Monday, 16 February 2026

*கல்யாணமாம் கல்யாணம்*


 *கல்யாணமாம் கல்யாணம்*

முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா...
ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.
சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.
மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.
விஷேசத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
வழ வழப்பான சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.
விசேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.
சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.
இப்படியாக.. ஒரு விசேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.
எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.
இப்போல்லாம்....
பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.
காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.
விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!


 உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!

🌷 உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
🔵 கட்டை விரல்;
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
🔵ஆள்காட்டி விரல்;
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
🔵நடுவிரல்;
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
🔵மோதிரவிரல்;
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
🔵சிறுவிரல்;
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
🔵உள்ளங்கை;
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
🔵மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உனது வேண்டுதல் உண்மை எனில் இறைவனை ஏன் போலி பொருட்களால் அபிஷேகம் செய்கிறாய்?


 உனது வேண்டுதல் உண்மை எனில் இறைவனை ஏன் போலி பொருட்களால் அபிஷேகம் செய்கிறாய்?

அந்த திருமேனியும் உனது உடல் போன்றுதான்
கலப்பட எண்ணெய்
கலப்பட சீயக்காய்
கலப்பட திரவியப்பொடி
கலப்பட பால்
கலப்பட தயிர்
கலப்பட நெய்
கலப்பட தேன்
கலப்பட சந்தனம்
கலப்பட மஞ்சள்
கலப்பட பன்னீர்
கலப்பட விபூதி
கொஞ்சம்கூட மனம் இன்றி இப்படி கலப்பட பொருள்கொண்டு அபிஷேகம் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் - வழிபட்டால் பலன் கிடைக்குமா?
நீ நிஜமாக நடந்துக்கொள்ளாமல் இறைவன் மட்டும் உனக்கு நிஜமாக அருள்புரியவேண்டும் என நினைப்பது நியாயமா?
எவனோ கலப்பட பொருளால் பணம் சம்பாதிக்க நீ ஏன் பாவத்தை சம்பாதிக்கவேண்டும்?
நன்கு யோசி ....!
வெறும் நீர் கொண்டு அபிஷேகம் செய்தாலே போதும்
அல்லது பூஜை இடத்திலேயே ய பிழிந்த பழச்சாறு அல்லது இளநீர் போதும்
அபிஷேகம் நிஜமானதாகவும் தரமான பொருளால் அமைந்தால் அதுவே இறைவனின் மனதுக்கு இதமானதாகும்
கலப்பட பாலியஸ்டர் துணியை தவிர்த்து பருத்தி துணிகளை இறைவனுக்கு சாற்றி அருள் பெறு
பித்தளையை தங்கம் என ஏற்பாயா? உனக்கு ஒரு நியாயம் இறைவன் திருமேனிக்கு ஒரு நியாயமா?
அற்புதமான ஆயிரம் வருடம் தொன்மையான அருள்பாலிக்கும் இறைவன் திருவுருவத்தை உன்சுயநலத்தால் பாழாக்கினால் இறைவன் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டார்
நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தீயதை கோவிலுக்கு செய்யாதே!
இறைவனின் அருள் பெற உண்மையாக நடந்துக்கொள்
அனைத்துமே இயற்கையாக கிடைக்கிறது மனம் இருப்பின் தேடினால் கிடைக்கும்
கறந்த பசும்பால், பசுந்தயிர், நல்ல தரமான நெய் இன்றும் கிடைக்கிறது
சந்தன கட்டையை அரைத்து சிறிது சந்தனம் போதும்
நாட்டு ரோஜா, வெற்றிவேரை ஊறவைத்து பன்னீர் தயாரிக்கலாம்
தரமான தேன் கிடைக்கிறது
சீயக்காய், மஞ்சள் வாங்கி அரைத்து பயன்படுத்தலாம்
கண் எதிரில் எள் போட்டு செக்கில் நல்லெண்ணைய் ஆட்டி பெறலாம்
பசும்விரட்டியை எரித்து சாம்பலை நன்கு சல்லித்து வீபூதியை உருவாக்கலாம்
இது அவசர உலகம் என்பதெல்லாம் பொய், சோம்பேரித்தனம் மற்றும் நிஜமான பக்தி இல்லாமல் "பரம்பொருளான" இறைவனை ஒரு “தரும் பொருள்” என நினைப்பதுதான் காரணம்
யாரோ சிலர் முறைகேடாக பணம் சம்பாதிக்க பக்தியை ஒரு கருவியாக்கி, அந்த கலப்பட பொருளை விற்பதும்
அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்து பலன் தேடும் அப்பாவி பக்தன் பாவத்தை சம்பாதிக்கவேண்டுமா

