Tuesday, 23 May 2017

வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

வீடு குடி போக சிறந்த தமிழ்மா தங்கள் 


 ஆடித்திங்கள் ராவணன் பட்டதும். ஆலமேய்பேறும்பாரத மார்கழி. வீடிட்டான் புரட்டாசி இரணியன்.    மேவிய ஈசன் நஞ்சு உண்டது மாசியில்.  படிக்காமெரிந்தது பங்குனி . பாருக்குள்ளேகினன்மாபலி .ஆனியில்வீடிட்டில்லங்ட்டில்லங்குடிவேண்டினேர்ஓடிட்டேஇரந்து ண்பருலகிலே


1.ஆடி மாதத்தில் இராவண சம்ஹாரம் நடந்தது.

2.மார்கழி மாதத்தில் பாரதேபார் நடந்தது.

3.புரட்டாசி மாதத்தில் இரணிய சம்ஹாரம் நடந்தது.

4.மாசி மாதம் .பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது

5.மன்மதைன சிவெபருமான் ெநற்றிக் கண்ணால் எrத்த சம்பவம் பங்குனி

மாதத்தில் நடந்தது.

6.ஆனி மாதத்தில் மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்ைத இழந்து

பாதாளத்திற்க்கு ேபான சம்பவம் நடந்தது.

இந்த மாதத்தில்


சித்திரை

வைகாசி

ஆவணி

ஐப்பசி

கார்த்திகை

தை

புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் குடி போக கூடா மாதம்

• ஆனி மாதம் குடி போகக் கூடாது
(மகாபலி சக்கரவர்த்தி தமது ராஜ்ஜியம் இழந்தது)

• ஆடி மாதம் குடி போகக் கூடாது
(இராவணன் கோட்டையை கோட்டை விட்டது.)
• புரட்டாசி மாதம் குடி போகக் கூடாது
(இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.)
• மார்கழி மாதம் குடி போகக் கூடாது.
(துரியோதனன் தன் ராஜ்ஜியம் இழந்தது)
• மாசி மாதம் குடி போகக் கூடாது
(மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்கமுற்றார்)
• பங்குனி மாதம் குடி போகக் கூடாது.
(சிவன் மன்மதனை எரித்தது

குறிப்பு: அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது. அமிர்த யோகம் காலத்தில் கிரகப்பிரவேசம் செய்து நல்லது.  வீட்டின் உரிமையாளர்  குடி போக விரும்பும் மாதத்தில் பிறந்தவர் என்றால், அந்த மாதத்தில் குடி போகக்கூடாது.  சந்திராஷ்டமம், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது. 

கிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்


கிரகப் பிரவேச விழாவை , ஒரு நல்ல நேரம் பார்த்து தான் செய்ய வேண்டும் , வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் முதல் தடவையாக நுழைகின்ற போது கிரகப் பிரவேச சடங்கை செய்கிறார்கள். கிரகப் பிரவேச ஏன் செய்கிறோம் என்றால் எந்த ஒரு கெட்ட சக்தியும் இருக்க கூடாது என்பதற்காக , அதனால் தான் நாம் முன்எச்சரிக்கையாக கிரகப் பிரவேசதை நல்ல நேரத்தில் நடத்துகிறோம் , நாம் பூஜை , ஹோமம் ஆகியவற்றை புரோகிதர் உதவியோடு செய்கிறோம் .
பால்அத‌ன்படி, ‌சி‌த்‌திரை, வைகா‌சி, கா‌ர்‌த்‌திகை, தை ஆ‌கிய மாத‌ங்க‌ள் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் செ‌ய்ய ஏ‌ற்ற மாத‌ங்களாகு‌ம். மேலு‌ம், ச‌ந்‌திராஷ‌்டம நா‌ட்க‌ளிலு‌ம், க‌ரி நா‌ளிலு‌ம் சுப கா‌ரிய‌ங்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது. குடு‌ம்ப‌த் தலை‌வி‌க்கு ‌வீ‌ட்டு ‌வில‌க்கான நா‌ளி‌ல் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் செ‌ய்து ந‌ல்லத‌ல்ல. அரை குறையாக க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட ‌வீ‌ட்டி‌ற்கு ‌கிரக ‌பிரவேச‌ம் நட‌த்துவதை த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.
அ‌மி‌ர்‌த யோக‌ம் கால‌த்‌தி‌ல் ‌கிரக‌ப்‌பிரவேச‌ம் செ‌ய்ய ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பானதாகு‌ம். ஆனா‌ல் ‌வீ‌ட்டி‌ன் உ‌ரிமையாள‌ர் இ‌ந்த மாத‌ங்க‌ளி‌ல் ஏதேனு‌ம் ஒ‌ன்‌றி‌ல் ‌பிற‌ந்‌திரு‌ந்தா‌ல் அ‌ந்த மாத‌த்‌தி‌ல் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் நட‌த்த‌க் கூடாது.
பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது நல்லது.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை: வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை பின்பற்றுவது நலன் தரும்.

கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
கோ பூஜை: வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, அதற்கு பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.
பால் காய்ச்சுதல்: புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் போங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
கலச பூஜை: மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.
யாக வழிபாடு: இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.

கலசதாரை வார்த்தல்: மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.
அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி  லட்சுமி கடாட்சம் உண்டாகும். அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.
கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.
குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்.
கிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் :
ஞாயிற்றுக் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
திங்கட்கிழமைகளில் வீடு கிரகப்பிரவேசம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிட்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் குடும்ப ஒற்றுமை குறையும்.
புதன் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கை வளம் பெற்று வாழ்வர்.
வியாழக்கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் பெருமையும் நல்ல வாழ்வும் உண்டு.
வெள்ளிக் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் மனைவிக்கு ஆகாது.
சனிக்கிழமைகள் கிரகப்பிரவேசம் செய்தால் சுகமான வாழ்வு உண்டு.கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நட்சத்திரம் :
அசுவினி
ரோகிணி
மிருகசீரிடம்
புனர்பூசம்
பூசம்
மகம்
உத்திராடம்
உத்திரட்டாதி
அஸ்தம்
சுவாதி
அனுஷம்
மூலம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
ரேவதி
கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற லக்னங்கள்
ரிஷபம்
மிதுனம்
கன்னி
விருச்சகம்
கும்பம்.




1 comment:

  1. The blog was absolutely fantastic! A lot of great information which can be helpful in some or the other way. There is another popular Online Homam and Pooja services website which is related to your page content. Keep updating the blog, looking forward to more contents…Great job, keep it up.

    ReplyDelete

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...