Sunday, 7 May 2017

வாஸ்து

வாழும் வீட்டிற்கு மிக முக்கியமானது மின்சாரமாகும். மின்சாரம் இல்லாமல் நம்மால் ஐந்து நிமிடங்கள் வாழ முடியுமா என்றால் முடியாது என்றே கூற வேண்டும். தற்போதுள்ள விஞ்ஞான யுகத்தில் சமைக்கும் அடுப்பு முதல் சமையல் செய்யும் பாத்திரங்கள் வரை  மின்சாரத்தில் இயங்க கூடியவையாக இருக்கின்றன. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வீட்டிற்கு வந்தோமா? சுவிட்சை தட்டினோமா? சமையலை முடித்தோமா? என அவசர கதியில் செயல்பட்டு சாப்பிட்டு முடித்தவுடன் அறைக்கு சென்று ஒய்வெடுக்கவே விரும்புகிறோம். ஒய்வெடுப்பதற்கும் வேண்டாமா ஏ.சி. பழைய பாடல் ஒன்றில் பட்டனை தட்டி விட்டால் தட்டில் இட்லி வந்திடனும்,காபியும் வந்திடனும் என வரிகள் இருக்கும். பாரதி பாடிய பாடல்கள் பலித்ததோ இல்லையோ மின்சார வசதியால் பட்டனை தட்டி இட்லி வருவது உண்மையாகி விட்டது.

     இத்தனைக்கும் உறுதுணையாக இருக்கும் மின்சார போர்டினை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது என பார்க்கும் போது மின்சாரம் என்பது நெருப்பு, உஷ்ணம் சார்ந்த பொருள்  இந்த நெருப்பு சார்ந்த பொருளான மின்சார போர்டினை அக்னி முலை என கூறக்கூடிய தென் கிழக்கு மூலையில் வைப்பது நல்லது. அது போல ஒவ்வொரு அறைக்கும் வைக்க கூடிய சுவிட்ச் பாக்ஸினை தென்கிழக்கு பகுதிலேயே அமைப்பது சிறந்தது. வசதி படைத்தவர்கள் ஜெனரேட்டர், ஹி.றி.ஷி போன்றவற்றையும் பயன்படுத்தினால் அவற்றை கட்டியத்தின் தென்கிழக்கு அறையில் வைப்பது சிறப்பு. பெரிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் மின்சார தேவைகளுக்காக ஜெனரேட்டரை பயன்படுத்துகிறார்கள். அவற்றை எந்த பகுதியில் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே தென்கிழக்கு பகுதியில் அமைப்பது சிறப்பு. 

விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழவே விரும்புகிறான். ஆசைகளுக்கு அளவில்லை என்பார்கள். ஒரு 30 வருடங்களுக்கு முன்பு கூட சைக்கிள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருந்தது. எங்காவது வெளியில் செல்பவர்களும் வாடகை சைக்கிளை தான் எடுத்து செல்வார்கள். சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பவர்கள் அப்பொழுது பணக்காரக்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களோ இல்லையோ வீட்டிற்கு ஒரு கார் பைக் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பெட்ரோல்,டீசல் விலைகள் எவ்வளவு தான் ஏறினாலும் வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. முதலில் சொந்த வீட்டை  கட்ட ஆசைப்படும் மனிதன் அடுத்த வாங்க நினைப்பது வண்டி வாகனங்களை தான்.
     சொந்த  வீட்டின் முன் ஒரு கார் அல்லது பைக் நிற்பது என்பது பெருமையான விஷயம் தானே. வண்டி வாகனங்களை வாஸ்துப் படி எங்கு நிறுத்தினால் நல்லது என பார்க்கும் போது ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் அதிக எடையுள்ள வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது. ஈசான்ய மூலை ஈசனே குடியிருக்க கூடிய இடம் என்பதால் இங்கு வாகனங்களை நிறுத்துவதால் அதன் டயர்க்களில் ஒட்டியிருக்கும் சேறு, மற்றும் அதிலிருந்து வழியும் ஆயில் பெட்ரோல் ஆகியவை அந்த இடத்தில் படுமேயானால் அந்த இடத்தின் தூய்மையானது கெட்டுவிடும். எனவே வடகிழக்கு மூலையில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது.