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!


 தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட்ல சொல்லுங்க!!!!!!
திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
பொள்ளாச்சி - தேங்காய்
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பூர் - பனியன்
கும்பகோணம் - வெற்றிலை
ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு
ஈரோடு - மஞ்சள்
தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
நீலகிரி - தைலம்
ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை
செட்டிநாடு - பலகாரம்
திருபுவனம் - பட்டு
திருப்பாச்சி - அரிவாள்
காஞ்சிபுரம் - பட்டு
திண்டுக்கல் - பூட்டு
பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி
கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
குளித்தலை - வாழைப்பழம்
ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி
நாமக்கல் - முட்டை
பல்லடம் - கோழி
குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா
திருச்சி - லால்கடை பூந்தி

எது... மரணம்

 எது... மரணம்

கழுத்துக்கு கீழாக இயங்க மறுக்கும் மனிதனும் உயிரோடு இருக்கிறான்
கழுத்துக்கு மேலாக இயங்கும் மறுக்கும் மூலை சாவு அடைந்த மனிதனும் உயிரோடு இருக்கிறான்..
அப்படியானால் கழுத்துக்கு மேலான பகுதியிலும் உயிரில்லை கழுத்துக்கு கீலான பகுதியிலும் உயிரில்லை என்றால் உயிர் எங்கே தான் இருக்கிறது..
நவீன விஞ்ஞானம் இதை வெளிப்படுத்த மறுக்கிறது
உண்மையில் இந்த நவீன விஞ்ஞானத்தால் உயிர் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்று தான் நான் கருதுகிறேன்..
தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை உருவாகி வளரும் காலங்களில்
உயிர் இல்லை அது பிறந்த பின்பு சுவாசித்த பின்பு தனித்த உயிராக மாறுகிறது..
தனி சுவாசம் பெற்ற பின்பு சிசுவாக மாறும் பிண்டம் தாயின் வயிற்றுக்குள் வளரும் போது உயிரற்றதாக வளர்கிறதா உயிரில்லாமல் அது எப்படி வளரும்
உண்மையில் சிவம் போற்றும் சைவம் என்னதான் சொல்கிறது எனக்கு தெரியாது
ஆனால் நம்முடைய அப்புச்சிகள் ஐயன்கள் சித்தராய் வாழ்ந்து மறைந்த அவர்கள் சொல்லியது தெரியும்
உக்கிரமமான பழிவாங்கும் வீரர் பக்தர் கருப்பராயர் போன்ற கோவில்களில் சப்த கன்னிகள் என்று ஏழு கன்னிகள் வைத்திருக்கிறார்களே அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன.
அவைகள் மனித சடலத்தில் இயங்கி உயிரை உருவாக்கும் சக்தி நிலையங்கள் தான்
சிவம்
பைரவம்
வரம்.... ஷம்போ
மனிதன் உடம்புக்குள் இயங்கும் ஆறு சக்கர சூட்சும புள்ளிகளும்
தலைக்கு மேலாக ஏழாவதாக தலைக்கு வெளியே இருக்கும் சூட்சும புள்ளியும்
உடலுக்குள் இருக்கும் ஆறு நிலையங்களை சரியாக பராமரித்தால் உடலுக்கு வெளியே இருக்கும் ஏழாவது ஞான ஆரோக்கியத்தை அதிகப்படுத்த முடியும் அந்த ஞான ஒளி வட்டம் தன்னுடைய தொடர்பை துண்டித்துக் கொண்டால் அல்லது கீழே உடலுக்குள் இருக்கும் ஆறு நிலையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்படும் அந்த இணைப்பு துண்டித்தால் அது உயிரிழப்பாக மாறுகிறது...
தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பும் ஒரு சித்துக்களை ஐயன்கள் சிறுகச் சிறுக ஒவ்வொரு சக்தி நிலையங்களில் இருந்தும் அந்த சக்தி நிலையங்களை அதனுடைய இயக்கத்தை குறைத்து அதிலிருந்து தன்னுடைய ஆன்ம பற்றை கணக்கிட்டி குறைத்துக் கொள்கிறார்கள் படிப்படியாக எந்த நிலையில் இருந்து எந்த சக்கரத்துக்குள் போக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதிலிருந்து மெதுவாக விடுபட்டு தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறார்கள்
