Monday, 15 May 2017

பூசை அறையை எப்படி வைப்பது?

        பூசை அறையை எப்படி வைப்பது? 


 சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.

இன்றைய அவசர யுகத் தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் கூடச் செய்ய நேர மின்றி நாங்கள் ஓடிக் கொண்டி ருக்கிறோம். இந்நிலையில் வீட்டில் பூஜை யறையில் ஒருசில நிமிடங்கள் கண்கள் மூடிப் பிரார்த்திப்பது மன நிம்மதியைத் தருவதாக அநேகர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
மனிதனுக்கு வாழ்க்கை யில் நிம்மதியைத் தரு வது ஆன்மீகமே. வாழ்க்கையில் ஏற் படும் சுகதுக்கங் கள் எல்லாவற்றிற்கும் தெய்வ வழிபாடு முக்கியமான தாகின்றது.
இதில் எந்த தெய்வத்துக்கு எதை எப்படிச் செய்தால் நல்லது என்று எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இன, மத, மொழி பேதமின்றி நம் நாட்டு மக்கள் கோயிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி தினசரி பூஜைகள், விரதங்கள், ஹோமங் கள், யாகங்கள் என்று பலவாறாக தெய்வத்தை வணங்குகிறார்கள். இப்படி இருக்க நம் நாட்டு பெண்கள் தினமும் வீட்டில் பூஜை செய்வது என்பது ஒரு பழக்கமாக உள்ளது. நாம் தெரிந்து சில விஷயங்களை செய்கி றோம். தெரியாமல் பல விஷயங்களை செய் கிறோம். இதில், நாம் நல்லது என்று நினைத் துக் கொண்டு பல தவறான பூஜை விதி களை கடைப் பிடிப் பதும் உண்டு. வீட்டில் அனை வரும் நலமுடன் வாழவும், சந்தோஷ மாக இருக்கவும் பூஜையறையை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
சில வீடுகளில் இடப்பற்றாக்குறை. காரணமாக படுக்கை அறைச் சுவரில் அல்லது சமையலறைச் சுவரில், உள்ள அலுமாரிகளைப் பூஜை அறையாகப் பயன்படுத்துவதுண்டு. சில சமயங்களில் மரப்பெட்டிகளில் கடவுளின் படங்களை வைத்து வழிபாடு செய்யப்படுவதும் உண்டு.
பூஜையறை என்பது நம் வீட்டில் உள்ள கோவில் என்றே சொல்லலாம். பூஜையறையில் முதலில் தெய்வ படங்களை சுவரில் மாட்டும் பொழுது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும். படங்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். இறந்தவர்கள் படங்களை பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.
சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. குடும்பம் சந்தோஷமாக, ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புவது உண்டு. ஆகையால் உக்ர தெய்வங்களை வழிபடுவது அவ்வளவாக உகந்தது அல்ல.
உக்ர தெய்வங்களை வழிபடுவது என்றால் அதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சில வீடுகளில் சில உக்ர தெய்வங்களை வழிபடுபவர்கள் உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் தனியாக சுத்தமாக இருக்க வேண்டும்.
தெய்வச் சிலைகளை சில பேர் வீட்டில் வைத்து பூஜை செய்வது உண்டு. சிலைகள் எப்பொழுதுமே 2 அடிக்கு மேல் இருக்க கூடாது. மண் சிலைகளாக இருந்தாலும் சரி, விக்ரஹங்களாக இருந்தாலும் சரி, முறையாக பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வைத்திருந்தால் நமக்கு பலன் ஏதும் இல்லை.
பூஜை அறை என்று தனியாக இருந்தால் பூஜை முடிந்தவுடன் கதவுகளை சாத்தி வைப்பது நல்லது. பெண்கள் சுத்தமாக இருக்கும் பொழுது மட்டுமே வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது. அப்படி இல்லாதபட்சத்தில் அது தெய்வ குற்றமாகும்.
பூஜைக்கு ஏற்ற மலர்கள் என்று பார்த்தால் வாசனை மலர்களால் மட்டுமே அர்ச்சனை செய்வது நல்லது. கண்டிப்பாக செவ்வரளி மலர் வீட்டில் பூஜைக்கு ஏற்றதல்ல. கோவிலில் துர்க்கைக்கு மற்றும் அம்மனுக்கு அரளி பூ உகந்தது. ஆனால் வீட்டில் அரளி பூவால் அர்ச்சனை செய்யக் கூடாது. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல் பெண் தெய்வங்களுக்கு மல்லிகை, முல்லை, மற்றும் ஜாதி, தாமரை இப்படி அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்லது.
தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும் அது பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது. ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும். தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக் கக் கூடாது. பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜையறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. சிலபேர் ஷிலீntiசீலீnt valuலீ என்று முப்பாட்டனார் காலத்தில் உள்ள படங்கள், கடையில் விற்கும்சக்கரம், இயந்திரங்கள், உறவினர், நண்பர்கள் கொடுத்தார்கள் என்று பூஜையறை முழுவதும் படங்களை ஒட்டி அது பாதி கிழிந்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் படங்களை நாம் கடலில் போடுவது நல்லது. வீட்டில் பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள். ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்யலாம். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.

பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில் தெய்வ படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால் தெய்வம் நம்மில் குடிகொள்ளும். சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.              

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...