     வடகிழக்கு மூலையைத் தவிர தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வண்டி வாகனங்களை நிறுத்தும் இடமாக அமைத்து 
     வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கின் உச்ச ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது வண்டி கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கை அமைப்பது நல்லது.
     கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கில் உச்சஸ்தானத்தில் வீட்டின கேட் இருக்கின்ற போது வண்டி கார் நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.
     தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான தென்கிழக்கில் வீட்டின் கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக தென்கிழக்கு பகுதியாக இருப்பது நல்லது.
     மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்க்கின் உச்ச ஸ்தானத்தில் வீட்டின்  கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.
     மேற்கூறியவாறு உச்ச ஸ்தானங்களில் கேட்டை அமைத்து அதன் வழியே வண்டி வாகனங்கள் செல்லுமாறு அமைத்துக் கொள்ளலாம்.
     அப்படி இல்லாமல் இடபற்றா குறை உள்ளவர்கள் நீச ஸ்தானங்களில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடிய (இடம்) கேட் அமைக்க வேண்டிய சூழ்நிலை வருமேயானால் அந்த வழியை வண்டி வாகனங்கள் நிறுத்தவதற்கு மட்டும் அமைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு உச்ச ஸ்தானத்தில் கேட்டை அமைப்பது நல்லது.
பொதுவாக ஒரு வீட்டிற்கு பிரதான கேட் எந்த இடத்தில் இருக்க வேண்டுமென வாஸ்து  சாஸ்திர ரீதியாக பார்க்கும் போது பல விஷயங்கள் புலப்படுகிறது. அனைத்து திசைகளிலுமே நல்ல திசை தான் சிலர் குறிப்பிட்ட திசை தான் யோக திசை மற்ற திசைகள் கெடுதியை ஏற்படுத்த கூடிய திசை எனக்கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எந்த திசையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த திசைக்கு ஏற்றவாறு வீட்டின் அமைப்பு இருந்து விட்டால் எல்லா வகையிலும் அனுகூமான பலன்கள் உண்டாகும். பொதுவாக ஒவ்வொரு திசைக்கும் உச்ச ஸ்தானம் நீச்ச ஸ்தானம் என உள்ளது. உச்ச ஸ்தானத்தில் பிரதான கேட் வைத்தால் சுபிட்சங்கள் மேலோங்கும்.
வடக்கு திசை
     
வடக்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கை ஒட்டிய வடகிழக்கு பகுதி உச்ச ஸ்தானமாகும். வடமேற்கு பகுதி நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக வடகிழக்குப் பகுதியில் கேட் வைப்பது மிகவும் சிறப்பு. நெருக்கடி மிகுந்த ப-குதிகளில் வீட்டை சுற்றி அதிக இடம் விடாமல் வீடு கட்டும் போது பிரதான கேட்டானது. வடகிழக்குப் பகுதியில் வைத்து விட்டு அதற்கு நேராக வீட்டின் தலை வாசலும் வைத்துக் கொள்ளலாம். பெரிய இடங்களில் கட்டிடம் கட்டும் போது சுற்றி இடம் விட்டு கட்டினால் வடக்கை பார்த்த வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்குபுறம் அதிக இடம் விடும் பட்சத்தில் கிழக்கு புறம் அதிக இடம் காலியாக இருக்கும் போது அல்லது காலி இடத்திற்கு நேராக வடகிழக்கில் ஒரு கேட்டும் கட்டிடத்திற்கு வடகிழக்கில் தலைவாசல் அமைத்து தலை வாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட்டும் அமைத்து கொள்ளலாம். பொதுவாக ஒரு திசையில் கேட்டு வைக்கின்ற போது 2&க்கும் மேற்பட்ட கேட் வைக்கக் கூடாது. பொதுவாக வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையில் கேட்டின் தலை வாசல் வைப்பது சிறப்பு.