இப்படி ஜீவனை விரும்பி விடுவித்துக் கொண்டால் அது ஜீவ சமாதி..
இந்த முயற்சிக்கு முன்பாக ஒரு மனிதனுடைய மரணத்தை மிகவும் ஆழமாக அவர்கள் ஆராய்ந்து இருக்கிறார்கள்
நான் பலமுறை சொன்னது தான் கண்கள் திறக்காமல் வாய் திறக்காமல் மலம் சலம் கலியாமல் எவருடைய உயிர் உடலை விட்டு வெளியேறுகிறதோ அந்த உடல் தான் சாவம்
மற்றைய உடல்கள் பிரேதம் பிணம்..
சவம் விட்டு சென்ற ஆத்மா பிறப்பதில்லை என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அதற்குப் பின்பாக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவதில்லை 16 நாட்களுக்கு மேல் எந்த பந்தமும் இல்லை மாண்டவரோடு எந்த தொடர்பும் இல்லை என்று சொல்கிறார்கள்
உங்கள் முன்னோர்களை நீங்கள் வணங்குவது உண்மையிலேயே அவர்களுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால் ஒரு மரியாதை செலுத்துவதாக இருந்தால் சரி அது உங்கள் விருப்பம் ஆனால் நீங்கள் வணங்குவதால் தான் அவர்கள் அங்கே வாழ்கிறார்கள் என்பது முட்டாள்தனத்தின் உச்சம்
ஓர் உயிர் பிரிந்த பின்பு அது அதனுடைய பிரார்த்தனையின்படி அடுத்த பிறப்பை நோக்கி நகர்கிறது
அல்லது சிவஜோதியில் கலந்து ஆண்மை நிலையில் இருந்து ஜோதி நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறது ஜோதி நிலைக்கு மாறிய ஒரு ஆத்மாவோடு நீங்கள் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது அதேபோல் மறுபிறப்பு பயணத்திற்குள் புகுந்த ஆன்மாவோடு நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது அது அடுத்த பிறப்பில் அது எங்கோ அதனுடைய வாழ்வை தொடங்கி இருக்கும் எந்த ஆத்மா சிவனை நோக்கி நகர்ந்து எந்த பிறப்பில் ஆத்ம நிலையிலிருந்து விடுதலை அடைந்து ஜோதி நிலையை அடைகிறதோ அது அத்தோடு பிறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுகிறது
சரி முருகா இதெல்லாம் இன்னைக்கு எதற்காக பேசுகிறாய் என்று கேட்கிறீர்களா.
இந்த உங்களுக்கு சவத்துக்குள் இருக்கும் ஆறு ஜெனரேட்டர் யூனிட் ரீசெட் செய்வதற்கும் அதனுடைய தூசு தொகுப்புகள் அகற்றி நல்லபடியாக அவை இயங்குவதற்கும் வரும் சிவராத்திரி நாளில் நீங்கள் இரவு விழித்திருந்தால் முடிந்தவரை குறைவயிறாக விழித்திருந்தால் இறை ஆற்றல் ஆறு நிலைகளிலும் உள்ள சின்ன சின்ன பழுதுகளை சரியாக்கி தருவார்கள்... சிவ தூதுவ சக்திகள்..
இதை நம்புவதும் நம்பாமல் போவதும் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பதும் விழித்திருப்பதும் விழித்திருக்காமல் போவதும் உங்கள் உடைய விருப்பம்
கோயில்கள் எப்படி ஒரு சக்தி நிலையை சரியாக்கும் இயந்திரமாகத்தான் வடிவமைத்திருக்கிறார்கள் பழைய கற்க கோயில்கள் உங்கள் ஊர்களுக்கு அருகில் இருந்தால் நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஈஷா வளாகத்தில் பெரிய அளவில் கொண்டாட்டம் தொடங்குகிறார்கள் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்
பிரைன் உயிரில்லை பிரைனுக்கு ஆக்சிஜனை அனுப்பும் சப்போர்ட் ஆர்கன்களும் உயிரில்லை...
ஷம்போ 🙏
இதை முட்டாள்தன என விமர்சிக்கும் அறிவாளிகளை வரவேற்கிறேன் 🤠🥸😏🤫😝🤪😁😫
ஆசீர்வாதங்கள்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி அன்று அஸ்தமனத்திலிருந்து அடுத்த நாள் உதயம் வரைக்கும் ஆன காலகட்டத்தில் நீங்கள் அமைதியாய் விழித்திருக்க பழகுங்கள் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை அது தரும்
(😝😁 ரொம்ப ஆழமா போய் பேசினால் இப்போது அரை மெண்டல் என்கிறார்கள் அப்புறம் என்னை முழு மெண்டல் ஆக்கி விடுவார்கள் ஆதலால் கொஞ்சம் மேம்போக்காக பேசியிருக்கிறேன் மாப்பிள்ளை நாம் தனியாக பேசிக்கொள்வோம்

