Thursday, 6 April 2017

தும்பையும் விட வேண்டாம் வாலையும் பிடிக்க வேண்டாம்

    தும்பையும் விட வேண்டாம் வாலையும் பிடிக்க வேண்டாம்



 1.கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கும் போது அதனைக் கை நழுவ விட்டு விட்டு இப்போது தனது  கட்டுப்பாட்டில் எந்த சூழலும் மனிதர்களும்   இல்லை என்றும், எல்லாம் எனது  கை மீறிச்  சென்று விட்டது என்றும் பலர் சொல்லக் கேட்டிருப்போம்.நாமும் இந்த சூழ்நிலையினை கடந்திருப்போம்.தலைக்கு மேல் போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன சூழ்நிலைகளில் நாம் பாடம் பயின்று இருப்போம்.
2.எந்த ஒரு சூழலிலும் நமது கட்டுப்பாடு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் ,ஒரு சூழல் என்பது பல விதமான மனிதர்கள் அடங்கிய அல்லது பொருட்கள் அடங்கியது .அந்த மனிதர்களின் வழியாகவோ அல்லது பொருட்களின் வழியாகவோ அல்லது இவைகள் இரண்டும் சேர்ந்தோ   ஒரு குறிப்பிட்ட  நோக்கத்தை செயல் படுத்தும் அல்லது  ஒரு செயலைப் படைக்க முனைதல் தான் கட்டுப்பாடு என்று ஒரு செயலுக்கான  கட்டுப் பாட்டைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லலாம்.
3.மனிதன் இடையறாது தனது வாழ்க்கை முழுவதும்  செயல்களை செய்து கொண்டும் தனது நிலையினால் மற்றவர்களுக்கும் தான் இருக்கும்  சூழ்நிலைக்கும்  பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான். இவ்வாறு  ஒவ்வொரு வினாடியும்  மனிதன் செயல்களைப் படைக்கும் போது அவனது செயல்  அவன் விரும்பிய முடிவோடு  சேர்த்து கணக்கிடப்படுகின்றது.இவ்வாறு  மனிதன்  செயல்களைப் படைப்பதனால் அவன்   பெறும் முடிவுகள் அவனுக்குப் பலனைக் கொடுத்தால் வெற்றி என்றும் இல்லை என்றால் வெற்றியின்மை என்றும் கணக்கிடுகின்றோம்.
4.ஆனால் அந்தக் கட்டுப்பாடு  நமது கையில் மட்டும் நமது முழு செயலையும் நம்பி எப்போதும் எந்த சூழலிலும் இருக்காது.பெரும்பாலும் மற்ற நபர்களைக் கொண்டு மனிதனின் செயல் படைக்கப்படும் போது    அவன்    முடிவுக்காக சில சூழல்களை  முன்னிட்டே கணிக்க வேண்டியுள்ளது.  இப்படிப்பட்ட சூழல் வந்தால் நாம் இப்படி செயல் புரிய வேண்டும்    என்று முன் கணித்தும்  .தனது  செயலின் மூலம்  விரும்பிய  முடிவை அடைய ,மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நமது கட்டுப்பாட்டில் வைத்து நமது முடிவை எதிர் நோக்கி இருப்போம்.
5.நமது செயல் படைப்புகளுக்கு முழுக்க இப்படிப்பட்ட நிலையில் ஆதாரமாக இருப்பது நமது கணிப்புக்கள் தான். கணிப்புக்கள் என்றால் அதில் கடந்தகால அனுபவங்களும் அதன் மூலம் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும் ,நிகழ்கால சூழலும், எதிர்கால முடிவையும் கணக்கிட்டு நாம் குறிப்பிட்ட சூழ்நிலையில்   இவ்வாறான  நமது கணிப்பை  நமது செயலின் ஊடே பயன்படுத்தி  செயல்களைப் படைக்கும் நிலை ஆகும்.
6.கணிப்புகள் தவறினால்முடிவுகள் மாறும் . சரியாகக் கணிக்க வேண்டியதை நமது விருப்பு வெறுப்பு களுக்கிடையேயும் ,சரியான த்கவல்களைப் பெறாமலும் , தவறாகக் கணிக்கும் போதும்  நாம் எதிர் பார்க்கும் முடிவு கிடைக்காது .
7.கட்டுப்பாடுகள் நம் கையில் இருக்கும் போது எந்த செயலையும்  நம் விருப்பப்படி  நடத்தலாம்.கட்டுப்பாட்டுக்குரிய கட்டுப்பாட்டை இழந்த பின்பு நாம் சூழ்நிலைகளை பின்னிட்டு புரிந்து கொண்டு சுதாரிப்பதால் எந்தப்பலனும் கிடையாது .
8.ஆனால் இப்படி நாம் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் தவறை செய்யக் கூடாது என்னும் பாடம் கற்றுக் கொண்டதை  மட்டும்  பொறுத்து இது ஒரு வெற்றிகரமான சிந்தனைதான்.அதனால் தும்பையும் விட வேண்டாம் வாலையும் பிடிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...