கிழக்கு திசை
     
கிழக்கு பார்த்த மனைக்கு வடக்கை ஒட்டிய வடகிழக்கு திசை உச்ச ஸ்தானமாகும் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தெற்கை ஒட்டிய தென்கிழக்கு திசை நீச்ச ஸ்தானமாகும்.  பொதுவாக கிழக்குப் பார்த்த மனை கொண்ட வீட்டிற்கு உச்ச ஸ்தானம் என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்கு மூலையில் சுற்று சூழல் அமையக்கூடிய பிரதான கேட் வீட்டின் தலை வாசல்  அமைவது மிக சிறப்பு. நெருக்கடி மிகுந்த இடங்களில் வடகிழக்கு திசையில் தலைவாசல் பிரதான கேட்க்கு நேராக அமைத்துக் கொள்ளலாம். கிழக்கு பார்த்த மனைக்கு கிழக்கு மற்றும் வடக்கு பக்கம் அதிக இடம் விட்டு கட்டினால் மனைக்கு வடகிழக்கில் பிரதான கேட் அமைத்து விட்டு அந்த கேட்டுக்கு நேராக காலி இடம் இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தில் வடகிழக்கில் பிரதான தலைவாசல் அமைத்து விட்டு  தலை வாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம் ஆக வடகிழக்கில் தலைவாசல் மற்றும் பிரதான கேட் அமைப்பது மிகவும் சிறப்பு.
தெற்கு திசை
     தெற்கை பார்த்த மனை உள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலை உச்ச ஸ்தானமாகும் மேற்கை ஒட்டிய தென்மேற்கு மூலை நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக பிரதான கேட் மற்றும் தலைவாசலானது கிழக்கு ஒட்டிய தென்கிழக்கு மூலையில் வைப்பது மிக சிறப்பு. நெருக்கடி மிகுந்த பகுதிகளில் தென்கிழக்கு மூலையில் தலை வாசல் வைத்து தலை வாசலுக்கு நேராக பிரதான கேட் வைப்பது சிறப்பு. வீட்டை சுற்றி தாராளமாக இடம் விட்டு கட்டுபவர்களுக்கு கிழக்கு புறம் அதிக காலி இடம் விட்டுக் கட்டினால் தெற்கு சுற்று சுவற்றில் தென்கிழக்கு மூலையில் பிரதான கேட் அமைக்க வேண்டும். கிழக்கு புறம் இடம் வீட்டு வீடு கட்டுகின்ற போது கிழக்கை ஒட்டிய தெற்கு திசையில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் வீட்டின் தலைவாசலுக்கும், பிரதான கேட்டிற்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும் அப்படி இருக்கும் சூழ்நிலையில் கட்டிடத்தில் தென்கிழக்கு மூலையில் அமையும் தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம். தெற்கை பார்த்த வீட்டிற்கு கட்டிடத்திற்கு தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட்டும் மனைக்கு தென்கிழக்கு திசையில் ஒரு கேட்டும் அமைத்துக் கொள்ளலாம்.