15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீவசமாதி


 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீவசமாதி

முஞ்சிகேசர் இந்த பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 10,15 பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது.
யார்? இந்த முஞ்சிகேசமுனிவர்.
சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான்.அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ ஷேத்ரங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார். அவ்வாறு பல ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன் படி கார்கோடகன் கார்கோடக முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ ஷேத்ரங்களை வழிபடுகிறார்.
கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்.
நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது. சுனந்த முனிவர் சரி இந்த முஞ்சிகேச முனிவர் யார்?
சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து, வளர்ந்தது. இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். கேசம் என்றால் தலை. 20 ம் நூற்றாண்டில் கூட ரமணமகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்து ஈசனின் தரிசனத்தை பெற்று இருக்கிறார்கள்.
அன்று சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.
கம்பீரமாக திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவர் வீற்று இருக்கிறார்.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் தான் திருவாலங்காடு இருக்கு.ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் ராகு, கேது தோஷம் சரியாகும்.
இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது

ஆறாம் பாவகமும் அறுசுவை உணவும்

 💐💐 ஆறாம் பாவகமும் அறுசுவை உணவும்

ஆறாம் பாவகம் (ஷட்ரு ஸ்தானம்) என்பது நோய், கடன், சண்டை, சேவை, உடல் நலம், ஜீரண அமைப்பு ஆகியவற்றை குறிக்கும். உணவு பழக்கம் மற்றும் அதன் விளைவாக உருவாகும் நோய்கள் ஆகியவை இந்த பாவகத்தின் கீழ் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக அறுசுவை உணவு (இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு) – இவை உடல் நலத்துடன் நேரடி தொடர்புடையவை.
1️⃣ ஆறாம் பாவகம் – ஜீரண சக்தி
உணவை உடல் எவ்வாறு ஏற்கிறது, ஜீரணம் செய்கிறது, அதனால் நலம் அல்லது நோய் உருவாகிறது என்பதைக் காட்டுவது ஆறாம் பாவகமே.
2️⃣ அறுசுவை
ஆயுர்வேதத்தில் அறுசுவை உணவு உடலின் தாது சமநிலையை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இது சரியாக இல்லையெனில் ஆறாம் பாவகத்தால் நோய்கள் வெளிப்படும்.
3️⃣ ஆறாம் பாவகாதிபதி நிலை
ஆறாம் பாவக அதிபதி பலமாக இருந்தால் நல்ல ஜீரணம், உணவைக் கட்டுப்படுத்தும் ஒழுக்கம் இருக்கும்.
