"ஆன்மிக மந்திரத்தில் அறிவியல்"
ஒலிக்கு மகிமை உண்டா?
ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா?
ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா?
மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது.
மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை?
க்ளாட்னி ப்ளேட்ஸ்
ஜெர்மானியரான
எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு
3-4-1827) ஒரு சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல்
விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு அவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை
சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற நூலில் எழுதி வெளியிட உலகமே
பரபரப்புக்குள்ளானது! இவரது பிறப்பிலும் இறப்பிலும் கூட இசை ஒரு தற்செயல்
ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்! பிரபல இசை மேதை மொஜார்ட்
பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன் மறைந்த
அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்!
க்ளாட்னிதான்
ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும்
என்பதை அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின்
ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன்
ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து
தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று
இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது
என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி
வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!
நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு
மாமன்னன்
நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர்
முன் அவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின்
விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில்
வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000
ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி
ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்! நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000
ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.
காவராண்ட் ஆராய்ச்சி
இதைத்
தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத்
தீவிரமாக ஆராயத் தொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச்
சேர்ந்த காவாராண்ட் என்ற எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை
ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம்
அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது.
அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக
இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.
ஒரு
நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின்
அதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு
ஏர்கண்டிஷன் இயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே
இயங்கிக் கொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை
அவர் கண்டறிந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப்
பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும ஒலி அலைகளை
ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள்
மூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை
அவர் கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன்
மிருகங்கள் துடிதுடித்து இறந்தன! மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல,
இந்த ஒலி அலைகள் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை
ஏற்படுத்தின!
சாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும்
கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு மேலே உள்ள
(அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை
அதிகம்!
நாஸாவின் கண்டுபிடிப்பு
ஒலியியல்
விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில்
முன்னேற்றம் அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன்
மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று
கண்டுபிடித்து அறிவித்தது!
கலிபோர்னியாவில்
ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை
ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய
ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை
எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.
மந்திரங்களைக் கண்ட மகரிஷிகள்
இந்த
ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும
ஆற்றலையும் அறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள்
மந்த்ர த்ருஷ்டா என அழைக்கப்பட்டனர்.
எந்த
ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக்
கண்டதால் வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க
வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள்
கையில் இது சேரக் கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட
ஆன்மீக, உள, உடல் வலிமை தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு¨றையில்
மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள் பலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும்
கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத்
தேவைகளாகக் குறிப்பிட்டனர்.
ஆனால்
எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும்
புலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு
உட்பட்ட பிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.
காயத்ரி மந்திர மகிமை
அமெரிக்க
விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை
ஆராய்ந்தார். வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த
மந்திரம் அபூர்வமானது. அது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல்
தூரம் வரை சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது!
No comments:
Post a Comment