மேற்கு திசை
     மேற்கை பார்த்த மனை உள்ள வீட்டிற்கு வடக்கை ஒட்டிய வடமேற்கு மூலை உச்ச  ஸ்தானமாகும். தென்மேற்கு மூலை நீச்ச ஸ்தானமாகும் வீட்டிற்கு வடமேற்கு மூலையில் தலைவாசலும் மனைக்கு வடமேற்கு மூலையில் பிரதான கேட்டும், அமைப்பது மிக சிறப்பு. குறிப்பாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இடம் விடாமல் கட்டுகின்ற போது வடமேற்கு மூலையில் வீட்டின் கேட்டும் அதற்கு நேராக தலைவாசலும் அமைத்துக் கொள்ளலாம். சுற்றி இடம் விட்டு கட்டுகின்ற பொழுது மனைக்கு வடமேற்கில் கேட் அமைத்து கட்டிடத்திற்கு வடமேற்கில் தலைவாசல் அமைக்கும் போது சற்று வித்தியாசம் வரவும். அதற்காக தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம். ஆக மேற்கை பார்த்த வீட்டிற்கு வடமேற்கு மூலையில் தலைவாசல் மற்றும் கேட் வைப்பது மிகவும் சிறப்பு.
     பிரதான கேட்டிற்கும் தலை வாசலுக்கும் இடையே கழிவு நீர் குழாய் தண்ணீர் தொட்டி போர்வெல், திறந்த கிணறு போன்றவை இருக்க கூடாது. வாசலுக்கு நேராக பில்லர் குத்து போல சுவர், பெரிய மரம் மாடிப்படி, சமையலறை ஆகியவை இருப்பது நல்லதல்ல. பொதுவாக கேட்டிற்கு வெளிப்புறம் கூட நேராக மின் கம்பங்கள், வழியை மறைப்பது போல மரம் போன்றவைகள் இருப்பது நல்லதல்ல.
வீடு கட்டுவது பெரிதல்ல. அது பார்ப்பதற்கு அழகாகவும் மனதை கவரும் படியும் இருக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் எந்ததெந்த அறைகளை அமைக்கலாம். எங்கே பூச்செடிகளை வைத்து அலங்காரம் செய்யலாம். அமைக்கும் அறைகள் எத்தனை எத்தனை அடிகளில் இருந்தால் சுபிட்சமாக இருக்கும். குடும்பம் லஷ்மி கடாட்சத்துடன் விளங்கும் என யோசித்து யோசித்து வீட்டை கட்டுகிறோம். அதை சரியாக செய்து முடிக்க வாஸ்து கலை மிகவும் உறுதுணையாக விளங்குகிறது. சிறிய வீடோ, பெரிய வீடோ அதை வாஸ்துபடி கட்டினால் எந்த வித பிரச்சனைகளும் இன்றி வாழலாம். இனி எத்தனை அடி மனைகளால் சுபிட்சம் உண்டாகும். எத்தனை அடி மனைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என்பதனை காண்போம்.

    மனையின் நீள அகலங்கள் (அடிகளில்)


அடிகள்   பலன்கள்
6 நன்மைகள் ஏற்படும்
7 ஏழ்மை நிலை உண்டாகும்
8 இராஜ்ஜியம்
9 மிகவும் தீயது
10 பால் சோறு உண்டு
11 வளம், புத்திர சம்பத்து
12 ஏழ்மை,குழந்தை குறைவு
13 நோய், எதிரி உண்டு
14 நித்தம் பகை, நஷ்டம்
15 நிலை, பாதித்தல்
16 செல்வமுண்டு
17 அரச அந்தஸ்து கிடைக்கும்
18 நஷ்டம் பல உண்டாகும்
19 மனைவி, மக்கள் இழப்பு
20 மகிழ்ச்சி, வளம் பெருகும்
21 நன்மை, தீமை கலந்திருக்கும்
22 எதிரி அஞ்சுவான்
23 தீராத நோய் ஏற்படும்
24 மனைவிக்கு கண்டம்