பலவீனமாக இருந்தால் தவறான உணவு பழக்கம், அமிலம், வயிற்று கோளாறு போன்றவை ஏற்படும்.
4️⃣ புதன் மற்றும் அறுசுவை
புதன் நரம்பு, ஜீரணம், உணர்வு ஆகியவற்றை குறிக்கிறார். புதன் பாதிக்கப்பட்டால் உணவில் சமநிலை இல்லாமல் இருக்கும்.
5️⃣ சுக்கிரன் – சுவை விருப்பம்
சுக்கிரன் பலமாக இருந்தால் இனிப்பு, சுவையான, ஆடம்பர உணவுகளுக்கு ஈர்ப்பு இருக்கும். அதீதமாக இருந்தால் சர்க்கரை, கொழுப்பு தொடர்பான நோய் வரும்.
6️⃣ செவ்வாய் – கார சுவை
செவ்வாய் பலமாக இருந்தால் கார உணவுக்கு விருப்பம். பாதிக்கப்பட்டால் அல்சர், அமிலம் போன்ற பிரச்சினைகள்.
7️⃣ சனி – கசப்பு / துவர்ப்பு
சனி தொடர்பு இருந்தால் சுருக்கமான உணவு, கசப்பு சுவை, ஒழுக்கமான உணவு பழக்கம். ஆனால் பாதிப்பு இருந்தால் நீண்டகால ஜீரண நோய்.
8️⃣ ராகு / கேது – அசாதாரண உணவு பழக்கம்
ராகு இருந்தால் விசித்திர சுவைகள், வெளிநாட்டு உணவு, அதீத ஆசை.
கேது இருந்தால் உணவில் அலட்சியம் அல்லது விருப்பமின்மை.
ஆறாம் பாவகத்தை உணவுடன் ஒப்பிட காரணம் மற்றும் உணவும் ஆறாம் பாவக காரகத்துவத்தில் ஒன்று.
ஜோதிடத்தில் ஆறாம் பாவகம் (ஷட்ரு/ரோக ஸ்தானம்) நோய், கடன், சண்டை மட்டும் அல்ல; உடல் நலம், ஜீரண அமைப்பு, தினசரி பழக்கம், சேவை மனப்பான்மை போன்றவற்றையும் குறிக்கிறது. இதனால் உணவுடன் ஆறாம் பாவகத்திற்கு ஆழ்ந்த தொடர்பு உள்ளது.
1️⃣ ஜீரண அமைப்பின் பாவகம்
உணவு உடலில் சென்று ஜீரணமாகி, சக்தியாக மாறும் செயல்முறை ஆறாம் பாவகத்தால் பார்க்கப்படுகிறது. ஜீரணம் சரியில்லையெனில் நோய் உருவாகும்; ஆகவே உணவும் ரோகமும் இணைக்கப்படுகின்றன.
2️⃣ நோய் உருவாகும் மூல காரணம் – தவறான உணவு
அதிகம் அல்லது குறைவு, சீரற்ற சுவை, தவறான நேர உணவு ஆகியவை நோய்க்கு காரணம். நோயை குறிக்கும் பாவகம் என்பதால், உணவின் தரமும் அளவும் இங்கு மதிப்பிடப்படுகிறது.
3️⃣ தினசரி ஒழுக்கம் (Daily Routine)
ஆறாம் பாவகம் அன்றாட பழக்க வழக்கங்களையும் குறிக்கிறது. உணவு என்பது அன்றாடத்தின் முக்கிய அங்கம். சரியான ஒழுங்கு இருந்தால் ஆரோக்கியம் நிலைபெறும்.
4️⃣ உடல் எதிர்ப்பு சக்தி
ஆறாம் பாவகம் எதிரிகளை வெல்வதைக் குறிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு “உள் எதிரியை” வெல்வதே. அது நல்ல உணவால் மேம்படும்.
5️⃣ ஆயுர்வேத தொடர்பு
ஆயுர்வேதத்தில் அறுசுவை சமநிலை உடல் தாதுக்களை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சமநிலை குலைந்தால் ரோக பாவகத்தின் விளைவு அதிகரிக்கும்.
6️⃣ ஆறாம் பாவகாதிபதி நிலை
இந்த பாவக அதிபதி பலமாக இருந்தால் உணவு கட்டுப்பாடு, சீரான ஜீரணம்.
பலவீனமாக இருந்தால் உணவில் அளவுகோல் இல்லாமை, ஜீரண கோளாறு
ஆறாம் பாவகம் நோயை மட்டும் குறிக்காது; நோயின் மூல காரணமான வாழ்க்கை முறை, குறிப்பாக உணவு முறையையும் குறிக்கிறது. அதனால் ஜோதிடத்தில் ஆறாம் பாவகத்தை உணவுடன் ஒப்பிட்டு விளக்குகின்றனர்.

