இறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?
வெளிச்சமான பகுதியில் வெளிச்சத்தைப் பார்ப்பது அவ்வளவு சந்தோஷம் தராது. ஒரு கோயில் திருவிழா நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம். நம் மனம் அலங்கரிக்கப்பட்ட பூக்களையும், மாலைகளையும், வண்ண விளக்குகளையும் காண்பதிலேயே மனம் லயித்திருக்கும். கச்சேரிகள், பாட்டுகள் என அமர்க்களப்பட்டு போயிருப்போம். ஆனால் இருட்டாக இருக்கின்ற கருவறையில் எண்ணெய் தடவிய அந்த கருங்கல் சிலைக்கு முன்பு கற்பூர ஆரத்தியோ அல்லது நெய் விளக்கோ காட்டுகிற பொழுது கண்கள் பளபளக்க உதடுகள் மினுமினுக்க அதனுடைய உயரமும் அகலமும் தெரியவர, நம் கண்ணுக்குள் தனியாக அந்த உருவம் காட்சியளிக்கிறது. இருட்டில் ஒளியை தரிசிப்பது என்பது இன்னும் நெருக்கமாக மனதை அங்கு கொண்டு போய் வைக்கிறது. நம் முன்னோர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். எதனால் உங்கள் மனம் ஒன்றாகக்கூடும் என்பதை நன்றாக கவனித்து உங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?
இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த
பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை
நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும்.
இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண்.
அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர
வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று
வழிபட வேண்டும்.
No comments:
Post a Comment