இந்து மதம் எங்கிருந்து வந்தது?
நான்காயிரம்
வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள்
மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு
சாட்டைகளாலும் விரட்டுங்கள்.
வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி.
இமயமலைக்
குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன
திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள்
மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து.
அது
அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும்
தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி
குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய
பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.
பூமியே
புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின்
தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது
யார்? நடுங்கினர்.
இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.
அவர்களின்
மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த
சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு
பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.
விளைவு…!
கண்டுபிடிக்கப்பட்டது
தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான்
தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான்
உற் றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால்
டிவைன் (Divine) என வழங் கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான்
அய்ரோப்பாவுக்கு நகர்ந் தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும்
சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக்
கொண்டே இருந்தான்.
அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.
நமக்கும்
மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம்
கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம்.
உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத்
No comments:
Post a Comment