25 தெய்வ அருள் கிடைக்காது
26 ராஜபோக வாழ்க்கை அமையும்
27 வளமும்,செல்வமும் பெருகும்
28 Êசல ஐஸ்வர்யமும் உண்டாகும்
29 உற்றார் உறவினர்களால் நன்மை
30 லட்சுமி தேவியே குடியிருப்பான்
31 நற்பலன்கள் உண்டாகும்
32 இழந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்
33 நற்பலன்கள் ஏற்படும்
34 வீட்டில் குடியிருக்கவே இயலாது
35 நல்ல வருமானம் கிட்டும்
36 ராஜயோக வாழ்க்கை அமையும்
37 வளமும்,மகிழ்ச்சியும் பெருகும்
38 காரியங்கள் தடைபடும்
39 ஆக்கமும்,வளர்ச்சி ஏற்படும்
40 எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்
41 குபேரன் போல வாழ்க்கை
42 லட்சுமி கடாட்சம் ஏற்படும்
43 கெடுதி உண்டாகும்
44 கண்களில் பாதிப்பு ஏற்படும்
45 பிள்ளைகளால் நற்பலன்
46 வீட்டில் வாழ முடியாது
47 ஏழ்மையான நிலை ஏற்படும்
48 நெருப்பால் கண்டம் உண்டாகும்
49 கெட்ட ஆவிகளால் தொல்லை
50 நற்பலன்கள் அமையும்
51 வழக்குகள் ஏற்படும்
52 செல்வம் செழிக்கும்
53 வீண் செலவு அதிகரிக்கும்
54 லாபங்கள் பெருகும்
55 உறவினர்களிடையே விரோதம்
56 புத்திர பாக்கியம் சிறக்-கும்
57 பிள்ளைகளால் கெடுதி
58 வீண் விரோதம் ஏற்படும்
59 நற்பலன் உண்டாகும்
60 பொன் பொருள் சேரும்
61 பகைமை வளரும்
62 வறுமையை ஏற்படுத்தும்
63 சேமிக்கவே முடியாது
64 எல்லா வகையிலும் நன்மை
65 பெண்களால் பிரச்சனை
66 அறிவாற்றல் பெருகும்
67 மனதில் பய உணர்வு ஏற்படும்
68 திரவியங்களால் லாபம்
69 தீயால் கண்டம் ஏற்படும்
70 அன்னியரால் லாபம் உண்டாகும்
71 பாசம் அதிகரிக்கும்
72 நல்ல லாபம் பெருகும்
73 வண்டி வாகனங்களால் லாபம்
74 பெயர் புகழ் உயரும்
75 சுகமான வாழ்க்கை அமையும்
76 பிள்ளைகளால் மனகவலை
77 சுக போக வாழ்க்கை
78 புத்திர தோவும்
79 கன்று காலி விருத்தி
80 லட்சுமி கடாட்சம் உண்டாகும்
81 இடி விழுந்து நாசமடையும்
82 ரோவும் அதிகரிக்கும்
83 மரண பயம் உண்டாகும்
84 சகல பாக்கியமும் கிட்டும்
85 அரச வாழ்க்கை அமையும்
86 அதிக இம்சை ஏற்படும்
87 தண்டனை அதிகரிக்கும்
88 சகல சௌபாக்கியம் கிட்டும்
89 பல வீடு கட்டும் யோகம் உண்டு
90 சகல யோகம் உண்டாகும்
91 நல்ல கல்வி யோகம் உண்டு
92 சகல ஐஸ்வர்யமும் ஏற்படும்
93 சொந்த நாட்டில் வாழ்வான்
94 அந்நிய தேசம் போவான்
95 வசதி வாய்ப்புகள் பெருகும்
96 வெளி நாடு செல்வான்
97 கப்பல் பயணம்,வியாபாரம் ஏற்படும்
98 வெளி நாட்டிற்கு செல்வான்
99 அரசனை போல நாட்டை ஆளும் யோகம்
100 எல்லா வளமும் கிட்டும்