சிவபெருமானின் மூன்றாவது கண்..



சிவபெருமானின் மூன்றாவது கண்.. ஞானத்தை உணரும் கண்.. நெற்றிக்கண்ணின் சிறப்பு..!

🌟🔥🔱🙏🏽#மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களில் சிவபெருமான் அழித்தல் தொழிலைப் புரிபவர். அதாவது தீயவைகளை அழிப்பவர். சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உண்டு. அவற்றில் ஒன்று நெற்றிக் கண்.
🛕 #சைவ_சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்றாகும். இதன் காரணமாக இவர் முக்கண்ணன் என்றும், நெற்றிக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
👀 #இதில்_இரண்டு கண்கள் உலகை காணவும், மூன்றாவது கண் ஞானத்தை உணரவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது. இந்த மூன்றாவது கண் தான் சிவபெருமானின் நெற்றிக்கண் எனப்படுகிறது.
🌟👁️ #நெற்றிக்கண் என்பது வெறும் ஒரு உறுப்பு அல்ல, மாறாக அது ஞானத்தின் உறைவிடமாக கருதப்படுகிறது.
✨ 🔥#சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறக்கும் போது அண்ட சராசரம் முழுவதும் ஒளிரும் என்றும், அவரது ஞான ஒளி அனைத்தையும் நிரப்பும் என்றும் சைவ சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🔥 #சிவபெருமான் மிகவும் கோபமடைந்தால் தனது நெற்றிக்கண்ணைத் திறப்பார் என்றும், அப்போது அங்கிருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டு அனைத்தையும் சாம்பலாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
🔥👁️#நெற்றிக்கண் மூலம் சிவபெருமான் கடந்த காலம், இன்றைய காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
🌍 #சிவபெருமானின் நெற்றிக்கண் அழிவுக்கும் ஆக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. அவர் தனது கோபத்தால் அழிவை ஏற்படுத்தினாலும், தனது ஞானத்தால் உலகைப் படைக்கவும் செய்கிறார்.
🌟 #சிவபெருமானின் நெற்றிக்கண் என்பது ஞானம், கோபம், அழிவு, ஆக்கம் போன்ற பல அம்சங்களை குறிக்கிறது.
🔥 #அழிக்க_உதவும் இந்த மூன்றாவது கண்ணை மனதில் வைத்து தான் பலரும் இவரை அழிக்கும் கடவுள் என்று கூறுகின்றனர். இவரின் நெற்றிக்கண் ஞானக் கண் என்றும் சில நேரம் குறிப்பிடப்படுகிறது.
⚡ #இவருடைய நெற்றிக்கண் மூலமாக தோற்ற நிலைக்கு அப்பாற்பட்டவைகளையும் பார்த்து, தீய சக்தியை அழிப்பார் என்று நம்பப்படுகிறது.
🙏🏽👁️#நெற்றிக்கண் வரலாறு:
🙏💃🏽 #சதி_தேவியின் இறப்புக்கு பின், அவரின் மறைவை எண்ணி இவர் மீளா துயரத்தில் மூழ்கினார். அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
🌸 🔱🔥#அப்போது தான் சதி தேவி மீண்டும் பார்வதி தேவியாக பிறந்து, இவரை திருமணம் செய்ய தயாரானார்.
