Tuesday, 16 May 2017

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?

                     சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்? 



மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.

 சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்!


நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். ஆனாலும், சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம்,உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபடவேண்டும் என்றும் பூஜாவிதி உண்டு. திருவாவடுதுறைஆதீனத்தில், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று, ஏட்டுசுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்யும்வழக்கம் இப்போதும்உள்ளது. இதனால்நான்கு தினங்கள் சரஸ்வதி பூஜை செய்யும்நடைமுறை அந்தகாலத்தில் இருந்ததைஅறிய முடிகிறது.

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...