Saturday, 13 May 2017

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ?

      சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ?  

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர் த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யு ம் என்பார்கள். பாம்புக ளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில் லை. பாம்புகள் வலையில் உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவ சாயிகளின் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது.
சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உரு வம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடை ய பொழு து சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையு டைய பொழுது சதாசிவன் எ னவும், உருவத்திருமேனி யையுடைய பொழுது மகேசு வரன் எனவும் பெயர் பெறுவர்.
இனி சிவனின் உருவமாக நாம் பொதுவாக காணும் உருவத்தை காண்போம். பத்மாசனம். அந்த சிவனே பத்மாசன நிலையில் அம ர்ந்திருப்பாத காண்கிறோம். அவ னின் ஒளி மிகுந்த கண்கள் முக் கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற் றினால் மூன்று கோடுகள். செம் மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக் கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலையில் சூடிய பெருமா னாய் இருக்கிறான். சிவனுக்கு பிடித்த கொ ன்றை மலரை தலையில் அணிந்திரு க்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். கை களிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம் பு. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருக்கிறான். விடையாகிய கா ளை மாட்டை வாகனமாக வைத்துள் ளான். புலித்தோலை இடையில் அணி ந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்து ள்ளான். நடனத்தை உருவாக்கியவனாய் நடராசனாய் இரு க்கிறான். இப் பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முக பாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகி றான்.
நெற்றிக்கண்
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக் கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிரு க்கிறது.
குண்டலினி சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண் டு வரும்போது அளப்பரிய ஞானம் தோ ன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். நெற்றிக் கண்ணினால் பல விடயங்களை உணர முடியும். நெற்றி க் கண் மிகவும் சக்தி வாய் ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.
உடுக்கை
உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. உடுக்கை யை அடிக்கும் போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கிறது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பி டம். பிரபஞ்ச படைப்பை ஆக்கும் ஆனந்த தாண்டவத் தை தொடங்கும் முன்னர் சி வன், உடுக்கையை 14 முறை அடிக்கிறார். இது பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிற து. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையானவற்றை உரு வாக்கிய பின்னர் சிவன், ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறா ர். ஆகவே, உடுக்கை பிர பஞ்ச படைப்பின் ஒலிக்குறிப்பாகும்.
பிறை சந்திரன்
பிறை சந்திரன் வளரும், தேயு ம் குணமுடையது. காலச் சக் கரத்தில் இந்த வளர்தலும் தே ய்தலும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலத் தை நாம் இரவு பகல் என்று உணர்ந்தாலும், தினமும் நிக ழும் கால மாற்றம் சந்திரன் மூலம் நம் கண் முன்னே கால ம் நகர்ந்து செல்வதை எளி தாக உணர்த்துகிறது. இந்த பிர ஞ்சத்தையே படைத்த இறைவன், காலத்தை வென்றவனாவான். இந்த தத்துவத்தையே பிறை சந் திரன் உணர்த்துகிறது.
நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்
இவ்வுலகில் பிறந்து உயிரினங்க ள் யாவும் இறுதியில் தீயில் வெந் து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.
காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போ ல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத் துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல் ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது.
திருநீற்றை முக்குறியாக அணி கிறோம். ஏனென்றால் ஆணவ ம், கன்மம், மாயை என்ற மூன் று மலங்களை வேரோடு நீக்கி னால் தான் நாம் முக்திக்கு தகு தி உடையவர் ஆகிறோம் என்ப தை அக் குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன் மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே
என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.
சூலாயுதம்