🌟 ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட, இவரின் தவத்தில் இருந்து இவரை எழுப்ப முடியவில்லை. அப்போது, இவரின் தவத்தை களைக்க, காதல் கடவுளான காமாதேவி அனுப்பி வைக்கப்பட்டார்.
🏹 #காமாதேவி இவரை அம்பு மூலமாக தாக்கிய போது, இவர் தன் நெற்றிக்கண்ணை திறந்து, காமாவை எரித்து சாம்பலாக்கினார். 🔥
🔱👁️ #சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் பற்றி இரண்டு கதைகள் நிலவுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருத்தை வலியுறுத்துகின்றன.
💃🏽🔱#பார்வதியின் விளையாட்டு:
ஒருமுறை, பார்வதி தேவி 🎋 விளையாட்டாக சிவபெருமானின் 👁️👁️ கண்களை மூடினார். இதனால் உலகம் முழுவதும் 🌍 இருளில் மூழ்கியது. சிவபெருமான், உலகை இருளில் இருந்து காப்பாற்றுவதற்காக 🔥 தனது உடலில் இருந்து அக்னியை வெளிப்படுத்தி நெற்றிக்கண்ணை உருவாக்கினார். இந்த நெற்றிக்கண் 🌞 உலகிற்கு ஒளியை வழங்கியது.
🔥🙏🏽 #சிவபெருமானின் நெற்றிக்கண் 🌀 அவசர காலத்தையும், தீமைகளின் அழிவு காலத்தையும் குறிக்கிறது. அவரது ஒரு கண் ☀️ சூரியனாகவும், மற்றொரு கண் 🌙 சந்திரனாகவும் கருதப்படுகிறது.
📜 இந்த கதை, பார்வதியின் லீலையின் ஒரு பகுதியாக சிவபெருமானின் நெற்றிக்கண் திறக்கப்பட்டதை விளக்குகிறது.
👹#அந்தகாசுரனின் பிறப்பு மற்றும் மரணம்:
சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் 🔥 வெப்பத்தால் பார்வதி தேவியின் கைகள் 💧 வியர்த்தன. அந்த வியர்வை துளி மண்ணில் விழுந்தபோது, அது ஒரு குழந்தையாக 👶 உருமாறியது. அந்தகா என்று அழைக்கப்பட்ட அந்த குழந்தையை, சிவபெருமானை வழிபட்டு வந்த குழந்தையில்லா அசுரனுக்கு 🏹 தத்து கொடுத்தனர்.
🛕 #தனது_பிறப்பைப் பற்றிய உண்மை தெரியாமல் வளர்ந்த அந்தகா, தனது தாயின் மீது ❌ காமவெறி கொண்டான். சிவபெருமானிடம் இருந்து ஒரு வரம் 🙏 பெற்றிருந்ததால், அவன் சிவபெருமானாலேயே ⚔️ கொல்லப்பட்டான்.
📜 #இந்த_கதை, உலகத்தில் நிலவும் அனைத்து விதமான ஆசைகளையும் நிராகரிக்கும் நெற்றிக்கண்ணின் இருட்டுப் பக்கத்தை வெளிக்காட்டுகிறது.
👥 #மனித இனம் வாழ்வதற்கு ஆசைகள் எவ்வளவு முக்கியம் என்பதையும், ஆசைகள் இல்லாமல் போனால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதையும் உணர்த்துகிறது.
🔷 #முதலாவது கதை 🌀 பார்வதியின் விளையாட்டின் மூலம் நெற்றிக்கண் திறக்கப்பட்டது, சிவசக்தியின் தத்துவத்தை விளக்குகிறது.
🔶 #இரண்டாவது கதை ⚖️ ஆசைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
ஓம் நமசிவாய நம ஓம் 🔥

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...