Thursday, 13 April 2017

ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்!

       ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/



மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.

தானங்களும் - அதன் பலன்களும்

1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்2. பூமி தானம் - இகபரசுகங்கள்3. வஸ்த்ர தானம்  (துணி) - சகல ரோக நிவர்த்தி4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி14. பால் தானம் - சவுபாக்கியம்15. சந்தனக்கட்டை தானம் - புகழ்16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.  

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...