான்றிக்காய்த்தோல் 100கிராம்
மூன்று சரக்குகளையும் தனித்தனியாகப் பொடித்து சலித்து,சம அளவு கலந்து கொண்டால்,திரிபலா சூரணம் தயார்!
அளவு: ஒன்று முதல் மூன்று கிராம் வரை
உள்மருந்தாக:
*வறட்டு இருமலினால் அவதியுறுவோர்,ஒரு கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடிக்க நல்ல குணம் கிடைக்கும்.
*வயிற்றுவலி,நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரு கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.
*மலச்சிக்கலுக்கு இரண்டு கிராம் சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகி நிவாரணம் பெறலாம்.
*மலம் கழிக்கையில் இரத்தம் வருதல்,பெண்களுக்கு ஏற்படும் அதிஇரத்தப்போக்கு,பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு,1-2 கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து காலை-மாலை உண்ண நோய் நீங்கி நலம் பெறலாம்.
*ஆரம்ப நிலை சர்க்கரை நோயர்கள்,பரம்பரையில் சர்க்கரை நோயுள்ளவர்கள், மூன்று கிராம் அளவு சூரணத்தை வெந்நீருடன் கலந்து காலை,மாலை பயன்படுத்தினால் சர்க்கரை நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
*உடற்பருமனை குறைக்க விரும்புபவர்கள்,காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருகலாம்.
*50 வயதுக்கு மேற்பட்டோர்,நோய் வராது தடுக்கும் காயகற்ப மருந்தாக திரிபலா சூரணத்தை மாலையில் உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சுடுநீருடன் கலந்து பருகலாம்.
வெளிமருந்தாக:
*பற்பொடியாக பயன்படுத்த,பற்கூச்சம்,பல்வலி,ஈறுவீக்கம் குணமாகும்.
*15 கிராம் அளவு சூரணத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் உள்ள இளஞ்சூடான வெந்நீரில் கலந்து, அதில் ஆசனவாய் படும்படியாக பத்து நிமிடம் அமர,ஆசன வாய் வலி உடனே குறையும்.சலம் வரும் பவுத்திரம்,வெளிமூல சதைவளர்ச்சி படிப்படியாகக் குறையும்.
*10 கிராம் சூரணத்துடன் 400மிலி நீர் சேர்த்து கொதிக்க வைத்து 100மிலியாக வற்ற வைத்து வடிகட்டி புண்களைக் கழுவ, புண் விரைந்து ஆறும்.நீரிழிவு நோயில் வரும் புண்கள்,நாட்பட்ட புண்களைக் கழுவும் நீராக இதனைப் பயன்படுத்தலாம்.
*சிறிய வெட்டுக்காயங்கள்,சலம் வரும் புண்கள் மீது திரிபலா சூரணத்தை வைத்து அழுத்திப் பிடிக்க அவை குணமாகும்.
*கண்ணோய்களுக்கு,10கிராம் அளவு சூரணத்தை இரண்டு குவளை நீருடன் கொதிக்க வைத்து, ஒரு குவளை நீராக வற்ற வைத்து வடிகட்டி கழுவு நீராகப் பயன்படுத்தலாம்.ஒரு சுத்தமான வெண்ணிற பருத்தி துணியை மேற்கண்ட நீரில் நனைத்து கண்கள் மீது பற்றிட, கண்ணிலிருந்து நீர் வடிதல்,அதிகமான பீளை சாடுதல்,கண்வலி இவை குணமாகும்.
*பெண்களுக்கு காணும் வெள்ளை நோய்க்கு,20 கிராம் அளவு சூரணத்தை அரை லிட்டர் இளஞ்சூடான நீருடன் கலந்து வடிகட்டி கழுவு நீராகப் பயன்படுத்தலாம்.
குறிப்பு:
*எளிதான தயாரிப்பு முறையாகையால் நாமே செய்து பயன்படுத்தினால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
*வணிக நோக்கில் தயாரிக்கப்படும் திரிபலா சூரணத்தில், கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய் போன்றவற்றின் விதை நீக்காமல் சேர்க்கப்பட்டிருந்தால் மேற்கண்ட பலன்கள் கிட்டாது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்

தெரிந்தால் விட மாட்டிர்கள்..! திரிபலா சூரணம் பயன்கள்
ReplyDelete