பொழுது விடிந்து கண் விழிப்பது முதல் படுக்கைக்கு தூங்கச் செல்லும் வரை தினம் தினம் வாழ்க்கைக்கு, வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிக முக்கியமான தேவையானது பணம். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள் அன்றாட செலவுகள் போக மீதி பணத்தை சேமித்து வைப்பது என்பது எதிர்கால சந்தியினருக்கு நாம் செய்ய கூடிய உதவியாகும். வசதியுள்ளவர்கள் பணத்தை என்ன செய்வது, எங்கு சேர்ந்து வைப்பது, என்னென்ன நகை வாங்குவது என்று யோசிப்பார்கள். இப்படி வாங்கக் கூடிய ஆபரணங்களையும், சேர்த்து வைக்கும் பணத்தையும் மற்றும் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை வாழும் வீட்டில் வாஸ்து ரீதியாக எங்கு வைத்தால் அவை மேலும் மேலும் பெருகும் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என பார்த்து அந்த பகுதிகளில் தங்களுடைய சேமிப்புகளை வைத்து பாதுகாக்கிறார்கள். கால் சரவனுக்காகவும், நூறு, இருநூறு பணத்திற்காகவும் கொலை கொள்ளைகள் நடக்கும் இக்காலத்தில் எல்லாற்றையும் பாக்ங் லாக்கரில் வைப்பதே நல்லது என்றாலும் வாழும் வீட்டிலும் வாஸ்து ரீதியாக பணம் பொன் பொருள் பத்திரங்களை எங்கு வைப்பது என்று பார்ப்போம். பொதுவாக வீட்டின் தென்கிழக்கு மூலை, கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி, மேற்கு திசையை ஒட்டி பகுதிகள், வடமேற்கு பகுதி, வடக்கை ஒட்டிய மேற்கு, மேற்கை ஒட்டிய வடக்கு பகுதிகளில் பணப்பெட்டி, பீரோ, போன்றவற்றை வைக்கலாம். வசதியில் குறைந்தவர்களுக்கு சமையலறை, பூஜையறை, பெட்ரூம் எல்லாமே ஒரே  அறையாகத் தான் இருக்கும். ஒரே அறையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் பீரோவை வைப்பது சிறப்பு. அப்படி வைக்கப்படும் பணபெட்டி, பீரோ போன்றவை எந்த திசையை பார்த்து வைப்பது நல்லது என பார்க்கும் போது கிழக்கு அல்லது வடக்கு பார்த்ததுப் போல வைப்பது சிறப்பு.
     ஒரு வீட்டில் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென்கிழக்கு மூலையிலோ, அதிக எடையுள்ள பொருட்களை வைக்க கூடாத வடகிழக்கு மூலையிலோ பீரோ, பணப்பெட்டி போன்றவற்றை வைக்காமல் இருப்பதே நல்லது.
     புதிதாக வீடு கட்டுபவர்கள் அறைகளில் செல்ப் கட்டுவது, பெரிய ஜன்னல் வைப்பது போன்றவற்றினை தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, பகுதிகளில் அமைப்பதை தவிர்த்தால் அந்த இடத்தில் பீரோ பணப்பெட்டி போன்றவற்றினை வைத்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். மேற்கூறிய இடங்களில் பணப்பெட்டி பீரோ போன்றவற்றை அமைப்பதன் மூலம் வீட்டில் லஷ்மி கடாட்சம் உண்டாகும். ஆடை ஆபரணமும் சேரும், குறிப்பாக வீட்டின் வாசற்படிக்கு நேராக பீரோ, பணப்பெட்டி போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் உத்தமம்.