மூன்று முனைகளை கொண்ட சூ லாயுதம், சிவனின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிற து. இச்சையினால் படைத்தலும், கிரியையால் காத்தலும் ஞானத் தினால் நன்மை பெறுதலும் ஆகு ம். இந்த ஆயுதம் வல்வினைக ளை அழித்து நன்மை பயப்பவை.
கொன்றை மலர்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, கோடையின் துவக்கத்தில் மல ரக் கூடியது கொன்றை மலர்கள். இதற்கு சொர்ணபுஷ்பம் என்ற மற்றொரு பெயருமுண்டு. சரக்கொன் றை, சிறுகொன்றை, செங் கொன்றை , மஞ்சள்கொன்றை, மைக்கொன்றை , மயில்கொன்றை, புலிநககொன்றை , பெருங்கொன்றை என பல வகையா க இருக்கும் கொன்றை, தமிழகத்தை ப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதியான முல்லை பகுதிக்கு உரிய மரம்.
மருத்துவ குணத்திலும் கொன்றை மரம் ஈடு இணையற்றது. சரக்கொன்றை சிறந்த நோ ய்க்கொல்லியாகிறது. கண் நோய்கள், மலச் சிக்கல், தோல் நோய்கள், சர்க்கரை நோய், சளி என்று பல் வேறு நோய்களை கட்டுபடு த்த பயன்படுகிறது. சிவன் கொன்றை மலர் தரித்தவனாக காட்சி தருகிறான்.
புலித்தோல்
புலி மிகுந்த ஊக்கமுடைய விலங்காகும். புலித்தோல் இயற்கை யின் சக்தியைக் குறிக்கிறது. இது உலகி ன் ஆக்க சக்திகளுக்கு மூலமாகவும் இருக்கிறது. சிவன் புலித்தோலின் மேல் அமர்ந்திருப்பது, அவன் எல்லா சக்திக ளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது.
உருத்திராக்க மாலை
உருத்திராக்கம் என்பது இமய மலையில் உண்டாகும் ஓர் மரத்தின் விதையாகும். இந்த உருத்திராக்கத்திற் கு மனித உடலி ல் ஏற் படும் பலவித நோய்களை நீக்கும் தன்மை இருக்கிறது. உருத்தி ராக்கம் மனித உடலின் அதிக வெப் பத்தை உறிஞ்சக்கூடிய து. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது வயிற்றி லும் வாயிலும் புண்உருவாகி றது. பஞ்ச பூதங்களின் வெவ் வேறுவிகிதசேர்க்கையே நவ கிரகங்களாகும். இந்த நவகிரகங்களினால் உண்டாகும் பாதிப்பு களை குறைக்க உருத்திராக்கம் பெரிதும் உதவுகிறது.
பாயும் கங்கை
கங்கை நதி வளமையும் செல்வ செழிப் பையும் அளிக்க வல்லது. மானுட நல் வாழ்வுக்கு நல்ல ஞானம் மிக அவசிய ம். கிடைத்தற்கரிய இந்த ஞானம் கால த்தின் மாற்றத்தில் நலிந்துவிடாமல் தலைமுறை தலைமுறையாக ஊடுரு விச் செல்வது அவசியம். இந்த ஞானம் தலைமுறை கடந்து செல்வதையே கங் கை நதி உருவகிக்கிறது. இந்த ஞானம் எல்லா உயிரினங்களுக்கும் நல் வா ழ்வையும் அமைதியையும் கொடுத்து கொண்டே இருக்கும்.
தோடு
சிவனின் இரண்டு காதுகளி லும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். சிவன் உமையொ ரு பாகனாவான். உமையம் மையை தன்னுள் ஒரு பாக மாக கொண்டவன். பெண்க ள் அணியும் தோடை அணிந் த இவனது இடது காது, இந்த தத்துவத்தை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
காளை (விடை) வாகனம்
நந்தி தேவர். நந்தி என்ற சொல் லுக்கு எப்பொதும் ஆனந்த நிலை யில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்த வராக நந்தி தேவர் கருதப்படுகின் றார்.
செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பாவமறுத்த நந்திவானவர்
எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின் றது. நந்தி தேவர் சிவபெருமா னிடம் நேரடியாகப் பெற்ற உப தேசத்தை இவரிடமிருந்து சனற் குமாரரும், சனற்குமாரரிடமிரு ந்து சத்தியஞான தரிசினிகளு ம், சத்தியஞான தரிசினிகளிட மிருந்து பரஞ்சோதியாரும், பர ஞ்சோதியாரிட மிருந்து மெய்க ண்டாரும் பெற்றனர்.
நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. இது தர்மத்தை குறிக்கிறது. தர்மமே இறைவனை தாங்கி நிற்கி றது. சிவபெருமானின் ஆணை க்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்தி ற்கேற்ப எல்லா கோவில்களி லும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும். ஆன்மாக்களாகிய நாம் நம் கவனத்தை நந்தியைப் போல எப்போதுமே இறைவன் மீதே நோக்கியிருக்க வேண்டும்.
கழுத்தில் பாம்பு
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்மை செல்ல பிரா ணியாக வளர்க்க முடியாது. என்ன தான் பால் ஊற்றி வளர்த்தாலு ம், சமயங்களில் வளர்த்தவனையே கடித்து விடும். விளைநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் எலிக ளை பிடித்து உண்பதால் விவசாயி களின் தோழனாகும். இவ்வாறு பல்வேறு குணமுடைய பாம்பு போ ன்ற விலங்களின் மீது இறைவனு க்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உணர்த்துகிறது.

இன்னுமொருமுக்கியமான தத்துவம்:தாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டி ன் வழியே தலையில் இருக்கு ம் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண் டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்க வே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருப் பது தெளிவு படுத்துகிறது. 

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...