கிணற்று நீர், போர்வெல் நீர், மற்றும் சம்ப் நீர் போன்றவற்றை பைப்புகள் மூலம் மேலேற்றி மேல்நிலை தொட்டிகளுக்கு (அதாவது கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) அனுப்பி அதிலிருந்து பல குழாய்களை இணைந்து ஒரு மனையில் எத்தனை வீடுகள் உள்ளதே அத்தனை வீடுகளுக்கும் விநியோகம் செய்கிறார்கள். இப்படி அமைக்கப்படும் மேல்நிலை தொட்டிகளில் நீர் சேமிக்கப்படுவதால் வீட்டின் மேற்புறத்தில் எடை கூடுதலாகிறது. பொதுவாக கட்டிடங்கள் கட்டும் போது தென் மேற்கு மூலையானது உயர்ந்தும். மற்ற மூலைகள் தாழ்ந்தும் இருந்தால் தான் நற்பலன் உண்டாகும் என்பது வாஸ்துவின் விதி. மேல்நிலை தொட்டியானது தென்மேற்கு மூலையில் அமைக்கலாம் என பலர் கூறி வந்தாலும் ஆராய்ச்சி பூர்வாக வாஸ்துப்படி பார்க்கின்ற போது மேல் நிலை தொட்டியினை (கீணீtமீக்ஷீ ஜிணீஸீளீ) வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் அமைத்து விட்டு, இந்த தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது போல ஒரு வீட்டையோ அல்லது ஒரு அறையையயோ தென்மேற்கு மூலையில் அமைப்பது சிறப்பு, ஏனென்றால் வீட்டின் கட்டிடமானது தண்ணீர் தொட்டியை விட உயரமாக இருப்பது தான் வாஸ்துப்படி நல்லது. ஆக ஷ்ணீtமீக்ஷீ tணீஸீளீ-ஐ வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கிலோ, வடமேற்கிலோ அமைப்பது உத்தமம். கண்டிப்பாக ஒரு கட்டிடத்தில் அதிக எடையானது வடகிழக்கில் இருக்க கூடாது. இது மட்டுமின்றி வடகிழக்கு பகுதி உயரமாகவும் இருக்க கூடாது.
 இன்றளவில் பெரிய, சிறிய, வீடுகள் முதல் தங்களுடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சூழ்நிலை தண்ணீர் தொட்டிகளை அமைக்கிறார்கள். அதாவது சம்ப் இந்த சம்பில் சேமிக்கப்படும் நீரை கொண்டு (கிணறு போர்வெல் போன்றவற்றில் நீர் வற்றினாலும்) அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. சம்ப்பில் சேமிக்கப்படும் நீரானது அரசாங்கத்தால் சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்காக வினியோகிக்கும் தண்ணீராகும். இதை கார்ப்பரேஷன் வாட்டர் என்பார்கள். வீதியை ஒட்டி தரைமட்டத்திற்கு கீழே உள்ள பிரதான குழாயிலிருந்து, ஒரு சிறிய குழாயானது பிரிந்து வீடுகளுக்கு புகுந்து  கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் உள்ளே நீரை செலுத்தும் நிலத்தடி நீருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றாலும் கிணறு அமைக்க வாஸ்துப்படி எந்த விதிமுறைகளை கடைபிடிக்கிறோமோ அதே விதிமுறையை தான் கீழ்நிலை தொட்டியை (சம்ப்) அமைப்பதிலும் பயன்படுத்த வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் அல்லது வடக்கு மற்றும் கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடங்களிலும் சம்பினை அமைக்கலாம்.
      மாநகராட்டி குடிநீர் குழாய்களின் இணைப்பானது தெருவை ஒட்டி இருப்பதால் தெருப்புறத்தை ஒட்டியே சம்ப்பை அமைக்க வேண்டி உள்ளது. அப்படி அமைக்க வேண்டிய பட்சத்தில் முடிந்தவரை வடகிழக்கு மூலையில் அமைப்பது தான் சிறப்பு. வீட்டின் வாசலானது தெற்கு பார்த்தபடி இருந்தால் சம்ப்பை கிழக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும், மேற்கு பார்த்த படியிருந்தால் வடக்கு சுவற்றை ஒட்டியுள்ள இடத்திலும் அமைப்பது நல்லது. எந்தவொரு காரணத்திற்காகவும் சம்ப், கிணறு, போர்வெல் போன்றவற்றை தென்மேற்கு மூலையில் அமைக்கவே கூடாது. அப்படி அமைத்தால் பல்வேறு வகையில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள், ஆரோக்கிய பாதிப்புகள் போன்றவையும் ஏற்பட கூடும்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...